Sunday, September 06, 2009

காஷ்மீர் எப்படி ஜிஹாதி வன்முறையில் சிக்கியது

சமீபத்தில் அரீஃப் ஜமால் என்ற பாகிஸ்தான ,ஆய்வாளர் எப்படி உலக ஜிகாதை, குறிப்பாக காஷ்மீர் ஜிகாதை தங்கள் சுயநலகொள்கைகளுக்காக பாகிஸ்தான ரகசிய ராணுவ உளவு துறையான ஐ.எஸ்.ஐ. ஊக்குவித்தும், ஆதரித்தும் ஊதி , பெருதாக்குகின்றனர் என்பதை விளக்கி Shadow War: The Untold Story of Jihad in Kashmir (Hardcover) by Arif Jamal, Melville House (May 19, 2009). என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

அவர் பல வருடங்களாக நூத்துக்கணக்கான ஜிகாதிகளுடன் பேசி, தன் தீர்வுகளை முன்னிட்டுள்ளார். எப்படி அமெரிக்கா ஐந்து லக்ஷம் ஜிஹாதி படையை தயாராக்கியது; எப்படி அமெரிக்க சி.ஐ.ஏ,வின் பணம் காஷ்மீர் ஜிஹாதிகளின் ஆதரவாக முடிந்தது, எப்படி காஷ்மீர் ஜிஹாத் , அஃப்கானிஸ்தானின் தீராத போர்களுக்கும், உலக ஜிஹாதிற்க்கும் தீவிர உறவு உள்ளது என்பதை இப்புத்தகம் விவரிக்கின்றது.


அவருடைய நேர்காணலில் இருந்து சில பகுதிகள்:

காஷ்மீர் ஜிஹாதும், அஃப்கானிஸ்தான் ஜிகாதும் ஒரே பிரச்சினையின் இரு பக்கங்கள்

சுதந்திரத்திற்கு பின், பாகிஸ்தான் எப்படி இந்தியாவை தாக்கலாம் என திட்டமிட்டது; இந்தியா பாகிஸ்தானை விட பல மடங்கு பலம் பொருந்தியதால், நேர் யுத்ததை பாகிஸ்தான் ராணுவத் தலைமை விரும்பவில்லை. ஆதனால் இந்தியாவை உள்பூசலில் கவிழ்த்திட ஜிஹாத் பயன்படும் என பாகிஸ்தான் படையின் யுக்தியாளர் கர்னல் அக்பர் கான் 1950களில் திட்டமிட்டார்.

அதிலிருந்து, 1980 வரை, பாகிஸ்தானின் படை தளபதிகள் (காஷ்மீர) உள்ளூர் முஸ்லிம்களை ஜிஹாதிற்கு தூண்டிவிட்டு, அங்கு கொரில்லா யுத்தம் ஆரம்பிக்க பிரயத்னம் செய்தனர். 1980 பிரகு, நிஜ ஜிகாதை சோவியத்துகள் எதிராக அஃப்கானிஸ்த்னில் போரிட்டனர். பாகிஸ்தான் சோவியத் ராணுவம் எதிராக முழு அளவில் ஜிகாதிற்கு ஆதரவு கொடுத்தது. வெளிப்படையாக, அந்த ஜிகாதிற்கு ஆதரவை முழுமையாக நிராகரித்தது.. சோவியத் யூனியன் அப்கானிஸ்தனில் இருந்து வெளியே சென்றவுடந்தான், ஜிகாத் ஆதரவை வெளிப்படையாக ஒப்புக் கொண்டது.

பாகிஸ்தான் காஷ்மீரி கலகத்திற்கு 1989 முதல் தீவிரமக்கி, சோவியத்துகள் ஆப்கானிஸ்தனில் இருந்து வெளியேரியவுடன் பின்பும் முஜாஹிதீஙளை ஆதரித்தது. 9/11 அமெர்க்கா மீதான தாக்குதல் பின்பு கூட, அந்த முஜஹிதீன் ஆதரவை கடைப்பிடித்தது. ஒரு பக்கம் அமெரிக்கவுடன் பயங்கர வார எதிர்ப்பு போரில் சேர்ந்தது, மறுபக்கம் அப்கான் தலிபானையும், கஷ்மீர் ஜிகாதிகளையும் ரகசியமாக ஆதரித்தது.

