Sunday, August 23, 2009

மோலோடாவ் - ரிப்பண்ட்ராப் ஒப்பந்தம் - 70 ஆண்டுகள் பிறகு

எழுபது ஆண்டுகளுக்கு முன் ஆகஸ்ட் 23, 1939 அன்று , மாஸ்கோவில் சோவியத் வெளி விவகார மந்திரி வியஷெஸ்லேவ் மோலோடாவ், ஜெர்மானிய வெளி விவகார மந்திரி ஜொவாகிம் ஃபான் ரிப்பண்ட்ராப் இருவரும் சோவியத்-ஜெர்மன் பாதுகாப்பு ஒப்பந்தம் என்பதில் கையெழுத்து இட்டனர். அது உலகெங்கிலும் அதிர்சி அலைகளை அனுப்பியது.

http://en.wikipedia.org/wiki/Molotov%E2%80%93Ribbentrop_Pact

ஏன் அப்படி அதிர்சி? ஹிட்லரும், நாஜிக்களும் கம்யூனிசத்தை தாங்கள் அழிப்போம் என கங்கணம் கட்டிக் கொண்டிருந்தனர். அதற்கு மேல் சோவியத் யூனியனின் முக்கிய இனமான ஸ்லாவியரக்ள் `உப மனிதர்கள்` அதாவது மானுடத்தின் ஒரு படி கீழே என நாஜி பிரச்சாரம் பல காலமாக பரைசாற்றியது. இந்த இன மற்றும் அரசியல் அதீத காழ்ப்பு இணப்பு , நாஜிக்களை எப்பொழுதும் சோவியத் யூனியனுக்கு சாதகமாக செயல்பட வைக்காது என உலகம் நம்பியது. அதே சமயம் சோவியத் கம்யூனிஸ்ட் பிரச்சாரத்திலும் ஹிட்லரும், நாஜிக்களும் மிகவும் கீழ்தரமானர்கள் என படிமம் இருந்தது. ஆனால் சோவியத் பிரச்சாரம் எப்பொழுதுமே அப்படி இல்லை. 1935 வரை அதாவது ஹிட்லர் பதவிக்கு வந்து 2 ஆண்டுகள் வரை, சோவியத் யூனுனும், ஸ்டாலினும் நாஜிக்கள் பூர்ஷ்வாக்களின், முதலாளித்துவத்தின் ஒரு தீவிரவாதப் பிறிவு, கம்யூனிஸ்டுகளின் முக்கிய எதிரி பூர்ஷ்வாக்களும், முதலாளிகளும் , அதற்கு பிரகுதான் நாஜிக்கள் என நம்பினர் 1935 பிரகு, ஸ்டாலின் தன் கருத்தை மாற்றிக் கொண்டு, நாஜிக்கள் தான் கம்யூனிசத்தின், உலக அமைதியின் முக்கிய எதிரி என நம்ப ஆரம்பித்தார். இரு நாடுகளுக்கு இடையே பயங்கர பிரசார யுத்தம் நடந்து ஒருவர் மற்றொருவரை உலகின் மிக கீழ்த்தரமான ஆட்கள் என்ற நிலமை இருந்தது.

