Saturday, October 24, 2009

இந்தியா சூபர் பவர் ஆகுமா

சமீபத்தில் என் காநா நாட்டு ந்ண்பன் ஒருவன் நீ இந்தியா சூபர் பவர் ஆகும் என நினைக்கிறாயா என கேட்டான். நான் ஒரு நிமிஷம் யோசித்து இல்லை என்றேன்.சூப்பர் பவர் ஆக வேண்டும் என்றால், அதற்கு ஒரு மனநிலையும், செயல் சுபாவங்களும் வேண்டும்.


சூபர் பவர் ஆக வேண்டும் என்றால், ஒரு நாடு


1. நல்ல ராணுவ திறமை வாய்ந்த நாடாக இருக்க வேண்டும்

2. நாட்டின் அரசாங்கம் ஸ்திர நிலையில் இருக்க வேண்டும்

3. உள்நாட்டு போர்கள் இருக்க கூடாது. மத்திய அரசாங்கம் தன் இறையாண்மையை தன் நாடு முழுவதும் வைத்திருக்க வேண்டும்.

4. உள் நாட்டு விவகாரங்களை தானே , தன் முயற்சிகளினால் சமாளிக்க வேண்டும்.

5. தன் எல்லைகளை தங்கு தடையின்றி நிரவாகிக்க வேண்டும்

6. தன் ‘பிரதேசத்தில்’ , அதாவது எல்லைகளுக்கு உடனே அருகில், தன் நலன்களை அமல் படுத்த ராணுவத்தை உடன்படுத்த தயாராக இருக்க வேண்டும்

7. தன் எல்லகளுக்குள் தன் அதிகாரத்தை தங்கு தடையின்றி செலுத்த வேண்டும்

8. தன் எல்லகளுக்கு வெளியே சந்தர்பம் வேண்டுமென்றால், தன் படைகளை அனுப்பி போரிட தயாராக இருக்க வேண்டும்

9. உலகின் பல பகுதிகளுக்கும் ராணுவ, அரசியல், பொருளாதார விவகாரங்களில் ஆர்வம் காட்டி உலகின் எந்த பகுதியிலும்,தன் எல்லையில் இருந்து எவ்வளவு தூரமானாலும், தன் அக்கரைகளை நிருவுவதற்கு தயாராக இருக்க வேண்டும்.

10. தன் ஆதிக்கத்தை நிருவ, என்ன உயிர் தியாகம் - தன் உயிரோ , மற்ற நாடுகள் உயிரோ - செய்ய அஞ்சக் கூடாது.

11. மற்ற நாடிகளிலும், உலகின் இதற பகுதிகளிலும் ராஉவ ரீதியாக தலையீடுவதற்கு ஏற்ற பொருளாதார, ராணுவ பலம் இருக்க வேண்டும்

இந்த பல வித கோணங்களில் பார்த்தால் , இந்திய ஆதிக்க வர்கங்களின் மனப்பான்மை , தன் ஆதிக்கத்தை நிருவ ராணுவத்தை பயன்படுத்துவதற்கு தயக்கமாக உள்ளது. அதனால் இந்திய சூபர் பவர் ஆவதற்கு மனோபலம் இல்லை என சொல்லலாம்.

இந்தியாவிற்கு சூபர் பவர் இலக்குகளோ, மனோபாவங்களோ இருந்தால், பாகிஸ்தான் காஷ்மீரில் தலையிடுவதற்கு , கடுமையாக அதை (பாகிஸ்தானை) தண்டிக்க ஆர்வம் இருக்க வேண்டும். அப்படி செய்யாமல், பாகிஸ்தானின் உள்ளீட்டு கொள்கைகளை 50 வருடங்களாக சகித்துக் கொண்டு வரிகுன்றது. அது வருங்கால சூபர் பவருக்கு அழகல்ல.
இந்தற்கு நேர் எதிராக தற்கால ரஷ்யாவை பார்க்க்லாம். ரஷ்ய போன ஆண்டில் ஜீயார்ஜியாவின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து, தனி நாடாக்கி அதை `அங்கீகாரம்` செய்தது. மற்ற நாடுகள் அதை கண்டித்தன. ஆனால் தன் நோக்கில் அது தன் `பிரதேசத்தில்` தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியது.இந்தியா 700 ஆண்டுகளாக , அந்நிய நாட்டவரின் ஆதிக்கத்தில் இருந்தது. மேலும், சமீப சரித்திரத்தில் காந்தியின் அஹிம்ஸை கொள்கைகளுக்கு செவி சாய்த்தது. அது சூபர் பவர் மனோபாவத்திற்க்கு உகந்ததல்ல.


விஜயராகவன்

3 comments:

S. Krishnamoorthy said...

நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை. இலங்கையிலிருந்து வந்திருக்கும் அகதிகளைத் “தமிழர்கள்” என்றும் அவர்களுக்குக்குடியுரிமை அளிக்கவேண்டும் என்றும் ஒரு மாநில முதலமைச்சரே சொல்லும்போது, அகில இந்திய இறையாண்மை என்பது கானல் நீர்தான். அப்படி இருக்கும்போது, இந்தியா “சூபர்பவர்” ஆகுமா என்ற கேளிவிக்கே இடமில்லை.

வன்பாக்கம் விஜயராகவன் said...

கிருஷ்ணமூர்த்தி

இலங்கை தமிழர் அகதிகளுக்கு இந்தியாவில் நிரந்தர வாசம் உரிமையும், குடிமகன் அவர்கள் விரும்பினால் கொடுப்பது சரி என்றே நினைக்கிறேன்.

அரசியல்வாதிகளும், மற்ற சக்திகளும் மத்திய அரசாங்கம் மேல் கோரிக்கைகளை வைப்ப்தில் தவறில்லை. எதையும், நேர்மையாகவும், சட்டத்துக்கு உள்ளாகவும், தீவிர சிந்தனை/விவாதங்களுக்கு பின்பும் ஒரு கோரிக்கையை ஏற்றுக் கொள்வதில் அரசாங்கத்தின் ஆதீனம் அதிகரிக்கும்.

அப்படித்தான் கருணநிதி அகதிகள் பிரச்சினையை அணுகுவார் என்றால், அவர்க்கு என் ஆதரவு.

தமிழ்நாட்டில் நடப்பது எவ்வளாவோ மேல். அஸ்ஸாம், மேற்கு வங்காளம், , வடகிழக்கு மாகாணங்களில் கோடிக்கணக்கான பங்களாதேசியர் ஊடுருவி, Demographic Shift ஐயே ஏற்படுத்தி விட்டனர் என்பது செய்தி. இந்த வக்கிரத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் இருவருக்கும் பங்கு உண்டு. அதனால் பல மாவட்டங்களில் ஹிந்து/முஸ்லிம், வங்காளி/வங்காளி இல்லாதவர் ஜனத்தொகை கண்முன்னாடியே பெரும் அளவில் மாறி விட்டதாக சொல்கின்றனர். அதனால்தான் 1976ல் இருந்து AGP/AASU போராட்டத்தில் ஆரம்பித்து, தற்போது அந்த மாகாணங்கள் பெரும் சமூக குழப்பத்தில் உள்ளனர்.

இந்தியாவிம் மேலிழக்கே நடப்பது கட்டுப் பாடு இல்லாதது. தமிழகத்தில் ஓரளவு கட்டுப் பாடு உள்ளது.


விஜயராகவன்

பழமைபேசி said...

சிந்தனைக்கானது...