Saturday, October 24, 2009

இந்தியா சூபர் பவர் ஆகுமா

சமீபத்தில் என் காநா நாட்டு ந்ண்பன் ஒருவன் நீ இந்தியா சூபர் பவர் ஆகும் என நினைக்கிறாயா என கேட்டான். நான் ஒரு நிமிஷம் யோசித்து இல்லை என்றேன்.சூப்பர் பவர் ஆக வேண்டும் என்றால், அதற்கு ஒரு மனநிலையும், செயல் சுபாவங்களும் வேண்டும்.


சூபர் பவர் ஆக வேண்டும் என்றால், ஒரு நாடு


1. நல்ல ராணுவ திறமை வாய்ந்த நாடாக இருக்க வேண்டும்

2. நாட்டின் அரசாங்கம் ஸ்திர நிலையில் இருக்க வேண்டும்

3. உள்நாட்டு போர்கள் இருக்க கூடாது. மத்திய அரசாங்கம் தன் இறையாண்மையை தன் நாடு முழுவதும் வைத்திருக்க வேண்டும்.

4. உள் நாட்டு விவகாரங்களை தானே , தன் முயற்சிகளினால் சமாளிக்க வேண்டும்.

5. தன் எல்லைகளை தங்கு தடையின்றி நிரவாகிக்க வேண்டும்

6. தன் ‘பிரதேசத்தில்’ , அதாவது எல்லைகளுக்கு உடனே அருகில், தன் நலன்களை அமல் படுத்த ராணுவத்தை உடன்படுத்த தயாராக இருக்க வேண்டும்

7. தன் எல்லகளுக்குள் தன் அதிகாரத்தை தங்கு தடையின்றி செலுத்த வேண்டும்

8. தன் எல்லகளுக்கு வெளியே சந்தர்பம் வேண்டுமென்றால், தன் படைகளை அனுப்பி போரிட தயாராக இருக்க வேண்டும்

9. உலகின் பல பகுதிகளுக்கும் ராணுவ, அரசியல், பொருளாதார விவகாரங்களில் ஆர்வம் காட்டி உலகின் எந்த பகுதியிலும்,தன் எல்லையில் இருந்து எவ்வளவு தூரமானாலும், தன் அக்கரைகளை நிருவுவதற்கு தயாராக இருக்க வேண்டும்.

10. தன் ஆதிக்கத்தை நிருவ, என்ன உயிர் தியாகம் - தன் உயிரோ , மற்ற நாடுகள் உயிரோ - செய்ய அஞ்சக் கூடாது.

11. மற்ற நாடிகளிலும், உலகின் இதற பகுதிகளிலும் ராஉவ ரீதியாக தலையீடுவதற்கு ஏற்ற பொருளாதார, ராணுவ பலம் இருக்க வேண்டும்

இந்த பல வித கோணங்களில் பார்த்தால் , இந்திய ஆதிக்க வர்கங்களின் மனப்பான்மை , தன் ஆதிக்கத்தை நிருவ ராணுவத்தை பயன்படுத்துவதற்கு தயக்கமாக உள்ளது. அதனால் இந்திய சூபர் பவர் ஆவதற்கு மனோபலம் இல்லை என சொல்லலாம்.

இந்தியாவிற்கு சூபர் பவர் இலக்குகளோ, மனோபாவங்களோ இருந்தால், பாகிஸ்தான் காஷ்மீரில் தலையிடுவதற்கு , கடுமையாக அதை (பாகிஸ்தானை) தண்டிக்க ஆர்வம் இருக்க வேண்டும். அப்படி செய்யாமல், பாகிஸ்தானின் உள்ளீட்டு கொள்கைகளை 50 வருடங்களாக சகித்துக் கொண்டு வரிகுன்றது. அது வருங்கால சூபர் பவருக்கு அழகல்ல.
இந்தற்கு நேர் எதிராக தற்கால ரஷ்யாவை பார்க்க்லாம். ரஷ்ய போன ஆண்டில் ஜீயார்ஜியாவின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து, தனி நாடாக்கி அதை `அங்கீகாரம்` செய்தது. மற்ற நாடுகள் அதை கண்டித்தன. ஆனால் தன் நோக்கில் அது தன் `பிரதேசத்தில்` தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியது.இந்தியா 700 ஆண்டுகளாக , அந்நிய நாட்டவரின் ஆதிக்கத்தில் இருந்தது. மேலும், சமீப சரித்திரத்தில் காந்தியின் அஹிம்ஸை கொள்கைகளுக்கு செவி சாய்த்தது. அது சூபர் பவர் மனோபாவத்திற்க்கு உகந்ததல்ல.


விஜயராகவன்

Sunday, September 06, 2009

காஷ்மீர் எப்படி ஜிஹாதி வன்முறையில் சிக்கியது

சமீபத்தில் அரீஃப் ஜமால் என்ற பாகிஸ்தான ,ஆய்வாளர் எப்படி உலக ஜிகாதை, குறிப்பாக காஷ்மீர் ஜிகாதை தங்கள் சுயநலகொள்கைகளுக்காக பாகிஸ்தான ரகசிய ராணுவ உளவு துறையான ஐ.எஸ்.ஐ. ஊக்குவித்தும், ஆதரித்தும் ஊதி , பெருதாக்குகின்றனர் என்பதை விளக்கி Shadow War: The Untold Story of Jihad in Kashmir (Hardcover) by Arif Jamal, Melville House (May 19, 2009). என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

அவர் பல வருடங்களாக நூத்துக்கணக்கான ஜிகாதிகளுடன் பேசி, தன் தீர்வுகளை முன்னிட்டுள்ளார். எப்படி அமெரிக்கா ஐந்து லக்ஷம் ஜிஹாதி படையை தயாராக்கியது; எப்படி அமெரிக்க சி.ஐ.ஏ,வின் பணம் காஷ்மீர் ஜிஹாதிகளின் ஆதரவாக முடிந்தது, எப்படி காஷ்மீர் ஜிஹாத் , அஃப்கானிஸ்தானின் தீராத போர்களுக்கும், உலக ஜிஹாதிற்க்கும் தீவிர உறவு உள்ளது என்பதை இப்புத்தகம் விவரிக்கின்றது.


அவருடைய நேர்காணலில் இருந்து சில பகுதிகள்:

காஷ்மீர் ஜிஹாதும், அஃப்கானிஸ்தான் ஜிகாதும் ஒரே பிரச்சினையின் இரு பக்கங்கள்

சுதந்திரத்திற்கு பின், பாகிஸ்தான் எப்படி இந்தியாவை தாக்கலாம் என திட்டமிட்டது; இந்தியா பாகிஸ்தானை விட பல மடங்கு பலம் பொருந்தியதால், நேர் யுத்ததை பாகிஸ்தான் ராணுவத் தலைமை விரும்பவில்லை. ஆதனால் இந்தியாவை உள்பூசலில் கவிழ்த்திட ஜிஹாத் பயன்படும் என பாகிஸ்தான் படையின் யுக்தியாளர் கர்னல் அக்பர் கான் 1950களில் திட்டமிட்டார்.

அதிலிருந்து, 1980 வரை, பாகிஸ்தானின் படை தளபதிகள் (காஷ்மீர) உள்ளூர் முஸ்லிம்களை ஜிஹாதிற்கு தூண்டிவிட்டு, அங்கு கொரில்லா யுத்தம் ஆரம்பிக்க பிரயத்னம் செய்தனர். 1980 பிரகு, நிஜ ஜிகாதை சோவியத்துகள் எதிராக அஃப்கானிஸ்த்னில் போரிட்டனர். பாகிஸ்தான் சோவியத் ராணுவம் எதிராக முழு அளவில் ஜிகாதிற்கு ஆதரவு கொடுத்தது. வெளிப்படையாக, அந்த ஜிகாதிற்கு ஆதரவை முழுமையாக நிராகரித்தது.. சோவியத் யூனியன் அப்கானிஸ்தனில் இருந்து வெளியே சென்றவுடந்தான், ஜிகாத் ஆதரவை வெளிப்படையாக ஒப்புக் கொண்டது.

பாகிஸ்தான் காஷ்மீரி கலகத்திற்கு 1989 முதல் தீவிரமக்கி, சோவியத்துகள் ஆப்கானிஸ்தனில் இருந்து வெளியேரியவுடன் பின்பும் முஜாஹிதீஙளை ஆதரித்தது. 9/11 அமெர்க்கா மீதான தாக்குதல் பின்பு கூட, அந்த முஜஹிதீன் ஆதரவை கடைப்பிடித்தது. ஒரு பக்கம் அமெரிக்கவுடன் பயங்கர வார எதிர்ப்பு போரில் சேர்ந்தது, மறுபக்கம் அப்கான் தலிபானையும், கஷ்மீர் ஜிகாதிகளையும் ரகசியமாக ஆதரித்தது.

கேள்வி: பாகிஸ்தானின் இந்த வருட ஸ்வாத் பள்ளத்தாகில் நடைபெற்ற தலிபான் எதிர்ப்பு யுத்தம் அமெரிக்கவின் கண்துடைப்பிற்க்கா?

போகப்போக அப்படித்தான் தெரிகின்ரது. பாகிஸ்தான் ராணுவம் தலிபான் தலைவர்களுக்கு தப்பிப்பதற்கு வேண்டிய நேரம் கொடுத்தது. அதனால் பயங்கரவாதி தலைவரக்ள் ஸ்வாத்தில் இருந்து மரைந்து, மற்றொரு இடத்தில் முளைத்து விட்டனர். ஸ்வாத் பள்ளத்தாக்கை நிசப்தமாக சூழ்ந்து கொண்டிருந்தால், எல்லா பயங்கர வாதியையும் பிடித்து இருக்கலாம், ஆனால் அப்படி செய்யவில்லை. ஸ்வாத் நவவடிக்கைகள் மிகப் பெரிய அகதிகள் பிரச்சினையை உண்டாக்கியதால், அந்த ராணுவ செயல்கள் உண்மையிலேயே நன்மைக்காகவா என்பது சந்தேகமாகா உள்ளது. பாகிஸ்தான் ராணுவம் தெரிந்தே இந்த அகதி பிரச்சினியை , இரட்டை வேடத்தின் ஒரு பகுதியாக ஆக்கினரா அல்லது பிழை மிக்க பயங்கரவாத ஒழிப்பு யுத்தியா என தெரியவில்லை.


ஸ்வாத்தின் யுத்திகர முக்கியத்துவம் என்னவென்றால், அது அஃப்கானிஸ்தானையும், காஷ்மீரையும் இணைக்கிரது. தலிபான் அதை தங்கள் வசம் கொண்டுவந்து விட்டால், இரண்டி ஜிகாத்துகளையும் இணைத்து, ஒரு தலைமையின் கீழ் கொண்டுவரலாம். அல்-கைதாவிற்கு இமய மலை அடிவாரத்தில், காஷ்மீரில் முகாம்கள் கிடைக்கும்.

முஷர்ரபின் அரசாங்கம் அல்-கைதாவின் பாகிஸ்தான் உருப்பினர்களான ஜைஷ்-ஏ-முஹொம்மத், ஹர்கத்-உல்-அன்சர் முதலியவைகளின் மீது, அவை ஆப்கானிஸ்தான் சேர்ந்தவை அல்ல என்ற பொய் காரனத்தால் , ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மௌலான மசூத் அசர், மௌலான ஃபஸ்லுர் ரஹ்மான் போன்ற பாகிஸ்தான தேவபந்த் ஜிஹாதிகள் , கஷ்மிர் ஜிஹாதிற்கும், அஃப்கானிஸ்தான் ஜிஹாதிற்கும் இணப்புப் பாலங்கள். இரு ஜிகாதுகளும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.

பாகிஸ்தானில் அல்-கைதா ஜைஷ்-எ-மொஹம்மத், ஹராகதுல் ஜிஹாதி இஸ்லாமி, ஹரகதுல் முஜாஹிதீன் போன்ற அமைப்புகளின் மூலம், அதிகார பூர்வ தடையை மீறி, செயல் படுகிரது. இந்த அமைப்புகள் காஷ்மீரில் ஜிஹாத் செய்வதால், அவைகளுக்கு பாகிஸ்தானில் தடை இல்லை. காஷ்மீரில் பயங்கரவதத்திற்கு ஆதரவு குன்றியவுடன், இவை `அரசாங்க கண்காணிப்பு பழங்குடியினர் பிரதேசம்` (FATA- Federally Administered Tribal Areas) உள்ளே என்று, அங்கிருந்து பாகிஸ்தான் தேசத்திற்க்கு எதிராக யுத்தம் செய்ய ஆரம்பித்தனர். காஷ்மீர் பள்ளத்தாக்குதலில் இருந்து வரும் ஜிகாதிகள் சர்வதேச ஜிஹாதில் விருப்பம் இல்லாதவர்கள், அவர்களுக்கு இந்திய அரசாங்கம் கூட போர் புரிய வேண்டும் மட்டுமே. சர்வதேச ஜிகாதிற்கு ஆதரவு கொடுக்கும் ஒரே கஷ்மீர் அமைப்பு ஹிஜ்புல் முஜாஹிடீன்.

அல்-கைதா ஓரளவு பின்னணியில் சென்று விட்டது. தற்சமய ஜிஹாத் பாகிஸ்தானை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதே தவிற, மேற்கு உலகம் எதிராக அல்ல. இந்த புதிய ஜிஹாதின் நோக்கம் இந்தியாவை தாக்குவதே ஆகும்

டன்சீம்-எ-தலிபாநெ-பாகிஸ்தான் - அதாவது பாகிஸ்தானிய தலிபான் பாகிஸ்த்ஹனில் குழப்பம் உண்டுபண்ணுவதற்கு சக்தி உள்ளது, ஆனால் அரசாங்கத்தின் மறைமுக ஆதரவு இல்லாமல், அவரக்ள் எந்த பகுதியையும் தங்கள் ஆதிக்கத்துள் கொண்டு வர முடியாது. கைபர் அரசாங்கம் முன்னால் முற்போக்காக இருந்தது, ஆனால் ஐ.எஸ்.ஐ, லஷ்கர்-எ-இஸ்லாம் என்ர ஜிகாதி அமைப்பை ஆதரித்து, அவர்களை ஆதிக்கம் செய்யத்தூண்டினர்.
பாகிஸ்தானில் ஜனநாயக அரசாங்கத்திற்கு எதிரான பிரசாரம், தலிபான் ஆதரவாளர்களிடம் இருந்து வருகிரது. ஏனெனில், தலிபான் ராணுவ அரசாங்கங்கள் கீழே ஆதிக்கத்தை அதிகரிக்க முடிகிரது.

பாகிஸ்தான் ராணுவம், காஷ்மீரில் சாதகமான தீர்ப்பு ஏற்படும் வரை, அங்கே ஜிகாதை கைவிடாது, இஸ்லாமிய தீவிரவதம், பாகிஸ்தான் தேசத்தின் ஆதீனத்தை தேய்த்து வருகிரது.. பல இடங்களில் தலிபன் ஷரியாவை அமலாக்குகிரது, அது பாகிஸ்தானின் இறையாண்மையை குறைப்பதல்லவா? உண்மையில் பாகிஸ்தான அரசாங்கத்தின் ஆதீனம் நாளுக்கு நாள் அழிந்து போகின்ரது. எப்போது தலிபான் லாகூரில் விடியோ கடைகளுக்கு மிரட்டல் கடிதம் அனுப்புகின்றனரோ, அப்போது, வணிகர்கள் தலிபானை தாஜா செய்வதற்கு , `இஸ்லாம் எதிரி` யான விடியோக்களை பொது இடத்தில் குவித்து , தீ வைக்கின்றனர். அது பாகிஸ்தானின் இறையாண்மையை குறைப்பதாகும். தலிபான் மிரட்டலில், வங்கி ஊழியர்கள் `மேற்கத்திய` பாண்டு-ஷர்டுகளை உடுப்பதை தவிற்கின்றனர், அது பாகிஸ்தானின் இறையாண்மையை குறைப்பதல்லவா? பாகிஸ்தானின் சில பகுதிகளில் ஹிந்து-சீக்கியர் போன்ற சிறுபானமையினரை `ஜிசியா` என்ற இஸ்லாமிய தலை வரிக்கு உள்படுத்தியுள்லனர், அது பாகிஸ்தானின் இறையாண்மை மேல் தாக்குதல் ஆகும்.

ஐ.ஏஸ்.ஐ.யின் இந்தியாவில், குறிப்பாக காஷ்மீரில் கலகங்களை தூண்டி விடுவதும், அவர்களுக்கு ஆய்த மற்றும் இதர ஆதரவுகளை செய்வது உலகறிந்த விஷயம். உதாரணமாக `அமெரிக்க விஞ்ஞானிகள் சங்கம்` (Federation of American Scientists) 1997 லேயே தன் உலக ரிபோர்டுகளில் இதைப் பற்றி கவலை தெரிவித்தது.http://www.fas.org/irp/world/pakistan/isi/

”ஐ.எஸ்.ஐ. ரகசியமாக காஷ்மீரி முஜாஹிதீன் குழுக்களுக்கு இந்திய அரசாங்கம் எதிராக கிளர்சி செய்ய உதவி கொடுத்துக் கொண்டு வருகின்றது............................ ஐ.எஸ்.ஐ. ஒவ்வொரு மாதமும் 2.4 கோடி ரூபய்களை ஜம்மு-காஷ்மீர் கிளர்சிகளுக்கு செலவழிக்கிரது. எல்லா கிளர்சி குழுக்களும் ஆயுதமும், பயிற்சியும் பாகிஸ்த்ஹனிடமிருந்து பெற்றாலும், சில குழுக்கள் பாகிஸ்தன் ஐ.எஸ்.ஐ. அதிமிகுந்த ஆதரவு கொடுக்கப்படுகிரன.. 6 பெரிய ஆயுத அமைப்புகளும் , பல சிறிய அமைப்புகளும் காஷ்மீர் ஜிகாதில் பங்கு எடுக்கின்றன.

அங்கு மிகப்பழைய , மிகப்பெரிய விடுதலை இயக்கமான ஜம்மு-காஷ்மிர் லிபெராஷன் ஃப்ரண்ட் Jammu and Kashmir Liberation Front (JKLF) 1994ல், போர்நிருத்தம் செய்தது. பாகிஸ்தான் ஆதரவிற்கு மிக ஆதிக்கமானது ஹெஸ்ப்-உல்-முஜாஹிதீன். மற்ற ஆயுத குழுக்கள் ஹராகத்-உல்-அன்சர் பெரும்பான்மையாக பாகிஸ்தானியரை கொண்டது. அல்-உமர், அல்-பர்க், ஜைஷ்-எ-முஹம்மது, லஷ்கர்-எ-தொய்யாபா போன்ற அமைப்புகளும் பாகிஸ்தானியர்களாலும், அஃப்கானிகளாலும் ஆனவை. இந்த ஆயுத ஜிஹாதிகள் ஆஃப்கானிஸ்தானில் பயிற்சி பெற்றனர்; அங்கு பயிற்சி முடியாமல் போனவே, காஷ்மீருக்குள் முகாம்கள் வைத்தனர்.

