Wednesday, July 20, 2016

தமிழ்மொழி வெறி, திராவிட கருத்தியல், ஸமஸ்கிருதம் மீது காழ்ப்பு

காசின் ஒரு பக்கம் தமிழ்வெறி என்றால் , மற்றொரு பக்கம் ஸமஸ்கிருதம் மீது காழ்ப்பு. இதுதான் திராவிட கருத்தியல். திராவிட கருத்தியலில் மூன்றாவது முகம் ஆங்கிலத்தின் மீது அடிமைத்தனம்.

ஸமஸ்கிருதம் மீது "போர்" நினைவுகள்தான் திராவிட சிந்தனையில் வருகின்றன.

http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchetti-tamilar-july-16-2016/31196-2016-07-18-08-45-18.

அதற்கு என் பதில்:

#1 வன்பாக்கம் கொமாண்டூர் விஜயராகவன் 2016-07-19 16:10
இந்தக்கட்டுரை தமிழ்நாட்டில் திராவிட/தனித்தமிழ் இயக்க அடிப்படையில் புழங்கி வரும் , மொழிகளைப் பற்றிய Primitive outlook தான் ஊர்ஜிதம் செய்கிறது. "பகுத்தறிவு" பேசும் தமிழ்நாட்டில் ஏன் மொழியியலோ, பகுத்தறிவுக்கோ அல்லது விவேகமான சிந்தனைகளோ இல்லை??

திருப்பித் திருப்பி சமஸ்கிருதம் செத்தமொழி என சொல்வதால் அது செத்தமொழி ஆகிவிடாது. ஒரு மொழி உண்மையாகவே செத்தமொழி என்றால் யாரும் அதை வெறுக்கப்போவதில்லை, அதன் மேல் காழ்ப்பு கொள்ளப்போவதில்லை. உதாரணமாக ஃபாரோக்கள் காலத்தில் இருந்த எகிப்திய மொழி நிஜமாகவே செத்து விட்டது. யாரும் அதைப்பேசுவதில்ல ை, அது சடங்கு போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளிலும்  பயன்படுத்துப்படு வதில்லை. அத பல அகழ்வெட்டுக்கார ர்கள், பல மொழி அறிஞர்கள் மூலம் ஒரு வழியாக மறுஆக்கம் செய்யப்பட்டு உள்ளது.

சமஸ்கிருதத்தை அந்த தளத்தில் வைத்துப் பேசலாமா? அது எவ்வளவு மடமை, அது நம் ஒவ்வொருநாள் வாழ்க்கையிலும் ஒரு உருவத்தில் கேட்கப்படுகிறது , படிக்கப்படுகிறது  , பாமரர்களால், அறிஞர்களால், படித்த சமூகத்தால். இந்தியாவின் பன்முக காலாசாரத்தின் கலசம் சமஸ்கிருத இலக்கியம். சமஸ்கிருதம் மேல் இவ்வளவு வெறுப்பு கொள்வது தமிழுக்கு இம்மியும் உதவி செய்யப்போவதில்லை , தமிழுக்கு சாவுமணிதான் அடிக்கும். சமஸ்கிருதக் காழ்ப்பு என்ற பாடையில் தமிழ் பிரயாணம் செய்யும்.

சமஸ்கிருதம் செத்த மொழி என்றால், செந்தமிழும் செத்த மொழி ; சங்ககால மொழி செத்த மொழி , நாம் இன்றைக்கு பேசுவது தற்கால்த்தமிழ் சங்கத்தமிழ் அல்ல. திருவள்ளுவர் இன்றைக்கு சென்னையில் நடமாடினால், அவருக்கு மக்கள் பேசுவது புரியாது. எல்லா மொழிகளும் கால ஓட்டத்தில் மாறிக்கொண்டு வருகின்றன , அதற்கு தமிழ் விதிவிலக்கு அல்ல. சாஸர் காலத்து ஆங்கிலம் இன்றைக்கு எப்படி புரியாதோ, அபடித்தான் சாஸ‌ரின் சமகாலத்தவ்ரான பவநந்தியின் தமிழும் நமக்கு புரியாது, ஏதோ கோனார் நோட்ஸ் வைத்து திருக்குறள் , நன்னூல் முதலியவற்றை பரீக்ஷைகளுக்கு மனப்பாடம் செய்வதால், அவை தற்காலத்தமிழ் என எண்ணாதீர்கள். கலாசாரப் பொக்கிஷமாகத்தான சங்கத்தமிழை, செந்தமிழை படிக்கிறோம், ஆனால் அவை செத்த மொழி.

மோடி அரசைப் பொருத்தவரை ஹிந்தி ஒரு ஆட்சி மொழி. அதனால் அவர் உலக அரங்குகளில் ஹிந்தியைப் பேசுவதை பாராட்ட வேண்டும்

https://en.wikipedia.org/wiki/Languages_with_official_status_in_India

The Constitution of India designates the official language of the Government of India as Hindi written in the Devanagari script, as well as English.[1] There is no national language as declared by the Constitution of India.[2] Hindi and English are used for official purposes such as parliamentary proceedings, judiciary, communications between the Central Government and a State Government.[1] States within India have the liberty and powers to specify their own official language(s) through legislation and therefore there are 22 officially recognized languages in India.

மத்திய அரசுக்கு ஹிந்தி பயன்படுத்துவது இயற்கைதான்.


"வரலாற்றை ஒருமுறை பின்னோக்கித் திரும்பிப் பார்க்க வேண்டும்....... . " என்ற அறிவுரை திராவிட/தனித்தமிழ் இயக்கத்தாருக்கு ம் செல்லும். 100 வருஷங்களாய் தமிழ் தமிழ் என மாரடித்து, சமஸ்கிருத வெறுப்பை வளர்த்து என்ன கிழித்து விட்டீர்கள் - முதல் வகுப்பிலிருந்தே குழந்தைகள் ஆங்கிலம் கற்கின்றனர், தமிழை ஒதுக்குகின்றனர் , அதுதான் நீங்கள் செய்த சாதனை.

No comments: