Tuesday, August 18, 2009

யூதர் மீது வெறுப்பு


என் ஹிரோஷிமா கட்டுரையின் பதிலாக கிருஷ்ணமூர்த்தி , இப்படி எழுதுகிறார். “அமெரிக்க அரசியலில் மட்டுமல்ல பல்வேறு துறைகளில் யூத இனத்தவரின் ஆதிக்கம் அளவுக்கு மீறியே இருக்கிறதென்பதையும் பார்க்க முடியும். இடம் கொடுத்தால் மடத்தையே பிடுங்குகிற இந்தக் குணம் தான் யூதர்களை வெறுக்கத் தூண்டுகோலாக இருந்தது, இருக்கிறது என்பதையும் மறந்து விடக் கூடாது.”


இது ஆதாரமற்ற யூதர்கள் மீது ஒரு அவதூறு. இதை கிருஷ்ணமூர்த்தியின் அபிப்பிராயமான கருதாமல் , ஒரு கலாசார phenomenon ஆக பார்க்க வேண்டும்.


யூதர்களின் ஜெரூசலம் மைய அரசு ரோம சாம்ராஜ்யத்தால் 2000 ஆண்டுகள் முன்பு அழிக்கப் பட்டது. அதனால் யூதர்கள் மற்ற நாடுகளில் அகதிகளாக சென்றனர். மேலை நாடுகளில் கிருஸ்துவ மதம் பரவி மக்கள் கிருஸ்துவராகி , கிருஸ்துவ மத அமைப்புகள் ஆதிக்கத்தை பெற்றவுடன் - அதாவது கிபி 300-700 கால கட்டத்தில் - யூத வெறுப்பு பரப்பப் பட்டது. அப்போது ஆரம்பித்த மேலை-கிரிஸ்துவ யூத வெறுப்பு 20 நூற்றாண்டு வரை கொழுந்து விட்டெரிந்தது. அந்த மேலை நாட்டு யூத காழ்ப்பின் உச்ச கட்டம் ஹோலோகாஸ்ட் என அழைக்கப்படும் யூத இன பேரழிவு.
இரண்டாம் உலக்ப்போர் பின்பு மேலை நாடுகளில் தங்கள் மத்தியிலிருந்து யூதகாழ்ப்பை களைந்தெரிய மக்களும், அரசியல்வாதிகளும், கலைஞர்களும் பெரும் அளவில் ஈடுபடுகிறனர்.


19ம் நூற்றாண்டு வரை முஸ்லிம் நாடுகளில் யூத வெறுப்பு பெரும் அளவில் இருக்க வில்லை. அரபு-முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம்களின் உறுதியான திட்டம் தாங்கள் - அதாவது முஸ்லிம்கள் ஆட்சி செய்ய வேண்டும் அவ்வளவுதான். அதற்கு பாதகம் வராதபோது , ஓரளவு யூதர்களும், கிருஸ்துவர்களும் இடம் கொடுக்கப்பட்டனர், பல யூதர்கள் முஸ்லிம் நாடுகளில் தழைத்தனர். எப்பொழுதுமே சில யூதர்கள் தற்கால இஸ்ரேலில் வசித்திருந்தனர். 19ம் நூற்றாண்டு பிற்பகுதியின் ஆரம்பத்தில் இருந்து, ஐரோப்பாவின் யூன இன வெறுப்பு ர்களைகளை தாங்க முடியாமல் சிறிது, சிறிதாக யூதர்கள் - அப்போது துருக்கி சாம்ராஜ்யத்தின் கைவசம் இருந்த பாலஸ்தீனத்தின் நிலம் வாங்கி , வசிக்க ஆரம்பித்தனர். பல ராணுவ, சர்வ தேச அர்சியல் மாற்றங்கள் காரணமாக யூதர்களால், இஸ்ரேல் என்ற யூத நாட்டை மறுபடியும் சுதந்திரமாக்க முடிந்தது. சுதந்திர இஸ்ரேல் உலக நாடுகளுக்கு மத்தியில் தோன்றியவுடன், அரபு-முஸ்லிம் மக்களின் இஸ்ரேலிய எதிர்பு யூத காழ்ப்பாக மாறியது. கடந்த 70 வருட காலமாக பொதுவாக எல்லா அரபு நாடுகளிலும் யூத இனம் மிகப்பெரிய இனத்துவேஷ பிரச்சாரத்திற்கு உள்ளாகியுள்ளது. அரபு மக்கள் தங்கள் யூத வெறுப்பை அரபல்லாத மற்ற இஸ்லாமியர்கள் மீதும் பரப்பி உள்ளார்கள். எங்கு எங்கு இஸ்லாமிய தீவிரவாதம் கை ஓங்கி உள்ளதோ , அங்கெல்லாம் பெரும் யூத த்வேஷ்மும் படவியுள்ளது.
மேலும் சோவியத் யூனியனின் தூண்டுதலில் வளர்ந்த உலக இடதுசாரி அரசியலும் ஓரளவு யூத வெறுப்பிற்கு தூண்டு கோலாக உள்ளது. பொதுவாக இடதுசாரிகள் இனத்துவேஷத்தை எதிர்ப்பதாக சொல்லுவார்கள். இஸ்ரேலை அரபு நாடுகள் கண்மூடித்தனமாக எதிர்ப்பதால், இடது சரிகளும் அரபு நாடுகளுக்கு ஆதரவாக பொதுவாக இஸ்ரேல் எதிர்ப்பு பிரச்சாரத்தில் மூழ்கி உள்ளனர். இஸ்ரேல் எதிர்ப்பு பிரச்சாரம் அவர்களை அறியாமைலேயே, மெதுவாக யூத இனதுவேஷமாக உரு மாறுகிரது.