ஐ.எஸ்.ஐ. மேலும் இந்தியாவின் வடகிழக்கே, பாங்கிளாதேசத்தின் எல்லை அருகே, பல கலக அமைப்புகளுக்கு பயிற்சி முகாம்கள் வைத்துள்ளது”

Thursday, September 03, 2009

ஒரு பாகிஸ்தான் இதழுக்கு கடிதம்

பாகிஸ்தானிலிருந்து வரும் `டெய்லி டைம்ஸ்` என்ற சஞ்சிகை , பல பார்வைகளுக்கு இடம் கொடுக்கின்றனர், அதனால் அவர்களுக்கு எழுதிய கடிதங்கள் சில பிரசுரம் செய்துள்ளனர்.

இன்று ஒருவர் பாகிஸ்தான் முன்னால் சர்வாதிகாரி முஷரஃபையும், ஆங்கில 17ம் நூத்தாண்டு தலைவர் க்ராம்வெல்லையும் இணைத்து ஒரு கட்டுரை எழுதினார். முஷரஃபையும் க்ராம்வெல்லையும் ( http://en.wikipedia.org/wiki/Oliver_Cromwell )ஒப்பிடுவது சாக்கடையையும் காவேரி நதியையும் ஒப்பிடுவது போலாகும் என்ற தொனியில் ஒரு கடிதம் எழுதினேன்.

http://www.dailytimes.com.pk/default.asp?page=2009\09\03\story_3-9-2009_pg3_3


Dear Editor

analysis: Cromwell and Musharraf —Shahid Hamid

Comparing Cromwell and Musharraf is a big joke. Musharraf is typical Pakistani Military Dictator whose presense has disgraced Pakistan through much of it's history; and there is every chance that it can happen again. In other words Musharraf is not an exception in Pakistan. Musharraf is also a typical third world military dictator who number in hundreds in the 60 years.

The military records of Musharraf has nothing much to show itself. The only victory of Musharraf is against - democratic Pakistan - by the overthrowing an elected government. In contrast, Cromwell was a great commander on the battlefield . He was great strategist, tactician and made the New Model Army in which the old style hierarchy was greatly reduced, command structure was different. This New Model Army was was also revolutionary in which there were 'politcial commissars' who made sure Royalist and Catholic symapthies were eradicated. The labours of Cromwell made sure that Kings and Queens of England after him never aspired for Absolute Monarchy. Influence of Cromwell is great on the 21st century Britain

The Musharraf military record is bleak. Musharraf was always underhand and devious. Kargil was organized by him; in a characteristic move, the cannon fodder was not Pakistani regular troops , but Jihadi groups and (Pakistani Occu[ied) Kashmiri troops; the fall guy for this disaster was the Civilian government of Pakistan. This was also the pretext for overthrowing the civilian government. Musharraf's foray in Afghanistan is equally disastrous. His involvement in Afghanistan was underhand , devious, counterproductive and disastrous from the beginning to the end. After supporting different Pushtoon Jihadi groups like Hekmatyar, he settled on Taliban as the best bet for proxy rule on Afghanistan. When that also went out of control when Al-Queda became dominant in Afghanistan, he turned against Taliban by siding with America. In short, Musharraf is a disaster for Pakistan, Afghanistan, Kashmiris, Jihadis, Taliban, Islam and everybody. He is also a cause of futile bloodletting in the Indian subcontinent. In a way, he is also responsible for bring in NATO and American presence in the South Asia region and history will not forgive him for that.

In whatever way, the present day Pakistan deals with him, comparing him with Cromwell is a joke

Regards

V.C.Vijayaraghavan

London, UK

Sunday, August 23, 2009

மோலோடாவ் - ரிப்பண்ட்ராப் ஒப்பந்தம் - 70 ஆண்டுகள் பிறகு

எழுபது ஆண்டுகளுக்கு முன் ஆகஸ்ட் 23, 1939 அன்று , மாஸ்கோவில் சோவியத் வெளி விவகார மந்திரி வியஷெஸ்லேவ் மோலோடாவ், ஜெர்மானிய வெளி விவகார மந்திரி ஜொவாகிம் ஃபான் ரிப்பண்ட்ராப் இருவரும் சோவியத்-ஜெர்மன் பாதுகாப்பு ஒப்பந்தம் என்பதில் கையெழுத்து இட்டனர். அது உலகெங்கிலும் அதிர்சி அலைகளை அனுப்பியது.

http://en.wikipedia.org/wiki/Molotov%E2%80%93Ribbentrop_Pact

ஏன் அப்படி அதிர்சி? ஹிட்லரும், நாஜிக்களும் கம்யூனிசத்தை தாங்கள் அழிப்போம் என கங்கணம் கட்டிக் கொண்டிருந்தனர். அதற்கு மேல் சோவியத் யூனியனின் முக்கிய இனமான ஸ்லாவியரக்ள் `உப மனிதர்கள்` அதாவது மானுடத்தின் ஒரு படி கீழே என நாஜி பிரச்சாரம் பல காலமாக பரைசாற்றியது. இந்த இன மற்றும் அரசியல் அதீத காழ்ப்பு இணப்பு , நாஜிக்களை எப்பொழுதும் சோவியத் யூனியனுக்கு சாதகமாக செயல்பட வைக்காது என உலகம் நம்பியது. அதே சமயம் சோவியத் கம்யூனிஸ்ட் பிரச்சாரத்திலும் ஹிட்லரும், நாஜிக்களும் மிகவும் கீழ்தரமானர்கள் என படிமம் இருந்தது. ஆனால் சோவியத் பிரச்சாரம் எப்பொழுதுமே அப்படி இல்லை. 1935 வரை அதாவது ஹிட்லர் பதவிக்கு வந்து 2 ஆண்டுகள் வரை, சோவியத் யூனுனும், ஸ்டாலினும் நாஜிக்கள் பூர்ஷ்வாக்களின், முதலாளித்துவத்தின் ஒரு தீவிரவாதப் பிறிவு, கம்யூனிஸ்டுகளின் முக்கிய எதிரி பூர்ஷ்வாக்களும், முதலாளிகளும் , அதற்கு பிரகுதான் நாஜிக்கள் என நம்பினர் 1935 பிரகு, ஸ்டாலின் தன் கருத்தை மாற்றிக் கொண்டு, நாஜிக்கள் தான் கம்யூனிசத்தின், உலக அமைதியின் முக்கிய எதிரி என நம்ப ஆரம்பித்தார். இரு நாடுகளுக்கு இடையே பயங்கர பிரசார யுத்தம் நடந்து ஒருவர் மற்றொருவரை உலகின் மிக கீழ்த்தரமான ஆட்கள் என்ற நிலமை இருந்தது.

அதனால் பாப்பும், கீரியுமாய் இருந்த இரு நாடுகளும் `பாதுகாப்பு ஒப்பந்ததை` கையெழுத்து இட்ட உடன் , எல்லோரும் தங்கள் கண்ணை பிசக்கி தான் காண்பது நிஜமாகவா என நினைத்தார்கள். அந்த ஒப்பந்தத்திற்கு சில வாரங்கள் முன்புதான் பிரெஞ்சு, பிரித்தானிய அரசாங்கங்கள் ஹிட்லரை எதிர்க்க, ஸ்டாலினுடன் கூட்டு சேரலாம் என நினைத்து ஒரு உயர் அதிகார குழுவை சோவியத் யூனியனுக்கு அனுப்பினர். அக்குழு கப்பலில் மெதுவாக பயணம் செய்து, சோவியத் யூனியனுடன் பேச்சு வார்த்தைகள் நடத்த தொடங்கியது. மேலை நாடுகளுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டுமெனில், ஸ்டாலின் ஒரு முக்கிய நிபந்தனையை போட்டார் - ஒப்பந்தம் சோவியத் யூனியனுக்கு போலந்து வழியாக சென்று ஜெர்மனியை தாக்க உரிமை கொடுக்க வேண்டும். அதற்கு மேலை நாடுகளால் உடனடியாக ஒப்புக் கொள்ள முடியவில்லை. ஆனால் பேச்சு வார்த்தைகளை முறிக்கவும் மனது வரவில்லை, அதனால் என்ன செய்வது என கையை பிசைந்து கொண்டிருந்தனர்.

இந்த மேலை நாடுகளின் தயக்கம், ஸ்டாலினின் அவநம்பிக்கையை வளர்த்தது, ஸ்டாலின் மேலை நாடுகளின் முக்கிய நோக்கம் எப்படியாவது ஹிட்லரை சோவியத் யூனியன் மீது திருப்பி, சோவியத் யூனியனை அழித்து தங்களை காப்பாற்றி கொள்ளலாம் என நினைத்தார். அதனால் உடனடியாக ஹிட்லருடன் ஒப்பந்தம் செய்து கொண்டால், ஹிட்லரின் போர் வெறி தாற்காலிகமாக தன் மேல் திரும்பாது, வேறெங்கேயாவது திரும்பும் என்பது. அதனால் ரகசியமாக ஹிட்லருடன் பேச்சு வார்த்தைகளை துவக்கினார். மேலை நாடுகளுக்கு இந்த ரகசிய பேச்சுகள் பற்றி தெரியாது. இந்த பின்னணியில் மோலோடாவ்-ரிப்பண்ட்ராப் ஒப்பந்தம், ஸ்டாலின் அவர்கள் பின் பக்கத்தில் இருந்து பார்த்து கைதட்ட , கையெழுத்து இடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில் ஒரு கொடிய பகுதி, `ரகசிய ஷரத்துகள்`. அதன் படி போலந்து நாட்டை இரு நாடுகளும் பாதியாக கைவசம் ஆக்கலாம், கிழக்கு ஐரோப்பாவில் பால்டிச் பிரதேசங்களில் சோவியத் யூனியன் ஆக்கிரமிக்கலாம் என்பது. இந்த கையெழுத்து இட்ட ஒரு வாரத்தில் , ஹிட்லர் போலந்தை தாக்கி இரண்டாம் உலகப் போர் துவங்கியது. ஹிட்லர் போலந்தின் மேற்கு பகுதியை கைப்பற்ற, இரு வாரங்களுக்கு பின் சோவியத் துருப்புகள் போலந்தை கிழக்கிலிருந்து தாக்கி, தன் கைவசம் கொண்டு வந்தனர். சில மாதங்களுக்குள் சோவியத் துருப்புகள் லிதுவேனியா, லாட்வியா, எஸ்டோனியா நாடுகளை ஆக்கிரமித்து கைவசம் கொண்டு வந்தனர். இதெல்லாம் இந்த ஒப்பந்தத்தினால் ஏற்பட்ட விளைவுகள். இந்த சோவியத் ஆக்கிரமிப்புகளால், இந்த நான்கு நாடுகளிலும் சோவியத் யூனியன் எதிராக தீராத காழ்ப்பு ஏற்பட்டது.


ஸ்டாலின் ஆதரவாளர்கள் இந்த சோவியத் யூனியன் செய்கையால், அது சோவியத் யூனியன் தரை மட்டத்தை பரப்பி, சோவியத் யூனியன் பாதுகாப்பு நிலைமையை சீர்செய்தது என கூருகின்ரனர். மேலும் ௨ வருடங்கள் கழித்து, ஜெர்மனி சோவியத் யூனியனை, தாக்கியபோது , அதன் யுத்த தயார் நிலைமை உயர்ந்தது எனவும் சொல்கின்ரனர். அது உண்மையா?

நிச்சயாமக அது உண்மை இல்லை. இந்த ஒப்பந்தன் ஹிட்லருக்கு யுத்தத்தை மேற்கு திசையில் செய்ய சாவகாசம் கொடுத்தது. அதனால் ௨ வருடங்கள் கழித்து , சோவியத் யூனியன் மீது ஆக்கிரமிப்பு செய்யும் போது, ஹிட்லரின் பலம் பல மடங்கு அதிகரித்திருந்தது. மேலும் இந்த ஒப்பந்தம் ஸ்டாலினை, ஜெர்மனி தன்னை சீக்கிரம் தாக்காது என தூபமிட்டு ஒரு குருட்டு நம்பிக்கையில் வைத்தது; அதனால் ஜூன் 1941 முன் , ஹிட்லர் தாக்கப் போகிரான் என பல திசைகளிடம் இருந்து வந்த பல எச்சரிக்கைகளை `இது மேற்கு நாடுகள் பிரச்சாரம்` என உதாசீனம் செய்தான். அதன் விளைவு , ஹிட்லர் சோவியத்தை தாக்கும் போது, மன அளவில் சோவியத் துருப்புகள் தயாராக இல்லை. அதன் விளைவாக சோவியத் யூனியன் பெரும் அளவு சேதமாயிற்று.
சோவியத் யூனியன் இந்த ஒப்பந்தத்தின் ரகசிய ஷரத்துகளை கடைசி வரை தீவிரமாக மறுத்தது. 1988 தான் ரகசிய ஷரத்துகள் இருந்ததாக ஒத்துக் கொண்டது. மோலோடாவ்-ரிப்பண்ட்ராப் ஒப்பந்தம் 20ம் நூற்றாண்டின் அரசியல் ஒரு கீழ் கட்டத்தை அடைந்ததை தெளிவாக காட்டுகிரது.

26.8.09 கொசுரு

ரஹசிய ஷரத்துகளில் இன்னும் ஒன்று ஸ்டாலினின் நம்பத்தகாதவற்றை காண்பிக்கிறது. 1930 களில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த பின் நூத்துக் கணக்கான ஜெர்மானிய கம்யூனிஸ்டுகள் நாஜிக்களுடன் தெருக்களில் போரிட்டனர்; பலர் கொல்லப்பட்டனர், பலர் சிறையிடப்பட்டனர், பலர் குவிப்பு முகாம்களுக்கு அனுப்பப் பட்டு சித்திரவதைக்கு உள்ளாயினர். கம்யூணிஸ்ட் கட்சியே தடை செய்யப்பட்டது. அந்நிலையில் நூத்துக்கணக்கன கம்யூனிஸ்டுகள் சோவியத் யூனியனில் தஞ்சம் புகுந்தனர். ரகசிய ஷரத்துகள் படி , அந்த நாஜி பிடியில் இருந்து தப்பித்த கம்யூனிஸ்டுகளை ஸ்டாலின் ஜெர்மனிக்கு திருப்பி அனுப்ப வேண்டும். அதன் அனுசரணையாக, நூற்றுக்கனக்கன ஜெர்மன் கம்யூனிஸ்டுகள் சோவியத் யூனியனில் கைது செய்யப்பட்டு, நாஜி சிறைகளுக்கு திருப்பி அனுப்பப் பட்டர்கள், அவர்களுக்கு நிச்சய்மக சித்திரவதையும், சாவும்தான் கத்துக்கொண்டிருந்தது. இதை போல் அரசியல் துரோகத்தை 20 நூத்தாண்டு பார்க்கவில்லை.

Friday, August 21, 2009

ஜின்னா பற்றிய மெச்சக்கூடிய தலையங்கம்


இப்பொழுது ஜஸ்வந்த் சிங்க் ஜின்னாவைப் பற்றிய எழுதிய வாழ்க்கை வரலாரு பெரும் சர்சையை இந்தியாவில் உருவாக்கியுள்ளது. இதன் சம்பந்தமாக `தி ஹிந்து` , ஜின்னா செம்டம்பர் 13 , 1948அன்று வெளியிட்ட தலையங்கம் , மிகச்சிறந்த வாழ்க்கை குறியீடு என நினைக்கிறேன்.


http://beta.thehindu.com/opinion/op-ed/article6489.ece


இதன் தமிழாக்கம்ஜின்னாவின் திடீல் மரணம் பற்றிய செய்தி, இந்நாட்டில் பரந்த சோகத்துடன் எதிர்கொள்ளப் பட்டுள்ளது.. 12 மாதங்களுக்கு முன்புதான், காந்திஜிக்கு அடுத்ததாக, ஜின்னா துண்டிக்கப்படாத இந்தியாவின் பிரசித்தியான ஆளுமையாக திகழ்ந்தார். முஸ்லிம்கள் மட்டுமல்லாது, மற்றவர்களும் அவருடைய சீரிய குணங்களை பாராட்டினாலும், அதே சமயம் தன் குறிக்கோளை வெறியுடன் பின்பற்றுவதை தூற்றினர். 40 வருடங்களுக்கு மேலாக இந்திய பொது வாழ்க்கையில் ஈடுபட்டுபோதும், அதில் பாதி அளவு இந்திய தேசிய காங்கிரசின் சுதந்திர போரட்டத்தில் ஒன்றாகினார், அதனால் மேல் தட்டு மனப்பான்மையும், தனியாக இருத்தல் மனப்பான்மை கொண்டிருந்தாலும், மக்கள் இடையே பிரபலமானார். தன் கடைசி காலத்தில், பாகிஸ்தானின் சூத்திரதாரியாக மாறி, முஸ்லிம்களிடையே அதிகாரம் வைத்து, அவர் அரசியல் வெற்றிகளால் மக்கள் அவர்மீது குருட்டுத்தனமான அபிமானம் கொண்டது, சில நிதானமான, தெளிந்த அறிவுள்ள முஸ்லிம்களிடையே பெரும் ஏமாற்றத்தையும், கொள்கைகளின் விவேகத்தைப் பற்றிய சந்தேகத்தையும் கொடுத்தது. பழைய சாம்ராஜ்யங்கள் சீரழிந்த யுகத்தில், இந்த பாம்பே வக்கீல், ஒரு சாம்ராஜ்யம் உருவாக்க கனவு செய்தார்; மதசார்பின்மை பரவலாகி இருக்கும் காலத்தில், இந்த மத ஈடுபாடு அற்றவர், அந்த சாம்ராஜ்யம் இஸ்லாமிய சாம்ராஜ்யமாக இருக்க வேண்டும் என விரும்பினார். அக்கனவு சீக்கிரமே நனவாயிற்று, அதை அவரை சேர்த்து யாரும் எதிர்ப்பார்க்க்கவில்லை.