கேள்வி: பாகிஸ்தானின் இந்த வருட ஸ்வாத் பள்ளத்தாகில் நடைபெற்ற தலிபான் எதிர்ப்பு யுத்தம் அமெரிக்கவின் கண்துடைப்பிற்க்கா?

போகப்போக அப்படித்தான் தெரிகின்ரது. பாகிஸ்தான் ராணுவம் தலிபான் தலைவர்களுக்கு தப்பிப்பதற்கு வேண்டிய நேரம் கொடுத்தது. அதனால் பயங்கரவாதி தலைவரக்ள் ஸ்வாத்தில் இருந்து மரைந்து, மற்றொரு இடத்தில் முளைத்து விட்டனர். ஸ்வாத் பள்ளத்தாக்கை நிசப்தமாக சூழ்ந்து கொண்டிருந்தால், எல்லா பயங்கர வாதியையும் பிடித்து இருக்கலாம், ஆனால் அப்படி செய்யவில்லை. ஸ்வாத் நவவடிக்கைகள் மிகப் பெரிய அகதிகள் பிரச்சினையை உண்டாக்கியதால், அந்த ராணுவ செயல்கள் உண்மையிலேயே நன்மைக்காகவா என்பது சந்தேகமாகா உள்ளது. பாகிஸ்தான் ராணுவம் தெரிந்தே இந்த அகதி பிரச்சினியை , இரட்டை வேடத்தின் ஒரு பகுதியாக ஆக்கினரா அல்லது பிழை மிக்க பயங்கரவாத ஒழிப்பு யுத்தியா என தெரியவில்லை.


ஸ்வாத்தின் யுத்திகர முக்கியத்துவம் என்னவென்றால், அது அஃப்கானிஸ்தானையும், காஷ்மீரையும் இணைக்கிரது. தலிபான் அதை தங்கள் வசம் கொண்டுவந்து விட்டால், இரண்டி ஜிகாத்துகளையும் இணைத்து, ஒரு தலைமையின் கீழ் கொண்டுவரலாம். அல்-கைதாவிற்கு இமய மலை அடிவாரத்தில், காஷ்மீரில் முகாம்கள் கிடைக்கும்.

முஷர்ரபின் அரசாங்கம் அல்-கைதாவின் பாகிஸ்தான் உருப்பினர்களான ஜைஷ்-ஏ-முஹொம்மத், ஹர்கத்-உல்-அன்சர் முதலியவைகளின் மீது, அவை ஆப்கானிஸ்தான் சேர்ந்தவை அல்ல என்ற பொய் காரனத்தால் , ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மௌலான மசூத் அசர், மௌலான ஃபஸ்லுர் ரஹ்மான் போன்ற பாகிஸ்தான தேவபந்த் ஜிஹாதிகள் , கஷ்மிர் ஜிஹாதிற்கும், அஃப்கானிஸ்தான் ஜிஹாதிற்கும் இணப்புப் பாலங்கள். இரு ஜிகாதுகளும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.

பாகிஸ்தானில் அல்-கைதா ஜைஷ்-எ-மொஹம்மத், ஹராகதுல் ஜிஹாதி இஸ்லாமி, ஹரகதுல் முஜாஹிதீன் போன்ற அமைப்புகளின் மூலம், அதிகார பூர்வ தடையை மீறி, செயல் படுகிரது. இந்த அமைப்புகள் காஷ்மீரில் ஜிஹாத் செய்வதால், அவைகளுக்கு பாகிஸ்தானில் தடை இல்லை. காஷ்மீரில் பயங்கரவதத்திற்கு ஆதரவு குன்றியவுடன், இவை `அரசாங்க கண்காணிப்பு பழங்குடியினர் பிரதேசம்` (FATA- Federally Administered Tribal Areas) உள்ளே என்று, அங்கிருந்து பாகிஸ்தான் தேசத்திற்க்கு எதிராக யுத்தம் செய்ய ஆரம்பித்தனர். காஷ்மீர் பள்ளத்தாக்குதலில் இருந்து வரும் ஜிகாதிகள் சர்வதேச ஜிஹாதில் விருப்பம் இல்லாதவர்கள், அவர்களுக்கு இந்திய அரசாங்கம் கூட போர் புரிய வேண்டும் மட்டுமே. சர்வதேச ஜிகாதிற்கு ஆதரவு கொடுக்கும் ஒரே கஷ்மீர் அமைப்பு ஹிஜ்புல் முஜாஹிடீன்.

