Wednesday, August 05, 2009

ஹிரோஷிமா-நாகசாகி நாள்

ஆகஸ்ட் 6 , 1945 அன்று , எனோலா கே என்ற அமெரிக்க குண்டடிப்பு (பாமர்) விமானம் - பி-29 சூபர் ஃபோர்ட்ரஸ் ரகம் - , லிடில் பாய் என்றழைக்கப் பட்ட 5 டன் அணுகுண்டை ஹிரோஷிமா நகர் மீது போட்டது. 3 நாள் கழித்து மற்றொரு அமெரிக்க விமானம் நாகசாகி நகர் மீது அணுகுண்டைப் போட்டது. ஹிரோஷிமாவில், குண்டு வெடித்த சில கணங்களுக்குள் 70000-80000 பேர் கொல்லப் பட்டனர். 70000 பேர் கோரமான முறையில் காயமுற்றனர். வெடியின் உஷ்ணம் 1,000,000 செண்டிகிரேட் ஆகவும், 840 அடி உயர நெருப்புக் கோளமும் வந்தது. இப்படி உடனடி சாவுகளை தவிற சில நாட்களில் பல்லாயிக்கணக்கான மக்கள் கதிரியக்க நோய்களினால் மாண்டனர். கதிரியக்கத்தின் விளைவுகள் 2 தலைமுறைகளுக்கு இருந்தன.
1983ல் , ஒரு ஆராய்சிபடி, ஹிரோஷிமா குண்டினால் 2,00000 பேரும், நாகசாகி குண்டினால் 140,000 பேரும் மொத்தத்தில் மடிந்தனர் என கணக்கிடப் பட்டது.


அதிலிருந்து உலகின் எல்லா நாடுகளிலும் ஒரு அணு பீதி ஏற்பட்டது. எதிரி தன்னை அணுகுண்டினால் தாக்கிடிவானோ என்ற பீதியில் பல நாடுகள் தாங்களீ அதை உற்பத்தி செய்யத் தொடங்கின. இன்னும் செய்கிறன. இப்போது, அர்சாங்ககளுக்கு கட்டுப் படாத பயங்கர வாதி குழுக்கள் (அல்-கைதா) எப்படியோ ஒரு அணுகுண்டையாவது கைப்பற்றி உலகத்தை ஆட்டி வைக்குமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது.


ஒன்று நிச்சயம் - அணுகுண்டு வந்த பிறகு உலக அரசியலும், போர் பற்றிய மனப் பான்மைகளும் பெரிதளவில் மாற்றம் அடைந்துள்ளன. அணுகுண்டு உலக சரித்திரத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


சமீபத்தில் ஜயமோகன் “வாக்களிக்கும் பூமி- 3,பாஸ்டன் நகரம்” ( http://jeyamohan.in/?p=3488 ) என்ற கட்டுரையில் 4 கருத்துகளை அறுதியிடுகிறார்.


1. 1945ல் அணுகுண்டு போட்டது அமெரிக்காவின் மனித அழிப்பு குற்றம்

2. அது நாஜிக்களின் யூத இன அழிப்பு குற்றத்தை விட பெரியது

இதைத் தவிற 2 ஐயங்களை வைக்கிறார்.

1. யூதர் ஹோலோகாஸ்டின் போது அவ்வளவு பேர் (அதாவது 6,000,000) நிஜமாகவே கொல்லப் பட்டனரா?

2. தன் அணுகுண்டு வழி மனித அழிப்பை மறக்க / மறைக்க அமெர்க்கா யூத பேரழிவைப் பற்றி நிரைய நேரம் செலவிடுகிரதா.

ஒரு சிறிய பத்தியில் ஜயமோகன் , உலக அளவில் ஒத்துக்கொள்ளப் பட்ட உண்மைகளையும், உணர்வுகளையும் சந்தேகிக்கிறார்.

இந்த 4 கருத்துகளையும், லாஜிகலாக பார்க்க இப்படி போலாம்.

யூதர் ஹோலோகாஸ்டின் போது அவ்வளவு பேர் (அதாவது 6,000,000) நிஜமாகவே கொல்லப் பட்டனரா?