ஜின்னா ஒரு கூர்மையான வக்கீல். அவருடைய வெற்றிக்கு முக்கிய காரணம் அவர் எந்த சூழ்நிலை மாற்றங்களின் சாதக வாய்ப்புகளையும் உடனே கெட்டியாக பிடிப்பது. அவர் வலிமை ஒரு தீவிர சிந்திக்கப்பட்ட சித்தாந்தத்தில் இல்லை, பக்குவமான கொள்கைகளும் இல்லை; ஆனால் அவருடைய விடாப்பிடி தன்மை, யுக்தி தெளிவு, விவாத திறன் இவற்றை வெளி சூழல்களால் முக்கிய படிகளில் முந்தள்ளப்பட்ட மற்றவர்களால் சீராடப்பட்ட இலட்சியங்களை கைப்பற்றுதல் ஆகும். இதில் மகாத்மா காந்தியுடன் நேர் எதிராக மாறுபடுகிறார். 30 வருடங்கள் ஜின்னாவால் அரசியல் தலைவராக ஏற்க்கப்பட்ட மகாத்மா, எந்த மாறுபட்ட இக்கட்டான சூழல்களிலும் ஒரு நிலையான கொள்கைகளை கைப்பிடித்தார். பாகிஸ்தான் இக்பாலின் கனவாக தொடங்கி, ரஹமத் அலி, அவர் ஆங்கில நண்பர்களிடையே ஒரு சித்தாந்தத்தை பெற்றது. பிரித்தனின் 50 ஆண்டுகள் கடைப்பிடித்த துண்டித்து-அரசாளும் சாணக்கியத்தனம், மெதுவாக அந்த குறிக்கோளை நோக்கி சென்றது.


நாம் ஜின்னா பிரிடிஷர்களால் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட ஐரோப்பிய ஞானோதயத்தின் (European Enlightenment) வாரிசு என்பதை மறக்கக் கூடாது. ஜின்னா பிரித்தானிய வழி மக்களவை முறையில் நம்பிக்கை வைத்து, விவாத கலையில் மிக்க ஊக்கம் வைத்து, அதில் பெரும் நிபுணர் ஆனார். மிண்டோ-மார்லி சீர்திருத்த காலத்தில், காங்கிரஸில் இருந்து முஸ்லிம்களை துண்டிப்பதை முழு மனதுடன் எதிர்த்தார். பல காலம் முஸ்லிம் லீகை தவிற்த்தார். அதில் சேர்ந்தபோது, அதை ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கே பாடுபட்டு, மதத் துவேஷத்திற்கு எதிர்பு தெரிவித்தார். ஆனால் ஜின்னா பெரும் இலட்சிய ஆசை கொண்ட மனிதர். தன் ஆற்றலில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார், அது அரசியல் மற்றும் தொழிலில் வாழ்க்கை முதல் பகுதியிலேயே பெரும் வெற்றி கிட்டியதால், இன்னும் தன்னம்பிக்கை அதிகம் ஆயிற்று. மற்றவர்களுக்கு பக்க வாத்யம் செய்வதை முழுமையாக வெறுத்தார். அந்நாட்களில் காங்கிரஸ் தாதாபாய் நௌரோஜி, மேதா, கோகலே, திலக் போன்ற பெரும் ஆளுமைகளின் ஆதிக்கத்தில் இருந்தது. அது அவர் காங்கிரஸில் இருந்து மெதுவாக விலகுவதற்கு காரணமாக இருந்து, தன் சுய ஆதிக்கத்தின் காரணிகளை தேடினார். அப்பொழுது முதல் உலகப்போர் வெடித்து, தேசீய சுயாட்சி நிர்ணயம் பற்றிய கருத்துகள் உலவ ஆரம்பித்தன. அப்பொழுது ஜின்னா முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கு வெளியிட்ட திட்டங்கள் (அமெரிக்க அதிபர்) வில்ஸனின் 14 கொள்கை திட்டம் போல இருந்தது , தற்செயல் இல்லை.

ஆனால் அந்த நாட்களில் முஸ்லிம்கள் இந்தியாவுடன் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்பதை எளக்காரம் செய்திருப்பார். அலி சகோதரர்களின் கிலாஃபத் போராட்டம் அவருக்கு பிடிக்கவே இல்லை, ஏனெனில் அது நெருப்புடன் விளையாடும் முயற்சி என நம்பினார். அவர் மக்கள் கூட்டங்களின் தீவிர வெறியை முழுவதுமாக சந்தேகித்தார், அவருடைய சரித்திர உணர்வினால் மக்கள் வெறியை தூண்டிவிட்டால், அது கட்டுக்கு அடங்காது, எங்கு போய் நிற்கும் என தெரியாது என நம்பினார். காங்கிரஸிடமிருந்து தனியாக நின்றார். சிறை போவது, மற்ற இன்னல்களை தாங்குவது போன்ற சத்யாக்ரஹ முறைகள் சுகம் விரும்பியான அவருக்கு ஊக்கம் தரவில்லை. காந்தியின் காங்கிரஸை தவிற்த்ததற்கு முக்கிய காரணம் மக்களின் வெறியை தூண்டுவதில் இருந்த கசப்புதான். அதன் காரணமாக பல வருடங்கள் அரசியல் அஞ்ஞாதவாசம் செய்தார். அதே சமயம் சுதந்திர போராட்டத்தை கூர்ந்து ஆராய்ந்து, மக்கள் இயக்கத்தை ஊக்குவிப்பதை மனதார பாராட்டினார். பின் தங்கிய முஸ்லிம் சமுதாயத்தை மிகவும் எளிதாக்கப்ப்ட்ட முறையீடே, முஸ்லிம்களின் ஆழ் மனத்தை தொடும் எளிதான வேண்டுகோளே அவர்களை செயலுக்கு ஊக்குவிக்கும் என நம்ப ஆரம்பித்தார். முசோலினி, ஹிட்லர் போன்ற ஐரோப்பிய சர்வாதிகாரிகள் ஆதிக்கத்தின் உச்சியில் ஏறியதின் செய்முறைகளை பாடம்படித்து, தான் பிரசார வழிகளையும், மக்களை வெறியாட்டல் வழிகளையும் சீராக்கினார், அந்த வழிகளில் (முஸ்லிம்களுக்கு) அட்டூழியம் ஏற்பட்டுவிட்டது என்ற புலம்பல் மத்திய ஸ்தானம் ஆகும். ஆனால் ஜின்னா தான் போட்ட விதைகளில் இருந்து விளைந்த மாபெரும் அழிவுசக்திகள் முக்கியமாக எப்படி பஞ்சாபை உலுக்கின என்பதினால் திருப்தி அடைந்திருக்க முடியாது. அவர் நிதானமாவர், குணத்தாலும், பயிற்சியாலும் ஆட்சிகுலைவையும், வன்முறையையும் வெறுத்தவர். முதல் வட்ட மேஜை மகாநாட்டில் இந்தியா மைய அரசு அமைப்புடன் இருக்க வேண்டும் என கோரித்தார், ஏனெனில் ஃபெடரேஷன் -அதாவது கூட்டாட்சி - பல வித்தியாசங்கள் இருக்கும் நாட்டில், நாடு துண்டிக்கும் சக்திகளுக்கு இடம் கொடுக்கும் என நம்பினார். அப்படிப்பட்டவர் , இயற்கையினால் ஒன்றாக இருக்க வேண்டிய இந்தியாவில் துண்டிக்கும் கொள்கைக்கு உபாயமாக இருந்தார், அது எங்கே போய் முடியும் என யாராலும் சொல்ல முடியாது என்பது பெரிய விபரீதம். தான் ஊக்குவித்து தூபமிட்ட சக்திகளை அடக்குவதற்கு அவரிடம் வலு இல்லை, அவருடைய சர்வாதிகார போக்கு தான் தவறு செய்தோம் என்று ஒப்புக்கொள்ளவில்லை.

ஜின்னா தன் சாதனைகளின் உச்சியில் உயிர் நீத்தார், சரித்திரத்தில் அவருடைய இடம் நிச்சயம். வாழ்க்கையின் கடைசியில் தான் உண்டாக்கிய நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிய திகில் அவருக்கு இருந்திருக்க வேண்டும். பாகிஸ்தானில் பல திறைமையான நபர்கள் உள்ளனர். இந்தியா அவர்களுக்கு நல்வாழ்த்துகளை தெரிவிக்கும். ஆனால் ஜின்னாவின் இடத்தை நிரப்புவது சுலபம் அல்ல. ஜின்னாவின் சர்வதேச அந்தஸ்து வேரெந்த பாகிஸ்தானியரிடம் இல்லை. வேறு யாருக்கும் மக்கள் மத்தியில் அவ்வளவு செல்வாக்கு இல்லை. நூறு வருடங்களாக உழைத்த இந்தியாவின் உத்தம புத்திரர்களால் ஏற்பட்ட பாகிஸ்தானின் விடுதலையை இன்னும் வலுவாக்க வேண்டியுள்ளது. அதை நிரைவேற்றுவது பாகிஸ்தானின் தலைவர்களின் தலையாய கடமை. பல பிரச்சினைகள் நாட்டின் பிறப்பு பிரச்சினைகள். பிரித்தனின் கடைசி தானமான அகதி பிரச்சினையை தவிற, காஷ்மிர் விவகாரத்தை மேற்கொண்ட விதமும், ஹைதராபாத்துடன் இந்தியாவிற்கு ஏற்பட்ட தகாராரில் பாகிஸ்தான் காட்டிய மனப்பான்மையும், எதிர்கால இந்திய-பாகிஸ்தான் உறவுகள் மீது ஓரளவு அவநம்பிக்கையை வைக்கிறன. எவ்வளவு காழ்ப்பு இருந்தாலும் ஜின்னா இந்திய-பாகிஸ்தான் நல்லுறவுகள் சாத்தியம் மட்டும் அல்ல, தங்கள் சுதந்திரத்திற்கு அவசியமாக வேண்டியவை என்பதை மறக்கவில்லை. அந்த இலட்சியத்தை பாகிஸ்தான் தலைவர்கள் கடைபிடிப்பர்கள் என நம்புவோம்.

இதப்பற்றி ஹிந்துவில் என் கமெண்ட்


Excellent article. Written with great sense of proportion. While it does not demonise Mr.Jinnah, even while giving credit to his abilities, the editorial is unfliching in etching megalomaniac and rabble-rousing side of the man. All these words are true: Hw was "aristocratic and aloof by temperament" , "began to dally with the notion that that Empire should be an Islamic State. And the dream became a reality overnight" " Totalitarian Idea, were as much responsible for the emergence of Pakistan as the aggressive communalism to which Mr. Jinnah gave point and direction. " "arts by which the European dictators, Mussolini, Hitler and a host of lesser men rose to power led him to perfect a technique of propaganda and mass instigation to which ‘atrocity’-mongering was central" "prudent man to whom by nature and training anarchy was repellant" "too weak to withstand the momentum of the forces that he had helped to unleash. And the megalomania which unfortunately he came to develop " All these characterizations are spot on.

One of the great editorials of The Hindu.

விஜயராகவன்

Wednesday, August 19, 2009

தமிழ் எழுத்து சீராக்கம்

இதைப்பற்றி ரொம்ப பேர் எழுதுகிறார்கள். இவர்களின் மேலெழுந்த நோக்கம் தமிழ் எழுதுவதையும், அச்சு, இண்டெர்நெட்டில் போடுவதையும் `எளிமைப்படுத்துதல்`.
என்னப் பொருத்தவரை, இந்த `சீர்திருத்தங்களின்` நோக்கம் தமிழின் ஒரு பெரிய பிரச்சினையை மரந்து விடுகிரது. `எளிமை` மையத்தில் கொடுக்கப்படும் எழுத்து சீர்திருத்தஙக்ள் பெரும்பான்மையாக தேவையற்றவை என கருதுகிறேன்.

தற்கால தமிழின் மிகப்பெரிய பிரச்சினை `இருநிலை` ஆங்கிலத்தில் Diaglossia என் சொல்லுவார்கள். தற்கால தமிழ் முகத்தில் அறையும்படி எல்லோருக்கும் காட்டும் குணாதிசயம் இந்த `டயகுளோசியா`தான். அதாவது பேச்சு தமிழிற்கும், எழுத்து தமிழிற்கும் உள்ள பெரும் பேதம். அது எழுத்து முரைகளை மற்றும் பாதிப்பதல்ல; பேச்சு இலக்கனமும், எழுத்து இலக்கணமும் கடந்த 1000 ஆண்டுகளாக பிரிந்து விட்டன. இன்னும் நன்னூல்தான் தமிழ் இலக்கணத்தின் கடைசி வார்த்தை என தமிழ் ஆசான்களால் நம்பப் படுகிரது. இந்த தொன்மை ஆக்கங்களின் மீது பித்து இருப்பதால், நம் கண்முன்னே இருக்கும் தமிழ், நம் காதில் ஒவ்வொரு நாளும் விழும் தமிழ் `தமிழ்` இல்லை என்ற பிரமை ஏற்படுத்துகிரது.


ஒரு மொழியின் உயிர் அதன் பேச்சில்தான். அந்த உயிர்மொழிக்கு, பேச்சு மொழிக்கு மரியாதை கொடுத்து, அதற்க்கேற்ப்ப இலக்கணத்தையும், எழுத்துகளையும் மாற்றாமல் இருப்பது, காலப்போக்கில் தமிழ்க்கு சாவுமணி அடிக்கும். இந்த `தொன்மை` இலக்கணப் பூசை, நன்னூல், தொல்காப்பியர் பூசை, தமிழை மெல்ல மெல்ல சாக வைக்கும். இதை நம் கண் முனாடியே பார்க்கலாம். தமிழில் உயர்கல்வி , தற்கால விஞ்ஞான ரீதி சிந்தனை முறையும்,. ஆய்வு முறையும், ஆக்கமும் இல்லை என்பது எல்லா தமிழர்களுக்கும் தெரிந்த உண்மை. அதனால்தான் எல்லோரும் தங்கள் குழந்தைகளை ஆங்கில மீடியத்திற்க்கு அனுப்புகிரார்கள். ஒரிஜினல் ஆய்வாக தமிழில் ஒன்றும் இல்லை. தமிழ் வம்பளக்கும் மொழியாகத்தான் ஆகி உள்ளது. அதற்கு மூல காரணம் தமிழர்களின் `தொன்மை பூசை` மனப்பான்மை , அந்த மனப்பன்மையில் நம் கண், காது முன்னே இருக்கும் தமிழை உதாசீனப் படுத்துவது. இந்த `தொன்மை பூசை` மனப்பான்மை இருநிலையை - அதாவது டயாகுளோசியாவை - இன்னும் பன்மடங்கு பெருக்குகிறது..

சரி, இந்த எண்ண பின்புலத்தில், தமிழ் எழுத்து சீராக்கம் பற்றி விஜயராகவன் என்ன சொல்கிறான் ? எனது எழுத்து சீராக்க பணி இதுதான். ர, ற இந்த இரண்டு எழுத்துகள் தேவையற்றன. இதில் ற வை தள்ளி விடலாம். பல எழுத்துகளில் ற இடத்தில் ர வை பயன்படுத்தலாம். ஏன் இப்படி? தமிழர்கள் பேச்சில் இந்த இரண்டு எழுத்திர்க்கும் வித்தியாசம் இல்லை. பற்று, காற்று, தொற்று போன்ர இடங்களில் ட்ர வை உபயோகிக்கலம். எ.கா. பட்ரு, காட்ரு, தொட்ரு.

அதே காரணத்திர்காக, ந, ன் இவற்றில் ஒன்ரை விட்டுவிடலாம்.
இந்த இரண்டு மாற்றங்களினால், தமிழ் எழுத்து எளிமையாக மட்டுமல்ல, பேச்சு தமிழோடு ஒத்து இருக்கும். அதனால் ஓரளவு டயகுளோசியா குறையும்.

நம் பேச்சு தமிழில் பற்று, காற்று, தொற்று போன்ரவையும் பேசப் படுவதில்லை. அவை பொதுவாக த என மாருகிரது. நாம் பேச்சில் காத்து, பத்து, தொத்து என்றுதான் பயன்படுகிரது. அதனால் எங்கெங்கு ற வருகிரதோ (ற்ற இடங்களில்) த்த வை பயன்படுத்தலாம்.

Tuesday, August 18, 2009

யூதர் மீது வெறுப்பு


என் ஹிரோஷிமா கட்டுரையின் பதிலாக கிருஷ்ணமூர்த்தி , இப்படி எழுதுகிறார். “அமெரிக்க அரசியலில் மட்டுமல்ல பல்வேறு துறைகளில் யூத இனத்தவரின் ஆதிக்கம் அளவுக்கு மீறியே இருக்கிறதென்பதையும் பார்க்க முடியும். இடம் கொடுத்தால் மடத்தையே பிடுங்குகிற இந்தக் குணம் தான் யூதர்களை வெறுக்கத் தூண்டுகோலாக இருந்தது, இருக்கிறது என்பதையும் மறந்து விடக் கூடாது.”


இது ஆதாரமற்ற யூதர்கள் மீது ஒரு அவதூறு. இதை கிருஷ்ணமூர்த்தியின் அபிப்பிராயமான கருதாமல் , ஒரு கலாசார phenomenon ஆக பார்க்க வேண்டும்.


யூதர்களின் ஜெரூசலம் மைய அரசு ரோம சாம்ராஜ்யத்தால் 2000 ஆண்டுகள் முன்பு அழிக்கப் பட்டது. அதனால் யூதர்கள் மற்ற நாடுகளில் அகதிகளாக சென்றனர். மேலை நாடுகளில் கிருஸ்துவ மதம் பரவி மக்கள் கிருஸ்துவராகி , கிருஸ்துவ மத அமைப்புகள் ஆதிக்கத்தை பெற்றவுடன் - அதாவது கிபி 300-700 கால கட்டத்தில் - யூத வெறுப்பு பரப்பப் பட்டது. அப்போது ஆரம்பித்த மேலை-கிரிஸ்துவ யூத வெறுப்பு 20 நூற்றாண்டு வரை கொழுந்து விட்டெரிந்தது. அந்த மேலை நாட்டு யூத காழ்ப்பின் உச்ச கட்டம் ஹோலோகாஸ்ட் என அழைக்கப்படும் யூத இன பேரழிவு.
இரண்டாம் உலக்ப்போர் பின்பு மேலை நாடுகளில் தங்கள் மத்தியிலிருந்து யூதகாழ்ப்பை களைந்தெரிய மக்களும், அரசியல்வாதிகளும், கலைஞர்களும் பெரும் அளவில் ஈடுபடுகிறனர்.


