Monday, September 25, 2017

பெரிதாக ஊதப்பட்ட பலூன்

பெரிதாக ஊதப்பட்ட‌ பலூனில் இன்னொரு ஊசி


ஈ.வெ,.ரா தான் . இந்த மூன்றாம்தர ஆளுமையை ஆராதிக்க ஒரு  CULT ஏ  தமிழகத்தில் உருவாகியிருக்கிறது - அது தமிழ்நட்டின் கலாசார வறுமையின் குறி.  இந்த பலூனை உடைத்து இன்னொரு கட்டுரை -

https://thewire.in/179688/periyar-ev-ramasamy-dravida-nadu-brahmins-dmk/

Why Do Dravidian Intellectuals Admire a Man as Prickly as Periyar?
BY P.A. KRISHNAN ON 21/09/201

ஏன் ஈவெரா மூன்றாம்தர ஆளுமை

1. அவருடைய சமுதாய , மத விமர்சங்களில் ஒன்றுகூட ஒரிஜினல் இல்லை. எல்லாம் 19ம், 20ம் நூற்றாண்டு பிரித்தானிய கிருஸ்துவ மிஷனரிகள், காலனீய நிர்வாகத்தினர் செய்த விமர்சனங்கள்தான். கிருஸ்துவ மிஷனரிகள், காலனீய நிர்வாகத்தினர் மற்றொரு கலாசாரத்திலிருந்து, இனத்திலிருந்து இந்தியாவை ஆண்டு, அதன் செல்வங்களை கொள்ளை அடிக்க வந்தவர்கள் - இந்தியா அவர்கள் காலடியில் இருந்ததால் ,  அவர்கள் இயல்பாகவே இந்தியர்கள்.இந்துக்கள் கலாசாரத்தை துச்சமாக கருதினர். அந்த காலனீயர்களின் இந்திய காழ்ப்பு எண்ணங்களை முழுதுமாக உள்வாங்கியவர் ஈரோட் வெங்கடசாமி ராமசாமி.

2. பிரித்தானிய காலனீயத்தை நன்றாக  ஆனிமீக ரீதியில் 'சுவை கண்டார்'. அதனால் இந்திய சுதந்திரத்தை எதிர்த்தார். சுதந்திரத்தின் காற்றை எதிர்த்து  , காலனீயத்தின் சங்கிலிகளை தூக்கிப்பிடித்தார், தன் சங்கிலையை முத்தமிட்டார்.

3. தமிழ் மக்களின் மீதும், தமிழ் மக்களின் ஆக்கபூர்வ சரித்திரத்தின் மீதும், எதிர்காலத்தின் மீதும்   இம்மியும்  நம்பிக்கை வைக்காதவர். தமிழ் காட்டுமிராண்டி பாஷை என்றும் , தமிழர்கள் வீட்டிலும் ஆங்கிலத்தின் தான் பேச வேண்டும் எனவும் 40 வருஷங்களுக்கு மேல் பிரச்சாரம் செய்தார். (அவர் ஆங்கில பேச்சாளி இல்லை - அது வேறு விஷயம்).

4. ஈவெரா பக்தர்கள் அவர் தமிழ்நாட்டிற்க்கு பகுத்தறிவு, நாத்திகம் , அதன் மீதான சுயமரியாதை ஆகியவற்றை அறிமுகம் செய்தவர் என கூருகின்றனர். ஈவெராவின் பகுத்தறிவு மேல்போக்கானது , நுனிப்புல் மேய்வது. ஈவெரா பகுத்தறிவை எதோ 'கண்டுபிடித்தவர்' போல் பேசுகின்றனர். ஈவேராவின் பகுத்தறிவு ஒரு வித Fetish.

பகுத்தறிவு என்பது  எல்லோ மானுடர்களும் பிரயோகப்படுத்துவது. கற்கால வேடுவர்கள் எங்கு, எப்படி மிருகங்களை கொன்று எப்படி மற்றவர்களோடு பகிர்வது, விவசாயி தன் நிலத்தை எப்படி உழுது விளைச்சலை அதிகரிப்பது , ஒரு அரசன் வெளிநட்டு மன்னர்களை எப்படி அடக்குவது , ஒரு முதலாளி எப்படி தன் முதலீட்டிருந்து லாபம் பெருவது என வழி வகுப்பது , எல்லாம் பகுத்தறிவுதான், எல்லா மானிடர்களும் தன் பகுத்தறிவௌ செலுத்தி தன் வாழ்க்கைத்தரத்தை செம்மை செய்கின்ரனர்.   மற்றவர்கள் செய்யாதது, எண்ணாதது எதையோ ஈவேராதான் 'கண்டுபிடித்தார்' என ஈவேரா பக்தர்கள் சொல்வது நகைப்பிர்க்குரியது, இதிலிருந்தே ஈவேராவுக்கும், அவருடைய பக்தி கோடிகளுக்கு பகுத்தறிவு என்பது என்ன என்று தெரியாது என்பது வெளிச்சம். இன்னும் முட்டாள்தனமான் 'பகுத்தறிவு' என்பது சில ஹிந்து கலாசாரத்தி கலாட்டா செய்யும் நடவடிக்கைகள் என்பது - உதாரணமாக மணமக்கள் தாலியை கழட்டிப்போடுவது ஈவேரா மூடர்களுக்கு பெரிய 'பகுத்தறிவு' செயல் . இதைப்போல் பகுத்தறிவு என்பதை அறிவார்ந்தபூரமாக பார்க்காமல் சில சர்கஸ் கோமாளித்தனாக மாற்றினது ஈவெராவின் புகழ்.