அதனால் பாப்பும், கீரியுமாய் இருந்த இரு நாடுகளும் `பாதுகாப்பு ஒப்பந்ததை` கையெழுத்து இட்ட உடன் , எல்லோரும் தங்கள் கண்ணை பிசக்கி தான் காண்பது நிஜமாகவா என நினைத்தார்கள். அந்த ஒப்பந்தத்திற்கு சில வாரங்கள் முன்புதான் பிரெஞ்சு, பிரித்தானிய அரசாங்கங்கள் ஹிட்லரை எதிர்க்க, ஸ்டாலினுடன் கூட்டு சேரலாம் என நினைத்து ஒரு உயர் அதிகார குழுவை சோவியத் யூனியனுக்கு அனுப்பினர். அக்குழு கப்பலில் மெதுவாக பயணம் செய்து, சோவியத் யூனியனுடன் பேச்சு வார்த்தைகள் நடத்த தொடங்கியது. மேலை நாடுகளுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டுமெனில், ஸ்டாலின் ஒரு முக்கிய நிபந்தனையை போட்டார் - ஒப்பந்தம் சோவியத் யூனியனுக்கு போலந்து வழியாக சென்று ஜெர்மனியை தாக்க உரிமை கொடுக்க வேண்டும். அதற்கு மேலை நாடுகளால் உடனடியாக ஒப்புக் கொள்ள முடியவில்லை. ஆனால் பேச்சு வார்த்தைகளை முறிக்கவும் மனது வரவில்லை, அதனால் என்ன செய்வது என கையை பிசைந்து கொண்டிருந்தனர்.

இந்த மேலை நாடுகளின் தயக்கம், ஸ்டாலினின் அவநம்பிக்கையை வளர்த்தது, ஸ்டாலின் மேலை நாடுகளின் முக்கிய நோக்கம் எப்படியாவது ஹிட்லரை சோவியத் யூனியன் மீது திருப்பி, சோவியத் யூனியனை அழித்து தங்களை காப்பாற்றி கொள்ளலாம் என நினைத்தார். அதனால் உடனடியாக ஹிட்லருடன் ஒப்பந்தம் செய்து கொண்டால், ஹிட்லரின் போர் வெறி தாற்காலிகமாக தன் மேல் திரும்பாது, வேறெங்கேயாவது திரும்பும் என்பது. அதனால் ரகசியமாக ஹிட்லருடன் பேச்சு வார்த்தைகளை துவக்கினார். மேலை நாடுகளுக்கு இந்த ரகசிய பேச்சுகள் பற்றி தெரியாது. இந்த பின்னணியில் மோலோடாவ்-ரிப்பண்ட்ராப் ஒப்பந்தம், ஸ்டாலின் அவர்கள் பின் பக்கத்தில் இருந்து பார்த்து கைதட்ட , கையெழுத்து இடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில் ஒரு கொடிய பகுதி, `ரகசிய ஷரத்துகள்`. அதன் படி போலந்து நாட்டை இரு நாடுகளும் பாதியாக கைவசம் ஆக்கலாம், கிழக்கு ஐரோப்பாவில் பால்டிச் பிரதேசங்களில் சோவியத் யூனியன் ஆக்கிரமிக்கலாம் என்பது. இந்த கையெழுத்து இட்ட ஒரு வாரத்தில் , ஹிட்லர் போலந்தை தாக்கி இரண்டாம் உலகப் போர் துவங்கியது. ஹிட்லர் போலந்தின் மேற்கு பகுதியை கைப்பற்ற, இரு வாரங்களுக்கு பின் சோவியத் துருப்புகள் போலந்தை கிழக்கிலிருந்து தாக்கி, தன் கைவசம் கொண்டு வந்தனர். சில மாதங்களுக்குள் சோவியத் துருப்புகள் லிதுவேனியா, லாட்வியா, எஸ்டோனியா நாடுகளை ஆக்கிரமித்து கைவசம் கொண்டு வந்தனர். இதெல்லாம் இந்த ஒப்பந்தத்தினால் ஏற்பட்ட விளைவுகள். இந்த சோவியத் ஆக்கிரமிப்புகளால், இந்த நான்கு நாடுகளிலும் சோவியத் யூனியன் எதிராக தீராத காழ்ப்பு ஏற்பட்டது.


ஸ்டாலின் ஆதரவாளர்கள் இந்த சோவியத் யூனியன் செய்கையால், அது சோவியத் யூனியன் தரை மட்டத்தை பரப்பி, சோவியத் யூனியன் பாதுகாப்பு நிலைமையை சீர்செய்தது என கூருகின்ரனர். மேலும் ௨ வருடங்கள் கழித்து, ஜெர்மனி சோவியத் யூனியனை, தாக்கியபோது , அதன் யுத்த தயார் நிலைமை உயர்ந்தது எனவும் சொல்கின்ரனர். அது உண்மையா?

