Wednesday, August 19, 2009

தமிழ் எழுத்து சீராக்கம்

இதைப்பற்றி ரொம்ப பேர் எழுதுகிறார்கள். இவர்களின் மேலெழுந்த நோக்கம் தமிழ் எழுதுவதையும், அச்சு, இண்டெர்நெட்டில் போடுவதையும் `எளிமைப்படுத்துதல்`.
என்னப் பொருத்தவரை, இந்த `சீர்திருத்தங்களின்` நோக்கம் தமிழின் ஒரு பெரிய பிரச்சினையை மரந்து விடுகிரது. `எளிமை` மையத்தில் கொடுக்கப்படும் எழுத்து சீர்திருத்தஙக்ள் பெரும்பான்மையாக தேவையற்றவை என கருதுகிறேன்.

தற்கால தமிழின் மிகப்பெரிய பிரச்சினை `இருநிலை` ஆங்கிலத்தில் Diaglossia என் சொல்லுவார்கள். தற்கால தமிழ் முகத்தில் அறையும்படி எல்லோருக்கும் காட்டும் குணாதிசயம் இந்த `டயகுளோசியா`தான். அதாவது பேச்சு தமிழிற்கும், எழுத்து தமிழிற்கும் உள்ள பெரும் பேதம். அது எழுத்து முரைகளை மற்றும் பாதிப்பதல்ல; பேச்சு இலக்கனமும், எழுத்து இலக்கணமும் கடந்த 1000 ஆண்டுகளாக பிரிந்து விட்டன. இன்னும் நன்னூல்தான் தமிழ் இலக்கணத்தின் கடைசி வார்த்தை என தமிழ் ஆசான்களால் நம்பப் படுகிரது. இந்த தொன்மை ஆக்கங்களின் மீது பித்து இருப்பதால், நம் கண்முன்னே இருக்கும் தமிழ், நம் காதில் ஒவ்வொரு நாளும் விழும் தமிழ் `தமிழ்` இல்லை என்ற பிரமை ஏற்படுத்துகிரது.


ஒரு மொழியின் உயிர் அதன் பேச்சில்தான். அந்த உயிர்மொழிக்கு, பேச்சு மொழிக்கு மரியாதை கொடுத்து, அதற்க்கேற்ப்ப இலக்கணத்தையும், எழுத்துகளையும் மாற்றாமல் இருப்பது, காலப்போக்கில் தமிழ்க்கு சாவுமணி அடிக்கும். இந்த `தொன்மை` இலக்கணப் பூசை, நன்னூல், தொல்காப்பியர் பூசை, தமிழை மெல்ல மெல்ல சாக வைக்கும். இதை நம் கண் முனாடியே பார்க்கலாம். தமிழில் உயர்கல்வி , தற்கால விஞ்ஞான ரீதி சிந்தனை முறையும்,. ஆய்வு முறையும், ஆக்கமும் இல்லை என்பது எல்லா தமிழர்களுக்கும் தெரிந்த உண்மை. அதனால்தான் எல்லோரும் தங்கள் குழந்தைகளை ஆங்கில மீடியத்திற்க்கு அனுப்புகிரார்கள். ஒரிஜினல் ஆய்வாக தமிழில் ஒன்றும் இல்லை. தமிழ் வம்பளக்கும் மொழியாகத்தான் ஆகி உள்ளது. அதற்கு மூல காரணம் தமிழர்களின் `தொன்மை பூசை` மனப்பான்மை , அந்த மனப்பன்மையில் நம் கண், காது முன்னே இருக்கும் தமிழை உதாசீனப் படுத்துவது. இந்த `தொன்மை பூசை` மனப்பான்மை இருநிலையை - அதாவது டயாகுளோசியாவை - இன்னும் பன்மடங்கு பெருக்குகிறது..

சரி, இந்த எண்ண பின்புலத்தில், தமிழ் எழுத்து சீராக்கம் பற்றி விஜயராகவன் என்ன சொல்கிறான் ? எனது எழுத்து சீராக்க பணி இதுதான். ர, ற இந்த இரண்டு எழுத்துகள் தேவையற்றன. இதில் ற வை தள்ளி விடலாம். பல எழுத்துகளில் ற இடத்தில் ர வை பயன்படுத்தலாம். ஏன் இப்படி? தமிழர்கள் பேச்சில் இந்த இரண்டு எழுத்திர்க்கும் வித்தியாசம் இல்லை. பற்று, காற்று, தொற்று போன்ர இடங்களில் ட்ர வை உபயோகிக்கலம். எ.கா. பட்ரு, காட்ரு, தொட்ரு.

அதே காரணத்திர்காக, ந, ன் இவற்றில் ஒன்ரை விட்டுவிடலாம்.
இந்த இரண்டு மாற்றங்களினால், தமிழ் எழுத்து எளிமையாக மட்டுமல்ல, பேச்சு தமிழோடு ஒத்து இருக்கும். அதனால் ஓரளவு டயகுளோசியா குறையும்.

நம் பேச்சு தமிழில் பற்று, காற்று, தொற்று போன்ரவையும் பேசப் படுவதில்லை. அவை பொதுவாக த என மாருகிரது. நாம் பேச்சில் காத்து, பத்து, தொத்து என்றுதான் பயன்படுகிரது. அதனால் எங்கெங்கு ற வருகிரதோ (ற்ற இடங்களில்) த்த வை பயன்படுத்தலாம்.

5 comments:

Anonymous said...

உங்க பிளாக்கையே பேச்சுத்தமிழ்ல எழுதலாமே !

அது தா(ன்) மொதல் படி.

கரிகாலா said...

எண்ணற்ற பிழைகள் இருப்பதாக துவக்கத்தில் நினைத்தேன். பின்பு தான் தெரிந்தது அவை உங்கள் எண்ணத்தின் விழைவு. ஆனால் இவை இருக்கும் தமிழையும் அழித்துவிடும் என்பதில் ஐயமில்லை. ஆங்கிலத்தில் கூட பேச்சு வழக்கானது எழுத்து வழக்கினின்று மாறுபடுகின்றது. இளைய தலைமுறையினர் அப்படிப்பட்ட ஆங்கிலத்தை தான் பெரிதும் விரும்பி உபயோகிக்கின்றனர்.

இருப்பினும் இவற்றிற்காக இலக்கணத்தை இழப்பதிலோ, எழுத்துருவை மாற்றுவதிலோ எமக்கு உடன்பாடில்லை. இது அடியேனுடைய தாழ்மையான கருத்து.

வன்பாக்கம் விஜயராகவன் said...

> கரிகாலா said...
> ஆனால் இவை இருக்கும் >தமிழையும் அழித்துவிடும் என்பதில் >ஐயமில்லை

கரிகாலா, நீங்கள் சொல்வது சரி, இருக்கும் எழுத்து தமிழை அழிக்க வேண்டியதுதான், அந்த இடத்தில் புது எழுத்து தமிழ் வரவேண்டியது. அப்படி செய்தால் தமிழ் பிரயோகம் அதிகரிக்கும். `தமிழை காக்கிறேன்` என சொல்பவர்களால், ஏன் தமிழில் வேலை செய்ய முடியவில்லை, முக்கால்வாசி ஆங்கிலத்தில்தான் வேலை நடக்கிரது. ஏனெனில், `பூசை செய்யப்படும் தமிழ்` வேலைக்கு உதவாது.

சிறிய நடைமுறை உதாரணம் கொடுக்கிறேன். நீங்கள் தமிழ்நாடு அரசாங்கம் வெப்சைட் போய் பாருங்கள், அதிலும் தமிழ் பக்கங்கள்

http://www.tn.gov.in/tamiltngov/

உதாரணமாக `ஆவணங்கள்` என்பதி சொடுக்கினால், எந்த ஆவணம் போனாலும் அவை ஆங்கிலத்திலேயே உள்ளன. `தமிழ் வளர்ப்பவர்களுக்கு` தமிழில் எழுத கை போவதில்லை ? 50 வருடங்கள் தமிழ் தமிழ் என மாரடித்டுவிட்டு, எல்லா வித திறமைசாலிகலையும், பணத்தையும் கொண்ட தமிழ்நாடு அரசே தமிழில் ஆவணம் செய்ய முடியாது என்றால், அதன் அடிப்படை காரனம் அவர்கள் பயன்படுத்தும் மொழி, அவர்கள் எழுத்துத் தமிழ் அரசு செயல்கள் ஆவணங்களை, தமிழில் செய்ய நம்பிக்கையோ, எண்ணத்தையோ கொடுப்பதில்லை.

