Monday, November 24, 2014

மோசார்ட்டின் ஃப்யூக்

நேற்று பாசல் ம்யுன்ஸ்டரில் (பாசலின் முக்கிய கதீட்ரல்) பாஸ்லர் கெசாங்க்ஃபெரைன் (பாசல் கான‌சங்கம்) நடத்திய மோசார்ட்டின் ஃபூக் நடந்தது. மேற்கத்திய இசையில் ஃபூக் என்ற‌ வகை இரு அல்லது பல பாடகர்கள் காண்ட்ராபுண்ட் வகையில் (எதிர்திசை பாட்டு) பாடுவது; முதல் பாடகர் ஒரு ஹார்மானிக்ஸில் பாடுவார்; மற்றவர்கள் அதே ஹார்மானிகஸில் பாடினாலும் மற்ற‌ ரிதிமில் பாடுவார்கள். கடந்த 200 ஆண்டுகளாக ஃபூக் அவ்வளவாக இயற்றப்படவில்லை. 
 
அந்த புரொகிராமிற்க்கு டிகட் 20- 70 ஸ்விஸ் ஃப்ராங்க். நான் 30 ஃப்ராங்க் டிகட் வாங்கி கடைசி பகுதியில் , ஆனால் நேராக மேடையை - 200 அடிகளுக்கு அப்பால்- பார்க்கும் போல் உட்கார்ந்திருந்தேன். பாடகர் குழுவில் , 2 சொப்ரானோ பெண்கள், ஒரு பேரிடோன், ஒரு பேஸ் பாடகர், ஒரு கண்டக்டர். பின்புல பாடகர்கள் 100 பேர் இருப்பார்கள், மற்ற வாத்தியக் குழு. கண்டக்டரே ரசிகர்களை முதலில் சில வார்த்தைகளை இசையுடன் பாடச்சொல்லி ஊக்குவித்து, எல்லோரையும் கூடப் பாடச் சொன்னார். அது ஒரு ஊக்கத்திற்க்குதான். பிறகு கானம் ஆரம்பித்தவுடன், ரசிகர்களிடமிருந்து பின் ட்ராப் சைலன்ஸ். வந்திருந்த உள்ளூர் ரசிகர்களுக்கு அந்த இசை நல்ல பரிச்சயம் போல் இருந்தது.

நேற்று கேட்டவை

Wolfgang Amadeus Mozart (1756-1791)
Ave verum Corpus, KV 618 für Chor und Orchester
Surprise 1
Adagio und Fuge in c-moll, KV 546 für Streicher
Surprise II

Grosse Messe in c-moll, KV 427  für Soli, Chor und Orchester


பாசல் ம்யுன்ஸ்டரில் 500 பேர் உட்கார்ந்து பாட்டு கேட்கலாம். நான் எடுத்த சில போட்டோக்கள் - 200 அடியில் இருந்து ஃப்லேஷ் இல்லாமல் மொபைல் ஃபோன் கேமராவில் எடுத்ததால், அவ்வளவு துல்லியம் இல்லை.

 
 


 

Saturday, November 22, 2014

நேருவைப் பற்றி

சமீப வாரங்களில் தி ஹிந்து பத்திரிக்கையில் ஜவஹர்லால் நேருவைப் பற்றி பல கட்டுரைகள் வந்தன. அவை பொதுவாக நேரு விமர்னத்திற்க்கு அப்பால் பட்டவர் எனவும், அவர் ஒரு தவறு செய்யாதவர் எனவும் நேரு மஹாத்மியம் பாடுபவை; அது மட்டுமல்ல இன்றைய இந்திய அரசியல் நேருவின் இந்திய கனவை மட்டுமல்ல, இந்தியாவையே கைவிடுபவை என ஒப்பாரி வைப்பவை.

அதில் ஒன்று

இந்தியாவை கைவிடுவது

Abandoning the idea of India  
 R. Sudarshan

http://www.thehindu.com/opinion/lead/opinion-on-nehruvian-ideas-and-idea-of-india/article6587610.ece?

அதில் எப்படி ஜவஹர்லால் நேருவின் தேவையற்றி சொதப்பல்கள் “காஷ்மீர் பிரச்சினையை”  உண்டாக்கி , தற்கால இந்தியாவின் பிரச்சினையாக்கியது என்பதை பற்றி எழுதினேன்.  என் கடிதம் இதுதான்

V.C.Vijayaraghavan  
Nehru did not have strategic vision. One can argue that the Kashmir issue with which India is embroiled is partly due to him. In 1948, When the tribesmen from Pakistan, at the instigation of Jinnah of the newly created Pakistan, invaded Kashmir whose ruler Maharaja of Kashmir signed the Instrument of Accession with India. With that India had the legal ground for occupying the whole of Jammu and Kashmir. The Indian army was also fully capable of that. Instead of using the might of the army to finish the job , Nehru went to Mountbatten , the then Governer General of India, to advice him what to do. Mountbatten asked Nehru to go to the United nations and complain about Pakistan. That Nehru duly did and made the Kashmir issue international. By giving a third party like the UN , a say in the matter which India should have handled completely and was fully capable of, he gave Pakistan a handle to have issue with India.
Points
60
10 days ago ·   (3267) ·   (2587) ·  reply (0) · 
   

 
அது பல வாசகர்களின் கவனத்தை ஈர்த்து, அவர்கள் ரியாக்ஷனை கொண்டுவந்தது.
 
தி ஹிந்துவிற்க்கு  ஜவஹர்லால் நேரு  ஒரு புனிதப் பசு
 
 
 
வன்பாக்கம் விஜயராகவன்
பாசல், ஸ்விட்சர்லாண்ட்