ஹிட்லரின் ராணுவம் எங்கெல்லாம் ஆக்கிரமித்து சென்றதோ, அல்லது மறைமுக ஆதிக்கம் செலுத்தியதோ, அங்கெல்லாம் யூதர்கள் கைது செய்யப்பட்டு, பல குவிப்பு முகாம்களுக்கு அனுப்பப் பட்டு கொலை செய்யப் பட்டனர். அதற்கு முன் நாஜி ராணுவம் யூதர்களை கொல்லுவதற்கு ஐன்ஸ்டஸ் க்ருப்பன் (Einsatz gruppen) என்ற அமைப்பை ஏற்படுத்தி, ஆயிரக்கணக்கான யூதர்களை சூட்டுக் கொன்றது. எல்லா யூதர்களையும் அப்படி கொல்ல முடியாத்தால், வேகமாக அவர்களை கொல்லுவதற்கு குவிப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. செயல் முறையில் இவை அழிப்பு முகாம்கள். அவற்றின் முக்கிய வேலை, யூதர்களை வாயு அறையில் கொன்று, எரித்து விடுவது. குவிப்பு/அழிப்பு முகாம்களில் யூதர்கள் மட்டுமின்றி ஜிப்சிக்கள், ரஷ்யர்கள், கம்யூனிஸ்டுகள், செர்பியர்கள், போலந்து மக்கள், போன்றவர்களும் கொல்லப் பட்டனர். 2ம் உலகப் போர் துவங்குவதற்கு முன் ஐரோப்பாவில் 9.5 மில்லியன் யூதர்கள் இருந்தனர் என்றும், போருக்குப் பிறகு 3.5 மில்லியன் மக்கள் இருந்தனர் என்றும் கணக்கிடப்பட்டது. மேலும், 2ம் உலகப் போருக்கு முன் அமெரிக்கா போன்ற நாடுகளில் அகதிகள் போவது கஷ்டமானதால் சில யூதர்களே அமெரிக்காவிற்கு தப்ப முடிந்தது. அதனால் நாஜிக்களால் கொல்லப் பட்ட யூதர்கள் எண்ணிக்கை 6 மில்லியன் என பல ஆராய்ச்சிகள் சொல்லுகிறன. நாஜிக்கள் நடத்திய குவிப்பு/அழிப்பு முகாம்களில் எவ்வளவு பேர் உள்ளே போனர், அவர்கள் தேசீயம் என்ன, எவ்வளவு பேர் பிழைத்தனர் (1% கூட இல்லை) என்பது தோராயமாக தெரியும். நாஜிக்களே, எவ்வளவு யூதர்கலை எங்கு கொண்டு போனர் என்ற ஆவணங்களை வைத்திருந்தனர் - ஜெர்மானியர் நடப்பது எல்லாவற்ரையும் ஆவணப் படுத்துவதில் பிரசித்தி பெற்றவரக்ள். யூதர்கள் அழிப்பு நோக்கத்தில் நாஜிக்கள் மகாநாடு நடத்தினர், இவற்றின் ஆவனங்களூம் நம் கையில் உள்ளன. ஒரே ஒரு ஆவணம்தான் இது வரை கிடைக்க வில்லை - ஹிட்லர் கையொப்பமிட்ட யூத அழிப்பு ஆனை. ஆனால் ஹிட்லரின் அடியாட்கள் செய்தவை, ஆனை இட்டவை இவை கைப்பற்றப் பட்டன. பல ஆய்வுகள் படி மொத்த யூதர்களின் அழிப்பு எண்ணிக்கை 5.5 - 6 மில்லியன். அந்த எண்ணிக்கையை அதற்கு மேல் துல்லியமாக கணக்கிடமுடியாது என்பதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்
எப்படி இந்த யூத பேரழிவு நடத்தப்பட்டது, எப்படி எண்ணிக்கை அடையப்பட்டது என்பதை விகி கட்டுரை நன்றாக விளக்குகிறது
http://en.wikipedia.org/wiki/Holocaust
யூத பேரழிவு/ மனித அழிப்பு பற்றி ஆய்வதற்கே, ஒரு ஆக்சுபோர்ட் சஞ்சிகை வெளீயிடப்படுகிறது
http://hgs.oxfordjournals.org/
ஜெர்மானிய ஆய்வாளர்களே, கிட்டத்தட்ட 6 மில்லியன் யூதர்கள் கொல்லப் பட்டனர் என அறுதியிடுகிரனர்.
அதனால் ஜயமோகன் ஐயத்திற்கு இடமே இல்லை.

அடுத்த அறுதி ”1945ல் அணுகுண்டு போட்டது அமெரிக்காவின் மனித அழிப்பு குற்றம்”.