பயன்படாத எதையும் , அது எழுத்து தமிழாக இருந்தாலும் - வைத்து பூசை செய்வது நேரம் விரயம்

>இவற்றிற்காக இலக்கணத்தை இழப்பதிலோ, எழுத்துருவை மாற்றுவதிலோ எமக்கு உடன்பாடில்லை

சரி, எல்லோரும் ஆங்கிலத்திலேயே காலம் தள்ளலாம், அந்த குற்ற உணர்சியை அடக்குவதற்கு `தமிழ் பூஜை` `தமிழ் அன்னை பூஜை`, `கன்னித் தமிழ் கவசம்` செய்யலாம்.

தமிழ் பேசப்படும் வரை தமிழ் இலக்கணம் மடியாது; அந்த பேச்சு நியதிகளை இலக்கணம் ஆக்க வேண்டும் அவ்வளவுதான்.

nerkuppai thumbi said...

ஒரு மாதத்திற்கு முன்பு வந்த பதிவு. காலம் தாழ்ந்த பின்னூட்டம்.

தமிழ் நீடூழி வாழ வேண்டும் என்றால் அது காலத்தை ஒட்டி சில மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் சொல்லி இருப்பது போல் தூய தமிழ் என்று அடுக்கு வார்த்தைகள் பேசி எந்த ஒரு புது கருத்தையும் சொல்ல விடுவதில்லை. ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளுதல் என்பதே இல்லை.

நீங்கள் சொல்லி இருப்பது ந, ன மற்றும் ர, ற குறித்து.

அதே நன்னூல் அல்லது அதே போல் ஒரு இலக்கணம் சொன்னது என்று, தமிழ் வார்த்தைகள் ர-விலும், ல-விலும் தொடங்காது: ராமன் இராமன் ஆகிறான்; லங்கை இலங்கை ஆகிறது.. லாபம் என்பது தொண்ணூறு சதவீத தமிழர்கள் பயன் படுத்தும் சொல் தமிழ்ச் சொல் இல்லை என்று சாதிப்போம்.

மேலும் இந்தியாவில் விரும்பியோ, விரும்பாமலோ ஒரு பகுதி ஆனா பிறகு, ஜ, ஷா, ஸ என்ற ஒலிகளை தமிழில் ஏற்றுக்கொள்வது சரியாக இருக்கும்

இதே போல் சில பல மாற்றங்களை பரிசீலிக்க வேண்டும்..

வன்பாக்கம் விஜயராகவன் said...

நெர்குப்பை

உங்களைப் போல் பலரும் நடைமுறை - பேச்சு, எழுத்து - தமிழை அடிப்படையாக கொண்டுதான் இலக்கணம் வடிக்க வேண்டும் என்றால் தமிழுக்கு எதிர்காலம் உண்டு. இலக்கணம் 1000, 2000 ஆண்டுகள் முன் எழுதப்பட நூல்களின் மீது தொங்க வேண்டும் என்றால், தமிழ் மெல்ல மெல்ல சாகாது, வேகமாகவே சாகும்.

>மேலும் இந்தியாவில் விரும்பியோ, >விரும்பாமலோ ஒரு பகுதி ஆனா >பிறகு, ஜ, ஷா, ஸ என்ற >ஒலிகளை தமிழில் ஏற்றுக்கொள்வது >சரியாக இருக்கு

உங்கள் லாஜிக் சரி இல்லை. இது இந்தியாவா-இல்லையா என்பதன் மீது ஆதாரம் தேடுவதில்லை.

மேலும் ஜ, ஷா, ஸ போன்ற கிரந்த எழுத்துகள் 6ம் நூத்தாண்டில் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை. தமிழ் வட்டெழுத்து தமிழர்களுக்கு எவ்வளவு சொந்தமோ, அவ்வளவ் சொந்தம் கிரந்த எழுத்துகளும். தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கிரந்தம் தென்கிழக்கு ஆசியாவிற்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டது