Wednesday, June 29, 2016

பெரிதாக ஊதப்பட்ட பலூன் - ஈவெரா

"பெரியார்"  என துதிக்கப்படும் ஈ.வெ.ராமசாமி நாயக்கரைத்தான் சொல்கிறேன்

சமீபத்தில் அந்த பலூன் ஊதப்பட்டது, அப்பலூனை ஊசியால் குத்தினால் உடனே சுருண்டு விடும். 
இந்த வல்லமை கட்டுரைக்கு என் பதில்களில் அந்த பலூனை பற்றிய எண்ணங்கள்.

http://www.vallamai.com/?p=51787
பெரியார் என்ன செய்தார்?

விஜ‌ய‌ராக‌வ‌ன் wrote on 23 October, 2014, 19:43
திருமதி நாகேஸ்வரி அண்ணமலை அவர்கள் பெரியார் என்ன செய்தார் என அவர் செய்த அரசியலை , முக்கியமாக ஈவெரா காங்கிரஸ் ஆதரவாக அல்லது எதிராக ஏன் என்ன செய்தார் என ஈவெரா ஆதரவாளர்கள் பார்வையில் எழுதியுள்ளார். அதை நான் அலசப்போவதில்லை , ஏனெனில் அது கட்சிப்பார்வை, ஒரு காலும் இண்டெர்நெட் வாதங்களால் மாத்த முடியாது. மேலும் அது 80 வருட முன் அரசியலை பற்றி ஒரு பார்வை வைக்கிறது, அதை இப்போது அலசி ஒரு பயனும் இல்லை.
“ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதை வேண்டும் என்பது பெரியாரின் கொள்கைகளில் ஒன்று ” என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது ? தமிழ் காட்டுமிரண்டி மொழி, அதை கைவிட்டு ஆங்கிலத்தில்தான் குடும்பங்களுக்குள் பேச வேன்டும், தமிழ் மரபும், இலக்கியங்களும், பரம்பரைகளும் காட்டுமிரண்டிதான் என 40-50 வருடங்கள் ஓயாது பிரச்சாரம் செய்து, அதையும் பெருமையுடன் சொன்னவதான் சுயமரியாதையை அதிகரித்தவர் என நம்ப முடியவில்லை. சரி தமிழர் பண்பாடுதான் காட்டுமிரண்டி என்றால் , அதன் தீர்வு என்ன ? பிரிட்டிஷ் காலனீயத்தை கைவிடக்கூடாது. உலகம் முழுவதும் பல நாடுகள் ஐரோப்பிய காலனீயத்தை எதிர்த்து போராடும் போது,ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தை ஆதரித்தது எவ்வகையில் பகுத்தறிவு, எப்போது சுயமரியாதை ஆனது. ஈவெராவின் சிந்தனைகள் 19ம் நூற்றாண்டு காலனீயத்தால் உண்டாக்கப்பட்ட்வை. இதை திரும‌தி நா.அ. “இது சரியோ தவறோ; இது சமூக நீதிக்கு அவர் கொடுத்த முக்கியத்துவத்தைக் காட்டும்” என‌ சால்ஜாப்பு சொல்ல‌ முடியாது. அப்ப‌டியென்றால் “ச‌மூக‌நீதி” என்ற‌ போர்வையில் என்ன‌ வேன்டுமானாலும் சொல்ல‌லாம், அன்னிய‌ர்க‌ளின் காலை பிடிக்க‌லாம், சொந்த‌ நாட்டு ம‌க்க‌ள் மீதும், அவ‌ர்க‌ள் திற‌மை மீதும் மொத்த‌ அவ‌ந‌ம்பிக்கை வைக்க‌லாம் . அது என்ன ஈவெரா பிராண்டு “சமூகநீதி” – தமிழர்கள் தங்கள் மரபிலும், மொழியிலும் பூரண அவநம்பிக்கை வைக்க வேண்டும், என்ன ஈவெரா பிராண்டு “சமூகநீதி” அரசியல் சுதந்திரம் வேண்டாம் என்பது? ம‌ற்ற‌ நாடுக‌‌ளில் அப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ரை சுத‌ந்திர‌ம் அடைந்த‌வுட‌ன் தூக்கில் இட்டுருப்பார்க‌ள். “ஜ‌ன‌நாய‌க‌” அமெரிக்க‌ நாடுக‌ள் பிரிட்ட‌னுட‌ன் போரிட்டு 1782ல் சுத‌ந்திர‌ம் அடைந்த‌வுட‌ன் , ஆயிர‌க்க‌ண‌க்கான‌ பிரித்தானிய‌ முடிய‌ர‌சின் ஆத‌ரவாள‌‌ர்க‌ள் க‌ன‌டாவிற்க்கு உயிருக்காக ஓட‌ வேண்டியிருந்த‌து.
ச‌ரி அது போக‌ட்டும், சமூக‌‌த்தில் எவ்வ‌ள‌வோ அச‌டுக‌ள் உள்ள‌ன‌ர் ; 50 வருடம் முன் இருந்த அசடுகளை இப்போது நினைத்து ஒன்றும் ஆகப்போவதில்லை அப்ப‌டிப்ப‌ட்ட‌ அச‌டுக‌ளை ஏன் தோள்மேல் தூக்கி பெரியார் என‌ துதி பாட‌ வேண்டும்? அதுதான் என் கேள்வி , என் எதிர்ப்பு . ப‌குத்த‌றிவின் முத‌ல்ப‌டி ஒரு ம‌னித‌னை ம‌னிதாக‌ பார்க்க‌ வேன்டும், அதை விட்டு த‌மிழ‌ர்களின் சுய‌ ம‌ரியாதையை குலைத்த‌ ஒருவ‌ர்தான் பெரியாரா?
ஈவெராவின் அர‌சிய‌ல் வாரிசு விழுமிய‌ங்க‌ள் என்ன‌ ? உண‌ர்ச்சி மிக்க‌ கோஷ‌ங்க‌ள் ; அரசியல், சமூக சகிப்பின்மை , மற்ற‌ கருத்து உடைய‌வ‌ர்க‌ளை ஜாதி அடிப்ப‌டையில் தாக்குவ‌து; ஒரு ப‌க்க‌ம் ஜாதிக‌ள் இல்லை என்ற‌ கூச்ச‌ல், ம‌று ப‌க்க‌ம் ஜாதி ச‌ர்ட்டிபிகேட்டுக‌ள் தான் க‌ல்வி, ப‌த‌வி, ப‌த‌வி உய‌ர்வு ஆகிய‌வ‌ற்ரை நிர்ண‌யிக்கும் என்ற‌ நிலை; இதை ம‌றைக்க‌ அதீத‌ ஹிபாக்ர‌சி , த‌னிம‌னித‌ துதி , இவைக‌ள்தான்.
த‌க்கார் த‌க‌விலார் அவ‌ர‌வ‌ர் எச்ச‌த்தால் அறிய‌ப்ப‌டும்
என்ப‌து திருக்குற‌ள். ஈவெராவின் அரசியல் எச்ச‌ங்க‌ள் ஈவெராவை அடையாள‌‌ம் காட்டுகிற‌‌ன‌.
ஒரு சின்ன‌ உதார‌ண‌ம் : ஈவெரா ப‌க்த‌ர்க‌ள் “ஐ.நா. ஈவேரா பெரியாரை தென்கிழ‌க்கு ஆசியாவின் சாக்கிர‌டீஸ் என‌ அறிவித்து விட்ட‌ன‌ர்” என‌ பெருமையாக‌ சொல்லி வ‌ருகின்ற‌ன‌ர். இந்தியா தென் ஆசியாவில் இருக்கு; தென் கிழ‌க்கு ஆசியாவில் அல்ல‌; ஆனாலும் இந்த‌ முர‌ணைப் பார்க்காம‌ல் ப‌க்த‌கோடிக‌ள் “ஐநா ப‌ட்ட‌த்தை” பெருமையாக‌ பேசுகின்ற‌ன‌ர்.
வ‌ன்பாக்க‌ம் விஜ‌ய‌ராக‌வ‌ன்