அல்-கைதா ஓரளவு பின்னணியில் சென்று விட்டது. தற்சமய ஜிஹாத் பாகிஸ்தானை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதே தவிற, மேற்கு உலகம் எதிராக அல்ல. இந்த புதிய ஜிஹாதின் நோக்கம் இந்தியாவை தாக்குவதே ஆகும்

டன்சீம்-எ-தலிபாநெ-பாகிஸ்தான் - அதாவது பாகிஸ்தானிய தலிபான் பாகிஸ்த்ஹனில் குழப்பம் உண்டுபண்ணுவதற்கு சக்தி உள்ளது, ஆனால் அரசாங்கத்தின் மறைமுக ஆதரவு இல்லாமல், அவரக்ள் எந்த பகுதியையும் தங்கள் ஆதிக்கத்துள் கொண்டு வர முடியாது. கைபர் அரசாங்கம் முன்னால் முற்போக்காக இருந்தது, ஆனால் ஐ.எஸ்.ஐ, லஷ்கர்-எ-இஸ்லாம் என்ர ஜிகாதி அமைப்பை ஆதரித்து, அவர்களை ஆதிக்கம் செய்யத்தூண்டினர்.
பாகிஸ்தானில் ஜனநாயக அரசாங்கத்திற்கு எதிரான பிரசாரம், தலிபான் ஆதரவாளர்களிடம் இருந்து வருகிரது. ஏனெனில், தலிபான் ராணுவ அரசாங்கங்கள் கீழே ஆதிக்கத்தை அதிகரிக்க முடிகிரது.

பாகிஸ்தான் ராணுவம், காஷ்மீரில் சாதகமான தீர்ப்பு ஏற்படும் வரை, அங்கே ஜிகாதை கைவிடாது, இஸ்லாமிய தீவிரவதம், பாகிஸ்தான் தேசத்தின் ஆதீனத்தை தேய்த்து வருகிரது.. பல இடங்களில் தலிபன் ஷரியாவை அமலாக்குகிரது, அது பாகிஸ்தானின் இறையாண்மையை குறைப்பதல்லவா? உண்மையில் பாகிஸ்தான அரசாங்கத்தின் ஆதீனம் நாளுக்கு நாள் அழிந்து போகின்ரது. எப்போது தலிபான் லாகூரில் விடியோ கடைகளுக்கு மிரட்டல் கடிதம் அனுப்புகின்றனரோ, அப்போது, வணிகர்கள் தலிபானை தாஜா செய்வதற்கு , `இஸ்லாம் எதிரி` யான விடியோக்களை பொது இடத்தில் குவித்து , தீ வைக்கின்றனர். அது பாகிஸ்தானின் இறையாண்மையை குறைப்பதாகும். தலிபான் மிரட்டலில், வங்கி ஊழியர்கள் `மேற்கத்திய` பாண்டு-ஷர்டுகளை உடுப்பதை தவிற்கின்றனர், அது பாகிஸ்தானின் இறையாண்மையை குறைப்பதல்லவா? பாகிஸ்தானின் சில பகுதிகளில் ஹிந்து-சீக்கியர் போன்ற சிறுபானமையினரை `ஜிசியா` என்ற இஸ்லாமிய தலை வரிக்கு உள்படுத்தியுள்லனர், அது பாகிஸ்தானின் இறையாண்மை மேல் தாக்குதல் ஆகும்.

