Wednesday, August 29, 2012

லெமூரியக் கோமாளிகளின் பித்தலாட்டம்

தமிழ்நாட்டில் , ஞானமுத்து தேவநேயன்  என்ற போலி மொழியியலாளர், சரித்திராசிரியர் இன்று மிகப்பெரிய ஆளுமையாக ஆக்கப்பட்டுள்ளார். பாவாணர் என்பது துதிப்பெயர் .
தேவநேயன் படி தமிழ்பேசும் மக்கள் 50,000 ஆண்டுகளுக்கு முன் லெமூரியா என்ற கடலுக்கு அடியில் முழுகிய கண்டத்திலிருந்து வந்தனர்; காலப்போகில் தமிழிலிருந்து திராவிடீ, சமஸ்கிருதம் போன்ற உலக மொழிகள் தோன்றின. தமிழில் இருந்துதான் மற்ற இந்திய , வெளிநாட்டு மொழிகள் தோன்றியவை ஆதலால், மற்ற மொழிகளை தமிழ் வேர்களிலிருந்து எடுக்கலாம். அதனால் தேவநேயன் தமிழை உலக முதன் மொழி,திராவிடத்தாய், ஆங்கிலத்தில் Primary Classical language என அழைத்தார். இதுதான் “பாவாணர் முறை”யின் சாராம்சம்.இது பொதுவாக அறியப்படும் விஞ்ஞானம், பூகோளம், மொழியியல், விலங்கியல், சரித்திரம் ஆகியவற்றிற்ற்கு பொருந்ததாதவை; தான் தோன்றித்தனமாக எழுதப்பட்டவை; மற்ற நாடுகளில் இப்படிப்பட்ட உளரல்களை யாரும் திரும்பிக்கூட பார்க்கமாட்டார்கள் . ஆனால் தமிழகத்தில் துதி லெவெலுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.தேவநேயன் என்ற பெயர் மறைந்து பாவாணர், மொழிஞாயிரு ஆகிய துதிப்பெயர்களே பயன்படுத்தப்படுகின்றன. அது மட்டுமல்ல, தமிழக பல்கலைகழகங்களில் இதைப்போல் விஞ்ஞானத்திற்க்கு புறம்பான கருத்துகள் மதிக்கப்படுகிறன. தமிழக அரசு வரிப்பணத்தை செலவழித்து மதிவாணனை எடிடராக கொண்டு பல வால்யூம் கொண்ட தமிழ் வேர்ச்சொல் அகராதியை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அந்த அகராதி ஆக்கம் தேவநேயனால் தொடங்கப்பட்டது, அவர் முக்கிய சீடர் மதிவாணனால் முடிக்கப்பட்டுள்ளது. இது “பாவாணர் முறை”யை பின்பற்றியது,  தேவநேயன் புஸ்தகங்கள் இணையத்தில் காசில்லாமல் கிடைக்கிரன.  தேவநேயனின் கருத்துகள் எத்தகைய மூட நம்பிக்கைகள் என அதைப்படித்து தெரிந்து கொள்ளலாம். இப்படி போலி விஞ்ஞானத்தை பரப்புவது தமிழர் எதிர்காலத்துக்கு எவ்வளவு ஆபத்தானது என்பதும் புரிந்து விடும்


“பாவாணர் முறை”யில் “ஆங்கிலத்திற்க்கு தாய் தமிழ்” , “ஹீப்ரூவிற்க்கு தாய் தமிழ்” போன்ற புஸ்தகங்களும் வெளியாகியுள்ளன. அதாவது தமிழ்தான் உலகின் “முதல்மொழி”. அதிலிருந்து திராவிட மொழிகளும், சமஸ்கிருதம், பிராகிருதம் போன்ற இந்திய மொழிகளும் , மற்ற உலக மொழிகளும் பிறந்தன.  மதிவாணன் “பாவாணரின் ஞாலமுதன்மொழிக் கொள்கை” என்ற பாராட்டு புஸ்தகத்தை எழுதியுள்ளார்.

இந்த புஸ்தகத்தின் முன்னுரையில் மு.இராசேந்திரன், இயக்குனர், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் கூருகிறார்


“இப்போதுள்ள இந்து மாக்கடல் பெரும் நிலப்பரப்பாக இருந்தது. அதுவே மனித இனம் தோன்றி வளர்ந்த தொட்டில் (Lemuria is the Cradle of Mankind) .... மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் தமக்கே உரிய ஆய்வுமுறைகளின் வழி ‘ஞால முதல்மொழி தமிழே’ என்று தனது கொள்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

முனைவர் மதிவாணன் அக்கருத்துகோளை முன்வைத்தே பல்லாண்டுகளாக உழைத்து வருகிறார்’”இப்படிப்பட்ட தேவநேயன் உளரல்களையும், சயன்ஸ் ஃபிக்‌ஷன்களையும் நான் விவாதங்களில் தாக்கியுள்ளேன் , பொதுவாக இணைய விவாத தளங்களில். அது தேவநேயன் பஜனை கும்பலுக்கு பிடிக்கவில்லை.

அதனால் என் விவாதங்கள் வந்த கூகிள் குழு மிந்தமிழ் மூடப்பட வேண்டும் என்று தமிழக அரசிடம் பல உயர் தமிழ் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக மாலைமுரசு 22 ஆகஸ்து 2012ல் செய்தி வந்ததாக மிந்தமிழ் குழுவில் அறிவிக்கப்பட்டது.

http://groups.google.com/group/mintamil/msg/24f69d505f53ecb0அந்த ஆணையை வைத்துள்ளவர்கள்:


முனைவர் பொற்கோ முன்னாள் துணை வேந்தர்

முனைவர் பொன்னவைக்கோ துணை வேந்தர்

முனைவர் மறைமலை இலக்குவனார் சென்னை.

பூங்குன்றன் ‘தென்மொழி’ இதழ் ஆசிரியர்

முனைவர் ந. அரணமுறுவல்

சுந்தர ஜெயபாலன் (அமெரிக்கா)
இறைஎழிலன் அன்றில் பதிப்பகம்,சென்னை

தஞ்சை கோ.கண்ணன் சென்னை

தெக்கூர் தமிழ்த்தென்றல் சென்னை

சி.ஆர்.செல்வகுமார் (கனடா)
 பெஞ்ஜமின் லெபோ (பிரான்ஸ்)
சஹாயராஜ்(சிங்கப்பூர்)

சில நாட்களில் சி.ஆர்.செல்வகுமார் (கனடா) தான் அவர் பெயரை இந்த கோரிக்கையுடன் இணைத்ததற்க்கு இசைவு தரவில்லை என கூரிவிட்டார்.


https://groups.google.com/forum/?fromgroups=#!topic/tamilmanram/G436AKT39oU
(Subject line: "என் பெயர் தவறுதலாக அறிக்கையில் இடம் பெற்றுள்ளது")


தமிழக முதமைச்சர் ஜெயலலிதா மீது வைத்த ஆணையில் , இந்த லெமூரிய ஜோக்கர்கள் படி மின் தமிழ் கூகிள் குழுமத்தையும், விக்கிபீடியாவையும் மூடி, ”குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த” வேண்டுமாம்.

தேவநேயனை பின்பற்றுபவர்களுக்கு மூளையில் ஸ்க்ரூ லூஸ் என்பது இது தக்க சான்று.  பொற்கோ, பொன்னவைக்கோ ஆகியவர்கள் லெமூரியாவிலிருந்து விலகி இன்றைய உலகத்தில் ஆஜராகுவதுதான் அவர்களுக்கு தக்க அறிவுரை.