Monday, March 14, 2016

சில சம்பாஷணைகள்-8

டாக்டர் செ.அ.வீரபாண்டியன்  (.டாக்டர்.வீ ) ஒரு காலத்தில் திராவிடர் கழகத்தில் தீவிற பற்றாளராக இருந்து பிரச்சார பீரங்கியாகி இருந்தவர். தற்போது கர்நாடக /பண்டைய தமிழிசையில் ஆராய்ச்சி செய்து தனியாக சிந்தனை செய்து ப்ளாக் வைத்திருப்பவர்.  அவருடன் சில சம்பாஷணைகள்


http://tamilsdirection.blogspot.fr/2015/03/normal-0-false-false-false-en-us-x-none_22.html#comment-form

நீங்கள் சுட்டிக்காட்டிய வே.பாண்டியன் மட்டுமல்ல, மற்ற திராவிட இயக்க எழுத்தாளர்களுக்கும் தோல்நிற தொடர்பான அப்செஷன் அதிகமாகவே உள்ளது. இந்தியர்கள், தமிழர்கள், பிராமணர்கள் எல்லோரும் பல நிறத்தின் இருக்கின்றனர்; ஆனால் திராவிட எழுத்தாளர்களுக்கு இது ஒரு அப்செஷனாக போய்விட்டது; அதை வாழ்க்கயின் ஒரு உண்மையாக எடுத்துக் கொள்ளாமல், அதை “விஞ்ஞான” ரீதியாக அலசத்தொடங்குகின்றனர்; அது போலி விஞ்ஞானம் தான். ஞானமுத்து தேவநேயன் எழுத்திலும் இந்த அப்செஷன் உண்டு . அதனால் ஜாதி, மொழி வகை தீய சாய்வுகள் - ப்ரெஜுடிஸ் - போதாது என்று , தோல்நிற ப்ரெஜுடிஸ்களும் திராவிட இயக்கத்தினால் வளர்க்கப்பட்டன.

விஜயராகவன்


சில சம்பாஷணைகள்-7

டாக்டர் செ.அ.வீரபாண்டியன்  (.டாக்டர்.வீ ) ஒரு காலத்தில் திராவிடர் கழகத்தில் தீவிற பற்றாளராக இருந்து பிரச்சார பீரங்கியாகி இருந்தவர். தற்போது கர்நாடக /பண்டைய தமிழிசையில் ஆராய்ச்சி செய்து தனியாக சிந்தனை செய்து ப்ளாக் வைத்திருப்பவர்.  அவருடன் சில சம்பாஷணைகள்


http://tamilsdirection.blogspot.fr/2015/06/normal-0-false-false-false-en-us-x-none_11.html

 1. ஐயா

  ”சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள 'லெக்சிகனில்' 'தமிழர்' என்ற சொல்லுக்கு, 'விளிம்பில்லாத தீர்த்த பாத்திரம்' என்ற பொருள் மட்டுமே உள்ளது. ” என்பது சரியில்லை. லெக்சிகான் பக்கம் 1757 படி,  தமிழர் tamiḻar : (page 1757)

  tamiḻa-p-palla- va-taraiyar, n. < id. +. The Pallavas of the Tamil country; தமிழ்நாட்டுப் பல்லவவரசர். (நன். 164, மயிலை.)


  தமிழர் tamiḻar
  , n. < E. Tumbler, drinking cup; விளிம்பில்லாத தீர்த்தபாத்திரம். Loc.


  தமிழன் tamiḻaṉ

  , n. < id. 1. One whose mother-tongue is Tamil; தமிழைத் தாய்மொழி யாக உடையவன். 2. A Tamilian, as dist. fr. āriyaṉ; ஆரியனல்லாத தென்னாட்டான். ���ரியன் கண்டாய் தமிழன்கண்டாய் (தேவா. 744, 5). 3. Caste man, as dist. fr. paṟaiyaṉ; பறைய னொழிந்த தமிழ்ச்சாதியான்.


  விஜயராகவன்

  ReplyDelete
  Replies
  1. ஐயா,

   'தமிழர்' என்ற சொல்லுக்கு, தாங்கள் குறிப்பிட்டுள்ளபடியும் 'விளிம்பில்லாத தீர்த்தபாத்திரம்.' என்ற பொருள் மட்டுமே உள்ளது.