19ம் நூற்றாண்டு வரை முஸ்லிம் நாடுகளில் யூத வெறுப்பு பெரும் அளவில் இருக்க வில்லை. அரபு-முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம்களின் உறுதியான திட்டம் தாங்கள் - அதாவது முஸ்லிம்கள் ஆட்சி செய்ய வேண்டும் அவ்வளவுதான். அதற்கு பாதகம் வராதபோது , ஓரளவு யூதர்களும், கிருஸ்துவர்களும் இடம் கொடுக்கப்பட்டனர், பல யூதர்கள் முஸ்லிம் நாடுகளில் தழைத்தனர். எப்பொழுதுமே சில யூதர்கள் தற்கால இஸ்ரேலில் வசித்திருந்தனர். 19ம் நூற்றாண்டு பிற்பகுதியின் ஆரம்பத்தில் இருந்து, ஐரோப்பாவின் யூன இன வெறுப்பு ர்களைகளை தாங்க முடியாமல் சிறிது, சிறிதாக யூதர்கள் - அப்போது துருக்கி சாம்ராஜ்யத்தின் கைவசம் இருந்த பாலஸ்தீனத்தின் நிலம் வாங்கி , வசிக்க ஆரம்பித்தனர். பல ராணுவ, சர்வ தேச அர்சியல் மாற்றங்கள் காரணமாக யூதர்களால், இஸ்ரேல் என்ற யூத நாட்டை மறுபடியும் சுதந்திரமாக்க முடிந்தது. சுதந்திர இஸ்ரேல் உலக நாடுகளுக்கு மத்தியில் தோன்றியவுடன், அரபு-முஸ்லிம் மக்களின் இஸ்ரேலிய எதிர்பு யூத காழ்ப்பாக மாறியது. கடந்த 70 வருட காலமாக பொதுவாக எல்லா அரபு நாடுகளிலும் யூத இனம் மிகப்பெரிய இனத்துவேஷ பிரச்சாரத்திற்கு உள்ளாகியுள்ளது. அரபு மக்கள் தங்கள் யூத வெறுப்பை அரபல்லாத மற்ற இஸ்லாமியர்கள் மீதும் பரப்பி உள்ளார்கள். எங்கு எங்கு இஸ்லாமிய தீவிரவாதம் கை ஓங்கி உள்ளதோ , அங்கெல்லாம் பெரும் யூத த்வேஷ்மும் படவியுள்ளது.
மேலும் சோவியத் யூனியனின் தூண்டுதலில் வளர்ந்த உலக இடதுசாரி அரசியலும் ஓரளவு யூத வெறுப்பிற்கு தூண்டு கோலாக உள்ளது. பொதுவாக இடதுசாரிகள் இனத்துவேஷத்தை எதிர்ப்பதாக சொல்லுவார்கள். இஸ்ரேலை அரபு நாடுகள் கண்மூடித்தனமாக எதிர்ப்பதால், இடது சரிகளும் அரபு நாடுகளுக்கு ஆதரவாக பொதுவாக இஸ்ரேல் எதிர்ப்பு பிரச்சாரத்தில் மூழ்கி உள்ளனர். இஸ்ரேல் எதிர்ப்பு பிரச்சாரம் அவர்களை அறியாமைலேயே, மெதுவாக யூத இனதுவேஷமாக உரு மாறுகிரது.

மேலும் சோவியத் யூனியனின் தூண்டுதலில் வளர்ந்த உலக இடதுசாரி அரசியலும் ஓரளவு யூத வெறுப்பிற்கு தூண்டு கோலாக உள்ளது. பொதுவாக இடதுசாரிகள் இனத்துவேஷத்தை எதிர்ப்பதாக சொல்லுவார்கள். இஸ்ரேலை அரபு நாடுகள் கண்மூடித்தனமாக எதிர்ப்பதால், இடது சரிகளும் அரபு நாடுகளுக்கு ஆதரவாக பொதுவாக இஸ்ரேல் எதிர்ப்பு பிரச்சாரத்தில் மூழ்கி உள்ளனர். இஸ்ரேல் எதிர்ப்பு பிரச்சாரம் அவர்களை அறியாமைலேயே, மெதுவாக யூத இனதுவேஷமாக உரு மாறுகிரது.

இந்தியாவில் யூதர்கள் பல நூற்றாண்டுகளாக அமைதியுடன், ஹிந்து, முஸ்லிம்களுடன் சுமுகமாக வாழ்ந்தனர். கடந்த 50 வருடங்களீல் பெரும் பாலோர் இஸ்ரேலுக்கு குடி புகுந்து விட்டனர். அதனால் இந்தியர்களுக்கு யூத இனத்துவேஷம் மிகவும் பொருத்தமற்றது . உலகில் பொதுவாக யூத இனத்துவேஷத்தின் ஊற்றுகள் - பெருமளவு அரபு தேசியம், இஸ்லாமிய தீவிரவாதம்,, சிறிதளவு சர்வதேச இடதுசாரிகளும், ஓரளவு பழைய ஐரோப்பிய வலதுசாரிகளும்.

ஒரு காலத்தில் ஐரோப்பிய வலதுசாரிகள் யூத வெறுப்பின் `காவலர்கள்`. இரண்டாம் உலகப்போர் பின்பு அவர்கள் இன்ஃப்ளுவன்ஸ் மிகவும் குறைந்து விட்டது - ஆனால் அது மொத்தமாக அழியவில்லை. 60 வருடம் முன் ஐரோப்பிய இடதுசாரிகள் யூதக் காழ்ப்பின் முதல் எதிரிகளாக நின்றனர் - யூதர்களின் ஆதரவாக தோள்கொடுத்து, நாஜிக்களோடும், வலதுசாரிகளோடும் போரிட்டனர். இன்று இடதுசாரிகள் பெருமளவில் இஸ்ரேலை எதிர்க்கின்றனர் - அது ஓரளவு யூத காழ்ப்பாக மாறி விடுகிரது.

இந்திய அளவில், அரசியல் பிரமுகர்களும், ஊடகங்களும் இடதுசாரி ஆதரவாகவும், இஸ்லாமிய ஆதரவாகவும் இருப்பதால் சில சமயம் கிருஷ்ணமூர்த்தி மூலம் பிரதிபலிக்கும் யூத காழ்ப்பு ஆகிறது.

Thursday, August 06, 2009

20 நூற்றாண்டின் 2 மாபெரும் கண்டுபிடிப்புகள்


இந்த இரண்டு கண்டுபிடிப்புகளும் மனித வர்கத்தை மிகப் பெரிய அளவில் பாதித்துள்ளன.

அவை அணுகுண்டும், பெண்கள் கருத்தடை மாத்திரையும் ஆகும்.

ஒன்று அணுகுண்டு. இன்று முதல் அணுகுண்டு பிரயோகத்தின் 64 ஆண்டு நிறைவு , நினைவு. ஹிரோஷிமா-நாகசாகி அணுகுண்டு அழிப்பை பற்றி நேத்தியே ஒரு கட்டுரை போட்டாய் விட்டது. அதனால் யுத்தம் நாடுகளுக்கிடையே இயல்பு, அதை அப்படியே நடக்க விட வேண்டும் என மனப் பான்மை அகன்றது. இப்பொழுது உலகத்தின் 8-9 நாடுகளுக்கிடையே 15,000 அணுகுண்டுகள் இருக்கலாம். அமெரிக்க-சோவியத் பனிப்போர் முடிந்தது, அதனால் மானுடத்தின் ஒரு பெரிய அழிப்பு பயம் நீங்கிற்று.
இப்பொழுது என்ன பயம் என்றால், அல்-கைதா போன்ற பயங்கரவாதி குழுக்கள், அணுகுண்டுகளை திருடி எங்கேயாவது வெடிக்கலாம் என்பது. அல்லது வட கொரியா போன்ற உலக நியதிகளை அலட்சியம் செய்யும் நாடுகள் செய்யலாம் என்பது. அல்லது இரான் மத வெறியில் இஸ்ரேலின் போட முயற்சிக்கலாம் என்பது. இந்த அணு வெடிப்பு பயங்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்

1. பாகிஸ்தான் கையில் பல அணுகுண்டுகள் இருக்கின்றன. பாகிஸ்தான் ஸ்திரமற்ற நாடு. அது `தோல்வியான நாடு` failed state என்பதின் அருகில் உள்ளது. பாகிஸ்தான் சிவிலியன் அரசு, பாகிஸ்தானிய ராணுவம், ராணுவத்தின் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ போன்ற அதிகார மையங்கள் ஒன்றாக சீராக இல்லை , ஒன்றுக்கொன்று முரண்பாடாக செயல்படுகிறன , வலது கை செய்வது இடது கைக்கு தெரிவதில்லை.. ஐ.எஸ்.ஐ.யின் ஆதரவினால் வந்ததே தலிபான் போன்ற குழுக்கள். அவை இன்னும் தலிபான்களூக்கு ரகசியமாக உதவி செய்வதாக உலக அரசாங்களால் நம்பப் படுகிரது. தலிபன், லஷ்கர் தொய்பா போன்ற இஸ்லாமிய குழுக்களுக்கு `ஆன்மீக` மற்றும் கட்டமைப்பு தலைவன் அல்-கைதா. அல்-கைதா பாகிஸ்தான் ராணுவத்தில் பல அளவில் ஊடுருவியுள்ளது. அதனால், பாகிஸ்தானின் அணு குண்டுகளை , அது களவாட வாய்ப்புகள் உள்ளன.

2. சோவியத் யூனியன் குலைந்த போது, அதன் அணுகுண்டு கிடங்குகளும், ஆய்வு மையங்களும் பல நாடுகளில் இருந்தன. யுக்ரைன், பேலோரஷ்ய, கசக்ஸ்தான், ரஷ்யா போன்றவை 1991ல் தனி நாடுகளாக போனபோது, அவற்றின் நிர்வாக கட்டுப்பாடு குலைந்தது, ஏழ்மை அதிகமாகியது. ஊழல் பரவியது. அணு குண்டு விஞ்ஞானிகள் வருமையில் தள்ளப்பட்டனர். ராணுவ அதிகாரிகள் பெரும் அளவு ஊழலில் ஈடுபட்டனர். அரசாங்க அதிகாரிகளும் ஊழலில் திளைத்தனர். அதனால் சர்வதேச பிளேக் மார்கெடுகளில் அணு குண்டு சம்பந்தமான பொருள்களும், திறமைகளும் அகப்பட ஆரம்பித்தன. 5, 6 வருடங்களாக அந்த நாடுகளில் அரசும், அணு நிர்வாகமும் ஓரளவு சீர் பெற்று விட்டது. அதனால் ஊழல்மிக்க, நிர்வாகம் குலைந்த முன்னாள் சோவியத் குடியசுருகள் ஓரளவு சுதாரித்து கொண்டாலும், அங்கிருந்து வரும் அணு த்ரெட் இன்னும் முழுமையாக போகவில்லை.

3. ஈரன் அரசியல் தலைவர்களுக்கு இஸ்ரேல் மேல் தீராத வெறுப்பும், காழ்ப்பும்.. சில தடவை `இஸ்ரேலை புவியிலிருந்து களைப்போம்` , எனக் கூட சூளுரை விட்டிருக்கின்றனர். இப்போது அந்த பைத்தியக்காரத்தனமான வீராப்பு குறைந்துள்ளது. ஆனால் எப்போது விபரீத எண்னங்கள் திரும்பி, இஸ்ரேலின் மீது `மரண அடி` கொடுக்கும் முயற்சி தொடங்கும் என சொல்ல முடியாது. இஸ்ரேலும் ரகசியமாக இரான் மீது உளவு செய்கிரது. இரான் தன்னை தாக்கும் போல் தோன்றினால், இரானின் அணு ஆய்வு , அணு ஏவுகணை தளங்களை அதிரடி குண்டடித்து தாக்க ஒரு விநாடியும் தயங்காது.

4. பயங்கர வாதிகள் அணுகுண்டை கடத்தாமல், மற்றொரு விதத்தில் உலக நாடுகள் மீது தாக்க முடியும். உதாரணமாக , ஒரு தற்கொலை விமானத்தை அணுசக்தி நிலையத்தின் மீது செலுத்தினால், அது பெரும் சேதத்தை ஏற்படுத்துமல்லாது, பெரும் கதிரியக்கத்தையும் தொடங்கும். கட்டுப்படுத்த முடியாத கதிரியக்கங்கள் பல நூறு மைல்களுக்கு சுற்றுப் புரத்தில் மரணத்தையும், ஊனங்களையும் உண்டு பண்ணும்.

அணுகுண்டு, அணுசக்தி வந்ததிலில் இருந்து மனித வர்கம் இப்படிப்பட்ட தாக்குதல்களையும், பீதிகளையும் எதிர்ப்பார்க்கிரது


சரி, 20 நூற்றாண்டின் இரண்டாவது மாபெரும், புரட்சிகரமான கண்டுபிடிப்பிற்கு வருவோம். அது கருத்தடை முறைகள்., முக்கியமாக ஆண்களின் கண்டோமும், பெண்களுக்கு வாயால் சாப்பிடும் கருத்தடை மாத்திரையும்.. இந்த இரு கருத்தடை முறைகளுக்கு முன், மனித சரித்திரம் முழுவதும் பாலுறவும் , குழந்தை பெருவதும் பிரிக்க முடியாமல் இருந்தது. கருத்தடை கண்டுபிடிப்புகளால், பெண்கள் எவ்வளவு குழந்த வேண்டும் திட்டமிடலாம். ஆண், பெண் இருவரும் செக்ஸை, குழந்தை பிறப்பு வாய்ப்பு இல்லாமல் அனுபவிக்கலாம். அப்படிப்பட்ட மனப்பான்மைதான், 1960ல் மேற்கத்திய நாடுகளில் செக்ஸ் புரட்சிக்கு காரணமாக இருந்தது. இந்திய, சீன போல நாடுகளில் குடும்பக் கட்டுபாடு போட முடிந்தது. அப்புரட்சி மனப்பான்மை மற்ற நாடுகளுக்கும் பரவுகின்றது.

Wednesday, August 05, 2009

ஹிரோஷிமா-நாகசாகி நாள்

ஆகஸ்ட் 6 , 1945 அன்று , எனோலா கே என்ற அமெரிக்க குண்டடிப்பு (பாமர்) விமானம் - பி-29 சூபர் ஃபோர்ட்ரஸ் ரகம் - , லிடில் பாய் என்றழைக்கப் பட்ட 5 டன் அணுகுண்டை ஹிரோஷிமா நகர் மீது போட்டது. 3 நாள் கழித்து மற்றொரு அமெரிக்க விமானம் நாகசாகி நகர் மீது அணுகுண்டைப் போட்டது. ஹிரோஷிமாவில், குண்டு வெடித்த சில கணங்களுக்குள் 70000-80000 பேர் கொல்லப் பட்டனர். 70000 பேர் கோரமான முறையில் காயமுற்றனர். வெடியின் உஷ்ணம் 1,000,000 செண்டிகிரேட் ஆகவும், 840 அடி உயர நெருப்புக் கோளமும் வந்தது. இப்படி உடனடி சாவுகளை தவிற சில நாட்களில் பல்லாயிக்கணக்கான மக்கள் கதிரியக்க நோய்களினால் மாண்டனர். கதிரியக்கத்தின் விளைவுகள் 2 தலைமுறைகளுக்கு இருந்தன.
1983ல் , ஒரு ஆராய்சிபடி, ஹிரோஷிமா குண்டினால் 2,00000 பேரும், நாகசாகி குண்டினால் 140,000 பேரும் மொத்தத்தில் மடிந்தனர் என கணக்கிடப் பட்டது.


அதிலிருந்து உலகின் எல்லா நாடுகளிலும் ஒரு அணு பீதி ஏற்பட்டது. எதிரி தன்னை அணுகுண்டினால் தாக்கிடிவானோ என்ற பீதியில் பல நாடுகள் தாங்களீ அதை உற்பத்தி செய்யத் தொடங்கின. இன்னும் செய்கிறன. இப்போது, அர்சாங்ககளுக்கு கட்டுப் படாத பயங்கர வாதி குழுக்கள் (அல்-கைதா) எப்படியோ ஒரு அணுகுண்டையாவது கைப்பற்றி உலகத்தை ஆட்டி வைக்குமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது.


ஒன்று நிச்சயம் - அணுகுண்டு வந்த பிறகு உலக அரசியலும், போர் பற்றிய மனப் பான்மைகளும் பெரிதளவில் மாற்றம் அடைந்துள்ளன. அணுகுண்டு உலக சரித்திரத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


சமீபத்தில் ஜயமோகன் “வாக்களிக்கும் பூமி- 3,பாஸ்டன் நகரம்” ( http://jeyamohan.in/?p=3488 ) என்ற கட்டுரையில் 4 கருத்துகளை அறுதியிடுகிறார்.


1. 1945ல் அணுகுண்டு போட்டது அமெரிக்காவின் மனித அழிப்பு குற்றம்

2. அது நாஜிக்களின் யூத இன அழிப்பு குற்றத்தை விட பெரியது

இதைத் தவிற 2 ஐயங்களை வைக்கிறார்.

1. யூதர் ஹோலோகாஸ்டின் போது அவ்வளவு பேர் (அதாவது 6,000,000) நிஜமாகவே கொல்லப் பட்டனரா?

2. தன் அணுகுண்டு வழி மனித அழிப்பை மறக்க / மறைக்க அமெர்க்கா யூத பேரழிவைப் பற்றி நிரைய நேரம் செலவிடுகிரதா.

ஒரு சிறிய பத்தியில் ஜயமோகன் , உலக அளவில் ஒத்துக்கொள்ளப் பட்ட உண்மைகளையும், உணர்வுகளையும் சந்தேகிக்கிறார்.

இந்த 4 கருத்துகளையும், லாஜிகலாக பார்க்க இப்படி போலாம்.

யூதர் ஹோலோகாஸ்டின் போது அவ்வளவு பேர் (அதாவது 6,000,000) நிஜமாகவே கொல்லப் பட்டனரா?


