Saturday, February 21, 2009

திராவிட சான்று

ஜனவரியில் மெட்ராஸ் போனபோது, புக் ஃபேர் போனேன். நிறைய புத்தகங்கள் வாங்கணும் என்ற எண்ணத்தில்தான் போனேன். ஆனால் அங்கு 1 மணி நேரம் தான் கிடைத்தது. அங்கு எல்லா கடைக்கும் போகணும் என்றால், 5 மணி நேரம் வேண்டும். அதனால் 4 புத்தகங்கள் தான் வாங்க முடிந்தது.அவை

திராவிட் சான்று- தாமஸ் ட்ரவுட்மன்

தமிழவன் கட்டுரைகள் 1 - இருபதாம் நூற்றாண்டு கவிதை

இந்திய தத்துவ இயல் - தேவிபிரசாத் சட்டோபாத்யாயா

தமிழ்நடை கையேடு


இன்னும் சில புத்தகங்களையும் வாங்கி இருக்கலாம்; ஆனால் டைமும் இல்லை, இங்கிலாநதுக்கு தூக்கி வரணும்ன, ப்ளேன்ல, நிறைய அதிக லக்கேஜ் கட்டணம் கொடுக்கணும். உதாரணமாக, மெட்ராஸ் யூனிவெர்சிடி கடையில், தமிழ் லெக்சிகான் 10 பகுதியில் கிடைக்கிறது. விலை 600 ரூபாய்தான். ஆனால் அதைத் தூக்கிக் கொண்டு போனால், என் பெட்டியில் இடமும் இல்லை, அப்படி கொண்டு போனாலும், எக்ஸஸ் லகேஜ் சார்ஜ், அதைவிட அதிகம் ஆகிவிடும். தமிழில் சிந்தனை செய்பவர்களுக்கு, மெட்ராஸ் யூனெவெர்சிடி தமிழ் லெக்சிகான் இன்றி அமையாதது. அதை இண்டெர்நெட்டில் பார்த்தாலும், கையில் ஒரு காபி வேண்டும்.

நானும், மனைவியும் உள்ளே போன உடன், வலது பக்கம் கடைசி, அதாவது முதலாவது கடையிலிருந்து ஆரம்பிக்க போனேன். அதன் பெயர் கீழைக்காற்று வெளியீட்டகம். அது ஒரு தீவிர லெஃப்டிஸ்ட், கம்யூனிஸ்ட் பதிப்பகம் போல இருந்தது. அந்த கடையில் வாங்கினது ’திராவிட சான்று’.
திராவிட சான்றை ஆங்கில மூலத்தில் வாங்கணும் என ப்ளான் செய்துருந்தேன். ஆனால் இந்த தமிழாக்கம் பார்த்த உடனே, இதுவே போதும் என தோன்றி விட்டது. ட்ரௌட்மன் ஆங்கில எடிஷன் போடுவத்ற்கு முன்னாடியே, அதை தமிழ்ல் மொழி பெயர்த்து பப்ளிஷ் செய்வதற்கு வேங்கடாசலபதி என்பவர் அனுமதி வாங்கி, ரா.சுந்தரம் என்ற மொழிபெயர்ப்பாளரை வைத்து பப்ளிஷ் செய்து விட்டார். சபாஷ் வேங்கடாசலபதி. இப்படித்தான் முக்கியமான அறிவியல் சம்பந்தப்பட்ட புத்தகங்களை கொண்டு வரவேண்டும்.

சரி, இப்போ திராவிட சான்று. இதன் கதாநாயகன் ஃப்ரான்சிஸ் ஒய்ட் எல்லிஸ் (1777-1819).எல்லிஸ் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். 1797ல் கிழக்கிந்திய கம்பெபியில் 5 பௌண்ட் வருட சம்பளத்தில் சேர்ந்து, 1798ல் சென்னை வந்து, வருவாய்துறையில் வேலை செய்ய ஆரம்பித்தார். சென்னை வரும் முன்ன்றே, ஐரோப்பிய செவ்வியல் மொழிகளிலும், கணிதத்திலும் தேர்ச்சி பெற்றீருந்தார். தன் வாழ்நாட்களை முக்கியமாக சென்னையில் கழித்தார். அலுவலக பாலிடிச்ஸ் காரணமாக இடையில் 3 வருடம் மசூலிபட்டணத்திற்கு வேலை மாற்றம் செய்யப் பட்டார். இந்தியாவில் இருந்த போது, தென்னிந்திய மொழிகளையும், சமஸ்கிருதத்தையும் நன்றாக கற்றார்.