நிச்சயாமக அது உண்மை இல்லை. இந்த ஒப்பந்தன் ஹிட்லருக்கு யுத்தத்தை மேற்கு திசையில் செய்ய சாவகாசம் கொடுத்தது. அதனால் ௨ வருடங்கள் கழித்து , சோவியத் யூனியன் மீது ஆக்கிரமிப்பு செய்யும் போது, ஹிட்லரின் பலம் பல மடங்கு அதிகரித்திருந்தது. மேலும் இந்த ஒப்பந்தம் ஸ்டாலினை, ஜெர்மனி தன்னை சீக்கிரம் தாக்காது என தூபமிட்டு ஒரு குருட்டு நம்பிக்கையில் வைத்தது; அதனால் ஜூன் 1941 முன் , ஹிட்லர் தாக்கப் போகிரான் என பல திசைகளிடம் இருந்து வந்த பல எச்சரிக்கைகளை `இது மேற்கு நாடுகள் பிரச்சாரம்` என உதாசீனம் செய்தான். அதன் விளைவு , ஹிட்லர் சோவியத்தை தாக்கும் போது, மன அளவில் சோவியத் துருப்புகள் தயாராக இல்லை. அதன் விளைவாக சோவியத் யூனியன் பெரும் அளவு சேதமாயிற்று.
சோவியத் யூனியன் இந்த ஒப்பந்தத்தின் ரகசிய ஷரத்துகளை கடைசி வரை தீவிரமாக மறுத்தது. 1988 தான் ரகசிய ஷரத்துகள் இருந்ததாக ஒத்துக் கொண்டது. மோலோடாவ்-ரிப்பண்ட்ராப் ஒப்பந்தம் 20ம் நூற்றாண்டின் அரசியல் ஒரு கீழ் கட்டத்தை அடைந்ததை தெளிவாக காட்டுகிரது.

26.8.09 கொசுரு

ரஹசிய ஷரத்துகளில் இன்னும் ஒன்று ஸ்டாலினின் நம்பத்தகாதவற்றை காண்பிக்கிறது. 1930 களில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த பின் நூத்துக் கணக்கான ஜெர்மானிய கம்யூனிஸ்டுகள் நாஜிக்களுடன் தெருக்களில் போரிட்டனர்; பலர் கொல்லப்பட்டனர், பலர் சிறையிடப்பட்டனர், பலர் குவிப்பு முகாம்களுக்கு அனுப்பப் பட்டு சித்திரவதைக்கு உள்ளாயினர். கம்யூணிஸ்ட் கட்சியே தடை செய்யப்பட்டது. அந்நிலையில் நூத்துக்கணக்கன கம்யூனிஸ்டுகள் சோவியத் யூனியனில் தஞ்சம் புகுந்தனர். ரகசிய ஷரத்துகள் படி , அந்த நாஜி பிடியில் இருந்து தப்பித்த கம்யூனிஸ்டுகளை ஸ்டாலின் ஜெர்மனிக்கு திருப்பி அனுப்ப வேண்டும். அதன் அனுசரணையாக, நூற்றுக்கனக்கன ஜெர்மன் கம்யூனிஸ்டுகள் சோவியத் யூனியனில் கைது செய்யப்பட்டு, நாஜி சிறைகளுக்கு திருப்பி அனுப்பப் பட்டர்கள், அவர்களுக்கு நிச்சய்மக சித்திரவதையும், சாவும்தான் கத்துக்கொண்டிருந்தது. இதை போல் அரசியல் துரோகத்தை 20 நூத்தாண்டு பார்க்கவில்லை.

No comments: