Wednesday, January 24, 2018

எழுதவேண்டிய புஸ்தக விமர்சனங்கள்

கடந்த பல மதங்களில் வாங்கிப்படித்த புஸ்தகங்கள் இவைஇதைத்தவிர , கிண்டிலில் வாங்கியவை

அர்த்தஶாஸ்த்ரம் - தாமஸ் டிரவுட்மன்.  தமிழில் எஸ்.கிருஷ்ணன்

Tamil - A biography by David Sulman

தமிழ் அர்த்தசாஸ்திரம் ஆங்கில புஸ்தகத்தின் மொழிபெயர்ப்பாக இருந்தாலும் , எப்படி மொழிபெயர்ப்பு உள்ளது என்பதை பார்க்க இதையும் வாங்கினேன்.

இதைத்தவிர, Bothy என்ற ஆங்கில புஸ்தகத்தையும் கிண்டிலில் வாங்கினேன்.
இதைத்தவிர மற்ற தொழில்நுட்ப பத்தகங்கள்.

இவை எல்லாவற்றையும் ஒரு தடவை படித்தாலும் , இன்னும் விமர்சனம் நேரம் போதாமின்மையால் எழுதவில்லை.

போதி  (Bothy , ). இதை வெறும் `அறிவுக்கு`  படித்தால் போதாது. 
போதி என்பவை ஸ்காட்லாந்தின் பரத மலைப்பிரதேசத்தில் இருக்கும், வெறும் மொட்டையான மலைகள் அல்லது அடிவாரத்தில் இருக்கும் , கல்லால் கட்டப்பட்ட வீடுகள் - வீடு என்பது மிகை . அது ஒரு பெரிய அறைதான். அதன் வசதிகள் மிகக்குறைவு , அவை ஹோட்டல்கள் அல்ல. அவை பொதுவாக பெரும் காற்றுகளிலிருந்து  தஞ்சம் தரும். அவற்றில் படுக்கைக்கு இடம் இருக்கும், ஆனல் படுக்கை இருக்காது. தங்குபவர் தன் ஸ்லீப்பிங் பேகை உபயோகப்படுத்த வேண்டும். அறை உஷ்ணத்திற்க்கு தீமூட்டலாம் , ஆனால் தங்குபவர் தன் விறகுகட்டைகளை எடுத்துச் செல்ல வேண்டும். அங்கு தங்குவதற்க்கு கட்டணம் கிடையாது. எங்கு போதியை பார்த்தாலும் உள்ளெ சென்று தங்கலாம். மற்றவர்கள் இருந்தால் அவர்களுடன் சமரசம் செய்து சுமுகமாக இருக்க வேண்டும். மேலும் அதை விட்டு செல்லும் போது, துப்புரவாக இருக்க வேண்டும். போதிகள் மலைகளில் செல்லும் இடையர்களுக்கும், மற்ற பணக்கார வீடுகளின் வேட்டை பிரயாணங்களுக்காகவும் அல்லது தோட்டக்காரர்கள் தூங்குவதற்க்கும் கட்டப்பட்டவை. 

இந்தப்புத்தகம் போதிகள் எங்கு உள்ளன , எப்பேர்பட்ட வசதிகள் தருகின்றன அவற்றின் துல்லிய இடத்தை தருகின்ற்து. இதுவறை என் ஸ்காட்லாந்து நடைகளின் போது , சிலவற்றை தூரத்தில் இருந்து பார்த்திருந்தாலும், இது வரை போதிகளில் தங்கியதில்லை. என் போதி        தங்குதல்களில் முதல்படி இந்த புத்தகத்தை வாங்கியது.

மற்ற புஸ்தகங்கள் பற்றி மேலும் (மெதுவாக).

ஆண்டாள் சர்ச்சை பற்றி

ஒரு இணைய ஆங்கில சஞ்சிகையின் கட்டுரைக்கு என் பதில்

The book quoted by Vairamuthu, " Indian Movements: Some Aspects of Dissent Protest and Reform", edited by S.C. Malik. was thoroughly debunked in the respected anthropological magazine 'Man' Man, New Series, Vol. 15, No. 2 (Jun., 1980), pp. 398-399 – published by: Royal Anthropological Institute of Great Britain and Ireland "The book contains no sociological studies based on first hand knowledge of any Indian social... ..Many of the papers indulge in good deal of unsubstantiated speculation...". Vairamuthu is no academic and his first foray in to academic reference is an utter disaster. The article by Narayanan and Kesavan was shoddy ; it thinks Andal was a devadasi based on a 1927 book by T.A.Gopinath Rao page 5. That page or anywhere in the book makes no such claim . It shows how shoddy Indian scholarship on India is. The issue with Vairamuthu was not that he relied on tendentious sources , but he said it on the birthday of Andal, in her birth place in front of a traditional, orthodox crowd. If he had said it in some Dravidar Kazhagam meetinng, where wild speculation is the norm , nobody would have objected. In spite of expressing 'sadness' Vairamuthu has not understood where lies the rub. i.e. talking wrong things to wrong audience at wrong place.

ஒரு நுணிப்புல் மேயும், தன்னை `கவிப்பேரரசு` என நினைத்துக் கொள்ளும் அற்ப சினிமா பாடல் எழுத்தாளரை  `அறிவுஜீவி` யாக பாவித்தால் இப்படிப்பட்ட சங்கடங்கள்தான் வரும். பாத்திரம் அறிந்து பிச்சையிடு .