   ஆனால் 'தமிழன்' என்ற சொல்லுக்கு தாங்கள் குறிப்பிட்டுள்ளதில் உள்ள "Caste man, as dist. fr. paṟaiyaṉ; பறைய னொழிந்த தமிழ்ச்சாதியான். " என்ற பகுதி, என்னிடம் உள்ள பதிப்பில் (1982) வெள்ளை பூச்சால் மறைக்கப்படிருக்கிறது. தங்களின் கருத்தை படித்த பின், அந்த பகுதியைக் கீறி, ஒளிபாய்ச்சி படித்தேன். தாங்கள் குறிப்பிட்டபடியே இருந்தது. ஆனால் , லெக்சிகன் முறைப்படி, அதற்கான தகவல் மூலம் இல்லை. ஏன் என்பதும் ஆய்விற்குரியது.

   அரிய, ஆய்வுக்குரிய தகவலை சுட்டிக்காட்டியுள்ளீர்கள், மிக்க நன்றி.

   நன்றியுடன்,
   செ. அ. வீரபாண்டியன்
 2. ஐயா

  லெக்சிகான் பழைய இலக்கியம் மட்டுமல்ல, தற்கால புரிதல்களும், ஓரளவு வட்டார வழக்ககுகளும் , தற்கால (அதாவது 80 வருஷ முந்திய) இலக்கிய , பேச்சு வழக்குகளையும் பதிவு செய்கிறது. லெக்சிகாம் கமிட்டி இவைகளை காகித துண்டுகளில் பதிவு செய்து, அதன் ஆதாரத்தில் அகராதியை வெளியிட்டுள்ளது. உதாரணமாக , தமிழன் கடைசி அர்த்தத்தின் பக்கதில் 'மெட்ராஸ்' என பார்க்கலாம், அதாவது மெட்ராஸ் அருகில் உள்ள வழக்கத்தின் பதிவு.

  விஜயராகவன்
  ReplyDelete
  Replies
  1. ஐயா,

   என்னிடம் உள்ளது 1982 பதிப்பு . அதில் "தமிழன் கடைசி அர்த்தத்தின் பக்கதில் 'மெட்ராஸ்' என பார்க்கலாம், அதாவது மெட்ராஸ் அருகில் உள்ள வழக்கத்தின் பதிவு." என்பது இல்லை. அனேகமாக சில வருடங்களுக்கு முன் , திருத்தி ( Revised) வெளிவந்த‌ பதிப்பில் அது இருக்கலாம்.

   அன்புடன்,
   செ.அ.வீரபாண்டியன்
  2. ஐயா,

   தாங்கள் குறிப்பிட்டுள்ளபடி வட்டார, வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 'தமிழர்', 'தமிழன்' என்ற சொற்கள்,எந்தெந்த காலக்கட்டங்களில் என்னென்ன அர்த்தத்தில் வழக்கில் வந்தன? என்ற ஆய்வு அவசியமாகும். இன்று தமிழ்/திராவிட கட்சிகள் எந்தெந்த அர்த்தத்தில், என்னென்ன சான்றுகளின் அடிப்படையில், தமது கொள்கை விளக்கங்களில், அச்சொற்களை பயன்படுத்துகின்றனர்? என்ற ஆய்வும் அவசியமாகும். அவை தொடர்பாக, தங்களின் பங்களிப்பையும் வரவேற்கிறேன். திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும், சமூக அக்கறையுடனும், சுயலாப நோக்கின்றி உழைப்பவர்கள் அருகி வரும் காலம் இது.

   அன்புடன்,
   செ.அ.வீரபாண்டியன்

சில சம்பாஷணைகள்-6

டாக்டர் செ.அ.வீரபாண்டியன்  (.டாக்டர்.வீ ) ஒரு காலத்தில் திராவிடர் கழகத்தில் தீவிற பற்றாளராக இருந்து பிரச்சார பீரங்கியாகி இருந்தவர். தற்போது கர்நாடக /பண்டைய தமிழிசையில் ஆராய்ச்சி செய்து தனியாக சிந்தனை செய்து ப்ளாக் வைத்திருப்பவர்.  அவருடன் சில சம்பாஷணைகள்


http://tamilsdirection.blogspot.fr/2015/03/normal-0-false-false-false-en-us-x-none_22.html