1941ல், ஜப்பான் அமெரிக்கவை பேர்ல் ஹார்பரில் அமெரிக்க கப்பல்படை தளத்தை பேரளவில் தாக்கி, பெரும் நாசத்தை உண்டுபண்ணி, அமெரிக்கவை போரில் இழுத்து, தானும் போரில் குதித்தது. 1943 பிறகு, அமெரிக்கா பசிபிக்கில் வெற்றி பெறத் துவங்கியது. 1945 மே ஆரம்பத்தில், ஜெர்மனி சரணடைந்தது. ஜப்பான் பல்லாயிரக்கணகான பசிபிக் தீவுகளை தன் வசம் வைத்திருந்தது, மேலும் சீனாவில் பெரும் பகுதியையும், பர்மா வரை தென் கிழக்கு ஆசியாவையும் தன் ஆட்சியில் வைத்திருந்தது. ஜப்பான் அருகில் வர வர , ஒவ்வொரு தீவை பிடிப்பதற்கும் அமெரிக்கா ஆயிக்கணக்கில் தன் துருப்புகளை இழந்தது. ஜப்பான் ஒவ்வொரு தீவா இழந்து, அமெரிக்கர்கள் ஜப்பானிய மெயின்லாந்து வர, ஆக்ரோஷத்துடன் போரிட்டனர். பொதுவாக ஜப்பானிய துருப்புகள் சரன் அடைய மறுத்து, சாவு வரை போரிட்டனர் அல்லது தற்கொலை செய்து கொண்டனர். அமெரிக்கா ஜப்பானிய தீவுகளில் கால் வைக்கும் பட்சத்தில், ஜப்பானிய அரசாங்கம் , எல்லா ஜப்பானிய மக்களையும், சாவு வரை போரிட தயார் செய்தது. மேயில் ஜெர்மனி சரணடைந்தது பின், நேச நாடுகள், ஜப்பானை நிபந்தனையின்றி சரண் அடைய கோரின, அதை ஜப்பான் அலட்சியம் செய்தது. அமெரிக்க ராணுவ திட்டமிடுபவர்கள், இந்த நிலையில் யுத்தம் தொடர்ந்தால் இன்னும் சில வருடங்கள் இழுக்கடிக்கும், 500,000- 1,000,000 அமெரிக்க துருப்புகள் சாவலாம் என கணக்கிட்டனர். யுத்ததை திட்ட வட்டமாக சீக்கிரத்தில் முடித்து, ஜப்பானிய சரணகதியை வலுக்கட்டயப் படுத்த அணுகுண்டு போடும் தீர்மானம் எடுக்கப் பட்டது. மேலும் , போர் நடந்து கொண்டுருந்தால், ஜப்பானிய பிடியில் இருந்த் சீனர்களும், தென் கிழக்காசியர்களும் தினமும் ஆயிரக்கணக்கில் மடிந்து கொண்டிருப்பார்கள். அவற்ரையும் சீக்கிர ஜப்பானிய சரணகதி தடுக்கும்.
அணுகுண்டு தீர்மானம் , ராணுவ நோக்கில் தேவையா இல்லையா என விவாதிக்கப் படுகிறது. ஆனால் 1945 ஆகஸ்டில், ராணுவ காரணங்களுக்கு அமெரிக்கா அந்த ஆயுதங்களை பயன்படுத்த முடிவு செய்தது. ஆனால் அது மனித அழிப்பு குற்றம் (genocide) என சொல்லுவது மிகை. 2ம் உலகப் போரில், நேச நாடுகளும், அச்சு நாடுகளும் எதிரிகளின் சிவிலியன் மடிப்புகளை பொருள்படுத்தவில்லை. போரிட்ட எல்லா நாடுகளிலும் (அமெரிக்கா தவிற) எதிரி ஆகாய விமான தாக்குதல்களால், பெரும் உயிர் சேதமும், பொருள்சேதமும் ஏற்பட்டது.
அணுகுண்டு போட்டது மனித அழிவுக்கு (Genocide) சமம் என்றால், ஏன் ஒரு நாடும் அப்படி சொல்ல வில்லை. ஜப்பானே அமெரிக்காவின் மீது அப்படிப்பட்ட குற்றத்தை சாட்டுவதில்லை. ஐரொப்பவோ, சோவியத் யூனியனோ, சீன கம்யூனிஸ்டுகளோ, அல்லது ஜவாகர்லால் நேருவோ அப்படி அமெரிக்காவின் மீது கூற்றம் சாட்டவில்லை? எனெனில் உலகம், கடும் யுத்தத்தில் நடக்கும் ராணுவ நடவடிக்கைகளால் ஏற்படும் மனித சாவுகளையும், அப்பாவி மக்களை இன அடிப்படையில் அழிப்பு முகாம்களை கொல்லுவதையும் தனியாக பார்க்கிரது.