Vijayaraghavan wrote on 5 November, 2014, 16:42
“பெரும்பாலான மாநிலங்களில் இன்னும் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோருக்கான முறையான அட்டவணையே இல்லையென்பதை உணருங்கள்.” வில்லவன் கோதை
இந்தியாவில் வேறெங்கும் நடக்காதது தமிழ்நாட்டில் மட்டும் நடப்பது போல் சொல்லுவது ஈவெரா மாய‌பிம்ப தூக்குதல். நகரமயமாதல், தொழில்மயமாதல், ஜாதி பேத‌ங்களில் நம்பிக்கை இல்லாத சட்டம், நீதி, அரசாங்கம் ஆகியவைதான் ஜாதி வேறுபாடுகள் குறைந்ததில் அடிப்படை காரணங்கள். அது 150 வருஷங்களாக இந்தியாவில் நடப்பது; எல்லா மாநிலங்களுக்கும் அது பொருந்தும். பக்தகோடிகள் எல்லாம் தங்கள் தலைவரால் ஏற்பட்டது என்ற புனைவு போன்ற ஹாஸ்யம் இல்லை. உதாரனமாக 8 மில்லியன் ஜனத்தொகை உள்ள மெட்ராஸ் எப்படி ஜாதி வேற்றுமையை குறைத்தது என பலர் நேரடியாக பார்த்தவர்கள். (http://www.jeyamohan.in/?p=63812) எல்லாம் ஜாதி நோக்கோடு பார்ப்பது என்ற ஈவேராவின் பழக்கம், தமிழ்நாட்டில் தொத்துநோயாக பரவி ஜாதி பேதங்களை களைவதில் முட்டுக்கட்டையாக உள்ளது. 
விஜயராகவன்