அப்போது கம்பெனி நிர்வாகிகளான வில்லியம்ஸ் ஜோன்ஸ் போன்றோர் கல்கத்தாவில் இந்திய மொழிகளிலும் இலக்கியங்களிலும் தேர்ச்சி பெற்று, புது மொழியியல் கருத்துகளை உண்டுபண்ணி, பிரசித்தமாயினர். எல்லிசும், லெய்டன், எர்ஸ்கைன் போன்ற மொழி, சரித்திரங்களில் ஆர்வம் கொண்ட கம்பெனி நிர்வாகிகளிடம் நட்பு வைத்து, கருத்து பரிமாரினார்.அதே சமயம் தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலிய மொழிகளுக்கு இந்தியகளிடம் கற்றுக் கொண்டு மொழியியல் கருத்துக்களை அவர்களிடம் விவாதித்தார். தென்னிந்திய மொழிகளின் வினை சொற்களை பட்டியல் போட்டு ஆராய்சி செய்த ஒப்பிலக்கணத்தின் முன்னோடி எல்லிசு. எல்லிசு தென்னிந்திய மொழிகளை படிக்கும் வரை, கல்கத்தா ஆசிய கழக குழுவினர், சமஸ்கிருதம்தான் இந்தியாவின், தென்னிந்தியா உள்பட, எல்லா மொழிகளின் ஊற்றுக் கண் என நம்பினர். எல்லிசு தமிழ், தெலுகு, கன்னட மொழிகளின் பொது சொல்வேர்களை பார்த்து விட்டு இவை சமஸ்கிருதத்துடன் சம்பந்தம் இல்லவை என சொன்னார்.அவர் கருத்து பரிமாரிக்கொண்ட முக்கியமான இந்தியர்கள்: சங்கரைய்யா, பட்டாபிராம சாஸ்திரி, மமுடி வெங்கையா, உதயகிரி வெங்கட நாராயணா,சிதம்பர வாத்தியார் (தமிழ் வாத்யார்) போன்றோர்.


1812ல் எல்லிஸ், செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆங்கிலேயெர்கள் தென்னிந்திய, சமஸ்கிருத மொழிகளில் தேர்ச்சி பெருவதற்கு ஒரு காலேஜை நிறுவினார். அவர் எண்ணம் என்னவென்றால் கம்பெனி நிர்வாகத்தினர் தென்னிய மொழிகளை ஒரு குடும்பமாக பாவித்தால் தென்னிந்தியாவில் எங்கு சென்றாலும் சுலபமாக வேலை செய்யலாம் என்பது. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு பிரதான இந்திய ஆசிரியர் நியமிக்கப் பட்டனர். மேலும் அந்த காலேஜ் தென்னிந்திய மொழிகளில் ஓலைகளை சேகரித்து இலக்கியங்களையும், அகராதிகளையும் பிரசுரிக்க முயன்ரது. பொதுவாக எல்லிசுக்கு இந்திய மொழிகள் மீதும், இலக்கியம் மீதும், சரித்திரம் மீதும் ஒரு கணிந்த நட்பு இருந்தது. அதனால் இந்தியர்கள் மேல் இன துவேஷம் இருக்கவில்லை.மதம் பற்றி ஒன்றும் கருத்து கூராவிட்டாலும், அவர் நாத்திகர் என சில பாதிரியர்கள் கருதினர்.


எல்லிஸ் தன் அலுவலக வேலையில் மூழ்கி இருந்தாலும், மொழி, சரித்திரம் பற்றி நிரைய ஆராய்சி செய்து, விவரங்கள் சேகரித்து கட்டுரைகள் எழுதினாலும், 40 வயது வரை ஒன்றையும் பிரசுரிக்க போவதில்லை என நிச்ச்யித்திருந்தார்.தமது 41ம் வயதில். ராமநாதபுரத்தில் நோய்வாய் பட்டார். மருந்து சாப்பிடுவதாக நினைத்து, ஒரு விஷப் பொருளை சாப்பிட்டு விட்டார். சாப்பிட்டது மருந்து இல்லை, விஷம் என்று அவருக்கு தெரிந்து விட்டது. அதனால் அருகிவரும் மரணத்தின் உணர்வில் சில கடுதாசிகளையும், உயிலையும் எழுதி, மார்ச் 9, 1819ல் உயிர் நீத்தார்.

அவர் மரணத்திற்க்கு பிரகு, அவர் அருகில் இருந்தவர்கள் அவர் எழுதிய, பிரசுரிக்கப் பாடாத பிரதிகளின் மதிப்பையும், அறிவு தரத்தையும் உணரவில்லை. அதனால் அவர் எழுதிய பிரதிகள் பல குப்பையில் சேர்ந்தன அல்லது அடுப்புக்கு பயன்பட்டன. அப்படி இருந்தும் சில மானசீக நண்பர்களால் சில காலம் கழித்து அவர் எழுதிய சில பிரதிகள் சேகரிக்கப் பட்டன. அவர் நண்பர்களும், மற்ற ஆய்வாளர்களும் தங்கள் எழுத்தில், எல்லிசுக்கு தஙகள் அறிவு வளர்ச்சிக்கு நன்றி கூரினர்.


புத்தகம் தரும் மற்ற விஷயங்கள்


#எல்லிசுக்கு 40 வருடம் கழித்து எழுதிய ராபெர்ட் கால்ட்வெல், எல்லிசின் திராவிட சான்று கருத்துகளை உள்வாங்கி கொண்டாலும், அவருக்கு உரிய நன்றியையும்,அடையாளத்தையும் கொடுக்க வில்லை. அதனால் பலர் கால்டுவெல்தான் திராவிட மொழி குடும்பத்தை பற்றி எழுதினார் என நினைக்கிறனர். அது கால்ட்வெல்லின் குறுகிய மனப்பான்மையை காட்டுகிறது.

#எல்லிஸ், மற்றும் அவர் காலத்திய கம்பெனி நிர்வாகிகளிடையே இந்திய அறிவு மரபுகளைப் பற்றி நல்ல அபிப்ராயம் இருந்தது. 1845 வாக்குகளில், வந்த ஆங்கில அதிகாரிகளிடம் இந்த அபிப்ராயம் போய் விட்டது. அதன் முக்கிய உதாரனம் மெகாலே. மேகாலே 10000 இந்திய இலக்கியங்கள் அரை பத்தி ஐரோப்பிய அறிவிக்கு ஈடாகா என கருதி, இந்தியர் எல்லோரும் ஆங்கிலத்தில் தான் படிக்க வேண்டும் என பரிவு செய்தார். அது எல்லிசின் போக்கிற்கு நேர்மாறானது. உதாரணமாக, எல்லிஸ் மனு ஸ்ம்ரிதை சுட்டிக் காட்டி, அப்போது பரவலாக மேற்கத்தியர் இடையே நம்பப் பட்ட ‘கீழைநாட்டு கொடுங்கோன்மை’ ( ஓரியெண்டல் டெஸ்பாடிஸம்) இந்தியாவில் இல்லை என வாதித்தார் .

#தற்கால மேற்கத்திய மொழியியலில் சமஸ்கிருத, பிராகிருத, தமிழ் மொழி அறிவு மரபுகள் கலந்துள்ளன. அவை மேற்கத்தியரின் தனி சாதனை அல்ல.
எல்லிஸ் கல்கத்தா ஆங்கில கீழை தேசீய ஆய்வாளர்களுடன், முற்றிலும் மாறி, தென்னிந்திய மொழிகளின் தனித்துவத்தை அறிவு சமூகத்தில் நிருவினார்.

#தென்னிந்திய கலாசார வளர்ச்சியில் அவர் நிருவிய காலேஜ் மறைமுகமாக பெரும் பங்கு வகித்தது.தொடங்கிய காலம் முதல் 1850கள் வரை , தமிழகத்தில் இலக்கிய மீட்புப் பணியை இந்த காலேஜ் செய்து வந்தது. இந்த பணிகளின் சிகரம் உ.வே.சாமிநாத ஐயர். இப்பணிகளின் மரபை எல்லிசின் காலேஜ் வித்திட்டது. கல்லூரி ஆசிரியராக இருந்த முத்துசாமி பிள்ளை 1816ல், பல தமிழ் சுவடிகளை பல இடங்களிலிருந்து திரட்டினார். மற்றவர் தாண்டவராய முதலியார். இவர்கள் பழைய தமிழ் ஓலைகளை அச்சில் பிரசுரித்தனர்.கல்லூரியின் தெலுங்கு ஆசிரியர்கள் இதே பணீயை தெலுங்கிற்கு செய்தனர்.

#எல்லிஸ் திராவிட சான்றுகளை திரட்டினாலும், 20ம் நூற்றாண்டு “திராவிட” இயக்கங்கள் , அதன் நேர் வாரிசு என சொல்லமுடியாது. ஏனெனில் 100 ஆண்டு இடைவெளிக்கு பின் வந்தன, அந்த 100 ஆண்டுகளின் மாற்ரங்களால் வந்தன, அவை தமிழகத்திற்கு வெளீயே பரவ வில்லை. மேலும் “திராவிட” இயக்கங்கள் பிராமண துவேஷத்தை முக்கியமாக கொண்டிருந்தன. இவ்விடத்தில், எல்லிசின் ‘திராவிட சான்றிர்க்கு’ உதவி செய்த சகாக்கள் பட்டாபிராம சாஸ்திரி, வெங்கடநாராயணா, சங்கரையா போன்ற தெலுங்கு பிராமனர்கள் என குறிப்பிடத் தக்கது.