அது நாஜிக்களின் யூத இன அழிப்பு குற்றத்தை விட பெரியது

யூத இன அழிப்பு பல வருடங்களாக பேசப்பட்டு, திட்டமிடப்பட்டு ஒரு பேரரசின் (நாஜி ஜெர்மனி) ஒரு இனத்தையே, அவர்கள் அப்படிப்பட்ட இனம் என்ற காரணத்தை தவிற வேறொரு காரணம் இல்லாமல், முகாம்களில் குவிக்கப் பட்டது மாபெரும் குற்றமாகும். எந்த நாட்டிலேயும் யூதர்கள் ஜெர்மன் படைக்கு எதிராக போராடவில்லை. ஜெர்மன் யூதர்களே அடக்கி, ஒடுக்கப் பட்டனர். அந்த ஒடுக்கப் பட்ட அப்பவி மக்களை அழிப்பு முகாம் களில் கொல்லுவதும், ஒரு ராணுவ ரீதியில் தீர்மானத்தை ஒட்டி எடுக்கப் பட்ட நடவடிக்கையில் 2,00,000 மக்கள் சாவதும் தனித்தனி - இவற்றை ஒப்பிட்டு பார்க்கவே முடியாது.

ஜயமோகனின் கடைசீ பாயிண்ட் “தன் அணுகுண்டு வழி மனித அழிப்பை மறக்க / மறைக்க அமெர்க்கா யூத பேரழிவைப் பற்றி நிரைய நேரம் செலவிடுகிரதா.”.

உலக நாடுகளே அமெரிக்காவை அணுகுண்டு போட்டதற்கு குற்றம் சாட்டாத பட்சத்தில், ஏன் அதை அமெரிக்கா மறைக்க/மறக்க வேண்டும்? ஆனால் , ஒன்று சொல்வேன், அமெரிக்கர்களுக்கு ஹோலோகாஸ்டை தடுக்காததில், யூதர்களுக்கு அகதி அந்தஸ்து கொடுக்காமல் ஆயிரக்கணக்கில் அவர்கள் உயிரை சேமிக்க தவிறயதில் ஓரளவு குற்ற உணர்வு இருக்கிரது என நம்புகிறேன். மேலும், யூதர்கள் பெருமளவில் கொல்லப் படுவது 1943 முதல் அமெரிக்க அரசாங்கத்திற்கு தெரிய வந்தது. ஆனாலும் அந்த செய்திகளை பொருள்படுத்தாமல், அதன் மேல் ஒருவித செய்கை எடுக்காமல் இருந்தது. அமெரிக்காவிற்கு ஒரளவு குற்ற உணர்சியை ஊட்டியது என்பது என் அனுமானம். ஆனால் அதற்கும் அணுகுண்டு அழைப்பிற்க்கும் சம்பந்தமில்லை.. அமெரிக்கா ஹோலோகாஸ்ட் நினைவின் மீது நிரைய நேரம் செலவிடுவதற்கு, 1930, 1940 களில் யூதர்களுக்கு ஒன்றும் செய்யாமல் இருந்ததால் ஏற்பட்ட குற்ற உணர்சி ஏதுவாக இருக்கலாம்.

விஜயராகவன்
==========================

17 ஆகஸ்ட் அப்டேட்

ஜயமோகன் என் கடிதத்தை பிரசுரித்து, சில பாயிண்டுகளை எழுப்பியுள்ளார்.

http://jeyamohan.in/?p=3547 யூதக்கொலைகள்:கடிதங்கள்

பாயிண்ட் 1 "அணுகுன்டை ஜெர்மனி மீது போடுவதற்கு அந்த அறிவியலாளர் ஒத்துக்கொள்ளவில்லை"

ஜெர்மனி மே 45 முதல் வாரத்தில் சரண் அடைந்து விட்டது, ஹிட்லர் ஏப்ரல் கடைசியில் தற்கொலை செய்து கொண்டான். அப்பொழுது, அமெரிக்க அணுகுண்டு ஆக்கம் முழுமை ஆகவில்லை. ஜூலை 16, 1945 அன்றுதான், முதல் பரிசோதனை அணுகுண்டு, அமெரிக்க மாகாணமான நியூ மெக்சிகோ பாலைவனத்தில் வெடிக்கப் பட்டது. அதனால் ஜெர்மனிமீது அணுகுண்டு வெடிப்பதற்கு வாய்ப்பே இல்லை.