விஜயராகவன் wrote on 6 November, 2014, 15:54
எது “முழுமையான பயனாளிகள் ” நிலை என்பதை காலமெல்லாம் விவாதிக்கலாம். ஜாதி அடிப்படை ரிசர்வேஷன்கள்தான் ஈவேராவின் முக்கிய பங்களிப்பு என்றால், ஜாதி பேதங்கள், ஜாதி உணர்வ்ய் எழுச்சி, ஜாதி அரசியலின் வளர்ச்சியில் ஈவேராவின் பங்கை மறுக்க முடியாது.
ஒருவர் தொட்டில் முதல் சாகும் வரை ஜாதி சர்டிபிகெட் அடிப்படையில்தான் கல்வி, உத்யோகம், உத்யோக வளர்ச்சி போன்றவ்ற்ரை பெறுவார் என்பது அரசாங்க கொள்கையானல், அது ஜாதி பேதத்தையும், ஜாதி அரசியலையும் அதிகரிக்கத்தான் செய்யும். அரசாங்க கொள்கைகள் “ஜாதி குருடு” ஆக இருந்தால்தால்தான் ஜாதி உணர்வும் வேறுபாடுகளும் குறையும். ஈவெராவின் போலி பகுத்தறிவு நெல்லை நட்டுவிட்டு, கேழ்வரகு அருவடையை எதிர்பார்ப்பது.
ஈவெராவின் பங்களிப்புகள் என்ன?
மேற்சொன்னபடி ஜாதி அரசியலை வளர்ப்பது. அதை மறைப்பதற்க்கு Politics of scapegoating வளர்ப்பது. தமிழர்களின் சரித்திரம், பரம்பரை ஆகியவற்றில் காழ்ப்ப்புகாட்டி, அவர்கள் தன் நம்பிக்கையையும், சுயமரியாதையையும் தகர்த்தது.
பிரித்தானிய காலனீயத்தை ஆதரித்தும், சுதந்திரத்தை எதிர்த்தும் தமிழர்களின் சுய ஆட்சி தகுதியின் மீது அவநம்பிக்கையை வளர்த்தது. மற்றபடி அவருடைய படிப்பு குறைவாக இருந்ததால் தூயதமிழ் இயக்கம், லெமூரியா போன்ற பிற்போக்கு கருத்தாங்களை ஆதரித்தது. இன்னும் ஈ.வெ.ராமாசாமி நாயக்கரை “பெரியார்”, “பகுத்தறிவு பகலவன்” என்ற துதி செய்ய வேம்டுமா; நீங்கள் செய்யலாம்; ஈவெரா எதிர்த்த சுதந்திர இந்தியாவில் , இந்திய குடியரசில் உங்களுக்கு சிந்தனை உரிமை உண்டு.

வ.கொ.விஜயராகவன் wrote on 8 November, 2014, 14:46
ஈவெரா கருத்துகள் ஒன்றும்கூட ஒரிஜினல் இல்லை; மற்ற இந்திய சிந்தனையாளர்கள் அல்லது இந்திஉஅ மரபிலிருந்து எல்லாம் எடுக்கப்பட்டவை அல்ல. ஈவெரா கருத்துகள் அவருக்கு 75 ஆண்டுகளுக்கு முன் பிரித்தானிய காலநீய ஆளும் வர்கம் மேலும் ஆங்கில கிருஸ்துவ மத போதகர்களிடம் இருந்து வந்தது . அவர்கள் தங்கள் காலனீய, ஏகதிபத்திய அரசு அதிகாரங்களை ஜஸ்டிபை செய்யவும், தங்கள் ஆட்சிக்கு ஒரு “நல்ல காரணம்~ தேடவும், இந்தியர்கள், இந்து மதம், இந்திய சிந்தனைகள், இந்திய மரபுகள் மீதும் காரித்துப்பினர். ஈவெரா அந்த துப்பல்களை புனிதஜலமாக பாவித்தார். சம்பிளுக்கு ஒன்று கூட ஈவெராவிக்கு ஒரிஜினல் சிந்தனை கிடையாது.
சிந்தனை தளத்தில் அவருக்கு “இயல்பாக” வந்தது ஈயடிச்சான் காபிதான் . என் எதிர்ப்பு ஈவெரா மீது அல்ல ; ஈவேரா துதி மதம் மீது தான் , அதனால்தான் இந்த பொய் பிம்ப்பத்தை உடைக்க வேண்டியுள்ளது. விஜயராகவன்

