Tuesday, August 25, 2015

திராவிட இயக்கத்தின் மொழியியல் மீதுள்ள வெறுப்பு

திராவிட இயக்கத்தின் போலி பகுத்தறிவின் ஒரு முகம் மொழியியலின் மீது காழ்ப்பு. இந்த போலி பகுத்தறிவு ஸ்வாமி வேதாசலம் என்ற மறைமலை அடிகள், சுப்புரத்னம் என்ற் பாரதிதாசன், ஞானமுத்து தேவநேசன் என்ற பாவாணர், இன்னும் பல சில்லறை ஆசாமிகளின் மீது துதி நெறியால் வெளிப்படுத்தப் படுகிறது. போலி பகுத்தறிவின் மற்றொரு முகம் தற்கால விஞ்ஞான, பூகோள, மொயியியல் துறைகளை உதாசீனப் படுத்துவது. இந்த பின்னணியில்தான், ஆ.இரா. வேங்கடாசலபதியின் "கரையொதுங்கிய திமிங்கலம் எம்.ஏ. நுஃமானுக்கு ஓர் எதிர்வினை" என்ற கட்டுரையை பார்க்கவேண்டும்

http://www.kalachuvadu.com/issue-187/page10.asp

வேங்கடாசலபதிக்கு எதிராக‌ நான் அனுப்பிய‌தை கால‌ச்சுவ‌டில் பார்க்க‌லாம்

http://www.kalachuvadu.com/issue-188/page10.asp

ஆ.இரா. வேங்கடாசலபதி, நுஃமான் எழுப்பிய பிரச்சினைக்குப் பதில் அளிக்கவில்லை; அதை விட்டு, நவீன மொழியியலையே புறங்கையால் ‘ஒதுங்கிய திமிங்கிலம்’ எனத் தள்ளி வாதத்தை முடித்துக் கொள்கிறார். வேங்கடாசலபதி நம் முன் வைக்கும் துணிபுகள் நம்பத் தகுந்தவை அல்ல. நவீன மொழியியல் அமெரிக்க ஏகாதி பத்தியத்திற்கு கைப்பாவையாகையால், தமிழ்நாடு அதை உதாசீனப்படுத்தியதில் ஒரு தவறும் இல்லை, மேலும் அது இப்போது இறந்து விட்டது; அதனால் ஒரு பாதகமும் இல்லை; தமிழ்நாடு தன் கிணற்றுத்தவளை மனப்பான்மையை நீடிப்பது சரி என்கிறார். அவருடைய இரண்டு துணிபுகளும் ஆதாரமில்லாதவை என எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

முதலில் இரண்டாவதை எடுத்துக் கொள்வோம். மொழியியல் டயக்ரானிக் (காலஓட்ட மொழி மாறுதல் ஆய்வு), சிங்க்ரானிக் (ஒருகாலத்தில் மொழி குணாதிசயங்கள்) என இரட்டை நோக்கில் படிக்கப்படுகிறது. இவ்விரண்டு நோக்கும் எதிரிகள் அல்ல, பரஸ்பர ஆதாரம் கொடுக்கும் மாறுபட்ட ஆய்வுகள், அவ்வளவுதான். அதனால் தற்கால மொழியியலால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பது நகைக்கத்தக்கது. சசூர் 19ஆம் நூற்றாண்டில் இருந்த மொழியியலை நன்றாகக் கற்றவர்; ஆனால் ‘மொழி என்பது பேசுவதே ஆகும், அதனால் பேச்சுமொழிமீது தான் மொழியியலின் முக்கிய கவனம் இருக்க வேண்டும், பேச்சு மொழியின் கட்டுமானத்தை நாம் புரிந்துகொள்ள வேண் டும்’ என வாதிட்டார் 20ஆம் நூற்றாண்டில், அந்த பேச்சு மொழிதான் மொழி, அதை ஆராய வேண்டும், எழுதப் படும் மொழி இரண்டாம் முக்கிய தளமே என்ற சசூரின் கொள்கையைப் பரவலாக ஏற்றுக் கொண்டனர்; அதே சமயம் காலஓட்ட மொழியியலிலும் பல ஆராய்ச்சியாளர்களால் முன்னேற்றங்கள் நடந்துள்ளன. காலஓட்ட ஆய்வாளர்களும் சசூர் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, பேச்சு மொழிதான் மொழி என நம்புகின்றனர். ஆனால், அவர்களுடைய பார்வை சரித்திர மாற்றங்களில் உள்ளது.

பேர்ல் ஹார்பர் தாக்குதலுக்கு முன்னும் இன்றளவும், அமெரிக்கா மட்டுமல்ல உலகெங்கிலும் பல்கலைக் கழகங்களில் மொழியியல் படிக்கப்படுகிறது; ஐரோப்பா, தென்னமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, சைனா ஆகிய நவீன நாடுகளில் மொழியியல் ஆர்வமாகக் கற்றுக்கொள்ளப்படுகிறது; அது ஏகாதிபத்திய அமெரிக்காவின் குத்தகை என வாதிடுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.

வேங்கடாசலதி ஏன் இவ்வாறு தற்கால மொழியியல் மீது அவநம்பிக்கை கொண்டுள்ளார் என்பதைச் சுலபமாக யூகிக்கலாம்; நுஃமானின் கட்டுரை திராவிட இயக்கத்தின் ‘புனிதப் பசுவான’ ஞானமுத்து தேவநேயன் என்ற பாவாணரை தாக்கியதுதான்.

வன்பாக்கம் விஜயராகவன், ஸ்விட்சர்லாந்த்.

அதே காலச்சுவடில் நூஃமனும், பேரா. அண்ணாமலையும் வேங்கடாசலபதியை மறுத்து எழுதியுள்ளனர்