ஐ.ஏஸ்.ஐ.யின் இந்தியாவில், குறிப்பாக காஷ்மீரில் கலகங்களை தூண்டி விடுவதும், அவர்களுக்கு ஆய்த மற்றும் இதர ஆதரவுகளை செய்வது உலகறிந்த விஷயம். உதாரணமாக `அமெரிக்க விஞ்ஞானிகள் சங்கம்` (Federation of American Scientists) 1997 லேயே தன் உலக ரிபோர்டுகளில் இதைப் பற்றி கவலை தெரிவித்தது.http://www.fas.org/irp/world/pakistan/isi/

”ஐ.எஸ்.ஐ. ரகசியமாக காஷ்மீரி முஜாஹிதீன் குழுக்களுக்கு இந்திய அரசாங்கம் எதிராக கிளர்சி செய்ய உதவி கொடுத்துக் கொண்டு வருகின்றது............................ ஐ.எஸ்.ஐ. ஒவ்வொரு மாதமும் 2.4 கோடி ரூபய்களை ஜம்மு-காஷ்மீர் கிளர்சிகளுக்கு செலவழிக்கிரது. எல்லா கிளர்சி குழுக்களும் ஆயுதமும், பயிற்சியும் பாகிஸ்த்ஹனிடமிருந்து பெற்றாலும், சில குழுக்கள் பாகிஸ்தன் ஐ.எஸ்.ஐ. அதிமிகுந்த ஆதரவு கொடுக்கப்படுகிரன.. 6 பெரிய ஆயுத அமைப்புகளும் , பல சிறிய அமைப்புகளும் காஷ்மீர் ஜிகாதில் பங்கு எடுக்கின்றன.

அங்கு மிகப்பழைய , மிகப்பெரிய விடுதலை இயக்கமான ஜம்மு-காஷ்மிர் லிபெராஷன் ஃப்ரண்ட் Jammu and Kashmir Liberation Front (JKLF) 1994ல், போர்நிருத்தம் செய்தது. பாகிஸ்தான் ஆதரவிற்கு மிக ஆதிக்கமானது ஹெஸ்ப்-உல்-முஜாஹிதீன். மற்ற ஆயுத குழுக்கள் ஹராகத்-உல்-அன்சர் பெரும்பான்மையாக பாகிஸ்தானியரை கொண்டது. அல்-உமர், அல்-பர்க், ஜைஷ்-எ-முஹம்மது, லஷ்கர்-எ-தொய்யாபா போன்ற அமைப்புகளும் பாகிஸ்தானியர்களாலும், அஃப்கானிகளாலும் ஆனவை. இந்த ஆயுத ஜிஹாதிகள் ஆஃப்கானிஸ்தானில் பயிற்சி பெற்றனர்; அங்கு பயிற்சி முடியாமல் போனவே, காஷ்மீருக்குள் முகாம்கள் வைத்தனர்.

ஐ.எஸ்.ஐ. மேலும் இந்தியாவின் வடகிழக்கே, பாங்கிளாதேசத்தின் எல்லை அருகே, பல கலக அமைப்புகளுக்கு பயிற்சி முகாம்கள் வைத்துள்ளது”

10 comments:

nerkuppai thumbi said...

காஷ்மீரில் பாகிஸ்தானியர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் செய்யும் வேலைகள் ( குண்டு வெடிப்பு, ஆயுதங்கள் களவாடல், கொலை, முதலியன) ஜிஹாத் என இந்திய முஸ்லீம்கள் எண்ணுகிறார்களா?
மேலும், இந்தியாவில் வேறு இடங்களில் குண்டு வெடிப்புகள் ஜிஹாதில் அடங்குமா ?
சராசரி இந்திய முஸ்லீமின் எண்ண ஓட்டம் எப்படி உள்ளது ?
வலை உலகத்து அன்பர்களின் மறுமொழிகளை அறிய ஆவலாக உள்ளேன்.

கிருஷ்ணமூர்த்தி said...

நெற்குப்பைத்தும்பியின் கேள்வியைக் கேட்டு கொஞ்சம் வியப்படைந்தேன்.

ஒரு சராசரி முஸ்லிம், எந்தப் பிரச்சினையும் இல்லாமல், மற்றவர்களோடு சுமுகமாகவே எல்லோரையும் போலவே வாழ ஆசைப் படுகிறார் என்று நான் நம்புகிறேன். எனக்குத் தெரிந்த முஸ்லிம் குடும்பங்கள் அமைதியை விரும்புகிற, நேசத்துடன் கூடியவர்களாக இருப்பதையும் அறிவேன்.