நீங்கள் சுட்டிக்காட்டிய வே.பாண்டியன் மட்டுமல்ல, மற்ற திராவிட இயக்க எழுத்தாளர்களுக்கும் தோல்நிற தொடர்பான அப்செஷன் அதிகமாகவே உள்ளது. இந்தியர்கள், தமிழர்கள், பிராமணர்கள் எல்லோரும் பல நிறத்தின் இருக்கின்றனர்; ஆனால் திராவிட எழுத்தாளர்களுக்கு இது ஒரு அப்செஷனாக போய்விட்டது; அதை வாழ்க்கயின் ஒரு உண்மையாக எடுத்துக் கொள்ளாமல், அதை “விஞ்ஞான” ரீதியாக அலசத்தொடங்குகின்றனர்; அது போலி விஞ்ஞானம் தான். ஞானமுத்து தேவநேயன் எழுத்திலும் இந்த அப்செஷன் உண்டு . அதனால் ஜாதி, மொழி வகை தீய சாய்வுகள் - ப்ரெஜுடிஸ் - போதாது என்று , தோல்நிற ப்ரெஜுடிஸ்களும் திராவிட இயக்கத்தினால் வளர்க்கப்பட்டன.

விஜயராகவன்


================================================================================

http://tamilsdirection.blogspot.fr/2015/03/normal-0-false-false-false-en-us-x-none_31.html

ஐயா

ஈ.வே. ராமசாமி நாயக்கர் காங்கிரஸ் கட்சி உத்தரவில் வைக்கோம் சென்று ஆலயப்பிரவேச போராட்டத்தில் பங்கெடுத்தார். ஆனால் தமிழ்நாட்டு ஈவேரா பக்தர்கள் ஏதோ அவர்தான் போராட்டத்திற்க்கு தலைமைதாங்கி , வெற்றிபெற்றது போல் பிம்பத்தை உருவாக்கி ஈவேரா துதி செய்கின்றனர் . உண்மையில் அங்கு பங்கேற்ற பல தலைவர்கள் - முக்கியமாக மலையாள தலைவர்களில் - இவரும் ஒருவர் ; இரண்டாம் தள தலைவர் என சொல்லலாம்.
நீங்கள் குறிப்பிட்ட வைக்கோம் விகிபீடியா பக்கமே “Soon after this the Maharajah of Travancore, Moolam Thirunal died on 7 August 1924 and his niece Maharani Sethu Lakshmi Bayi came to power. As part of her installation durbar, she released all the prisoners.” என்கிரது.

ஆனால் ஈவேரா பக்தர்கள் ”When the Raja unexpectedly died Periyar was released from the Trivandrum prison because additional trouble was feared, since the death of the Raja somehow connected with Periyar's imprisonment as a bad omen” என எழுதியுள்ளனர்.


தமிழர்கள் ஈவேரா போன்ற பிப்ம துதியில் இருந்து வெளி வராவிட்டால் , சமூக கலாசார நாசம் அடைவர்.

EVR was a half educated demagogue ; Personality cult around his figure has already done lot of damage

விஜயராகவன்
ReplyDelete
Replies
 1. No one, to my knowledge, had suffered like me, at the personal level, the unbelievable damage, due to the’ Periyar masked’ culprits ; becoming valuable inputs to my posts; now the damage is threatening, to eliminate Tamil & ‘convert’ Tamils into ‘rootless Taminglishers’, with the active connivance of the so called followers of Periyar EVR & ‘dravidian infected’ TN style Hindutva forces, with latent mutually beneficial relationship between the two. I just try to undo the damages; probably I may succeed.
 2. ஐயா

  உங்கள் `சீர்திருத்த` முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்.

  பிரச்னை , ஈவேரா அல்ல , அவர் சொன்னதையெல்லாம் ஒரு விமர்சனம் இல்லாமல் , அவர் பிம்பத்தை தலைமேல் தூக்கி வைத்து, மற்றவர்களும் அந்த பிம்பத்திற்க்கு அடிபணிய வேண்டும் என்ற மனப்பான்மை.

  ஈவேரா அவர் வளர்ந்த கால்த்தில் ஏதோ சொன்னார் என மன்னித்து விடலாம் , தனிமனித போக்கு என ஓரம்கட்டி விடலாம். ஆனால் பல அரசியல் சக்திகள் , தங்கள் சுயநலத்திற்க்காக அவர்கள் துதிகளை மற்ரவர்கள் மீது திணிப்பது தவறு