Vijayaraghavan wrote on 13 November, 2014, 15:59
“இது (மணியம்மை மணம்) கழகத்தின் சொத்துகளுக்கு பாதுகாப்புக்கான ஒரு ஏற்பாடே தவிற வேறொன்றுமல்ல என்று அன்றே சொன்னவர் பெரியார்.” தன் கட்சி விவகாரங்களுக்காக ஒரு இளம்பெண்ணின் வாழ்வை பிணையாக விளையாடுவதா பகுத்தறிவு ?? . அது அகங்காரத்தின் உச்சி அல்லவா? . மணம் ஒரு மனங்களின் காதல் அடிப்படை ஐக்கியம் என்றுதான் தற்காலத்தில் பார்க்கின்ரனர்; ஆனால் ஈவேராவிக்கு தன் கட்சி எதிர்காலத்தை கருதி ஒரு இள‌ம்பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்குவது “சாதாரணமாக” பார்ப்பது, சரியாக இல்லை. ஈவேரா தன் மண‌த்தை ஒரு பிசினஸ் விவகாரமாக பார்த்தது அவருடையை ஆளுமையை இன்னும் ஒரு படி கீழே தள்ளுகிரது. நான் அவர்களின் வயது வேற்றுமையை பற்றி விமர்சிக்க வில்லை – ஈவேராவே அதை கண்டித்திருந்தாலும் ; ஆனால் இளம்பெண்ணின் வாழ்க்கையை ஒரு Instrument ஆக‌ பாவிப்பது, மனிதாபிமான செயல் இல்லை.


வ.கொ.விஜயராகவன் wrote on 7 July, 2016, 15:19
ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்ற போலி பகுத்தறிவாளர், போலி சமூகசீர்திருத்தவாதியின் விளைவுகள் இன்று நன்றாக தெரிகின்றன. எல்லா இந்திய மாகாணங்களில் நடக்கும் ஜாதி கலப்பு புள்ளி விவரங்கள் , தமிழ்நாட்டில் மிகக்குறைவான ஜாதி கலப்பு மணங்கள் இருப்பதாக ருஜு செய்கிறன.
தமிழ்நாட்டில் 97.1% மணங்கள் ஒரே ஜாதிக்குள் நடப்பவை. ஜாதிகலப்பு மணங்கள் 3%க்கும் குறைவு, இது தென் இந்தியாவில் அடிமட்டம்.
இந்த புள்ளிவிவரத்திலும் இன்னொரு ஷாகிங் புள்ளிவிவரம். கேரளாவில் “கீழ்ஜாதி” ஆண்களை மணக்கும் “மேல்ஜாதி” பெண்கள் 12.24 சத‌விகிதம். தமிழ்நாட்டில் இது 1.66%.   எனக்கு “மேல்” அல்லது “கீழ்”  ஜாதிகள்  என்ற பாகுபாட்டின் மீது நம்பிக்கையில்லை, அதனால் அவை பிராகெட்டின் உள்ளே , ஆனால் ஈவெரா சீடர்கள் வர்ப்புருத்தலில் இதைப்போல் அரசு சார்ந்த பாகுபாடுகள் உள்ளன. இப்படிப்பட்ட பாகுபாடுகளே ஈவெராவின் போலித்தனத்தை காட்டுகிறது
போதுமா , “பெரியார் பிறந்த பூமி”| என்ற மாயையின் வண்டவாளம். ஈ.வெ.ரா.நா. வின் துதி தமிழர்களை உணர்சிகர கோஷங்களில் வைத்து , பிந்தங்கிய மக்களாக வைக்கிறது, வைக்கும்.
“பெரியார் பிறந்த பூமி” யில்  பகுத்தறிவு , பகுத்தறிவு பாசரை –  இதைப்போல் ஜோக்குகள் உலகம் எங்கேயும் இல்லை. தமிழ்நாட்டுக்கு வெளியே மாணவர்கள் விஞ்ஞானத்தை கற்கின்றனர். தமிழ்நாட்டு மாணவர்கள் தமிழ்ர்கள் லெமூரியர்கள் என படிக்கின்றனர், தமிழர்கள் தமிழ் மற்ற மொழிகளுக்கு “தாய்” என படிக்கின்றனர்.  ஈ.வெ.ரா. துதி –  இந்த கட்டுரை ஆசியர் செய்வது போல்- தமிழர்களை இன்னும் கெடுக்கும்.
“பெரியார்”  பிம்பத்தை குப்பையில் போடாமல் தமிழ்நாடு இம்மியும் முன்னேறாது. 

வ.கொ.விஜயராகவன்