பாயிண்ட் 2 "இனக்காழ்ப்பு ஜப்பான் மேல் போடப்பட்ட குன்டிலும் இருந்தது"

அமெரிக்க ராணுவ, அரசியல் தலைமையில் ஜப்பானியர் எதிரான இன துவேஷம் இருந்ததாகவும், அது அவர்கள் ராணுவ தீர்மானங்களை பாதித்தது என்பத்ற்கு ஒரு ஆதாரமும் இல்லை. ஜப்பானியர் மேல் சாதாரண அமெரிக்க துருப்புகள் ஓரளவு இனத் துவேஷத்தை வைத்திருந்தனர், அதனால் ஜப்பானியர் நோஞ்சான், எளிதாக அவரக்ளை தோற்கடிக்கலாம் என நினைத்தனர், ஆனால் ஜப்பானியரின் கட்டுப்பாட்டையும், வீரத்தையும், விடாப்பிடி மனப்பான்மையையும் நேரடியாக பார்த்து, அந்த மனப்பான்மையை மாற்றிக் கொண்டனர். அமெரிக்கா போரில் இழுக்கப் பட்டவுடன் (பேர்ல் ஹார்பர் தாக்குதல் பிறகு), பல ஆயிரம் ஜப்பானிய பூர்வீகம் கொண்ட அமெரிக்க பிரஜைகள் தடுப்பு முகாம்களில் வைக்கப் பட்டனர் , அதை ஓரளவு இனத் துவேஷம் என கூரலாம், ஆனால் அதே கதி ஜெர்மனிய- , இத்தாலிய பூர்வீகம் கொண்ட அமெரிக்க பிரஜைகளுக்கும் ஏற்பட்டது

http://en.wikipedia.org/wiki/Internment_of_Italian_Americans
http://en.wikipedia.org/wiki/German_American_internment
http://en.wikipedia.org/wiki/Japanese_American_internment

ஜப்பான் மீதான குண்டு தீர்மானம், ராணுவ நடவடிக்கை அடிப்படையில் தான் எடுக்கப்பட்டது, இன அடிப்படையில் அல்ல என்றுதான் பரவலாக நம்பப் படுகிரது. இனத்துவேஷம் இருந்தது என்றால், அது அரசியல் மேடைகளிலும், அதிகாரிகள் ஆவணங்களிலும், அரசியல் கருத்தாக்கங்களிலும் இருந்தாக வேண்டும்.

பாயிண்ட் 3 "நான் கேட்பது அமெரிக்காவின் ராட்சத ஊடகம் யூத அழிவுக்கு மட்டும் அளிக்கும் அபரிமிதமான முக்கியத்துவத்தின் நோக்கம் குறித்த ஐயமே. "

முதல் கட்டுரையில் அதைப்பற்றி சொல்லியாகிவிட்டது

4 comments:

dondu(#11168674346665545885) said...

நல்ல பாயிண்டுகள் தந்துள்ளீர்கள். ஜெயமோகன் போகிற போக்கில் குறிப்பிட்ட டேவிட் இர்விங் பற்றி இங்கு பார்க்கலாம்.
http://en.wikipedia.org/wiki/David_Irving

இர்விங் தனது ஹோலோகாஸ்ட் எதிர்ப்பு வாதங்களை வைத்த போது ஒன்று கேட்டார், ஹிட்லர் எங்கேனும் நேரடியாக யூத ஒழிப்பு ஆர்டர்களில் கையெழுத்து போட்டாரா என்று அசட்டுத்தனமாக.

அவர் வாதங்களுக்கு மரண அடி பதிலாக ஜெர்மன் பத்திரிகை Der Spiegel பல இதழ்களில் தந்தது. அவற்றை நான் அக்காலக் கட்டங்களில் ஜெர்மன் நூலகத்தில் வைத்து படித்துள்ளேன்.