  மதிப்புடன்

  விஜயராகவன்

சில சம்பாஷணைகள்-5
டாக்டர் செ.அ.வீரபாண்டியன்  (.டாக்டர்.வீ ) ஒரு காலத்தில் திராவிடர் கழகத்தில் தீவிற பற்றாளராக இருந்து பிரச்சார பீரங்கியாகி இருந்தவர். தற்போது கர்நாடக /பண்டைய தமிழிசையில் ஆராய்ச்சி செய்து தனியாக சிந்தனை செய்து ப்ளாக் வைத்திருப்பவர்.  அவருடன் சில சம்பாஷணைகள்

http://tamilsdirection.blogspot.fr/2015/01/v-behaviorurldefaultvmlo.html
 1. ஐயா

  லோகநாதனின் பிதற்றல்களை சீரியசாக எடுத்துக் கொண்டது, ஏமாற்றம் கொண்ட வியப்பை அளிக்கிரது. சுமேரிய மொழி - உண்மையில் அது ஒரு மொழிக் குடும்பம் - சமஸ்கிதுதம் , பண்டைத் தமிழ், மற்ற திராவிட மொழிகள் ஆகியவற்றின் மூலம் என்பது எற்கப்படாத , ஏற்கப்பட முடியாத உளரல் , அதை திருப்பி திர்புப்பி 10000 தடவை எழுதினால் உண்மை ஆகாது. அடிப்படை மொழியியல் முறைகள் உங்களுக்கு சிறிது தெரிந்திருந்தாலும் , தன் கற்பனைகளையே , ஆங்கில எழுத்தில் கொடுக்கப்படும் சுமேரிய - எந்த ஆராய்சி லோகநாதனின் மூலம் என சொல்ல முடியாது - “எழுத்துகள்” என கொடுத்து அதை , தமிழ் என்பது மோசடி . தமிழர்கள் ஏன் இப்படி பைத்தியக்கார obsession களுக்கு அடிடைகின்றனர் என்பது புரியாதது ; அந்த obsession களை நீங்கள் ஒதுக்கினால் , உங்களுக்கும் பயன் ஏற்ப்படும்

  வன்பாக்கம் விஜயராகவன்
  1. லோகநாதனின் ஆராய்ச்சி முடிவுகளை மறுத்து எவரேனும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதி இருந்தால், தெரிவிக்கவும். நன்றியுடன் அவற்றை, திறந்த மனதுடன் படிப்பேன். எனது பதிவில் குறிப்பிட்டுள்ள '" யாழ் கால் சுருதிய ஈனே இயமிடினே." என்பது சுமெரு மொழியில் phonetic ஆக இருந்தாலும், எனது பதிவில், அது தொடர்பாக உள்ளவை, ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்க்கத் தகுந்ததாகும்
 2. ஐயா

  திராவிட மொழிகள் , தமிழ் மொழிகள் பற்றி 200 ஆண்டு காலமாக நூற்றுக்கனக்கான ஆராய்ச்சியாளர்கள் எழுதியுள்ளனர். திராவிட மொழிகள் பற்றி இப்போது authoritative book

  Krishnamurti, Bhadriraju (2003), The Dravidian Languages, Cambridge University Press, ISBN 0-521-77111-0 .

  இண்டெர்நெட்டில் ஆயிரக்கணக்கான பிதற்றல்கள் உள்ளன. ஆராய்ச்சியாளர்கள் அதை “முறியடித்து” தங்கள் நேரத்தை விரயம் செய்வதில்லை.

  இதைப்போல் தமிழ்நாட்டில் “லெமூரியா” “லெமூரியத்தமிழ்” என்ற பிதற்றல் பிரபலம் - அரசாளும் வர்கங்கள் கூட அதை நம்புகின்றனர் . தமிழகத்து வெளியில் ஆய்வு உலகத்தில் பைத்தியக்கார தனத்தை யாரும் “முறியடிப்பது” இல்லை., “மறுப்பதும்” இல்லை.

  ஈவேரா வின் போலி பகுத்தறிவு தமிழகத்தை அர்த்தமற்ற போலி விஞ்ஞானத்தில் கொண்டு சேர்த்தது.

  விஜயராகவன்
  ReplyDelete
  Replies
  1. ஐயா,

   தகவலுக்கு நன்றி. இசை ஆராய்ச்சி உள்ளிட்டு எதிலும் எனது நிலைப்பாட்டிற்கு எதிரான சான்றுகளை, திறந்த மனதுடன் பரீசிலித்து, எனது நிலைப்பாடுகளை நெறிப்படுத்தி வாழ்கிறேன்.தமிழ்நாட்டில் எதிரெதிர் நிலைப்பாடுகளில் உள்ளவர்கள், ஒருவரையொருவர் எதிரி போல் பாவித்து, உணர்வுபூர்வ வாதங்களில் ஈடுபடுவதை பலகீனப்படுத்தி, அறிவுபூர்வ விவாதங்களை, என்னால் இயன்ற அளவுக்கு, ஊக்கப்படுத்தி வருகிறேன்.

