Tuesday, July 26, 2016

ஒரு பதிவருக்கு பதில்

அ.ராமசாமி ஒரு தமிழ் அகாதமிக், நாடக எழுத்தாளர், விமர்சகர்.

அவர் பதிவு ஒன்றில்
பாவனைப் போர்கள்
தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டுவிழாவை முன்வைத்து ஒரு சொல்லாடல் -1
http://ramasamywritings.blogspot.nl/2016/07/blog-post_19.html

வன்பாக்கம் விஜயராகவன் said...
நீங்கள் "இந்தியாவில் குழு என்பது சாதி , மேலும் ஒவ்வொருவரும் தன் குழு நலனைத்தான் முன்வைக்கின்றனர்" என்பது அப்பட்ட ஜாதீய மனப்பான்மை. ஒருவர் எழுத்தையோ செயலையோ ஜாதிக்கு அப்பால் நீங்கள் பார்க்கமாட்டீர்கள் என தெளிவாக சொல்லிவிட்டீர்கள். அது பெரிய ஏமாற்றம்.

அது போக, உங்கள் கட்டுரை பல இடங்களில் distortion ஆக இருக்கின்ற்து.

முதலில் சிலரின் ஃபேஸ்புக் பக்களைப் பார்த்து பிராமண அடிப்படைவாதி «» பிராமண அறிவுஜீவி என சொல்வது melodrama , knee-jerk reactions..

நீங்கள் மணிப்பிரவாளம் என்ன என சரியாக புரிந்து கொள்ளவில்லை. மணிப்பிரவாளம் என்பது தமிழை தமிழ் இலக்கணப்படிதான் எழுதுகிறது. இடையிலே சில பெயர் சொற்க்களையும் , மற்ற சொற்களையும் கிரந்தத்தில் சமஸ்கிருதத்தில் கொடுக்கிறது. நீங்கள் archive.org ல் போய், grantham என போட்டு தேடினால் 19/20 நூற்றாண்டில் பதிக்கப்பட்ட பல கிரந்த நூல்கள் கிடைக்கும். அதில் தமிழ் நடைதான், தமிழ் இலக்கணப்படி இருக்கும், நடுவே கிரந்த சமஸ்கிருத சொற்களும் இருக்கும், எப்போதாவது முழு வாக்கியமே கிரந்தத்தில் இருக்கும்.

இது தற்காலத்தில் எழுதப்படும் தமிழ்/ஆங்கில எழுத்து கலப்பை விட ஒரு வித்தியாசமும் இல்லை. அதனால் மணிப்பிரவாளம் ஆசியர்கள் தொல்காப்பிய/நன்னுல் முறைகளை பின்பற்றவில்லை என்பது பொய் .

நீங்கள் இன்னொரு போலி முரண்பாட்டையும் கொடுக்கிறீர்கள். அதாவது வைணவ உரைகள் . மணிப்ரவாளம் X தனித்தமிழ் என்பது அடிப்படையில் வைணவ X சைவ முரண்பாடு என்பதற்க்கு சான்றுகளே இல்லை.

French Institute of Pondicherry உலகத்திலேயே மிகப்பெரிய சைவசித்தாந்த சுவடிக் குவிப்பை உண்டாக்கியுள்ளனர். இதற்கு "உலகின் ஞாபகம்" என்ற ஐ.நா. பட்டமும் கிடைத்துள்ளது.

The manuscript collection of the French Institute of Pondicherry was initiated in 1956 under the auspices of its founder-director, the polymath Jean Filliozat, with a view to collecting all material relating to Saiva Agamas, the scriptures of one of the Saiva religious traditions known as the Saiva Siddhanta..........

The collection of the IFP now consists of approximately 8500 palm-leaf codices, most of which are in the Sanskrit language and written in Grantha script (others are in Tamil, Malayalam, Telugu, Nandinagari and Tulu scripts)............

This collection is thus unique in that it is the largest collection of Saiva Siddhanta manuscripts in the world and it has duly been recognised by UNESCO by including it in its "Memory of the World" Register.

பெரும்பான்மை சைவசித்தாந்த மதஎழுத்துகள் கிரந்தம் / சமஸ்கிருதத்தில்தான் அதிகமாக உள்ளன.

அதனால் நீங்களோ , மற்றவர்களோ மணிப்ரவாளம் X தனித்தமிழ் என்பது அடிப்படையில் வைணவ X சைவ முரண்பாடு போன்ற போலி முரண்பாடுகளை கைவிடுவது நலம்.

ஞா.தேவநேசன் என்ற டுபாக்கூர் மொழியியலாள‌ரரின் படத்தை இங்கு ஏன் போட்டீர்கள் என விளங்கவில்லை.

இன்னும் கால்டுவெல்லை பிடித்துத் தொங்குவது தனித்தமிழாளர்களுக்கு இயல்பு போலும்.

மதிப்புடன்

வன்பாக்கம் விஜயராகவன்
http://vijvanbakkam.blogspot.com
-----------------------------------------------------------------------
Blogger வன்பாக்கம் விஜயராகவன் said...
உங்கள் இந்த போஸ்ட் மணிப்பிரவாளம் தான். ஏனெனில் 40 ஆங்கில வார்த்தைகள் உள்ளன. என் மேல் கமெண்டும் மணிப்பிரவாளம்தான் , பல ஆங்கில வார்த்தைகள் உள்ளன. நீங்கள் தமிழ் மட்டும்தான் எழுத நிச்சயித்திருந்தால் " A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages, Horrison, London" என்பதற்க்கு தமிழ் எழுத்துபெயர்ப்பு கொடுத்திரிப்பீர்கள். ஏன் கொடுக்கவில்லை ? உங்கள் எழுத்திலேயெ இவ்வளவு ஆங்கிலம் இருக்கும்போது, ஏன் மரபு மணிப்பிரவாளத்தை குறைசொல்லவேண்டும்? இது நீங்கள் மட்டுமல்ல, தற்கால "தனித்தமிழ்" அல்லது "திராவிட" எழுத்தாளர்களுக்கு பொருந்தும்.

விஜயராகவன்
July 27, 2016 at 11:15 AM
 Delete
Blogger வன்பாக்கம் விஜயராகவன் said...
ஐயா

உங்கள் ஃபேஸ்புக்கில் ”சாதி இருக்கும்; சாதி வேறுபாடுகளும் இருக்கும்; சாதியமைப்பை ஒழிக்கமுடியாது. அதனால் சாதிகளைக் கையாளப்பழக வேண்டும்” என்பது இந்துமத அடிப்படைவாதம். " என்கிறீர்கள்.

இது எந்த விதத்தில் உங்கள் சித்தாந்தத்த்டன் ( "ஒருவரின் பேச்சில் - எழுத்தில் - செயலில் - அவரது குழுவின் நலன்.(வர்க்கநலன் என்று சொல்வது தேய்வழக்கு) இருக்கும் என்பது கண்டறியப்பட்ட உண்மை. இந்தியாவில் குழு என்பது சாதி. ") மாறுபடுகிறது.

நீங்களும் உள்ளூர இந்து அடிப்படைவாதி என ஒப்புக்கொள்கிறீர்களா?
வ.கொ.விஜயராகவன்
August 6, 2016 at 1:57 PM
 Delete

No comments: