Thursday, August 06, 2009

20 நூற்றாண்டின் 2 மாபெரும் கண்டுபிடிப்புகள்


இந்த இரண்டு கண்டுபிடிப்புகளும் மனித வர்கத்தை மிகப் பெரிய அளவில் பாதித்துள்ளன.

அவை அணுகுண்டும், பெண்கள் கருத்தடை மாத்திரையும் ஆகும்.

ஒன்று அணுகுண்டு. இன்று முதல் அணுகுண்டு பிரயோகத்தின் 64 ஆண்டு நிறைவு , நினைவு. ஹிரோஷிமா-நாகசாகி அணுகுண்டு அழிப்பை பற்றி நேத்தியே ஒரு கட்டுரை போட்டாய் விட்டது. அதனால் யுத்தம் நாடுகளுக்கிடையே இயல்பு, அதை அப்படியே நடக்க விட வேண்டும் என மனப் பான்மை அகன்றது. இப்பொழுது உலகத்தின் 8-9 நாடுகளுக்கிடையே 15,000 அணுகுண்டுகள் இருக்கலாம். அமெரிக்க-சோவியத் பனிப்போர் முடிந்தது, அதனால் மானுடத்தின் ஒரு பெரிய அழிப்பு பயம் நீங்கிற்று.
இப்பொழுது என்ன பயம் என்றால், அல்-கைதா போன்ற பயங்கரவாதி குழுக்கள், அணுகுண்டுகளை திருடி எங்கேயாவது வெடிக்கலாம் என்பது. அல்லது வட கொரியா போன்ற உலக நியதிகளை அலட்சியம் செய்யும் நாடுகள் செய்யலாம் என்பது. அல்லது இரான் மத வெறியில் இஸ்ரேலின் போட முயற்சிக்கலாம் என்பது. இந்த அணு வெடிப்பு பயங்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்

1. பாகிஸ்தான் கையில் பல அணுகுண்டுகள் இருக்கின்றன. பாகிஸ்தான் ஸ்திரமற்ற நாடு. அது `தோல்வியான நாடு` failed state என்பதின் அருகில் உள்ளது. பாகிஸ்தான் சிவிலியன் அரசு, பாகிஸ்தானிய ராணுவம், ராணுவத்தின் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ போன்ற அதிகார மையங்கள் ஒன்றாக சீராக இல்லை , ஒன்றுக்கொன்று முரண்பாடாக செயல்படுகிறன , வலது கை செய்வது இடது கைக்கு தெரிவதில்லை.. ஐ.எஸ்.ஐ.யின் ஆதரவினால் வந்ததே தலிபான் போன்ற குழுக்கள். அவை இன்னும் தலிபான்களூக்கு ரகசியமாக உதவி செய்வதாக உலக அரசாங்களால் நம்பப் படுகிரது. தலிபன், லஷ்கர் தொய்பா போன்ற இஸ்லாமிய குழுக்களுக்கு `ஆன்மீக` மற்றும் கட்டமைப்பு தலைவன் அல்-கைதா. அல்-கைதா பாகிஸ்தான் ராணுவத்தில் பல அளவில் ஊடுருவியுள்ளது. அதனால், பாகிஸ்தானின் அணு குண்டுகளை , அது களவாட வாய்ப்புகள் உள்ளன.

2. சோவியத் யூனியன் குலைந்த போது, அதன் அணுகுண்டு கிடங்குகளும், ஆய்வு மையங்களும் பல நாடுகளில் இருந்தன. யுக்ரைன், பேலோரஷ்ய, கசக்ஸ்தான், ரஷ்யா போன்றவை 1991ல் தனி நாடுகளாக போனபோது, அவற்றின் நிர்வாக கட்டுப்பாடு குலைந்தது, ஏழ்மை அதிகமாகியது. ஊழல் பரவியது. அணு குண்டு விஞ்ஞானிகள் வருமையில் தள்ளப்பட்டனர். ராணுவ அதிகாரிகள் பெரும் அளவு ஊழலில் ஈடுபட்டனர். அரசாங்க அதிகாரிகளும் ஊழலில் திளைத்தனர். அதனால் சர்வதேச பிளேக் மார்கெடுகளில் அணு குண்டு சம்பந்தமான பொருள்களும், திறமைகளும் அகப்பட ஆரம்பித்தன. 5, 6 வருடங்களாக அந்த நாடுகளில் அரசும், அணு நிர்வாகமும் ஓரளவு சீர் பெற்று விட்டது. அதனால் ஊழல்மிக்க, நிர்வாகம் குலைந்த முன்னாள் சோவியத் குடியசுருகள் ஓரளவு சுதாரித்து கொண்டாலும், அங்கிருந்து வரும் அணு த்ரெட் இன்னும் முழுமையாக போகவில்லை.

