வ.கொ.விஜயராகவன் wrote on 5 July, 2016, 16:14
ஊருக்கு உபதேசம் எப்போதுதான் நிற்க்கும். வாழ்க்கை ஆதாயத்திலிருந்தும், வயித்துப் பிழைப்பிலிருந்தும் தமிழ் விலகும்போது இப்படிப்பட்ட அபத்தங்களை மற்றவர்களுக்கு டன் கணக்கில் அள்ளி விடலாம். வயித்து பிழைப்புக்காக ஒரு தினத்தந்தி அல்லது தினமலர் எடிடராக இருந்தால் அல்லது மற்றவர்கள் வாங்கும் படி சுவாரஸ்யமாகவும், உபயோகமாகவும் இருக்கும் நூலை எழுதும் போது இப்படிப்பட்ட நேரத்தை விரயம் செய்யும் எண்ணங்கள் பறந்து போகும்.
மற்றவர்கள் படிக்கும் போல் வசீகரமாக தமிழ் இருக்க வேண்டும் என்றால்
சூப்பர் ஸேல்ஸ்மென், இ-காமர்ஸ், எஸ்கேப், ஹலோ கன்ஸ்யூமர், சிம்மசன சீக்ரட் , மார்க்கெடிங் மந்திரங்கள் , ஃபேஸ் புக் வெற்றிக்கதை, சேல்ஸ்மேன் , போன்ற புஸ்தகங்களை தவிர்க்க முடியாது
http://nammabooks.com/Buy-Business-Management-Tamil-Books-Online?pages=1-5#p9305
தன் பண அல்லது நேர முதலீடு இல்லாமல், லாப நஷ்டம் இல்லாமல், மற்றவர்களுக்கு உபதேசம் செய்தே தமிழை வளர்ப்பது என்றால் இதைப்போல் Unproductive கட்டுரைகளை எழுதலாம்
வ.கொ.விஜயராகவன்
வ.கொ.விஜயராகவன் wrote on 5 July, 2016, 19:16
“பொது வழக்கு” என்பது தமிழில்லையாம்!!! “தமிழ் வழக்கு” என்னும் காலத்தில் உள்ளவை எப்படிப்பட்ட ஜோக் என்பது ஒரு வார்த்தையை உதாரணமாக பார்த்தால் போதும்.
Biscuit பிஸ்கேட் பிசுக்கோத்து
பொது வழக்கில் இருப்பது பிஸ்கட். கூகிள் ஹிட்கள் பார்த்தாலே புரியும்
பிஸ்கேட் 2380
பிஸ்கட் 172000
பிஸ்கோத்து 6080
“தமிழ் வழக்கு” பிசுக்கோத்து 186
இதைப்போல் ஹாஸ்யங்களை தமிழ்வழக்கு என பீலா விடுவது தமிழ்நாட்டில் எடுபடாது
வ.கொ.விஜயராகவன்
வ.கொ.விஜயராகவன் wrote on 6 July, 2016, 14:00
“இவ்வுலகின் தொட்டிலாகப் போற்றப்பெறும் தாய்த்தமிழகத்துக்கு …” சசிகரன்,யார் இப்படியெல்லாம் நம்புகின்றனர் பாவாணரிஸ்டுகளைத் தவிர.
தமிழர்கள் சுதந்திர மனிதர்களாய் ஜெர்மானிய, ரஷ்ய, மற்ற நாடுகளூடன் பழகவில்லை. தமிழர்கள் 300 ஆண்டுகள் ஆங்கிலேயர் கட்டுப்பாடில் இருந்து, ஆங்கிலம் கற்று அதன் வழியாகத்தான் தற்கால உலகத்தை தெரிந்து கொண்டனர். அதனால் நாம் ஜப்பான், ஜெர்மனி. ஸ்காட்லாண்ட் இப்படி எழுதுகிறோம். நான் 300 ஆண்டு கற்றுதல்களை தூக்கி எரிந்து புதிதாக சொல் படைப்பேன் என்பது மடமை.
வ.கொ.விஜயராகவன்
வ.கொ.விஜயராகவன் wrote on 6 July, 2016, 14:23
அண்ணாகண்ணன் “அவரவர், எழுதும் இடத்துக்கு ஏற்ப, விருப்பத்துக்கு ஏற்ப, இவற்றை எழுதலாம். ஆனால், தமிழ் மரபை நாம் மாற்ற முடியாதே.”
தமிழ் எழுத்து என்பது ஒரு ஹோட்டல் மெனு அல்ல ; ஹோட்டலில் போனால் நீங்கள் எனக்கு இதுதான் வேண்டும், இதைத்தான் சாப்பிடுவேன், அதை சாப்பிடவே மாட்டேன் என சொல்லலாம். தற்கால தமிழ் எழுத்து என்ன என்பது யூனிகோட் மற்றும் தமிழ்நாடு அரசு TACE16 ல் வரை செய்யப்பட்டு விட்டது. இதை நான் பின்பற்ற மாட்டேன் என்பது இடக்குத்தனம், கிறுக்குத்தனம், ஒரு விதத்தில் தமிழுக்கு துரோகம்.