ஆனால், மெஜாரிடி மக்கள் தங்களை ஒடுக்கி இடம் தெரியாமல் செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தை, இங்கே தொடர்ந்து சில அரசியல் வாதிகள் ஊதி ஊதிப் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் தான் சிறுபான்மையினரின் காவலன், நாங்கள் இல்லையென்றால் எதோ ஒரு பூதம் வந்து நாசம் செய்துவிடும் என்ற ரீதியிலேயே செயல்படுவது, அவர்களுடைய மனதில் ஒரு அச்சத்தை, பாதுகாப்பற்ற தன்மையை உண்டாக்கி, உளவியல் ரீதியாகப் பிளவுபடுத்தியிருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.

இந்த அச்சத்தை,தவறான வழிகளில் திசை திருப்பி விடுகிற அபாயம் இருக்கத் தான் செய்கிறது.

அதே நேரம், இன்னொரு சிறுபான்மைப் பிரிவான கிறித்தவர்கள் இந்தமாதிரி அச்சத்திற்கு ஆளாவது இல்லை, என்பதை ஏனோ பார்க்கத் தவறுகிறார்கள்.

வன்பாக்கம் விஜயராகவன் said...

முதலில் நெற்குப்பையின் கேள்வி, இந்திய முஸ்லிம்கள் காஷ்மீரில் பாகிஸ்தான் சார்பாக நடத்தப்படும் ஜிஹாத்தைப் பற்றி என்ன நினைக்கின்றனர்? அதற்கு என்னிடம் ஒரு தெளிவான பதில் இல்லை. இதுவரை காஷ்மீர் ஜிஹத்தை எதிர்த்து ஒரு இமாமோ (உதாரணமாக டெல்லி ஜூமா மஸ்தின் சையத் போகாரி) ஒரு ஃபட்வா விட்டதாக தெரியவில்லை. சாதாரன முஸ்லிம்கள் ஓரளவு ஃபட்வாக்களை மதிப்பார்கள் - அப்படி ஒரு ஃபட்வா இருந்தால். சில மாதம் முன்பு சில பெரிய இமாம்கள் சேர்ந்து பயங்கரவாதம் எதிராக ஃபட்வா விட்டதாக ஞாபகம் , அது குறிப்பாக காஷ்மீர் பத்தி இல்லை.

காஷ்மீர் 20 வருடங்களாக பாகிஸ்தான் தூண்டுதலால் எரிந்து கொண்டு இருக்கின்றது. அதை தேசீயவாத முஸ்லிம்கள் பெரும் அளவில் கண்டித்ததாக செய்திகள் இல்லை. அப்படி செய்திகள் இருந்தால், இங்கு தெரிவிக்கலாம்.

காஷ்மீரில் - அதாவது முஸ்லிம் பெரும்பான்மை பள்ளத்தாக்கில் - எல்லா முஸ்லிம்களும் ஏகோபித்து பாகிஸ்தானின் திட்டங்களை ஆதரிக்கவில்லை. ஆனால் , பயங்கரவாதத்தின் கொடுமையால் - பலர் வாயை மூடிக்கொண்டு உள்ளனர். பாகிஸ்தானை பொருத்தவரை, எவ்வளவு மிதவாத, இந்திய தேசீய முஸ்லிம்களை தீவிர வாதிகள் கொன்றாலும் பரவாயில்லை, தங்கள் திட்டம் - அதாவது காஷ்மீரை பாகிஸ்தனுடன் இணைப்பது நிறைவேறினால்.

அதே சமயம், பாகிஸ்தான் ஆதரவு ஜிஹாதிகள் ஷியா முஸ்லிம்கள் மீதும் பெரும் காழ்ப்பு வைத்து, அவர்கள் மீதும் பாகிஸ்தானில் அட்டுழியம் செய்துள்ளனர், அதனால் காஷ்மீரில் உள்ள ஷியா முஸ்லிம்கள் தீவிர இந்தியா ஆதரவாளரக்ள்

வன்பாக்கம் விஜயராகவன் said...

கிருஷ்னமூர்த்தி “ஆனால், மெஜாரிடி மக்கள் தங்களை ஒடுக்கி இடம் தெரியாமல் செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தை, இங்கே தொடர்ந்து சில அரசியல் வாதிகள் ஊதி ஊதிப் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.”