3. ஈரன் அரசியல் தலைவர்களுக்கு இஸ்ரேல் மேல் தீராத வெறுப்பும், காழ்ப்பும்.. சில தடவை `இஸ்ரேலை புவியிலிருந்து களைப்போம்` , எனக் கூட சூளுரை விட்டிருக்கின்றனர். இப்போது அந்த பைத்தியக்காரத்தனமான வீராப்பு குறைந்துள்ளது. ஆனால் எப்போது விபரீத எண்னங்கள் திரும்பி, இஸ்ரேலின் மீது `மரண அடி` கொடுக்கும் முயற்சி தொடங்கும் என சொல்ல முடியாது. இஸ்ரேலும் ரகசியமாக இரான் மீது உளவு செய்கிரது. இரான் தன்னை தாக்கும் போல் தோன்றினால், இரானின் அணு ஆய்வு , அணு ஏவுகணை தளங்களை அதிரடி குண்டடித்து தாக்க ஒரு விநாடியும் தயங்காது.

4. பயங்கர வாதிகள் அணுகுண்டை கடத்தாமல், மற்றொரு விதத்தில் உலக நாடுகள் மீது தாக்க முடியும். உதாரணமாக , ஒரு தற்கொலை விமானத்தை அணுசக்தி நிலையத்தின் மீது செலுத்தினால், அது பெரும் சேதத்தை ஏற்படுத்துமல்லாது, பெரும் கதிரியக்கத்தையும் தொடங்கும். கட்டுப்படுத்த முடியாத கதிரியக்கங்கள் பல நூறு மைல்களுக்கு சுற்றுப் புரத்தில் மரணத்தையும், ஊனங்களையும் உண்டு பண்ணும்.

அணுகுண்டு, அணுசக்தி வந்ததிலில் இருந்து மனித வர்கம் இப்படிப்பட்ட தாக்குதல்களையும், பீதிகளையும் எதிர்ப்பார்க்கிரது


சரி, 20 நூற்றாண்டின் இரண்டாவது மாபெரும், புரட்சிகரமான கண்டுபிடிப்பிற்கு வருவோம். அது கருத்தடை முறைகள்., முக்கியமாக ஆண்களின் கண்டோமும், பெண்களுக்கு வாயால் சாப்பிடும் கருத்தடை மாத்திரையும்.. இந்த இரு கருத்தடை முறைகளுக்கு முன், மனித சரித்திரம் முழுவதும் பாலுறவும் , குழந்தை பெருவதும் பிரிக்க முடியாமல் இருந்தது. கருத்தடை கண்டுபிடிப்புகளால், பெண்கள் எவ்வளவு குழந்த வேண்டும் திட்டமிடலாம். ஆண், பெண் இருவரும் செக்ஸை, குழந்தை பிறப்பு வாய்ப்பு இல்லாமல் அனுபவிக்கலாம். அப்படிப்பட்ட மனப்பான்மைதான், 1960ல் மேற்கத்திய நாடுகளில் செக்ஸ் புரட்சிக்கு காரணமாக இருந்தது. இந்திய, சீன போல நாடுகளில் குடும்பக் கட்டுபாடு போட முடிந்தது. அப்புரட்சி மனப்பான்மை மற்ற நாடுகளுக்கும் பரவுகின்றது.

1 comment:

VarahaMihira Gopu said...

Antibiotics, artificial fertilizer, insulin, electronics, radio, television, computers, airplanes, cinema, plastics, are some other technologies of the 20th century that have had tremendous impact. Interesting that you picked only nuclear weapons and contraceptives

The social impact of contraceptives is often underestimated, true.