ஹிட்லரின் ராணுவம் எங்கெல்லாம் ஆக்கிரமித்து சென்றதோ, அல்லது மறைமுக ஆதிக்கம் செலுத்தியதோ, அங்கெல்லாம் யூதர்கள் கைது செய்யப்பட்டு, பல குவிப்பு முகாம்களுக்கு அனுப்பப் பட்டு கொலை செய்யப் பட்டனர். அதற்கு முன் நாஜி ராணுவம் யூதர்களை கொல்லுவதற்கு ஐன்ஸ்டஸ் க்ருப்பன் (Einsatz gruppen) என்ற அமைப்பை ஏற்படுத்தி, ஆயிரக்கணக்கான யூதர்களை சூட்டுக் கொன்றது. எல்லா யூதர்களையும் அப்படி கொல்ல முடியாத்தால், வேகமாக அவர்களை கொல்லுவதற்கு குவிப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. செயல் முறையில் இவை அழிப்பு முகாம்கள். அவற்றின் முக்கிய வேலை, யூதர்களை வாயு அறையில் கொன்று, எரித்து விடுவது. குவிப்பு/அழிப்பு முகாம்களில் யூதர்கள் மட்டுமின்றி ஜிப்சிக்கள், ரஷ்யர்கள், கம்யூனிஸ்டுகள், செர்பியர்கள், போலந்து மக்கள், போன்றவர்களும் கொல்லப் பட்டனர். 2ம் உலகப் போர் துவங்குவதற்கு முன் ஐரோப்பாவில் 9.5 மில்லியன் யூதர்கள் இருந்தனர் என்றும், போருக்குப் பிறகு 3.5 மில்லியன் மக்கள் இருந்தனர் என்றும் கணக்கிடப்பட்டது. மேலும், 2ம் உலகப் போருக்கு முன் அமெரிக்கா போன்ற நாடுகளில் அகதிகள் போவது கஷ்டமானதால் சில யூதர்களே அமெரிக்காவிற்கு தப்ப முடிந்தது. அதனால் நாஜிக்களால் கொல்லப் பட்ட யூதர்கள் எண்ணிக்கை 6 மில்லியன் என பல ஆராய்ச்சிகள் சொல்லுகிறன. நாஜிக்கள் நடத்திய குவிப்பு/அழிப்பு முகாம்களில் எவ்வளவு பேர் உள்ளே போனர், அவர்கள் தேசீயம் என்ன, எவ்வளவு பேர் பிழைத்தனர் (1% கூட இல்லை) என்பது தோராயமாக தெரியும். நாஜிக்களே, எவ்வளவு யூதர்கலை எங்கு கொண்டு போனர் என்ற ஆவணங்களை வைத்திருந்தனர் - ஜெர்மானியர் நடப்பது எல்லாவற்ரையும் ஆவணப் படுத்துவதில் பிரசித்தி பெற்றவரக்ள். யூதர்கள் அழிப்பு நோக்கத்தில் நாஜிக்கள் மகாநாடு நடத்தினர், இவற்றின் ஆவனங்களூம் நம் கையில் உள்ளன. ஒரே ஒரு ஆவணம்தான் இது வரை கிடைக்க வில்லை - ஹிட்லர் கையொப்பமிட்ட யூத அழிப்பு ஆனை. ஆனால் ஹிட்லரின் அடியாட்கள் செய்தவை, ஆனை இட்டவை இவை கைப்பற்றப் பட்டன. பல ஆய்வுகள் படி மொத்த யூதர்களின் அழிப்பு எண்ணிக்கை 5.5 - 6 மில்லியன். அந்த எண்ணிக்கையை அதற்கு மேல் துல்லியமாக கணக்கிடமுடியாது என்பதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்
எப்படி இந்த யூத பேரழிவு நடத்தப்பட்டது, எப்படி எண்ணிக்கை அடையப்பட்டது என்பதை விகி கட்டுரை நன்றாக விளக்குகிறது
http://en.wikipedia.org/wiki/Holocaust
யூத பேரழிவு/ மனித அழிப்பு பற்றி ஆய்வதற்கே, ஒரு ஆக்சுபோர்ட் சஞ்சிகை வெளீயிடப்படுகிறது
http://hgs.oxfordjournals.org/
ஜெர்மானிய ஆய்வாளர்களே, கிட்டத்தட்ட 6 மில்லியன் யூதர்கள் கொல்லப் பட்டனர் என அறுதியிடுகிரனர்.
அதனால் ஜயமோகன் ஐயத்திற்கு இடமே இல்லை.

அடுத்த அறுதி ”1945ல் அணுகுண்டு போட்டது அமெரிக்காவின் மனித அழிப்பு குற்றம்”.

1941ல், ஜப்பான் அமெரிக்கவை பேர்ல் ஹார்பரில் அமெரிக்க கப்பல்படை தளத்தை பேரளவில் தாக்கி, பெரும் நாசத்தை உண்டுபண்ணி, அமெரிக்கவை போரில் இழுத்து, தானும் போரில் குதித்தது. 1943 பிறகு, அமெரிக்கா பசிபிக்கில் வெற்றி பெறத் துவங்கியது. 1945 மே ஆரம்பத்தில், ஜெர்மனி சரணடைந்தது. ஜப்பான் பல்லாயிரக்கணகான பசிபிக் தீவுகளை தன் வசம் வைத்திருந்தது, மேலும் சீனாவில் பெரும் பகுதியையும், பர்மா வரை தென் கிழக்கு ஆசியாவையும் தன் ஆட்சியில் வைத்திருந்தது. ஜப்பான் அருகில் வர வர , ஒவ்வொரு தீவை பிடிப்பதற்கும் அமெரிக்கா ஆயிக்கணக்கில் தன் துருப்புகளை இழந்தது. ஜப்பான் ஒவ்வொரு தீவா இழந்து, அமெரிக்கர்கள் ஜப்பானிய மெயின்லாந்து வர, ஆக்ரோஷத்துடன் போரிட்டனர். பொதுவாக ஜப்பானிய துருப்புகள் சரன் அடைய மறுத்து, சாவு வரை போரிட்டனர் அல்லது தற்கொலை செய்து கொண்டனர். அமெரிக்கா ஜப்பானிய தீவுகளில் கால் வைக்கும் பட்சத்தில், ஜப்பானிய அரசாங்கம் , எல்லா ஜப்பானிய மக்களையும், சாவு வரை போரிட தயார் செய்தது. மேயில் ஜெர்மனி சரணடைந்தது பின், நேச நாடுகள், ஜப்பானை நிபந்தனையின்றி சரண் அடைய கோரின, அதை ஜப்பான் அலட்சியம் செய்தது. அமெரிக்க ராணுவ திட்டமிடுபவர்கள், இந்த நிலையில் யுத்தம் தொடர்ந்தால் இன்னும் சில வருடங்கள் இழுக்கடிக்கும், 500,000- 1,000,000 அமெரிக்க துருப்புகள் சாவலாம் என கணக்கிட்டனர். யுத்ததை திட்ட வட்டமாக சீக்கிரத்தில் முடித்து, ஜப்பானிய சரணகதியை வலுக்கட்டயப் படுத்த அணுகுண்டு போடும் தீர்மானம் எடுக்கப் பட்டது. மேலும் , போர் நடந்து கொண்டுருந்தால், ஜப்பானிய பிடியில் இருந்த் சீனர்களும், தென் கிழக்காசியர்களும் தினமும் ஆயிரக்கணக்கில் மடிந்து கொண்டிருப்பார்கள். அவற்ரையும் சீக்கிர ஜப்பானிய சரணகதி தடுக்கும்.
அணுகுண்டு தீர்மானம் , ராணுவ நோக்கில் தேவையா இல்லையா என விவாதிக்கப் படுகிறது. ஆனால் 1945 ஆகஸ்டில், ராணுவ காரணங்களுக்கு அமெரிக்கா அந்த ஆயுதங்களை பயன்படுத்த முடிவு செய்தது. ஆனால் அது மனித அழிப்பு குற்றம் (genocide) என சொல்லுவது மிகை. 2ம் உலகப் போரில், நேச நாடுகளும், அச்சு நாடுகளும் எதிரிகளின் சிவிலியன் மடிப்புகளை பொருள்படுத்தவில்லை. போரிட்ட எல்லா நாடுகளிலும் (அமெரிக்கா தவிற) எதிரி ஆகாய விமான தாக்குதல்களால், பெரும் உயிர் சேதமும், பொருள்சேதமும் ஏற்பட்டது.
அணுகுண்டு போட்டது மனித அழிவுக்கு (Genocide) சமம் என்றால், ஏன் ஒரு நாடும் அப்படி சொல்ல வில்லை. ஜப்பானே அமெரிக்காவின் மீது அப்படிப்பட்ட குற்றத்தை சாட்டுவதில்லை. ஐரொப்பவோ, சோவியத் யூனியனோ, சீன கம்யூனிஸ்டுகளோ, அல்லது ஜவாகர்லால் நேருவோ அப்படி அமெரிக்காவின் மீது கூற்றம் சாட்டவில்லை? எனெனில் உலகம், கடும் யுத்தத்தில் நடக்கும் ராணுவ நடவடிக்கைகளால் ஏற்படும் மனித சாவுகளையும், அப்பாவி மக்களை இன அடிப்படையில் அழிப்பு முகாம்களை கொல்லுவதையும் தனியாக பார்க்கிரது.

அது நாஜிக்களின் யூத இன அழிப்பு குற்றத்தை விட பெரியது

யூத இன அழிப்பு பல வருடங்களாக பேசப்பட்டு, திட்டமிடப்பட்டு ஒரு பேரரசின் (நாஜி ஜெர்மனி) ஒரு இனத்தையே, அவர்கள் அப்படிப்பட்ட இனம் என்ற காரணத்தை தவிற வேறொரு காரணம் இல்லாமல், முகாம்களில் குவிக்கப் பட்டது மாபெரும் குற்றமாகும். எந்த நாட்டிலேயும் யூதர்கள் ஜெர்மன் படைக்கு எதிராக போராடவில்லை. ஜெர்மன் யூதர்களே அடக்கி, ஒடுக்கப் பட்டனர். அந்த ஒடுக்கப் பட்ட அப்பவி மக்களை அழிப்பு முகாம் களில் கொல்லுவதும், ஒரு ராணுவ ரீதியில் தீர்மானத்தை ஒட்டி எடுக்கப் பட்ட நடவடிக்கையில் 2,00,000 மக்கள் சாவதும் தனித்தனி - இவற்றை ஒப்பிட்டு பார்க்கவே முடியாது.

ஜயமோகனின் கடைசீ பாயிண்ட் “தன் அணுகுண்டு வழி மனித அழிப்பை மறக்க / மறைக்க அமெர்க்கா யூத பேரழிவைப் பற்றி நிரைய நேரம் செலவிடுகிரதா.”.

உலக நாடுகளே அமெரிக்காவை அணுகுண்டு போட்டதற்கு குற்றம் சாட்டாத பட்சத்தில், ஏன் அதை அமெரிக்கா மறைக்க/மறக்க வேண்டும்? ஆனால் , ஒன்று சொல்வேன், அமெரிக்கர்களுக்கு ஹோலோகாஸ்டை தடுக்காததில், யூதர்களுக்கு அகதி அந்தஸ்து கொடுக்காமல் ஆயிரக்கணக்கில் அவர்கள் உயிரை சேமிக்க தவிறயதில் ஓரளவு குற்ற உணர்வு இருக்கிரது என நம்புகிறேன். மேலும், யூதர்கள் பெருமளவில் கொல்லப் படுவது 1943 முதல் அமெரிக்க அரசாங்கத்திற்கு தெரிய வந்தது. ஆனாலும் அந்த செய்திகளை பொருள்படுத்தாமல், அதன் மேல் ஒருவித செய்கை எடுக்காமல் இருந்தது. அமெரிக்காவிற்கு ஒரளவு குற்ற உணர்சியை ஊட்டியது என்பது என் அனுமானம். ஆனால் அதற்கும் அணுகுண்டு அழைப்பிற்க்கும் சம்பந்தமில்லை.. அமெரிக்கா ஹோலோகாஸ்ட் நினைவின் மீது நிரைய நேரம் செலவிடுவதற்கு, 1930, 1940 களில் யூதர்களுக்கு ஒன்றும் செய்யாமல் இருந்ததால் ஏற்பட்ட குற்ற உணர்சி ஏதுவாக இருக்கலாம்.

விஜயராகவன்
==========================

17 ஆகஸ்ட் அப்டேட்

ஜயமோகன் என் கடிதத்தை பிரசுரித்து, சில பாயிண்டுகளை எழுப்பியுள்ளார்.

http://jeyamohan.in/?p=3547 யூதக்கொலைகள்:கடிதங்கள்

பாயிண்ட் 1 "அணுகுன்டை ஜெர்மனி மீது போடுவதற்கு அந்த அறிவியலாளர் ஒத்துக்கொள்ளவில்லை"

ஜெர்மனி மே 45 முதல் வாரத்தில் சரண் அடைந்து விட்டது, ஹிட்லர் ஏப்ரல் கடைசியில் தற்கொலை செய்து கொண்டான். அப்பொழுது, அமெரிக்க அணுகுண்டு ஆக்கம் முழுமை ஆகவில்லை. ஜூலை 16, 1945 அன்றுதான், முதல் பரிசோதனை அணுகுண்டு, அமெரிக்க மாகாணமான நியூ மெக்சிகோ பாலைவனத்தில் வெடிக்கப் பட்டது. அதனால் ஜெர்மனிமீது அணுகுண்டு வெடிப்பதற்கு வாய்ப்பே இல்லை.

பாயிண்ட் 2 "இனக்காழ்ப்பு ஜப்பான் மேல் போடப்பட்ட குன்டிலும் இருந்தது"

அமெரிக்க ராணுவ, அரசியல் தலைமையில் ஜப்பானியர் எதிரான இன துவேஷம் இருந்ததாகவும், அது அவர்கள் ராணுவ தீர்மானங்களை பாதித்தது என்பத்ற்கு ஒரு ஆதாரமும் இல்லை. ஜப்பானியர் மேல் சாதாரண அமெரிக்க துருப்புகள் ஓரளவு இனத் துவேஷத்தை வைத்திருந்தனர், அதனால் ஜப்பானியர் நோஞ்சான், எளிதாக அவரக்ளை தோற்கடிக்கலாம் என நினைத்தனர், ஆனால் ஜப்பானியரின் கட்டுப்பாட்டையும், வீரத்தையும், விடாப்பிடி மனப்பான்மையையும் நேரடியாக பார்த்து, அந்த மனப்பான்மையை மாற்றிக் கொண்டனர். அமெரிக்கா போரில் இழுக்கப் பட்டவுடன் (பேர்ல் ஹார்பர் தாக்குதல் பிறகு), பல ஆயிரம் ஜப்பானிய பூர்வீகம் கொண்ட அமெரிக்க பிரஜைகள் தடுப்பு முகாம்களில் வைக்கப் பட்டனர் , அதை ஓரளவு இனத் துவேஷம் என கூரலாம், ஆனால் அதே கதி ஜெர்மனிய- , இத்தாலிய பூர்வீகம் கொண்ட அமெரிக்க பிரஜைகளுக்கும் ஏற்பட்டது

http://en.wikipedia.org/wiki/Internment_of_Italian_Americans
http://en.wikipedia.org/wiki/German_American_internment
http://en.wikipedia.org/wiki/Japanese_American_internment

ஜப்பான் மீதான குண்டு தீர்மானம், ராணுவ நடவடிக்கை அடிப்படையில் தான் எடுக்கப்பட்டது, இன அடிப்படையில் அல்ல என்றுதான் பரவலாக நம்பப் படுகிரது. இனத்துவேஷம் இருந்தது என்றால், அது அரசியல் மேடைகளிலும், அதிகாரிகள் ஆவணங்களிலும், அரசியல் கருத்தாக்கங்களிலும் இருந்தாக வேண்டும்.

பாயிண்ட் 3 "நான் கேட்பது அமெரிக்காவின் ராட்சத ஊடகம் யூத அழிவுக்கு மட்டும் அளிக்கும் அபரிமிதமான முக்கியத்துவத்தின் நோக்கம் குறித்த ஐயமே. "

முதல் கட்டுரையில் அதைப்பற்றி சொல்லியாகிவிட்டது

Tuesday, July 21, 2009

எம்.ஜி.ஆர். பாட்டு-1 சில சிந்தனைகள்

இந்த பாட்டை யு-ட்யூபில் பார்த்தேன்
http://www.youtube.com/watch?v=4lacXb9czps&NR=௧

மேலெழுந்த வாரியாக பார்த்தால், இதோ எதோ புதிய கலாசாரம் (தமிழ்நாட்டில்) போல இருக்கின்றது. ஆண்களும், பெண்களும் கை கோத்து ஆடுகிறார்கள், பியானோ, வயலின் போன்ற இன்ஸ்ட்ருமெண்ட் இருக்கின்ரது. எம்.ஜி.ஆரே எல்லா இசைக்கருவிகளை வாசிக்கிறார். ஆண்கள் சூட்டு,பௌ டை போட்டுள்ளனர். பெண்கள் சிலர் ஃப்ராக்கில் உள்ளனர்.

ஆனால் நாம் கவனிக்க வேண்டியது எம்.ஜி.ஆரின் முக பாவனைகளும் , சொற்களும். எம்ஜிஆரின் முகபாவம் நடப்பது ஒன்றையும் ஏற்றுக்க மறுப்பதும், அந்த மேற்கத்திய சூழலுக்கு ஒரு வெறுப்பும் கலந்தது. அவர் என்ன சொல்கிறார் என்பதை கவனித்தால், தன் முன்னால் நடக்கும் கேளிக்கைகளை கேளிக்கையாக எடுத்துக்கொள்ளாமல், அதன் மீது வெறுப்பை எற்படுத்தி , ஒரு புனை `மரபு` மீது கவனம் செலுத்திகிறார். சில உதாரணங்கள்

...நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்......
..நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்..........
....... பொய்யான சில பேர்க்கு புது நாகரீகம் ..............
....... புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்...
.... முறையாக வாழ்வோற்க்கு எது நாகரீகம், முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்...

அவர் அப்படி பாடும்போது,ஒரு நடிகை ( சரோஜா தேவியா அது?? எனக்கு நடிகைகளைப் பற்றி தெரியாது) தூண் பின்பிலிருந்து எம்ஜீஆரை புகழும் பார்வையில் பார்க்கிறார். அந்த நடிகை புடவை, குங்குமம் வைத்து `மரபு` பெண் போல் தோற்றம் அளிக்கிறார்.

எம்ஜீஆர் புது கலாசாரத்தை, புது கேளிக்கை, வாழ்க்கை நடத்தைகலை முழுமையாக நிராகரித்து, ஒரு `மரபு` வாழ்க்கையே நிலை நாடுகிறார். எம்ஜீஆர், மேலும் அவரை தூக்கிப்பிடித்த திராவிட இயக்கத்தின் ரகசிய ஆசையே அதுதான் - புதுமையை நிராகரிக்க வேண்டும், `முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்` .

எம்ஜீஆரும், திராவிட இயக்கங்களும் புரட்சி மனப்பான்மையோ, புரட்சிகாரர்களோ அல்ல; , `புரட்சி`, `பகுத்தறிவு` முதலியவை பேச்சுக்குதான். ஒரு புனைந்த `மரபை` மீட்கொள்ள வேண்டும்.