மேலும் சோவியத் யூனியனின் தூண்டுதலில் வளர்ந்த உலக இடதுசாரி அரசியலும் ஓரளவு யூத வெறுப்பிற்கு தூண்டு கோலாக உள்ளது. பொதுவாக இடதுசாரிகள் இனத்துவேஷத்தை எதிர்ப்பதாக சொல்லுவார்கள். இஸ்ரேலை அரபு நாடுகள் கண்மூடித்தனமாக எதிர்ப்பதால், இடது சரிகளும் அரபு நாடுகளுக்கு ஆதரவாக பொதுவாக இஸ்ரேல் எதிர்ப்பு பிரச்சாரத்தில் மூழ்கி உள்ளனர். இஸ்ரேல் எதிர்ப்பு பிரச்சாரம் அவர்களை அறியாமைலேயே, மெதுவாக யூத இனதுவேஷமாக உரு மாறுகிரது.

இந்தியாவில் யூதர்கள் பல நூற்றாண்டுகளாக அமைதியுடன், ஹிந்து, முஸ்லிம்களுடன் சுமுகமாக வாழ்ந்தனர். கடந்த 50 வருடங்களீல் பெரும் பாலோர் இஸ்ரேலுக்கு குடி புகுந்து விட்டனர். அதனால் இந்தியர்களுக்கு யூத இனத்துவேஷம் மிகவும் பொருத்தமற்றது . உலகில் பொதுவாக யூத இனத்துவேஷத்தின் ஊற்றுகள் - பெருமளவு அரபு தேசியம், இஸ்லாமிய தீவிரவாதம்,, சிறிதளவு சர்வதேச இடதுசாரிகளும், ஓரளவு பழைய ஐரோப்பிய வலதுசாரிகளும்.

ஒரு காலத்தில் ஐரோப்பிய வலதுசாரிகள் யூத வெறுப்பின் `காவலர்கள்`. இரண்டாம் உலகப்போர் பின்பு அவர்கள் இன்ஃப்ளுவன்ஸ் மிகவும் குறைந்து விட்டது - ஆனால் அது மொத்தமாக அழியவில்லை. 60 வருடம் முன் ஐரோப்பிய இடதுசாரிகள் யூதக் காழ்ப்பின் முதல் எதிரிகளாக நின்றனர் - யூதர்களின் ஆதரவாக தோள்கொடுத்து, நாஜிக்களோடும், வலதுசாரிகளோடும் போரிட்டனர். இன்று இடதுசாரிகள் பெருமளவில் இஸ்ரேலை எதிர்க்கின்றனர் - அது ஓரளவு யூத காழ்ப்பாக மாறி விடுகிரது.

இந்திய அளவில், அரசியல் பிரமுகர்களும், ஊடகங்களும் இடதுசாரி ஆதரவாகவும், இஸ்லாமிய ஆதரவாகவும் இருப்பதால் சில சமயம் கிருஷ்ணமூர்த்தி மூலம் பிரதிபலிக்கும் யூத காழ்ப்பு ஆகிறது.

2 comments:

கிருஷ்ணமூர்த்தி said...

முந்தைய பதிவில் நான் இட்ட ஒரு பின்னூட்டத்திற்கு தனியாக ஒரு பதிவையே போட்டிருப்பது, இன்றைக்குத் தான் என் கண்ணில் பட்டது.

ஆதாரமே இல்லாத ஒரு குற்றச்சாட்டை யூத மக்கள் மீது வைத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். வெறுப்பு, நேசம் என்பதெல்லாம் ஒருகை ஓசை அல்ல. வெறும் பிரச்சாரங்களின் மூலமாகவே பேரழிவுகளை எவரும்நியாயப் படுத்தி விட முடியாது.

சமீபத்திய வரலாற்றில், யூத மக்கள் பெரும் எண்ணிக்கையில் அழிக்கப் பட்டிருக்கிறார்கள். உண்மைதான். அதே மாதிரி, ஸ்டாலினுடைய அடக்குமுறைகளில் ரஷ்ய மக்களுமே பெரும் சேதத்தைச் சந்தித்திருக்கிறார்கள், யுத்தத்திலும் பெரிதளவு சேதப் பட்டிருக்கிறார்கள்.