பாகிஸ்தானே அந்த அடிப்படையில், அந்த பிராபகாண்டா மேல்தானே வந்தது. ஜின்னாவின் கூப்பாடு `இஸ்லாம் ஆபத்தில் உள்ளது” கணிசமான நபர்கள் மேல் தாக்கம் செய்தது, அதனால் உண்டான சமூக குழப்பங்கள் அந்த கூப்பாடை நியாயப்படுத்துவது போல் பலருக்கு தோன்றிற்று.

இது உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் பிரச்சினை - முஸ்லிம் சிறுபான்மை நாடுகளில் மட்டுமல்ல, பெரும்பான்மை நாடுகளிலும்.

கிருஷ்ணமூர்த்தி said...

ஜின்னாவின் உண்மையான மனோநிலை பிரிவினைக்கு ஆதரவாக இல்லை, இரு வேறு உலகங்கள் இரண்டு தேசங்கள் என்ற கூப்பாடு, இங்கே அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் இடுகாடு என்று கூச்சல் போட்டவர்களை விடப் பெரியது அல்ல.

நேருவின் ஆதிக்கத்திற்கு எதிராக, ஜின்னா எடுத்த ஆயுதம் அது, ஆனால் நேருவே பிரிந்துபோகிறவர்கள் போகட்டும், எனக்கு மகுடம் சூட்டிக் கொள்ள நேரமாகி விட்டது என்ற ரீதியில் இருந்ததும் முக்கியமான காரணமா, இல்லையா?

வன்பாக்கம் விஜயராகவன் said...

>கிருஷ்ணமூர்த்தி said...
>ஜின்னாவின் உண்மையான >மனோநிலை பிரிவினைக்கு >ஆதரவாக இல்லை, இரு வேறு >உலகங்கள் இரண்டு தேசங்கள் என்ற >கூப்பாடு, இங்கே அடைந்தால் >திராவிட நாடு இல்லையேல் >இடுகாடு என்று கூச்சல் >போட்டவர்களை விடப் பெரியது >அல்ல.

திராவிட நாடு கூப்பாட்டிற்கும், பாகிஸ்தான் கூப்பாட்டிற்க்கும் பெரிய பெரிய வித்யாசங்கள் உள்ளன. திராவிட நாடு கூப்பாடு சரித்திரத்திலோ, கலாசாரத்திலோ ஒரு அடிப்படையும் இல்லாதது. அதனால்தான் சந்தடி இல்லாமல் அமுங்கி விட்டாது. `திராவிட நாடு` என சரித்திரத்தில் ஒன்றும் இல்லை, திராவிட என்ற வார்த்தையே தமிழ் இல்லை. திராவிட நாடு குருடன் கண்ட கனா.

பாகிஸ்தான், அதாவது முஸ்லிம்கள் பிரிவினை இயக்கத்திற்கு பல அடிப்படைகள் வட இந்தியாவில் உண்டு; ஆனால் அது ஒன்றும் ஒன்று பட்ட இந்தியாவில் சமாளிக்க முடியாதது என்பதல்ல.


>நேருவின் ஆதிக்கத்திற்கு எதிராக, >ஜின்னா எடுத்த ஆயுதம் அது, >ஆனால் நேருவே >பிரிந்துபோகிறவர்கள் போகட்டும், >எனக்கு மகுடம் சூட்டிக் கொள்ள >நேரமாகி விட்டது என்ற ரீதியில் >இருந்ததும் முக்கியமான காரணமா, >இல்லையா?

2 வருஷம் முன்னால், அயேஷா ஜலால் என்ற பாகிஸ்தானிய-அமெரிக்கர் கிளப்பி விட்ட கரடி இது. அதாவது ஜின்னாவிற்கு நிஜமாகவே இந்திய பிரிவினையில் மனம் இல்லை, பாகிஸ்தான் என்ற கோரிக்கையை ஒரு அரசியல் பேரக் காயாகத்தான் (political bargaining chip) வைத்தார் என்று. இது எப்படி தவறான ஆதாரமற்ற பார்வை என ஈசியாக நிரூபிக்கலாம்.