விஜயராகவன்

Monday, June 15, 2009

ராஹுல் சங்க்ரதியாயன் - பிரவாஹன்


ஆர்வி பக்கத்தில் http://koottanchoru.wordpress.com/2009/06/09/1371/#comment-895 விவாதம் செய்துகொண்டிருந்த போது, வோல்கா (ரஷய் நதி) பக்கத்தில் ஜாதிகள் என்றார். முதலில் அது என்னவென்று புரியவில்லை. அப்புறம்தான் . அது ராஹுல் சங்க்ரித்யாயன் எழுதிய `வோல்கா ஸே கங்கா` என்ற நாவலின் பிரவாஹன் என்ற கதாநாயகனை பற்றியதாம்.
கதையாளர்கள் எதை வேண்றுமானாலும் கதையாக எழுதலாம். கதை சம்பவங்களுக்கும் ஊண்மைக்கும் தொடர்பு உண்டு என யாரும் சொன்னதில்லை. ராஹுலின் வோல்காவிலிருந்து கங்கை வரை ஆரியர் - பிரவாஹன் - என பெயர் கொண்டவன் வருவதை சிரிப்புடன் ஒரு பக்கத்தில் தள்ளிவிட்டாலும், ஒரு சிறிய விஷயத்தை பூதக்கண்ணாடியில் போட்டு பார்க்க வேண்டியுள்ளது. ஆரியர்கள் வோல்கா நதிக்கரையிலிருந்து இந்தியா வந்தனர் என்பது. அந்த கருத்துதான் இந்த கதையின் ஆதாரம்.
ஆரியர்கும் ஓல்காக்கும் எப்படி முடிச்சு போடுவது. வேதங்களை இயற்றிய சமுதாயம் தங்களை ஆரியர் என கூறிக்கொண்டது. வேத மொழி இந்தோ-இரேனியன் என பாகுபாடு செய்யப்பட்ட புனை மூல மொழியின் ஒரு பாகமாகும். இந்த இந்தோ-இரேனியன் மொழிக் குடும்பத்தினர் ஆசியாவில் மிகப் பெரும் பிரதேசத்தில் பரவியிருந்தனர். அவர்கள் பரவியிருந்த இடங்கள்
1. வடக்கு இரானிய மொழிகள் பேச்சாளர்கள் . சரித்திரம் இவர்களை ஸ்கிதியர்கள் என்வும் அறிபவர்கள், யுக்ரெய்ன் புல்வெளி பிரதேசங்கள் (ஸ்டெப் எனவும், சவான்னா எனவும் அறியப்படுகிறன). அவர்கள் மொழி தற்காலத்தில் காகஸஸ் பக்கத்தில் ஒச்சீடியாவில் வாழகிரது, (சீனத்தில் உள்ள சின் ஜியாங்))கோடானிய சாகர்கள், மேற்கு மத்திய ஆசியாவில் இருந்த சாகர்கள், சாகா திக்ரக்ஷுவாடா ( “நீள் தொப்பி சாகர்கள்”), ஹோமவர்க சாகர்கள் (சோம இலைகளை பிழியும் சாகர்கள்)
2. மேற்கு இரானியர்கள் - பழைய காலத்து அசர்பைஜான், குருது, பலூசி, பாரசீகர்கள் (பாரச்சிகர் என்பது பார்ஸா என அறியப்படும் மேற்கு மாகாணம்). தாஜிக் இனத்தவரும் இதில் சேர்கை.
3. கிழக்கு இரேனியர்கள் - பலூசிஸ்தான், டாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், அவெஸ்தான், பாக்ட்ரியா மொழி பேசுபவர்கள்
4. ஆஃப்கானிஸ்தானில் உள்ள கஃபீரி /நூரிஸ்தானி மொழிகள், சித்ரால் பள்ளத்தாக்கில் உள்ள இஸ்லாமியரற்ற கலாஷ் மக்கள். இன்று வரை இவர்கள் 4000 ஆண்டு சில வசனங்களை வைத்துள்ளனர். அவர்கள் இன்னும் இந்தொ-இரானிய “யம ராஜன்” போன்ற தெய்வங்கலை கும்பிடுகிரனர். 5. ஆஃப்கானிஸ்தானுக்கு கிழக்கெ ஆரம்பித்து அஸ்ஸாம் வரையிலுள்ள இந்தொ-ஆரிய மொழிகள் பேசுபவர்கள்.
மொழியியல் ஆய்வாளர்கள் சில அசம்ஷன்களில் வேலை செய்கிறனர். ஒரு மொழி பேசுபவர்கள் , இடம் விட்டு இடம்,., நாடு விட்டு நாடு செல்லும் போது தங்களுக்கு பிடித்த நதி, மலை பெயர்களை தூக்கி செல்கிறார்கள். அதனல் புது இடம் போனாலும் , அங்குள்ள நதி அல்லது இடங்களுக்கு தங்கள் விட்டு வந்த நாட்டில் இருந்த நதிகளின், ஊர்களின் பெயரை வைக்கின்றனர்.
வேதங்கள் எங்குமே, ஆரியர்கள் தங்கள் மற்ற நாட்டிலிருந்து வந்தோம் என காட்ட ஒரு ஆதாரமும் கொடுக்க வில்லை - அதாவது (பழைய காலத்து) இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்தோம் என நேரடியாக சொல்லவில்லை. ஆனால் மொழியியலாளர்கள் வேத மொழியை மற்ற இந்தோ-இரேனிய மொழிகளுடன் ஒப்பிட்டு ஆரியர்கள் இந்தியாவில் வந்தேரியதற்கு சில மறை முக சான்றுகள் இருக்கு என சொல்கிறனர். ரிக்வேதத்தை சார்ந்த ஜைமிநீய பிராமணத்தில் ரஸா என்ற ஒரு நதி பெயர் வருகிறதுஇதன் சில `உறவு சொற்கள்”வேத மொழி - ரஸாகிழக்கு இரேனியன் - ரஞாவடக்கு இரேனியன் - ரஹா
இது (தொல்) கிரேக்க மொழியில் உள்ள ரா (rhA). கிரேக்க மொழியில் இது வோல்கா நதியை குறிக்கும். இதுதான் வோல்கா நதிக்கும், (வேத) ஆரியர்களுக்கும் தொடர்பு. இது ஒரு மொழியியல் ஸ்பெகுலாஷன். இது மொழிகலுக்கு உள்ளெ ஒரு தொடர்பின் பாசிபிலிடியை காண்பிக்கிறது. அதனால் வேத ஆரியர் வோல்காவிலிருந்து திட்ட வட்ட மாக சொல்ல முடியாது..
மொழியியல் ஸ்பெசுலாஷஙளை சுவாரசியமாக படிக்கலாமெ தவிற, அதுதான் சரித்திரத்தின் முக்கிய ஆதாரம் என நம்புவது ஆழம் தெரியாமல் காலை விடுவதாகும்.

Friday, June 05, 2009

பாசிசம்

பாசிசம் என்ற வார்த்தை அடிக்கடி அடிபடுகிறது. அரசியல் ரீதியில் அதன் அர்த்தம் என்ன?
ஒரு புரொபசர் 20ம் நூற்றாண்டின் பல பாசிஸ்ட் அரசாங்களை (நாஜி ஜெர்மனி, இத்தாலி, சிலி, ஹங்கேரி, போன்றவை) அலசி, இப்படிப்பட்ட அளவுகோலை முன்வைத்தார்.

பாசிஸ்ட் அரசாங்கங்கள் / சமூகங்களின் குணாதிசயங்கள்
.
1. ரொமப அதீதமான தேசீய வாதம்
2. மனித உரிமைகள் மேல் பெரும் வெறுப்பு.
3. எதிரிகள் / ஸ்கேப்கோட்டுகளை ஒற்றுமையின் காரணமாக அடயாளப் படுத்துதல்
4. ராணுவத்தின் மேல் அதிகாரம்
5. பரவலான பால் சம்பந்தப்பட்ட அடையாளம்/ ஏற்றதாழ்வுகள் (Sexism )
6. ஊடகங்கள் மீது அரசாங்க கட்டுப்பாடு.
7. தேசத்தின் பாதுகாப்பின் மீது அதீத நோக்கம்.
8. மதமும், அரசாங்கமும் பிணைப்பு.
9. பெரிய கம்பெனி/நிர்வாகத்தினருக்கு பாதுகாப்பு. Corporate Power is Protected
10. தொழிலாளிகள் அடக்கு.
11. கலைஞர், அறிவுஜீவிகள் மேல் காழ்ப்பு.
12. குற்றம், தண்டனைகள் மீது அதீத நோக்கம்.
13.பரவலான ஊழலும், வேண்டியவர்க்கு பரிசுகளும்
14. நேர்மையற்ற, மோசடி தேர்தல்கள்


விஜயராகவன்

Wednesday, June 03, 2009

ஆரியர்

நான் இரு வருடம் முன் தமிழ்விக்கியில் இந்த கட்டுரையை எழுதினேன். கிரந்த எழுத்துகள் இருப்பதால் , மிக எதிர்ப்புடன் இக்கட்டுரையை அமுக்கு விட்டார்கள். தமிழ் விக்கியை ஒரு தலிபான் குழு தன் கட்டுப்பாடில் வைத்துள்ளது. அது வேற விஷயம். அப்படி இருக்க , நான் எழுதிய கட்டுரை

பொருளடக்கம்
1 ஆரியர் யார்
2 சில சொல்லாட்சிகள்.
3 அத்தாட்சிகள்.
4 உருவம்
5 ரிக்வேதங்களின் ஆர்யர்
6 அரசியல் ஆக்கம்.
7 பொருளாதாரம்/வாழ்க்கை.
8 மற்ற ரிக்வேத மக்கள்
9 வேத இயல்கள்
10 சாமவேத ஸம்ஹிதைகள்.
11 யஜுர்.
12 அதர்வ வேதம்.

ஆரியர் யார்

ஆரியர் என்பவர் யார்? வேதங்களை இயற்றிய சமுதாயம் ஆரியர் என்று தங்களை கூறிக்கொண்டது. வேத காலத்தில் ரிஷிகளும், விப்ர என் அறியும் பெரியவர்களும், வேத யாகங்களை ஏற்ப்படுத்திய அரசர்களும், கனவான்களும், அவர்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் தங்களை ஆரியர் என அழைத்தனர். அதே சமயம் இரான் நாட்டில் எழுந்த அவெஸ்தா சமய மக்களும் தங்களை ஆரியர் என அழைத்துக் கொண்டனர். இந்திய நாட்டில் வேத கா லத்திலிருந்து எழுந்த சமயங்களும், அதை பின்பற்றுபவர்களும் தங்களை ஆரியர் என அழைக்கின்றனர். புத்த, சமண மத நூல்களும் தங்களை 'ஆரிய' என அழைத்தன. உதாரணமாக புத்த மதம் "நான்கு ஆரிய உண்மைகள்" மற்றும் "எட்டு ஆரிய வழி" எனவும் தெரிய வந்தது. கௌஷிடகி அரண்யகத்தில் (பகுதி 8.9) "ஆரிய நாடு" என்பது "ஆரிய வாக்கு" கேட்கும் நாடு - அதாவது வேத யாகங்கள் நடுக்கும் நாடு என வறை அறுக்கப்பட்டது. பாரசீக மன்னன் தேறெயஸ்-1 (கி.மு.520) தான் ஆரிய வம்சத்தில் வந்தவன் என கல்வெட்டு ஏற்றினார். பழைய காலத்து கிழக்கு ஈரானிய(தற்கால கிர்கிஸ்தான், பலூசிஸ்தான், மேற்கு ஆப்கானிஸ்தான், துற்க்மேனிஸ்தான், கஸக்ஸ்தான்) மக்களும் தன்னை ஆரிய என அழைத்து வந்தனர். இரான் என்ற வார்த்தயே ஆரிய என்பதின் திறிபு ஆகும்.பழைய இரானிய சமயநூலான அவெஸ்தாவில் 'ஆர்யாணம் வாஜஹோ' என்பது ஆரியரின் பிறப்பிடம் என சொல்லப் படுகிறது. வேதங்களை அலசினால், இந்திய துணைக்கண்டத்தின் வெளியே ஒரு அறிவும் இல்லை; வேதங்களில் ஆரியர் தாங்கள் வெளிநாட்டில் இருந்து புலம் பெயர்ந்தோம் என இம்மியும் ஒரு அடையாளமும் காட்டவில்லை .


சில சொல்லாட்சிகள்.

மேற்கத்திய மொழியியலாளர்கள் 20ம் நூற்றாண்டிலிறுந்து வட இந்திய மற்றும் இரானிய மொழிகளை ஆரிய மொழிகள் என அழைத்தனர். ஆனர், தற்காலத்தில் இவற்றின் மூல மொழி மறு பாகுபடுத்தப் பட்ட இந்தோ-இரானியன் என அழைக்கப் படுகிறது. 19ம் நூற்றாண்டில் பல ஐரோப்பிய அறிஞர்கள் இந்தோ-ஐரோப்பிய மொழி குடும்பம் பேசும் எல்லோரையும் 'ஆரியர்' என அழைத்தனர். அத மிகப் பெறும் தவறு என அர்த்தத்தை கை விட்டு விட்டனர். பின் கற்காலத்தில் இருந்து ஒரு 'மொழி' பேசுபவர்களுக்கும், ஒரு 'இனத்தார்" உக்க்கும் சம்பந்தம் இல்லை. ஒரு மொழி பேசுபர்கள் பல இனங்களில் உள்ளனர்; அதே போல், ஒரு இனத்திலேயே பல மொழிகளும் உள்ளன. குழப்பங்களை தவிற்க்க இப்பொழுது இவ்வாறு சொல்லாளப்படுகிரது.

இந்தோ-இரானியன் - (புனை) மூல மொழி, அதிலிருந்து வந்த மொழி குடும்பம்.

இந்தோ-ஆரியன் - சமஸ்கிருதம், சமஸ்கிருதத்திலிருந்து வழியாக வந்த வடஇந்திய/பாகிஸ்தானிய/பஙகளாதேச/சிங்கள மொழிகள்.

ஆரியர் - மனித இனம், சமுதாயம்.அத்தாட்சிகள்.நமக்கு 'ஆரியர்' என்ற இனம் பற்றி வேதங்களில் இருந்து முக்கியமாக அத்தாட்சி கிடைக்கிறது. அதால் வேதங்களில் என்ன தகவல்கள் உள்Çன என கணக்கிடுவது முக்கியமானதாகும். வேதங்கள் பல்லாயிக் கணக்கான சூத்திரங்களாகவும் , மேலும் மரபினால் ஒரு த்வனியும் ஸ்வரமும் பிசகாமல் , யாயோடு வாயாக சொல்லிக் கொடுக்க்ப்பட்டு, நம்மிடம் உள்ளன. அதனால் தால் மொழி ஆய்வாளர்கள் வேதங்கள் மனித டேப் ரிகாடர்கள் என கருதுகிறார்கள். அதாவது வேத காலத்தில் எப்படி வேத வாக்குகள் பேசப் பட்டதொ, அதே பேசு வகையில் இன்றும் உள்ளன. இது உலகத்திலெயே ஒரு அதிசயமாகும். அதே சமயம் நம்மிடம் கல்வெட்டு, கட்டிடம், ஆயுதம் போன்ற நிரந்தர பொருள் அத்தாட்சி இல்லை. அதனால் வேத மற்றும் வேதத்தை சார்ந்த சொல் அத்தாட்சிகளைதான் நம்ப வேண்டும்.

வேதங்கள் முக்கியமாக சமய மந்திரங்கள்.- கடவுளை வழிபாடும் மந்திரங்கள் (ரிக்), இயல், பாசுரங்களில் மற்றைய மந்திரங்கள் ( ஸாம, யஜீர், அத்ர்வ வேத ஸம்ஹிதைகள்) வேத (ஸ்ரௌத) பூசனைகள் மற்றும் ப்ராஹ்மணைகள், க்ருஷ்ன யஜுர் வேத ஸம்ஹிதைகள், மேலும் பூசனைக்கு உறைகள். உபநிஷத்துக்கள் முதல் தத்துவ கோட்பாடுளை கொண்டன. ஸ்ரௌத சூத்திரங்கள் பூசனைகளை ஒருமுகமாக செய்கிறது,. மேலும் க்ரஹ்ய சூத்திரங்கள் வீட்டு பூசனைகளையும், தர்ம ஸாஸ்த்ரங்கள் ஆரியர் ஒழுங்கு முறைகளையும் விவரிக்கின்றன. வேத மொழியும் மற்ற மொழிகளை போல கால மாற்றங்களை காட்டுகிறது. அப்படி அலசும் போது வேத மொழியில் 5 தளங்களை பார்க்கலாம்.

அ) ரிக் வேத மொழி (10 வது ரிக் வேத மண்டலம் கடைசியாக சேர்க்கப் பட்டவை).

ஆ) மந்திர மொழி ( அதர்வ, சாம மந்திரங்கள் - ரிக், யஜுர் வேத மொழியில் கொஞ்சம் மாறுபட்டவை).

இ) க்ரிஷ்ண யஜுர் வேத சம்ஹிதைகளின் இயல் (மைத்ராயணி ஸம்ஹிதை, கதா ஸம்ஹிதை, தைத்ரீய சம்ஹிதை).

ஈ) ப்ரஹ்மணை மொழி - அரண்யகங்கள், முதல் உபநிஷத்துக்கள், பௌதாயண ஸ்ரௌத சூத்ரம்

உ) சூத்திர மொழி - செவ்வியல் ஸமஸ்க்ருதத்தின் முன்னோடி

தொல் இரானியர்களும் வேதங்களை போல ஸாகித்யங்களை செய்தனர் (ஆனால் வேதங்களுக்கு மாறாக, அவை புழக்கத்தில் இல்லை). பாரசீகம் இஸ்லாம் சமயத்திற்க்கு மாற்றப் பட்ட போது பல ஸாஹித்யங்கள் அழிந்து விட்டன. அதனால் தொன் அவெஸதாவின் பத்தில் ஒரு பகுதிதான் இன்று கிடைக்கிறது. 5 நீள கதாக்கள் ஸருதஷ்றாவினால் இயற்றப் பட்டவை. இவை ரிக் வேத உருவத்தில் உள்ளன. சம கால பூசனை மந்திரங்களான 'யஸ்ன ஹப்தாங்கைதி' யஜுர் வேதம் போல ஆகும். இவை நெருப்பு பூசைகளுக்கு இயற்றப் பட்டவை. மற்ற அவெஸ்தா புத்தகங்கள் ஸருதாஷ்ற்றாவிற்க்கு பின்பு வந்தவை. சில யஸ்னா புததகங்கள் பிராம்ஹணை போல இயல்கள். மற்ற வேத கால சமபாடுகள் நிராங்கிஸ்தான் (ஸ்ரௌத சூத்ரங்கள் போல இயற்றப் பட்டவை), விதேவதாத் (க்ர்ஹ்ய, தர்ம சூத்திரங்கள் போல) ஆகும்


உருவம்

ஆரியர்களின் உருவம் எப்படி, எப்படி காட்சி அளித்தார்கள்? வேதங்களில் இருந்து ஆரியர்களின் உருவப்படத்தை செய்வது கஷ்டம்; ஏனெனில் தனி மனிதர்களின் வர்ணனைகள் இல்லை. அதனால் அவர்கள் உயரம், கனம், முகபாவம், என்பதை பற்றி தெறிந்து கொள்ள முடியவில்லை. மேலும், இறந்தவர்களை ஆரியர்கள் எரித்ததால், ஒரு ஆரிய சடலமும் கிடைக்க வில்லை.

ரிக்வேதங்களின் ஆர்யர்

ஆரியர் தந்தை வழி வம்ச சமுதாயத்தினர், வர்ணம் என அழைக்கப்படும் சமூக வர்கங்களை (அரசர், புலவர், சாமான்யர்கள்) கொண்டு, கோத்திரம் என்ற வகுப்புகளை கொண்டவர். சில சமயம் ஆரியர் தம்முள் இனக் கூட்டணிகளை உண்டக்கினர். அனு-த்ரஹ்யு, யது-துர்வாசா, புரு-பாரதா, பாரதா- ஸ்ர்ஞ்சயா, ரிக் வேத பத்து-அரசர் கூட்டணி (ரிக்- 7.18) போன்றவை உதாரணங்களாகும்.ஆரிய கூட்டங்கள் தன் மத்தியிலும், ஆரியரில்லாதவரிடனும் போர் தொடுத்தனர். அப்போர்கள் பொரம்போக்கு நில உரிமை காரணமாக ஏற்ப்பட்டன. (லோகா என்றால் முதலில் மாடு மேயும் இடம் என பொருள்- அது பிற்க்காலத்தில் உலகம் என அர்த்தம் ஆனது. ரிக்வேதத்தில் 'ஆரியர்' என்ற சொல் 34 மந்திரங்களில் 36 தடவை வந்து, மேற்கொண்ட கூட்டங்களை விவரிக்கிறது.