   செ.அ.வீரபாண்டியன்

சில சம்பாஷணைகள்-4http://tamilsdirection.blogspot.fr/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_10.html


ஐயா

"பெரியார் 'வைதீகப் பார்ப்பனரை விட, லெளகீகப் பார்ப்பனர் மோசமானவர்' என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்." என ஒரு விமர்சனம் இன்றி ஈ.வெ.ரா.வின் கருத்தை அள்ளி இருக்கின்றீர்கள். அது இனத்துவேஷ பிரச்சாரமாக உங்களுக்கு படவில்லையா? ஈவேராவை 'பெரியார்' என அழைத்தாலே உங்கள் பகுத்தறிவு விமர்சன நோக்கு என்பதற்க்கு நல்ல சான்றுஇ. இது மேலும் ஈவேரா தன் பிரசாச்சாரங்களுக்கு அப்பால் சமூகவியல் அல்லது சரித்திர நோக்கில் சிந்தனை செய்யத் தெரியாதவர் எனக் காட்டுகிரது.

கடந்த 150 ஆன்டுகளாகவே தமிழகத்தில் எல்லா ஜாதிகளும் இன மக்களும் பரம்பரை நடத்தை, வாழ்க்கை முறையில் இருந்து மாறி வருகின்ரனர். பரம்பரை கல்வி, தொழில் மட்டுமல்ல, கலாசாரம், வாழ்க்கை முறையும் மாறிவருவது கண்கூடு. தற்காலத்தில் இள‌ம்பெண்கள் தாவணியை கைவிட்டு, சூரிதார் உடையை அணிகின்ரனர். இது 20 வருடங்களாக நடப்பது. 25 வருடங்களுக்கு முன் "தலித்" என்ற‌ வார்த்தையே தமிழில் இல்லை; இப்போது "தலித்" என்ற அடை மொழி பலரால் பெருமையுடன் பயன்படுத்தப் படுகிரது. 30 வருஷங்களுக்கு முன் எல்லா தமிழக வீடுகளிலும் கக்கூஸ் தரையில் குழி இருப்பதுதான்; இப்போது எல்லா புது வீடுகளிலும் மேற்கத்திய பாணி உட்காரும் கக்கூஸ்.

இது ஒரு சின்ன சாம்பிள்தான்; இந்த வாழ்க்கை முறைகள் எல்லோரையும் பாதிக்கிறன. ஈவெரா என்ற அறைகுரையாக படித்து, இனவாத சிந்தனையாளருக்கு பிராமண‌ர்கள் மீது பழி போட்டு அரசியல் ஒற்றுமையை தேடுவது.

நீங்கள் சொல்லும் திராவிட மனநோயாளித்தனத்தின் கண்கூடு சாதாரண மனிதர்களை பெரியார், அறிஞர், கலைஞர் , மொழிஞாயிறு என பலவாறு துதிபோட்டு பகுத்தறிவு, விமர்சன புத்தியை இழப்பது - அதே மனப்பான்மையின் மறுபக்கம் சில மனிதர்கள் அல்லது பிராமண‌ர் போன்ற இனங்களின் மீது அதீத துவேஷத்தை காண்பிப்பது.


மதிப்புடன்

வன்பாக்கம் விஜயராகவன்

பிழை திருத்தம்:
ஈவேராவை 'பெரியார்' என அழைத்தாலே உங்கள் பகுத்தறிவு விமர்சன நோக்கு என்பதற்க்கு நல்ல சான்றுஇ

என்பதை

ஈவேராவை 'பெரியார்' என அழைத்தாலே உங்கள் பகுத்தறிவு விமர்சன நோக்கு அழிந்துவிடும் என்பதற்க்கு நல்ல சான்று.

என படிக்க.

சில சம்பாஷணைகள்-3

டாக்டர் செ.அ.வீரபாண்டியன்  (.டாக்டர்.வீ ) ஒரு காலத்தில் திராவிடர் கழகத்தில் தீவிற பற்றாளராக இருந்து பிரச்சார பீரங்கியாகி இருந்தவர். தற்போது கர்நாடக /பண்டைய தமிழிசையில் ஆராய்ச்சி செய்து தனியாக சிந்தனை செய்து ப்ளாக் வைத்திருப்பவர்.  அவருடன் சில சம்பாஷணைகள்