2010ல் தமிழ்நாடு அரசு எது தமிழுக்கு அங்கீகரிக்கப்பட்ட எழுத்துகள் என ஆணை செலுத்தி விட்டது. அதன்படி யூனிகோட், TACE16 இரண்டும் அங்கீகரிக்கப்பட்டவை
யூனிகோட் தமிழ்
http://unicode.org/charts/PDF/U0B80.pdf
TACE16
http://www.tamilvu.org/coresite/download/TACE16_Report_English.pdf,
மரபு இதன்கூட ஒத்து வராவிட்டால் மரபை தூக்கி குப்பையில் போடுங்கள். நாம் மரபை மாற்றமுடியாதுதான், ஆனால் நம் வழக்குகள் மாறிக்கொண்டு இருக்கின்றன.
ஆங்கிலத்தில் 26 எழுத்துகள் உள்ளன; ஆங்கிலத்தில் எந்த மடையனாவது “எனக்கு Q , P, Z எழுத்துகள் பிடிக்கவில்லை , அதனால் என்னைப் பொருத்து வரை ஆங்கிலத்தில் 23 எழுத்துகள் தான்” என சொல்கிறான ? இல்லை . ஏனெனில் ஆங்கிலேயர்கள் (அமெரிக்கர்கள், கனேடியர்கள், ஸ்காட்லாந்தியர்…… ) உலகத்தில் முன்னேறுபவர்கள். விஞ்ஞானம் , கணிதம், தொழில்கள் படைப்பவர்கள். , மற்றவர்களுக்கு உபதேச மூட்டைகள் கொடுக்காமல் ஆக்கபூர்வமாக நேரத்தை செலுத்துபவர்கள்.
வ.கொ.விஜயராகவன்
வ.கொ.விஜயராகவன் wrote on 6 July, 2016, 14:40
“வல்லமை இவற்றை ஆதரித்து வெளியிட்டாலும், அதன் அதிபர் அண்ணா கண்ணன் ……. ” ஜெயபாரதன், அதிபரின் நோக்கை நீங்கள் தவறாக கணக்குப் போடுகிறீர்கள். அதிபர் இந்த கட்டுரையை ஆதரிக்கவில்லை . நகைச்சுவை பக்கத்தை புது விதமாக போட்டுள்ளார். தனித்தமிழ்ப் போல் நகைச்சுவையை வேரெங்கும் பார்க்க முடியாது – லெமூரியாவைத் தவிர.
லெமூரியாவில்தான் நீங்கள்இசுப்பா போய், பிரெடு மேல் நெரிதடை தடவி , குட்பு மற்றும் இசுட்டீபன் ஆக்கிங்கு இருவரையும் சந்திக்கலாம். உங்கள் ஆழ்துளை போகவேண்டும் என்றால் பல இசுற்றீட்டுகளை சுற்றி வரலாம். ஃகுயுண்டை வண்டியில் போய் பிக்கு மிருகத்தையும் பார்க்கலாம்.
இந்த விந்தை காமெடி உலகம் லெமூரியா போக நான் பாவாணர் ஏர்லைன்ஸில் டிக்கட் வாங்கி விட்டேன்.
வன்பாக்கம் விஜயராகவன்
வ.கொ.விஜயராகவன் wrote on 6 July, 2016, 17:41
தமிழ்நாடு அகழ்வாராயாச்சி கொடுமணல், மாங்குளம், இன்னும் பலவிடங்களில் நடத்தியதில் எழுத்து தடயங்களும் உள்ளன. இவை கி.மு. 200 – 500 காலத்தை சேர்ந்தவை. அப்பொழுதே, அதாவது தமிழகத்தின் முதல் எழுத்து தடயங்களிலேயே “தமிழ் எழுத்து” என்பது தொல்காப்பிய 30 அளவை கடந்து உள்ளது, கி.மு 200 ஆண்டு முன்பே தற்கால “கிரந்தம்” என அழைக்கபடும் ஒலிகள் அக்கால தமிழில் எழுதப்பட்டுள்ளன, அதாவது தொல்காப்பியரே தன்கால நடைமுறை மொழி எழுத்தை சரியாக பதிவு செய்யவில்லை.
உதாரணம் மாங்குளம்
http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/mankulam.htm
கல்வெட்டுப் பாடம் 1
கணிய் நந்தஸிரிகுவன் கே தம்மம்
ஈத்த நெடுஞ்செழியன் பணாஅன்
கடலன் வழுதி கொட்டுபித்த பாளிய்
கல்வெட்டு 2
கணிய் நந்த ஸிரிய்குவன்
தம்மம் ஈத்த நெடுஞ்செழியன் ஸாலகன
இளஞ்சடிகன் தந்தைய் சடிகன்
செஈய பாளிய்
இன்னும் இதைப்போல்…
http://www.tnarch.gov.in/excavation/kod.htm
http://www.rediff.com/business/slide-show/slide-show-1-big-discovery-a-2500-year-old-industrial-estate/20120612.htm#5
தமிழ் எழுத்துகள் தொல்காப்பிய 30 தான் என்றால் நம்பாதீர்கள். அது இக்காலத்தில் செல்லாது, தொல்காப்பியர் காலத்திலேயே செல்லாது
வ.கொ.விஜயராகவன்.