ஆரியர்கள் பல ஐதீகங்கள் கொண்ட கடவுளரை வணங்கினர் - ஆண் தெய்வம் அக்னி, வாயு, த்யஹு பிதா, ப்ரித்வி, பெண் தெய்வம் உஷஸ், ஆர்யமான், மித்ரா, வருணா, பாகா, இந்திரன். இந்திரன் முக்கியமான போர் கடவுள். இக்கடவுள்கள் பிரபஞ்சத்தையும், அண்ட சராசரங்களையும், மனித வர்கத்தயும் கட்டுப்பாடில் வைத்துள்ளனர். எல்லா கடவுள்களும் ரிதா என்ற "வாய்மை சக்தி"க்கு அடிபட்டவராவார்கள். 'ரிதா' பிற்காலத்தில் 'த்ர்மம்' என்ற கோட்பாடு ஆகியது.
உதாரணம். ரிக் வேதம் 10ம் புத்தகம் 133 அத்யாயம்

இந்திரனே, உன் தயவில் நாங்கள் பணிகிறோம்
எங்களை ரிதா வழியில் துக்கங்களுக்கு அப்பால் இட்டுப் போ.

'தர்மம்' என்ற கருத்து ரிக்வேத 'ரிதா' என்ற கருத்தில் வந்தாலும், இவை சரி சமம் அல்ல.
நிச்சயமாக தர்மம்தான் வாய்மை.
அதனால் சத்தியத்தை பேசுகிறவர் "தர்மத்தை பேசுகிறார்" என்பர்.
தர்மத்தை பேசுகிறவரை 'அவர் வாய்மையை பொழிகிறார்" என்பர்.
அதனால் இரண்டும் ஒன்று.
(ப்ரஹதாரண்யக உபநிஷத் 1.4.14).

கடவுள்கள் வருடாவருடம் அசுரர் என அழைக்கப்பட்ட தன் எதிரிகளுடன் சண்டையிட்டனர். ஆரியர் கடவுள்களை அகலமான பூசனை மூலமாக வணங்கினர் - உதரணம் வருடாந்திர ஸோம யஞைகள். இந்த யஞைகள் பல ஆசார்யர்கள் கலந்து கொண்டு, பொது மக்களுக்கு நடுவில் பகிரங்கமாக கொண்டாடப் பட்டவை. இப்பூசனைகளில், கடவுள்கள் யஞ்ன பூமிக்கு அழைக்கப் பட்டு, அக்னி குண்டத்திற்கு பக்கத்தில் உட்கார கேட்டுக் கொள்ளப் பட்டனர். அவர்களுக்கு சோம பானத்துடன் மற்ற நைவேத்தியகளை செலுத்திய பின், ரிஷி, விப்ரா, ப்ரஹ்மணர் போன்ற அப்யாசம் செய்த புலவர்கள் அவர்களை போற்றினர். இப்புலவர்கள் தங்கள் செய்யுள்களை (சூக்தங்கள்) நீண்ட நேர எண்ணத்தின் பிறகு இயற்றினர் (த்யானம்); சில சமயம் அதே இட தருணத்திலேயே போற்றும் சுக்தங்களை செய்தனர். சில போற்றல்கள் தங்கள் எஜமானர் மேலும் இயற்றினர் (தனஸ்துதி). வயது கிரியைகள் - கல்யாணம், மரணம் தவிற - இன்னும் பிரபலமாகவில்லை. பாலகர்கள் மரபு அறிவு (வேதங்கள்) கற்று முடித்து, தங்கள் பொருளாதார வாழ்விற்க்கு பசுக்களை சேமித்த பின், ஆதவர் சமுதாயத்தில் சேர்க்கப் பட்டனர்.


அரசியல் ஆக்கம்.

ரிக்வேத மக்கள் முதலில் சிறிய கூட்டங்களாகவே வாழ்ந்தனர். சில தலைமுறைகளுக்குள் குரு பேரரசு, ஆரிய சிற்றரசர்களை உள்ளணைத்து பெரிய ராஜ்ஜியமானது. (அதனால்தால் இன்றும் குருக்ஷேத்ரா என்ற நகரம் தில்லிக்கு அருகில் உள்ளது). வேத காலத்தில் பாரதர் என்ற ஆரிய கூட்டத்தினர் ஆரியர்களுடையே மிக பிரபலமாகினர். பாரதர்களின் மிகப் பெரிய அரசன் சுதாஸ். பாரதர்களை விவரிக்கும் ரிக் வேத சுட்டிகள்.
புத்தகம் 1 . 96.3; பு.2 . 7.1, 5; 36.2; பு3. 23.2; 33.11, 12; 53.12, 24; பு4. 25.4; பு5. 11.1; 54.14; பு6.16.19, 45; பு7.8.4; 33.6.
பாரதர்கள் புரு குலத்தினரின் ஒரு கிளை. புருக்களைப் பற்றியும் பல ரிக்வேத சுட்டிகள் உள.
பு1.59.6; 63.7; 129.5; 130.7; 131.4; பு2.21.10; 38.1, 3; 39.2; பு6.17.1; பு6.20.10; பு7.5.3; 8.4; 18.13; 19.3; 96.2; பு8.64.10; பு10.4.1; 48.5.
பாரத அரச வம்சத்து சந்ததியினர்..
பாரதன்.
தேவவாதன்.
ஸ்ர்ஞயன்.
வத்ரையஸ்வன்.
திவோதாஸன்.
ப்ரதர்தனன்.
பிஜவனன்.
சுதாஸ்.
சகதேவன்.
சோமகன்.
இதைத்தவிற மற்ற சிற்றரசர்கள் பெயர்களும், பட்டியளும் ரிக்கில் உள.


பொருளாதாரம்/வாழ்க்கை.

மற்ற ரிக்வேத மக்கள்

ரிக்வேதத்தின் பெரிய பகுதிகள் புரு மற்றும் பாரத கூட்டங்களினால் இயற்றப் பட்டவை. ஆரியர்களின் எதிரிகளில் முக்கியமன பெயர் 'தாஸா'/ 'தஸ்யு". யார் இந்த தாஸா/தஸ்யு ? இரானிய நூல்களின் சொல்லப்படும் 'தாஹா' , கிரேக்க நூல்களில் சொல்லப்படும் 'தாஹெ' மக்களும் ஒன்றே. எனெலில் வேதமொழி ஸா > தொல் இரானிய ஹா என்று மாற்றம் அடைகிரது. அதனால் தாஸா, தாஹா என சொல்லப்படுபவர் வட இந்திய சமவெளிகள், மத்திய ஆசிய, பாரசீக நிலங்களில் ஒரு காலத்தில் பரவியிருக்க வேண்டும். அவர்கள் ஆரியரை விட உருவத்தில் மாற்றமடைந்தவர்கள் என்பதிற்க்கு ஆதாரம் இல்லை. ஆனால் ஒன்று நிச்சயம் - தாஸா வேத மதத்தையும், சடங்குகளையும் பின்பற்றவில்லை - அதனால்தான் ஆரியர்-தாஸர் காழ்ப்பு.மற்ற ஆரியரில்லாத மக்கள் கிராதகர்கள். இவர்கள் வேடுபவர்களாக தெரிகின்றனர்.

வேதகால இலக்கியங்கள் -.

வேதங்கள் - சடங்குகள்..
ப்ரஹ்மணை - சடங்குகளுக்கு உரைகள்..
அரண்யகம் - உரைகளில் இருந்து இன்னும் சில கருத்துகளை வளர்கிறது, காலாகாலத்தில் ஒரு கிளையின் மற்ற உரைகளும் இதில் அடங்கும்.
உபநிஷத் - இன்னும் சில கோட்பாடுகளையும் தத்துவங்களையும் வளர்க்கிறது.
சூத்திரங்கள்- வழிபாடு, ஆசனமங்களுக்கு அறவழக்கங்களை கொடுக்கிறது.


வேத இயல்கள்வேதங்கள் "சாகா" அல்லது கிளை மூலமாக வேதகாலத்திலிருந்து இதுவரை சேரக்கட்டப் படுகிறது. ஒவ்வொரு கிளையும் பல பிராமண குடும்பங்களை கொணடவை. அந்த குடும்பங்கள் அந்த வேத கிளையில் நிபுணர்கள். ஏன் இந்த கட்டுபாடு என்றால், ஆரியர்கள் தங்கள் மத கருத்துகளை எழுத்து, புத்தக வடிவத்தில் போட மறுத்தனர். அதனால் எல்லாம் வாழையடி வாழையாக ஞாபகத்தில் வைக்கப் பட்டது; அதனால் ஒவ்வொரு கிளையும் தகப்பனிடமிருந்து மகனுக்கு மாற்றும் குடும்ப மரபாயின.
ரிக்
--------------------------------------------------------------------------------
ரிக் வேத ஸம்ஹிதைகள்.
ஐத்ரேய ப்ராஹ்மணா.
ஐத்ரேய அரண்யகை.
ஐத்ரேய உபநிஷத்.
கௌஷிடகி ப்ராஹ்மணா.
கௌஷிடகி அரண்யகை.
கௌஷிடகி உபநிஷத்.
ஆஸ்வலாயன ஸ்ரௌத சூத்திரம்.
ஆஸ்வலாயன க்ரஹ்ய சூத்திரம்.
சாங்காயன ஸ்ரௌத சூத்திரம்.
கௌஷிடகி க்ரஹ்ய சூத்திரம்.
வசிஷ்ட தர்ம சூத்திரம்.


சாமவேத ஸம்ஹிதைகள்.கௌத்தும சாகா.
பஞ்சவிம்ச ப்ராஹ்மணா.
சத்விம்ச ப்ராஹ்மணா.
மந்த்ர ப்ராஹ்மணா.
சாந்தோக்ய உபநிஷத்.
மசாக கல்ப சூத்திரங்கள்.
லாத்யாயன ஸ்ரௌத சூத்திரம்.
கோபில/கௌத்தும க்ரஹ்ய சூத்திரம்.
கௌதம தர்ம ஸாஸ்த்ரம்.
ராணானனீய சாகா.
த்ராஹ்யாயன ஸ்ரௌத சூத்திரம்.
த்ராஹ்யாயன/ காதீர க்ரஹ்ய சூத்திரம்.
ஜைமிநீய சாகா.
ஜைமிநீய ப்ராஹ்மணை.
ஜைமிநீய உபநிஷத்.
கேன உபநிஷத்.
ஜைமிநீய ஸ்ரௌத சூத்திரம்.
ஜைமிநீய க்ரஹ்ய சூத்திரம்.


யஜுர்.மைத்ராயனி ஸம்ஹிதை.
மானவ ஸ்ரௌத சூத்திரம்.
மானவ க்ரஹ்ய சூத்திரம்.
வராஹ ஸ்ரௌத சூத்திரம்.
வராஹ க்ரஹ்ய சூத்திரம்.
மானவ தர்ம சூத்திரம்.
மனு ஸ்ம்ரிதி.
கதா ஸம்ஹிதை.
கதா ப்ராஹ்மணை.
கதா ஆரண்யகை.
கதா ஸ்ரௌத சூத்திரம்.
கதா க்ரஹ்ய சூத்திரம்.
கதா தர்ம சூத்திரம்.
விஷ்ணு ஸ்ம்ரிதி.
கதா கபிஸ்தல ஸம்ஹிதை.
கதா கபிஸ்தல ப்ராஹ்மணை.
தைத்ரீய ஸம்ஹிதை.
தைத்ரீய ப்ராஹ்மணை.
வாதுல ப்ராஹ்மணை.
தைத்ரீய அரண்யகை.
தைத்ரீய உபநிஷத்.
மஹாநாராயண உபநிஷத்.
பௌதாயன ஸ்ரௌத சூத்திரம்.
வாதூல ஸ்ரௌத சூத்திரம்.
பரத்வாஜ ஸ்ரௌத சூத்திரம்.
ஆபஸ்தம்ப ஸ்ரௌத சூத்திரம்.
ஹிரண்யகேசி ஸ்ரௌத சூத்திரம்.
வைகநாச ஸ்ரௌத சூத்திரம்.
பௌதாயன க்ரஹ்ய சூத்திரம்.
வாதூல க்ரஹ்ய சூத்திரம்.
பரத்வாஜ க்ரஹ்ய சூத்திரம்.
ஆபஸ்தம்ப க்ரஹ்ய சூத்திரம்.
ஹிரண்யகேசி க்ரஹ்ய சூத்திரம்.
வைகநாச ஸ்ரௌத சூத்திரம்.
பௌதாயன தர்ம சூத்திரம்.
வாதூல ஸ்ம்ரிதி.
ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம்.
வைகநாச தர்ம சூத்திரம்.
வாஜஸனேயி ஸம்ஹிதை.
ஸதபத ப்ராஹ்மணா.
ஸதபத ஆரண்யகை.
ப்ரஹதாரண்யக உபநிஷத்.
ஈச உபநிஷத்.
காத்யாயன ஸ்ரௌத சூத்திரம்.
பாரஸ்கர க்ரஹ்ய சூத்திரம்.
யாஞவல்கிய ஸ்ம்ரிதி.


அதர்வ வேதம்.பைப்பாலட சம்ஹிதை.
அகஸ்த்ய ஸ்ரௌத சூத்திரம்.
சுமந்து தர்ம சூத்திரம்.
--------------------------------------------------------------------------------

இந்தியயியல் (இந்தாலஜி) சுட்டிகள்:

J. Bronkhorst & M.Deshpande, Aryan and Non-Aryan in South Asia.
Thieme, Paul. Der Fremdling im Rigveda. Leipzig 1938.
Erdosy, George.(ed.). The Indo-Aryans of Ancient South Asia. .
Oldenberg, Hermann. Die Hymnen des Rigveda, Band I. Metrische und textgeschichtliche Prolegomena, Berlin : Wilhelm Hertz 1888.
Oldenberg, Hermann Der vedische Kalender und das Alter des Veda. ZDMG 48, 629 sqq.
Rau, Wilhelm. Staat und Gesellschaft im alten Indien nach den Brahmana-Texten dargestellt, Wiesbaden: O. Harrassowitz 1957.
Rau, Wilhelm , Zur vedischen Altertumskunde, Akademie der Wissenschaften zu Mainz, Abhandlungen der Geistes- u. sozialwissenschaftlichen Klasse 1983, No. 1. Wiesbaden : F. Steiner 1983 .
Jamison, S. and M. Witzel: Vedic Hinduism. In: A. Sharma (ed.), Studies on Hinduism.
G. Erdosy (ed.) The Indo-Aryans of Ancient South Asia.
M. Witzel (ed.), Inside the Texts, Beyond the Texts. New Approaches to the Study of the Vedas.
M. Witzel http://www1.shore.net/~india/ejvs/ejvs0703/ejvs0703article.pdf.
Parpola, Asko. The coming of the Aryans to Iran and India and the cultural and ethnic identity of the Dasas, Studia Orientalia (Helsinki) 64, 1988, 195-302.
M.Witzel- , On Magical thought in the Veda. Leiden: Universitaire Pers 1979 .
M.Witzel-, On the localisation of Vedic texts and schools (Materials on Vedic Såkhås, 7). G. Pollet (ed.), India and the Ancient world. History, Trade and Culture before A.D. 650. P.H.L.
M.Witzel- The Development of the Vedic Canon and its Schools: The Social and Political Milieu. (Materials on Vedic Srauta s 8). In: Inside the Texts, Beyond the Texts.
M.Witzel ---, The Home of the Aryans. In: Anusantatyai. Fs. fur Johanna Narten zum 70. Geburtstag, ed. A. Hintze & E. Tichy. (Munchener Studien zur Sprachwissenschaft, Beihefte NF 19) Dettelbach: J.H. Röll 2000, 283-338 .
Edwin Bryant The Quest for the Origins of Vedic Culture: The Indo-Aryan Migration Debate.
Edwin Bryant Indo-Aryan Controversy: Evidence and Inference in Indian History.

இந்தியர்களின் ஆய்வு சுட்டிகள்

Chauhan, D.V. Understanding �gveda. Poona: Bhandarkar Oriental Institute 1985.
Coomaraswamy, Ananda K. Horse-riding in the �gveda and Atharvaveda, Journal of the American Oriental Society 62, 1941, 139-140.
Danino, Michel. The invasion that never was / Song of humanity by Sujata Nahar. Delhi: Mother's Institute of Research & Mira Aditi, Mysore 1996.
Danino, Michel. http://micheldanino.voiceofdharma.com/tamilculture.html
Deo, S. B. and S. Kamath (eds.) The Aryan Problem. Pune: Bharatiya Itihasa Sankalana Samiti 1993.
Elst, K. Update on the Aryan Invasion Debate. Delhi: Aditya Prakashan 1999.
Feuerstein, G., S. Kak and D. Frawley. In search of the Cradle of Civilization. Wheaton: Quest Books 1995.
Ganapati, S.V. Sama Veda. Madras : S.V. Ganapati 1982.
Kalyanaraman, S. Rigveda and Sarasvati-Sindhu Civilization. Aug. 1999 at: http://sarasvati.simplenet.com/html/rvssc.htm .
Kochhar, Rajesh. The Vedic People: Their History and Geography. New Delhi: Orient Longman 1999.
Mathivanan, R. Indus script among Dravidian Speakers. Madras: International Society for the Investigation of Ancient Civilisations 1995.
Rajaram, N.S. The Aryan invasion of India: The myth and the truth. New Delhi: Voice of India 1993 .
Rajaram, N.SThe politics of history. New Delhi: Voice of India 1995 .
Rajaram, N.Sand D. Frawley. Vedic Aryans and the Origins of Civilization: A Literary and Scientific Perspective. (2nd ed.).
Sethna, K. D. - , The Problem of Aryan Origins From an Indian Point of View. Second extensively enlarged edition with five supplements. New Delhi: Aditya Prakashan 1992 [first ed. Calcutta : S. & S. Publications 1980].
Sharma, R.S. Looking for the Aryans. Hyderabad: Orient Longman 1995.
Shendge, M. The civilized demons : the Harappans in Rgveda. New Delhi : Abhinav Publications 1977.
Singh, Bhagavan. The Vedic Harappans. New Delhi: Aditya Prakashan, 1995.
Talageri, Shrikant. Aryan Invasion Theory and Indian Nationalism. New Delhi: Voice of India 1993. [also = New Delhi: Aditya Prakashan 1993] .
Talageri, Shrikant, Rigveda. A Historical Analysis. New Delhi: Aditya Prakashan 2000 .
Tilak, B.G. The Orion; or, Researches into the antiquity of the Vedas. Poona: Tilak Bros. 1893 .
Tilak B.G., The Arctic home in the Vedas : , 1903.
Waradpande, N.R. Fact and fictions about the Aryans. In: Deo and Kamath 1993, 14-19 .
Waradpande, N.R The Aryan Invasion, a Myth. Nagpur: Baba Saheb Apte Smarak Samiti 1989 .