 1. ஐயா

  யாரும் வைதீக பிரமணர்களுக்காக காத்திருக்க வேண்டாம். இது “பெரியாரிசம்” தரும் நச்சு - எல்லாவற்றிற்க்கும் பிராமணர்கள்தான் பொருப்பு என்பது. இதுவே ஈ.வெ.ரா.வின் குடும்பத்தில் தமிழிலேயெ பேசி, தங்களுக்கு பிரியமான சப்ஜெக்டுகளை தமிழிலேயே எழுதினால் , அது முதல் படி. இதில் “தூயதமிழ்” ஆட்களின் உணர்சிமிக்க, பின் நோக்கிய கருத்துகளையும், கோஷங்களையும் சட்டை செய்யாமல் இருந்தால் போதும். “தூயதமிழ்” ஆட்கள் தமிழை அழிவின் விளிம்பிற்க்கு அழைத்து சென்றுவிட்டனர்

  விஜயராகவன்.
 2. பிழை திருத்தம்

  ”இதுவே ஈ.வெ.ரா.வின் குடும்பத்தில் தமிழிலேயெ பேசி” என்பதை ”எல்லோரும் குடும்பத்தில் தமிழிலேயெ பேசி” என படிக்கவும்.

சில சம்பாஷணைகள்-2

டாக்டர் செ.அ.வீரபாண்டியன்  (.டாக்டர்.வீ ) ஒரு காலத்தில் திராவிடர் கழகத்தில் தீவிற பற்றாளராக இருந்து பிரச்சார பீரங்கியாகி இருந்தவர். தற்போது கர்நாடக /பண்டைய தமிழிசையில் ஆராய்ச்சி செய்து தனியாக சிந்தனை செய்து ப்ளாக் வைத்திருப்பவர்.  அவருடன் சில சம்பாஷணைகள்

http://tamilsdirection.blogspot.fr/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_14.html

ஐயா

உங்கள் கேள்வி 'தமிழின் மரணப்பயணம் தொடங்கி விட்டதா' என்பது மிகை போல் தோன்றினாலும், அதில் பல உண்மைகள் உள்ளன.

இந்த‌ த‌மிழின் அழிவு பாதைக்கு கார‌ண‌ம் தூய‌த‌மிழ் இய‌க்க‌மும், தெரிந்தோ தெரியாம‌லோ அத‌ற்கு ஆத‌ர‌வாக‌ போகும் த‌மிழ‌ர்க‌ளும்தான். ஸ்வாமி வேதாச‌ல‌ம் என்ற‌ ம‌றைம‌லை அடிக‌ளின் சிந்த‌னையில் 'த‌மிழ்' என்ப‌து ப‌ல‌நூறு ஆண்டு முன்பிருந்த‌ - அதாவ‌து ச‌ங்க‌ கால‌த்திய‌ - த‌மிழ் ; அதில் ச‌ம‌ஸ்கிருத‌ போக்கு க‌ல‌ந்துவிட்ட‌து. தூய‌ த‌மிழ் என்ப‌து வேளாள‌ர்க‌ள் த‌மிழ் என‌ அப்ப‌ட்ட‌மாக‌ ஜாதி அடிப்ப‌டியில் ஒரு க‌ற்ப‌னைத் த‌மிழை வைத்தார். மேலும், அது பேச்சுத்த‌மிழுட‌ன் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌து அல்ல‌; த‌மிழ் என்றால் எழுத்துத்த‌மிழ் . அது தொல்காபிய‌ கால‌ இல‌க்க‌ன‌த்துட‌ன் எழுத‌ப்ப‌ட‌ வேன்டும் . அத‌ற்கு முத‌ல் எதிரி ச‌ம‌ஸ்கிருத‌ம் , அத‌னால் வ‌ந்த‌ கிர‌ந்த‌ எழுத்து. இந்த‌ சிந்தனைப் போக்கில்தான் ம‌றைம‌லை அடிக‌ள், பார‌திதாச‌ன், ஞான‌முத்து தேவ‌நேச‌ன் ஆகிய‌வ‌ர்க‌ள் எழுதி, த‌மிழின் வீரிய‌த்தையும், வசீகரத்தையும் குறைத்து , அதை செல்லுப‌டியாகாம‌ல் செய்தனர். த‌மிழ் பிழைக்க‌ வேன்டும் என்றால், த‌னித்த‌மிழையும், அத‌ன் ஆத‌ர‌வான‌ ம‌றைம‌லை அடிக‌ள்- பார‌திதாச‌ன்-தேவ‌நேச‌ன் மொழிக்க‌ருத்தாக்க‌த்தை த‌மிழ‌ர்க‌ள் எடுத்தெறிய‌ வேண்டும். இல்லாவிட்டால் ஒரு ப‌க்க‌ம் தூய‌த‌மிழ் துதியையும் ம‌ற்றொரு ப‌க்க‌ம் த‌மிழை இளைய‌ த‌லைமுறை கை (அல்ல‌து வாய்?) விடுவ‌தையும் பார்க்க‌லாம், கேட்க‌லாம். இவ்விர‌ண்டும் ஒரே நாண‌ய‌த்தின் இரு ப‌க்க‌ங்க‌ள் . 100 ஆண்டுக‌ளாக‌ தூய‌த‌மிழ் இய‌க்கத்தின் சாத‌னை என்ன‌? த‌மிழை வாழ்க்கையில் இர‌ண்டாம் த‌ர‌ம் ஆக்கிய‌து.