1965 இல வெளிவந்த கல்கி ராணுவ மலரில்,வெளிவந்த திரு தி.சா. ராஜுவின் கதை ஒன்று இன்னமும் என் நினைவில் இருக்கிறது:

எண்ணெய் மட்டுமே நீரை வெறுத்து ஒதுக்குவதில்லை;தண்ணீரும் எண்ணெயை வெறுத்து ஒதுக்குகிறது என்று அந்தக் கதையின் இறுதி வரிகள் இந்தப் பிரச்சினைக்கும் பொருந்தி வருகிறது.

யூதர்களை மோசமானவர்களாகச் சித்தரித்ததால் மட்டுமே அவர்கள் மோசமானவர்கள் என்று தவறான கருத்தை நானும் சொல்கிறேன் என்று சொல்லியிருக்கிறீர்கள்.

யூதர்கள் மோசமானவர்களாகவும் இருந்ததாலேயே, அவர்களைப் பற்றிய மோசமான சித்திரம் அழுத்தமாகப் படிந்திருக்கிறது என்று தான் நான் படித்த வரலாற்றுக் குறிப்புக்கள் சொல்கின்றன. லேயான் யூரிஸ் எழுதிய எக்ஸொடஸ் முதல், யூதர்களது நியாயங்களைச் சொல்கிற புத்தகங்களையுமே படித்து, அதற்கப்புறம் இஸ்ரவேல் என்று ஒரு தனி நாடு உருவான விதம், அது இன்றைக்கும் செய்து கொண்டிருக்கிற அக்கிரமங்கள் எல்லாவற்றையும் பார்த்த பிறகும், யூதர்களைப் பற்றிய தவறான பிரசாரத்தை, என் முதல் கொண்டு பலரும் செல்வதாக, ஆதாரமில்லாத அவதூறாக நீங்கள் நினைப்பதாயிருந்தால், அது உங்களுடைய சுதந்திரம். ஆனால், அதுவே உண்மையாக இருக்க வேண்டும், உண்மையாக இருக்கிறது என்கிற அவசியம் இல்லை!

வன்பாக்கம் விஜயராகவன் said...

ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி

”வெறுப்பு, நேசம் என்பதெல்லாம் ஒருகை ஓசை அல்ல. வெறும் பிரச்சாரங்களின் மூலமாகவே பேரழிவுகளை எவரும்நியாயப் படுத்தி விட முடியாது.”

20ம் நூத்தாண்டில் இது பல தடவை நடந்துள்ளது. பிரசாரங்கள் மூலம் பேரழிவிற்கான ஒரு மனப்பான்மையை உண்டாக்குகிறார்கள் . அப்புறம் பேரழிவை செய்கின்றனர். அப்புறம் பிரசாரம் மூலமாக அந்த பேரழவின் எண்ணிக்கையை மிகக் குறைவாக நிலைநாட்ட முயல்கிறனர்.

அதனால் நீங்கள் சொல்வது பிரச்சாரங்களின் மூலமாகவே பேரழிவுகளை நியாயப் படுத்துவது நடப்பதில்லை.

பிரசாரங்களில் இலக்குகள்

1. பேரழிவின் மனப்பான்மையையும் , அஸ்திவாரத்தையும் போடுவது

2. பேரழிவை மறைப்பது, குறைப்பது, மிகக் குறைந்த அளவை நியாயப்படுத்துவது - ஏதோ தடுக்கமுடியாதது போல்.

ஹிட்லர், ஸ்டாலின், மாவோ, போல்போட் , நம் கண்முன்னாடியே தார்ஃபுர் போன்ற உதாரணங்கள் உள்ளன.


”எண்ணெய் மட்டுமே நீரை வெறுத்து ஒதுக்குவதில்லை;தண்ணீரும் எண்ணெயை வெறுத்து ஒதுக்குகிறது ”

நீங்கள் சொன்னது உண்மை என எடுத்துக்கொண்டால் கூட, ஒதுக்குதலுக்கு அழிவு ஒரு பொழுதும் சமமாகாது. உதாரணமாக, உங்கள் ஆபீசில் உங்களை ஒதுக்கிவிட்டு மற்றவர்களுக்கு ப்ரமோஷன் கிடப்பதென்றால், அதற்கு கொலைதான் பதிலா?

“யூதர்கள் மோசமானவர்களாகவும் இருந்ததாலேயே, அவர்களைப் பற்றிய மோசமான சித்திரம் அழுத்தமாகப் படிந்திருக்கிறது என்று தான் நான் படித்த வரலாற்றுக் குறிப்புக்கள் சொல்கின்றன”

எந்த வரலாரு என சொல்லமுடியுமா? பற்றிய மோசமான சித்திரம் அழுத்தமாகப் படிந்த நாடுகள்/காலங்கள்
19ம் நூத்தாண்டு வரை ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா. 20ம் நூத்தாண்டில் ஜெர்மனி, பல ஐரோப்பிய நாடுகள், 1950 பிறகு அரபு நாடுகள், இஸ்லாமிய நாடுகள்.http://en.wikipedia.org/wiki/Anti-Semitism


விஜயராகவன்