5. ஈவெரா விஞ்ஞானம், சரித்திரம், சமூகவியல் ஆகியவற்றை பர‌வலாக படித்தவர் அல்ல. விஞ்ஞானம் மீது கிராமத்துக்காரன் சினிமா மீது கொண்ட பரவசத்தை தான் வைத்திருந்தார். அதனால்தான் தனித்தமிழ் , லெமூரியத்தமிழ் ஆகியவற்றை நண்பனாக பாவித்தார்.

6. தமிழ் கலாசாரத்தில் ஈவேரா பகுத்தறியும், நாத்திகத்தையும் மேல்போக்கான FETISH ஆக‌, கோஷங்களாகவும் மாற்றினார்.

7. ஈவேரா சமூக நீதி, ஜாதி ஏற்றதாழ்வுகளை உடைத்தல் ஆகியவற்றை செய்த்தாக - ஈவேரா பக்தகோடிகளை நம்பினால் அதை தனி மனிதராக - செய்ததாக ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறது. உண்மை அவர் ஜாதி ஏற்ற தாழ்வுகளை வெறுத்தார் . அதே சமயம் 20ம் நூஊற்றாண்டு தொடக்கத்திலேயெ ஜாதி வேறுபாடுகளுக்கும், சாய்வுகளுக்கும் எதிராக பல குரல்களும், இயக்கங்களும், அரசியலும் ஏற்பட்டுவிட்டன என்பதை மறக்கக் கூடாது. பாரதிலியின் குரலே ஜாதி சாய்வுகளுக்கு எதிரான பலத்த குரல், மேலும் இரட்டைமலை ஸ்ரீநிவாஸன், எம்.சி.ராஜா , ஓரள‌வு நீதிக்கட்சியினர், காங்கிரஸ் இயக்கம் ஆகியவை ஈவேராவுக்கு முன்பே சமூக சமநீதி தர்மத்தை, ஜாதி எதிர்ப்பு  முன்னிறுத்தினர். வைக்கோம் கோவில் ஹரிஜன பிரவேசத்திற்க்கு காங்கிரஸ் பிரதிநிதியாகத்தான் ஈவேரா அனுப்பப்பட்டார். அதனால் எல்லா சமூக மாற்றத்திற்க்கும் ஈவெராவை புகழ்வது போல மடமை வேறுதுவும் இல்லை. ஆனால் ஈவேராதான் சமூக மாற்றத்திற்க்கு முக்கிய காரணம் என்ற நாற்றமான பிரச்சாரத்தை ஈவெரா பக்தர்கள்செய்கின்ரனர்.

8. ஈவெராவின் அர‌சிய‌ல் வாரிசு விழுமிய‌ங்க‌ள் என்ன‌ ? உண‌ர்ச்சி மிக்க‌ கோஷ‌ங்க‌ள் ; அரசியல், சமூக சகிப்பின்மை , மற்ற‌ கருத்து உடைய‌வ‌ர்க‌ளை ஜாதி அடிப்ப‌டையில் தாக்குவ‌து; ஒரு ப‌க்க‌ம் ஜாதிக‌ள் இல்லை என்ற‌ கூச்ச‌ல், ம‌று ப‌க்க‌ம் ஜாதி ச‌ர்ட்டிபிகேட்டுக‌ள் தான் க‌ல்வி, ப‌த‌வி, ப‌த‌வி உய‌ர்வு ஆகிய‌வ‌ற்ரை நிர்ண‌யிக்கும் என்ற‌ நிலை; இதை ம‌றைக்க‌ அதீத‌ ஹிபாக்ர‌சி , த‌னிம‌னித‌ துதி , இவைக‌ள்தான். அரசியல், அறிவுத் துறைகளில் அளவு கடந்த போலித்தனம்தான்  ஈவெராவின் நிரந்திரப் பங்கு.

9. கீழ்வேன்மனி சம்பவங்கள் போன்ற குரூரமான சம்பவங்களில் அவர் தீங்கு இழைத்தோரை ஆதரித்தார், செத்தவர்களுக்கு ஒரு அனுதாபத்தையும்கொடுக்கவில்லை.


10. ஈவெரா என்ற காற்றடைத்த பலூனை குப்பையில் போடாமல் தமிழ்நாட்டில் அறிவோ, சரிசமநீதியோ வளராது


2 comments:

Murugan soundar said...

நீங்கள் இங்கு பலரைப் போல அவரை ஆதரிக்காமல் அவரை எதிர்ப்பதே மகிழ்ச்சி

வன்பாக்கம் விஜயராகவன் said...

முருகன் சௌந்தர்

எது சரியோ , எது சமூக உயர்விர்க்கு உகந்ததோ , எது உங்கள் அனுபவம், புத்திக்கு ஒத்துப்போகுதோ அதை உறுதியாக, கூசாமல், எந்த கொக்கனுக்கும் வளைந்து கொடுக்காமல் கூருக.