வ‌.கொ.விஜ‌ய‌ராக‌வ‌ன்
ReplyDelete

Replies


 1. Sir,
  Kindly bear with me for replying in English, due to unavoidable reasons.

  Your comments are valuable to explore the scope for arresting the Tamil death process.

  The following two posts in this blog explained, how the emotionally dominant ‘pure Tamil’ extremists succeeded to implement their misunderstanding of the word ‘orIi’ in Tholkapiam, even in scientific and technical terms. This, in turn, had caused the damage to Tamil, especially in the medium of instruction for the science & technology courses. Also they explained how the rules in Tholkappiam permitted the phonetic adoption of Sanskrit words into Tamil, even in Tamil poems. The same rules could be extended to all non-Tamil languages, especially, while importing the words in science & technology, like in Japanese language.
  ‘The Pitfalls in the Study & Translation of the Ancient Tamil Texts ‘(11)Dt.August 28, 2013; & (12) Dt. August 28, 2013
 2. ஐயா

  விஞ்ஞான தமிழைப் பற்றிய உங்கள் கட்டுரையை படித்தேன்; உங்கள் கருத்துகளுடன் எனக்கு உடன்பாடே. அதே சமயம் தற்காலத் தமிழுக்கு ஏன் தொல்காப்பியத்தையே பிடித்து தொங்க வேண்டும்; தொல்கப்பியர் 2000 ஆண்டு முன் இருந்த , அவர் வட்டார (தமிழ்நாட்டின் தெற்கு கோடி?) இலக்கியத் தமிழை ஆதாரமாக வைத்து எழுதினார். 2000 ஆண்டுகள் பின்பு அதையே வைத்து 2014 வருடத்தின் பொருளாதார, தொழில்சார், விஞ்ஞான, சமூகவியலை எழுதப்பார்ப்பது விவேகம் அல்ல; அது தமிழை குழியில்தான் புதைக்கும். தமிழை 700 காலத்திய நன்னூல் வழியாக பார்ப்பது, ஆங்கிலத்தில் கேண்டர்பரி டேல்ஸ் எழுதிய சாஸர் காலத்திய ஆங்கில இலக்கணத்தை தற்காலத்தில் புகுத்துவது போல் இருக்கும்.

  தூயதமிழ் இயக்கம் 1960ல் இருந்து எப்படி விஞ்ஞான எழுத்து/படிப்பை நாசப்படுத்தியது என எழுதினீர்கள்; அதே சமயம் மற்ற புலங்களிலும் தூயதமிழ் சேதம் விளைவித்து உள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் எந்த முக்கிய (அல்லது சிறிய) தமிழ் இலக்கியகர்த்தாவை பார்த்தாலும் அவர்கள் தூயதமிழுடன் ஒத்துப் போகவில்லை; சுப்ரமணிய பாரதியில் இருந்து புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், அசோகமித்ரன், ஜெயமோகன் வரை சாதாரண தமிழில்தான் எழுதியுள்ளனர். தூயதமிழ் பற்றாளர்கள் எவரும் இலக்கியத்திலேயோ, விஞ்ஞானத்திலேயோ, பொருளாதாரத்திலேயோ, சமூக சாஸ்திரங்கிளேயோ ஒன்றும் எழுதவும் இல்லை, விருப்பமும் இல்லை. 2000 ஆண்டு முன்னாளைய தூய (??) தமிழ் துதி ஒரு பக்கம், மறு பக்கம் எல்லாம் ஆங்கிலத்திலேயே படிப்பது/செய்வது. இதில் வேதாசலம் என்ற மறைமலை அடிகளே உதாரணம்; தன் டைரியையும், வணிகவிவகாரங்களையும் ஆங்கிலத்தில்தான் எழுதினார். தூயதமிழ் ஹிபாக்ரசி அவரிடமே ஆரம்பித்தது.