சில பாகிஸ்தானியர், பாகிஸ்தான் வந்தது பெரும் தவறு என உணகிறார்கள், ஆனால் அதே சமயம் அவர்கள் அதன் முக்கிய காரணமான ஜின்னாவை குற்றவாளியாக்க விரும்பவில்லை, அதனால் தூற்றை நேரு மேல் போட்டுவிடுகின்றனர்.

அயேஷா ஜலாலின் இந்த அற்பத்தனமான வார்த்தை விளையாட்டு, சில `அறிவாளிகளில்` எதொரொலி செய்கின்றது- ஏனெனில் அவர்களுக்கும் நேரு மீது எந்த குற்றமாவது வைக்க வேண்டும்.

நேரு ஜின்னா அளவு அர்சியல் கெட்டிக்காரராகவும், ரூத்லெஸ் ஆகவும் இருந்திருதால், தனி பாகிஸ்தான் கிடைக்காமல் செய்திருக்கலாம், ஆனால் நேரு-காந்தி கங்கிரஸ் அகிம்சையில் முழு மனதும் செலுத்தியதால், ஜின்னா ஊக்குவித்த வன்முறைகளுக்கு அவர்களிடம் தக்க பதில் இல்லை, அதனால் ஜின்னாவின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டனர். நேரு எவ்வளவோ, தவறுகளும், குழப்பத்திலும் ஈடு செய்துள்ளார், ஆனால், தன் ஆதிக்கத்திற்க்கு இந்தியாவை பிளந்ததற்கு ஒப்புக் கொண்டார் என்பது அபாண்டம், அநியாயம்.

ஜின்னா மறைவின் மேல் ஹிந்து எழுதிய எடிடோரியலின் என் தமிழாக்கத்தை பாருங்கள், ஜின்னவைப் பற்றி புரிந்து கொள்ள

nerkuppai thumbi said...

I AM PAINED THAT IN SPITE OF PROVOKING COMMENTS, NO ONE HAS COME FORWARD TO DISPEL ANY DOUBTS IN THE MINDS OF KAFIRS IN INDIA THAT THE AVERAGE MUSLIM DOES NOT SUBSCRIBE TO EXTREMIST INTERPRETATIONS OF THE WORD 'JIHAD' AND THAT HE DETESTS VIOLENCE .
I HAVE TRIED THIS IN ONE OR TWO INSTANCES EARLIER TOO, WITH SIMILAR DISAPPOINTING RESULT.
MAYBE, A MORE POPULAR BLOGSITE WITH FOLLOWERS ACROSS THE GROUPS MAY ATTRACT BETTER ATTENTION OF PEOPLE AND INVITE COMMENTS.

கிருஷ்ணமூர்த்தி said...

நெற்குப்பைத் தும்பி வருத்தத்தோடு ஆங்கிலத்தில் சொன்னதற்கு:

உங்களுடைய ஒரே வருத்தம், நீங்கள் நினைக்கிற மாதிரியே மற்றவர்களும் நினைக்கவில்லையே என்பது தான்! இந்தமாதிரி சின்ன வலைப்பக்கங்களில் மட்டும் அல்ல, போத்தீஸ் துணிக்கடைகாரர்கள் மாதிரி 1276 அடி நீளமான பட்டுப் புடவை விளம்பரம் செய்கிற மாதிரிப் பதிவுகளை நெய்கிற எந்த வலைப்பதிவுமே கூட, நீங்கள் எதிர்பார்க்கிறமாதிரி பதில் வராது.

பிரச்சினையே, இங்கிருந்து தான் ஆரம்பமாகிறது! இப்படித்தான், உணர்ச்சிக் கொந்தளிப்பில் பிரிவினை,வன்முறை, தீவீரவாதம் இப்படித் திசைதிரும்பிபோனதுமே நடந்தது.

எப்போது, மாறுபட்ட கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு, யோசிக்கப்போகிறீர்கள்?

nerkuppai thumbi said...

நீங்கள் சொல்வது சரி என உணர்கிறேன். நன்றி

வன்பாக்கம் விஜயராகவன் said...

Nerkuppai

The jihadi problem in India and elsewhere is partly to do with international politics and jihadis being the pawn.

I'll write more about international politics soon, I am on a holiday now

cheers

Vijayaraghavan