ஜெயமோகன் ஹிரோஷிமா பற்றி பேசுவது அவர் உரிமை. அதற்காக ஹோலோகாஸ்டை ஏன் இழுக்க வேண்டும்? ஆனால் அதுவும் அவர் உரிமை என விட்டுவிடுவதை தவிர வேறு வழியில்லை. அதே சமயம் அவருக்கு நீங்கள் எழுதியதும் சரியே.

நானும் எழுத நினைத்தேன். ஆனால் அப்படி எழுதும்போது என்னால் எனது கோபத்தை கண்ட்ரோல் செய்திருக்க முடியும் எனத் தோன்றவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கிருஷ்ணமூர்த்தி said...

உங்களுடைய பதிவுகளைப் படித்துப் பார்த்தேன். நன்றாக படித்து,சிந்தித்து எழுதியிருக்கிறீர்கள் என்பது தெரிகிறது.அதே நேரம் ஒரு முக்கியமான குறை இருப்பதையும் சொல்லியாக வேண்டும்.

இரண்டாவது உலகப்போரின் ஆரம்ப நாட்களில் அமெரிக்கா நேரடியாக யுத்தத்தில் சம்பந்தப்படவில்லை. ஆனால் மறைமுகமாக இரண்டுபக்கமும் உறவாடி, தன்னுடைய சுய நலன்களைப் பாதுகாத்துக் கொண்டது.

ஜெர்மானியத் தொழிற்சாலைகளில் அமெரிக்க முதலீடு இருந்தது, கூட்டும் இருந்தது.

யூதர்களை கொன்று ஒழிக்கிற ஹிட்லரின் வெறிக்கு ஆரம்ப நாட்களில் எதிராக இல்லாமல் இருந்தது, அமெரிக்கர்களுக்குக் குற்ற உணர்வாக இன்றைக்கும் இருக்கிறது என்பது தவறு. பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்ற கலையில் அமெரிக்கர்கள் கை தேர்ந்தவர்கள்.

இன்றைக்கு, அமெரிக்க அரசியலில் மட்டுமல்ல பல்வேறு துறைகளில் யூத இனத்தவரின் ஆதிக்கம் அளவுக்கு மீறியே இருக்கிறதென்பதையும் பார்க்க முடியும். இடம் கொடுத்தால் மடத்தையே பிடுங்குகிற இந்தக் குணம் தான் யூதர்களை வெறுக்கத் தூண்டுகோலாக இருந்தது, இருக்கிறது என்பதையும் மறந்து விடக் கூடாது.

ஒரு கை வீசி மட்டும் சத்தம் எழுவதில்லை!

வன்பாக்கம் விஜயராகவன் said...

டோண்டு சார்

தமிழ்நாட்டில் படித்தவர்களிடையே உலகப்போர் பற்றிய அறிவு குறைவு. உதாரணமாக மருதன் என்ற பத்திரக்கையாளர் உலகப்போர் பத்தி மடத்தனமாக எழுதினார், அதைப்பற்றிய அடிப்படை உண்மைகளும் , அடிப்படை தேதிகளும் அவரிடம் இல்லை. அதற்கு ஒரு பதில் எழுதினேன்

https://www.blogger.com/comment.g?blogID=971589147506208087&postID=8310586842585046734

ஜயமோகன் கட்டுரை மீது கோவப்படுவது பிரயோஜனமில்லை. ஜயமோகன் லெவல் ஹெடட் ஆள். தமிழ் நாட்டு அறிவு ஜீவிகளிடையே, வெளி உலகம் பற்றிய தகவல்கள் கம்மி, அவ்வளவுதான்.

வன்பாக்கம் விஜயராகவன் said...

கிருஷ்ணமூர்த்தி

இந்த கட்டுரையில் நான் பொதுவாக உலகப்போரில் அமெரிக்காவின் பங்கு பற்றி எழுதவில்லை.

அமெரிக்கா 1941 Policy of Neutrality ஐ கடைபிடித்தது,அதாவது ஜப்பான் அதை போரில் இழுக்கும் வரை. Policy of Neutrality ஐ கடைபிடித்தாலும், ஜப்பான் மீது பல ஏற்றுமதி-இரக்குமதி தடைகளை போட்டது, பொதுவாக இங்கிலாந்திற்கு சாதகமாக இருந்தது.

நான் இங்கே ஜயமோகன் எழுப்பின பாயிண்டுகளை விவாதித்தேனே தவிற, உலகப்போர் பற்றி அல்ல.