  மேலும் தற்கால பேச்சுத்தமிழை உதாசீனப்படுத்தி, தமிழர்கள் தமிழில் பேசுவது நாகரீகக் குறைவு என்று தூயதமிழாளர்கள் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் 90 வருடங்களாகிய புழங்கி வரும் தூயதமிழ் நச்சுவாயு கடந்த 20 வருடங்களில் தன் தீயவிளைவுகளை வெளிப்படுத்தி வருகிரது.

  மதிப்புடன்

  விஜயராகவன்
  Delete
 3. ஐயா,
  "தற்காலத் தமிழுக்கு ஏன் தொல்காப்பியத்தையே பிடித்து தொங்க வேண்டும்?" என்ற உங்களின் கேள்வி சரியே.
  தற்காலத் தமிழில் வட மொழிச் சொற்களைப் பயன்படுத்தக்கூடாது என்பதற்கு தனித்தமிழ் ஆர்வலர்கள் தொல்காப்பியம் 'ஒரீஇ' சூத்திரத்தைச் சான்றாகக் காட்டியதால், அவர்களின் புரிதல் தவறு என்பதை விளக்கியுள்ளேன்.மற்றபடி இலக்கணத்தைப் பொறுத்தமட்டில், கால மாற்றங்களுக்கு ஏற்ப மாறுதலுக்கு உட்படுத்திப் பயன்படுத்த வேண்டும் என்பதையும், காலுக்குத் தான் செருப்பு பொருத்தமாக இருக்க வேண்டுமே ஒழிய, செருப்புக்கு காலை மாற்ற முடியாது என்பதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.(தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (3) 'சமூகத்தின் சீரழிவும், இலக்கணத்தின் வீழ்ச்சியும்' Dt. September 27, 2014)

  மதிப்புடன்
  செ. அ . வீரபாண்டியன்

சில சம்பாஷணைகள்-1

http://tamilsdirection.blogspot.fr/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_10.html

டாக்டர் செ.அ.வீரபாண்டியன்  (.டாக்டர்.வீ ) ஒரு காலத்தில் திராவிடர் கழகத்தில் தீவிற பற்றாளராக இருந்து பிரச்சார பீரங்கியாகி இருந்தவர். தற்போது கர்நாடக /பண்டைய தமிழிசையில் ஆராய்ச்சி செய்து தனியாக சிந்தனை செய்து ப்ளாக் வைத்திருப்பவர்.  அவருடன் சில சம்பாஷணைகள்

Dear sir,
Late E.V.Ramaswamy Naicker , whatever may be his merits, made politics of scapegoating fashionable by making brahmins scapegoats and whipping boys for any social issue. His obsessive brahmin hatred was so much that he preferred British colonialism to Independent India , which he thought would only be a paradise for brahmins. Such an unbalanced personality is wholly unworthy of being called Periyar. I am surprised that an otherwise sensible person like you continue the EVR துதி by calling him Periyar .


I don't see why anyone should be referred to by titles given by adulatory followers. Anything other than plain names is an attempt to give wholly exaggerated and many times undeserving image to the person in question. Giving tiles to persons, and insisting that persons be referred to by titles given by followers are also an attempt to suppress crtical look at that person's ideas and actions. This is a block to பகுத்தறிவு and Tamils easily fall victim to this tendency. As far honesty, simple life and sacrifices, there were many people in public life as well as private life. As far as EVR is concerned, I am prepared to forget him as a man belonging to another era .

Regards

 1. I agree with you that"why anyone should be referred to by titles given by adulatory followers. Anything other than plain names is an attempt to give wholly exaggerated and many times undeserving image to the person in question. ". In our transition phase of undoing the damages, it shall not weaken our communication. For example, instead of 'kalaingar Karunanidhi', if I write 'Mu.Karunanidhi, in my view, it will weaken the communication in identifying the referred person.
  Reply
 2. It depends what do you mean by communication; if you are addressing political party in TN, then give all the title for the party leader to 'sell" your ideas to them. On the other hand, if you want to think , coolly and rationally about anyone, drop all the titles. People like Newton or Einstein or Raman were real achievers who really increased the scientific knowledge; still we refer to them only as Newton or Raman (Raman Effect) . The same balance is needed in thinking about human beings or society also. Due to the lack of which Tamilnadu and Tamil is in the position it is today. Adulation has become a substitute for rationality. By dropping all titles of a person, you will be communicating to the wider world அடைமொழி பப்பு உங்க‌ளிடம் வேகாது . Only with a hard headed population , a leader can be held accountable continuously and he/she cannot hold unhealthy psychological hold over people.

  As for me, I neglect all the titles of politicians, or thinkers or anybody

  Regards