==============================================================================================

Monday, May 18, 2009

விழுந்த ஈழப் போராளிகளுக்கு ஒரு நினைவு

இன்று ஈழத் தமிழர்களுக்கு ஒரு துக்க நாள். 30 வருடம் நடந்த போர் தோல்வியில் முடிந்து, கிட்டத்தட்ட எல்லா போராளிகளும், அவர்கள் தலைவர்களும் மரணம். மேலும் இங்கிருந்து பாதை என்ன என தெரியவில்லை.

ஈழப் புலிகள் மேல் எனக்கு எவ்வளவோ விமர்சினங்கள் - அவர்களின் பெரிய பெரிய தவறுகளால் தோல்வி அடைந்த்னர். அப்படி இருந்தும், அவர்கள் கட்டுப் பாடு, வீராமை, அஞ்சாமை, முதலியவற்றை பாராட்டாமல் இருக்க முடியாது. என் உணர்வுகளை வெளிப்படுத்துவது

http://www.youtube.com/watch?v=LZLMKkEGFRo

ஸ்பார்டகஸ் என்பவன் ரோமாபுரி பேரரசுக்கு எதிராக, அடிமைகளின் புரட்சியை தொடங்கினான். கடைசியின் அந்த புரட்சி ரோம சாம்ராராஜ்யத்தால் கொடூரமான முறையில் அடக்கப் படடது.

விஜயராகவன்

Friday, May 08, 2009

இறையாண்மை

இப்பொழுது, தமிழில் அடிக்கடி வரும் சொல் இறையாண்மை. இந்தியாவின் இறையாண்மை, இலங்கையின் இறையாண்மை போல. அது ஆங்கில
integrity or soverigntyஎன்ற அர்த்ததில் வருகின்றது. அது இண்டெக்ரிடியா அல்லது சாவெரெண்டியா என்றும் சரியாக தெரியவில்லை.

இந்த சொல் இறையாண்மையை இப்போதுதான் செய்துள்ளனர். சென்னை பல்கலை கழக பேரகராதி இப்படிப் பட்ட ஒரு சொல்லை குறிக்க வில்லை. அதற்கு அருகில் வரும் சொற்கள்

. இறைமை iṟai-mai : (page 366)
3. Long, boat-shaped wooden trough suspended for watering fields; நீரிறைக்கும் மரப்பந்தல். (J.)
இறைமை iṟai-mai
, n. < இறை¹. 1. Kingly superiority, eminence, celebrity; தலைமை. வீரங் குறைவரே யிறைமைபூண்டோர் (கம்பரா. மூலபல. 46). 2. Government, dominion; அரசாட்சி. பாண்டியற் குத்

சரி , இறை என்றால் லெக்சிகான் என்ன சொல்லுகிறது.

இறை¹ iṟai
, n. < இற-. 1. Height; உயரம். ஏந்துகொடி யிறைப்புரிசை (புறநா. 17, 27). 2. Head; தலை. (சூடா.) 3. Supreme God; கடவுள். இறை நிலையுணர்வரிது (திவ். திருவாய். 1, 3, 6). 4. Šiva; சிவன். (பிங்.) 5. Brahmā; பிரமன். (பிங்.) 6. King, sovereign, monarch; அரசன். இறைகாக்கும் வையக மெல்லாம் (குறள், 547). 7. Eminence, greatness; தலைமை. (பிங்.) 8. Impartiality; justice; நடுவுநிலைமை. கண்ணோடா திறைபுரிந்து (குறள், 541). 9. [K. eṟe.] Any one who is great, as one's father or guru or any renowned and illustrious person; உயர்ந்தோன். (தொல். பொ. 256; திவா.) 10. Superior, master, chief; தலைவன். (திவா.) 11. Elder brother; தமையன். (பரிபா. 11, 8.) 12. Husband, as lord of his wife; கண வன். நப்பின்னைதக்கிறை (திவ். பெரியதி. 2, 3, 5). 13. [K. eṟake, M. iṟa.] Inside of a sloping roof, eaves of a house; வீட்டிறப்பு. குறியிறைக் குரம்பை (புறநா. 129). 14. Feather, quill; இறகு. (பிங்.) 15. Wing, plumage; சிறகு. 16. Death, dying, extinction; இறக்கை. (கலித். 18, உரை.) 17. Mango tree; மாமரம். (மலை.)இறை² iṟai
, n. < இறு²-. 1. Abiding, halting, tarrying; தங்கல். நெஞ்சிறை கொண்ட (மணி. 4, 69). 2. Seat; ஆசனம். இறையிடை வரன்முறை யேறி (கம்பரா. அயோத். மந்திர. 12). 3. Duty, obligation; கடமை. (திவ். திருவாய். 5, 2, 8.) 4. [M. iṟa.] Tax on land, duty, share of the produce accruing to the king as rent; அரசிறை. இறைவற் கிறையொ ருங்கு நேர்வது நாடு (குறள், 733). 5. Answer, reply; விடை. எண்ணிறையுள் (நன். 386). 6. Lines inside the finger joints; விரல்வரை. இறைக்கரஞ் சிவப் பெய்திட (இரகு. நாட்டுப். 34). 7. Measure of the first joint of the fore-finger being about 1 inch; விரலிறையளவு. 8. Very small particle, atom, minute quantity, short space of time; அற்பம். இறையு ஞானமி லாதவென் புன்கவி (கம்பரா. சிறப்பு. 10). 9. Wrist, fore-arm; முன்கை. எல்வளை யிறை யூரும்மே (கலித். 7). 10. Arm; கை. இறைவளை யாழ்தழீஇ யிருப்ப (சீவக. 656). 11. Joints of the body; உடலுறுப்பின் மூட்டுவாய். இறைகளவை நெறு நெறென (திவ். பெரியதி. 5, 10, 4). 12. Corner; மூலை. முடங்கிறை (முல்லை. 87).

திருக்குறளில் இறை என்றால் King, sovereign, monarch; அரசன் என்ற அர்த்தத்தில் வருகிண்ட்ரது. அப்படியானல் இறைமை -வைத்திருக்கலாம். இறையாண்மை என்பது மடத்தனமாக உள்ளது.

Monday, March 09, 2009

சில கடிதங்கள்

நான் சரியாக இதுவரை ஊடகங்களுக்கு எழுதிய கடிதங்களை சரியாக சேமிக்க / தொகுக்க வில்லை. இனிமேலாவது செய்ய வேண்டும். சமீபத்தில் அனுப்பியது.

http://www.uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=௧0௭௩


‘தென்கிழக்காசியாவில் வன்முறையும் பின்நவீனத்துவமும் - தமிழவன் ‘
தமிழவன் இந்தியத் துணைக் கண்டத்தை ‘தென்கிழக்காசியா’ என்கிறார். பொதுவாக உலக அரசியலில் இந்தியத் துணைக் கண்டத்தைச் சார்ந்த நாடுகளை ‘தென் ஆசியா’ என்றழைக்கின்றனர். உதாரணமாக பாரக் ஒபாமா அல்லது கார்டன் பிரௌன் பாகிஸ்தானையோ, இலங்கையையோ, இந்தியாவையோ குறிப்பிடும் போது ‘தென்னாசியா’ என்பார்கள். ‘தென்கிழக்காசியா’ என்பது பர்மா, மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம், லாவோஸ், கம்போடியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைக் குறிப்பதாகும். உதாரணமாக, 1977இல் அமெரிக்கா தலைமையில் கம்யூனிஸ்டுகளை எதிர்க்க ’தென் கிழக்கு ஆசியா ஒப்பந்த அமைப்பு’ SouthEast Asia Treaty Organization என்பது இருந்தது. அதன் உறுப்பினர்கள் மலேசியா, சிங்கபூர்,இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ்.
http://en.wikipedia.org/wiki/SEATO
’தென் கிழக்கு ஆசிய நாடுகள் சங்கம்`
http://en.wikipedia.org/wiki/ASEAN
தென்னாசியா பற்றி
http://en.wikipedia.org/wiki/South_asia
தென் ஆசிய நாடுகள் பிராந்திய ஒத்துழைப்பு சங்கம்
http://en.wikipedia.org/wiki/South_Asian_Association_for_Regional_Cooperation
அதனால் தமிழவன் இந்தியா-பாகிஸ்தான் - இலங்கை களை தென்னாசியா எனச் சொல்லவேண்டும். தலைப்பு ‘தென்னாசியாவில் வன்முறையும் பின்நவீனத்துவமும்’ என்பதுதான் சரி. நாம் உலகச் சொல்லாடல்களைப் பின்பற்ற வேண்டும்.


மதிப்புடன்

வன்பாக்கம் விஜயராகவன்

Saturday, February 21, 2009

திராவிட சான்று

ஜனவரியில் மெட்ராஸ் போனபோது, புக் ஃபேர் போனேன். நிறைய புத்தகங்கள் வாங்கணும் என்ற எண்ணத்தில்தான் போனேன். ஆனால் அங்கு 1 மணி நேரம் தான் கிடைத்தது. அங்கு எல்லா கடைக்கும் போகணும் என்றால், 5 மணி நேரம் வேண்டும். அதனால் 4 புத்தகங்கள் தான் வாங்க முடிந்தது.அவை

திராவிட் சான்று- தாமஸ் ட்ரவுட்மன்

தமிழவன் கட்டுரைகள் 1 - இருபதாம் நூற்றாண்டு கவிதை

இந்திய தத்துவ இயல் - தேவிபிரசாத் சட்டோபாத்யாயா

தமிழ்நடை கையேடு


இன்னும் சில புத்தகங்களையும் வாங்கி இருக்கலாம்; ஆனால் டைமும் இல்லை, இங்கிலாநதுக்கு தூக்கி வரணும்ன, ப்ளேன்ல, நிறைய அதிக லக்கேஜ் கட்டணம் கொடுக்கணும். உதாரணமாக, மெட்ராஸ் யூனிவெர்சிடி கடையில், தமிழ் லெக்சிகான் 10 பகுதியில் கிடைக்கிறது. விலை 600 ரூபாய்தான். ஆனால் அதைத் தூக்கிக் கொண்டு போனால், என் பெட்டியில் இடமும் இல்லை, அப்படி கொண்டு போனாலும், எக்ஸஸ் லகேஜ் சார்ஜ், அதைவிட அதிகம் ஆகிவிடும். தமிழில் சிந்தனை செய்பவர்களுக்கு, மெட்ராஸ் யூனெவெர்சிடி தமிழ் லெக்சிகான் இன்றி அமையாதது. அதை இண்டெர்நெட்டில் பார்த்தாலும், கையில் ஒரு காபி வேண்டும்.

நானும், மனைவியும் உள்ளே போன உடன், வலது பக்கம் கடைசி, அதாவது முதலாவது கடையிலிருந்து ஆரம்பிக்க போனேன். அதன் பெயர் கீழைக்காற்று வெளியீட்டகம். அது ஒரு தீவிர லெஃப்டிஸ்ட், கம்யூனிஸ்ட் பதிப்பகம் போல இருந்தது. அந்த கடையில் வாங்கினது ’திராவிட சான்று’.
திராவிட சான்றை ஆங்கில மூலத்தில் வாங்கணும் என ப்ளான் செய்துருந்தேன். ஆனால் இந்த தமிழாக்கம் பார்த்த உடனே, இதுவே போதும் என தோன்றி விட்டது. ட்ரௌட்மன் ஆங்கில எடிஷன் போடுவத்ற்கு முன்னாடியே, அதை தமிழ்ல் மொழி பெயர்த்து பப்ளிஷ் செய்வதற்கு வேங்கடாசலபதி என்பவர் அனுமதி வாங்கி, ரா.சுந்தரம் என்ற மொழிபெயர்ப்பாளரை வைத்து பப்ளிஷ் செய்து விட்டார். சபாஷ் வேங்கடாசலபதி. இப்படித்தான் முக்கியமான அறிவியல் சம்பந்தப்பட்ட புத்தகங்களை கொண்டு வரவேண்டும்.

சரி, இப்போ திராவிட சான்று. இதன் கதாநாயகன் ஃப்ரான்சிஸ் ஒய்ட் எல்லிஸ் (1777-1819).எல்லிஸ் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். 1797ல் கிழக்கிந்திய கம்பெபியில் 5 பௌண்ட் வருட சம்பளத்தில் சேர்ந்து, 1798ல் சென்னை வந்து, வருவாய்துறையில் வேலை செய்ய ஆரம்பித்தார். சென்னை வரும் முன்ன்றே, ஐரோப்பிய செவ்வியல் மொழிகளிலும், கணிதத்திலும் தேர்ச்சி பெற்றீருந்தார். தன் வாழ்நாட்களை முக்கியமாக சென்னையில் கழித்தார். அலுவலக பாலிடிச்ஸ் காரணமாக இடையில் 3 வருடம் மசூலிபட்டணத்திற்கு வேலை மாற்றம் செய்யப் பட்டார். இந்தியாவில் இருந்த போது, தென்னிந்திய மொழிகளையும், சமஸ்கிருதத்தையும் நன்றாக கற்றார்.


அப்போது கம்பெனி நிர்வாகிகளான வில்லியம்ஸ் ஜோன்ஸ் போன்றோர் கல்கத்தாவில் இந்திய மொழிகளிலும் இலக்கியங்களிலும் தேர்ச்சி பெற்று, புது மொழியியல் கருத்துகளை உண்டுபண்ணி, பிரசித்தமாயினர். எல்லிசும், லெய்டன், எர்ஸ்கைன் போன்ற மொழி, சரித்திரங்களில் ஆர்வம் கொண்ட கம்பெனி நிர்வாகிகளிடம் நட்பு வைத்து, கருத்து பரிமாரினார்.அதே சமயம் தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலிய மொழிகளுக்கு இந்தியகளிடம் கற்றுக் கொண்டு மொழியியல் கருத்துக்களை அவர்களிடம் விவாதித்தார். தென்னிந்திய மொழிகளின் வினை சொற்களை பட்டியல் போட்டு ஆராய்சி செய்த ஒப்பிலக்கணத்தின் முன்னோடி எல்லிசு. எல்லிசு தென்னிந்திய மொழிகளை படிக்கும் வரை, கல்கத்தா ஆசிய கழக குழுவினர், சமஸ்கிருதம்தான் இந்தியாவின், தென்னிந்தியா உள்பட, எல்லா மொழிகளின் ஊற்றுக் கண் என நம்பினர். எல்லிசு தமிழ், தெலுகு, கன்னட மொழிகளின் பொது சொல்வேர்களை பார்த்து விட்டு இவை சமஸ்கிருதத்துடன் சம்பந்தம் இல்லவை என சொன்னார்.அவர் கருத்து பரிமாரிக்கொண்ட முக்கியமான இந்தியர்கள்: சங்கரைய்யா, பட்டாபிராம சாஸ்திரி, மமுடி வெங்கையா, உதயகிரி வெங்கட நாராயணா,சிதம்பர வாத்தியார் (தமிழ் வாத்யார்) போன்றோர்.


1812ல் எல்லிஸ், செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆங்கிலேயெர்கள் தென்னிந்திய, சமஸ்கிருத மொழிகளில் தேர்ச்சி பெருவதற்கு ஒரு காலேஜை நிறுவினார். அவர் எண்ணம் என்னவென்றால் கம்பெனி நிர்வாகத்தினர் தென்னிய மொழிகளை ஒரு குடும்பமாக பாவித்தால் தென்னிந்தியாவில் எங்கு சென்றாலும் சுலபமாக வேலை செய்யலாம் என்பது. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு பிரதான இந்திய ஆசிரியர் நியமிக்கப் பட்டனர். மேலும் அந்த காலேஜ் தென்னிந்திய மொழிகளில் ஓலைகளை சேகரித்து இலக்கியங்களையும், அகராதிகளையும் பிரசுரிக்க முயன்ரது. பொதுவாக எல்லிசுக்கு இந்திய மொழிகள் மீதும், இலக்கியம் மீதும், சரித்திரம் மீதும் ஒரு கணிந்த நட்பு இருந்தது. அதனால் இந்தியர்கள் மேல் இன துவேஷம் இருக்கவில்லை.மதம் பற்றி ஒன்றும் கருத்து கூராவிட்டாலும், அவர் நாத்திகர் என சில பாதிரியர்கள் கருதினர்.


எல்லிஸ் தன் அலுவலக வேலையில் மூழ்கி இருந்தாலும், மொழி, சரித்திரம் பற்றி நிரைய ஆராய்சி செய்து, விவரங்கள் சேகரித்து கட்டுரைகள் எழுதினாலும், 40 வயது வரை ஒன்றையும் பிரசுரிக்க போவதில்லை என நிச்ச்யித்திருந்தார்.தமது 41ம் வயதில். ராமநாதபுரத்தில் நோய்வாய் பட்டார். மருந்து சாப்பிடுவதாக நினைத்து, ஒரு விஷப் பொருளை சாப்பிட்டு விட்டார். சாப்பிட்டது மருந்து இல்லை, விஷம் என்று அவருக்கு தெரிந்து விட்டது. அதனால் அருகிவரும் மரணத்தின் உணர்வில் சில கடுதாசிகளையும், உயிலையும் எழுதி, மார்ச் 9, 1819ல் உயிர் நீத்தார்.

அவர் மரணத்திற்க்கு பிரகு, அவர் அருகில் இருந்தவர்கள் அவர் எழுதிய, பிரசுரிக்கப் பாடாத பிரதிகளின் மதிப்பையும், அறிவு தரத்தையும் உணரவில்லை. அதனால் அவர் எழுதிய பிரதிகள் பல குப்பையில் சேர்ந்தன அல்லது அடுப்புக்கு பயன்பட்டன. அப்படி இருந்தும் சில மானசீக நண்பர்களால் சில காலம் கழித்து அவர் எழுதிய சில பிரதிகள் சேகரிக்கப் பட்டன. அவர் நண்பர்களும், மற்ற ஆய்வாளர்களும் தங்கள் எழுத்தில், எல்லிசுக்கு தஙகள் அறிவு வளர்ச்சிக்கு நன்றி கூரினர்.


புத்தகம் தரும் மற்ற விஷயங்கள்


#எல்லிசுக்கு 40 வருடம் கழித்து எழுதிய ராபெர்ட் கால்ட்வெல், எல்லிசின் திராவிட சான்று கருத்துகளை உள்வாங்கி கொண்டாலும், அவருக்கு உரிய நன்றியையும்,அடையாளத்தையும் கொடுக்க வில்லை. அதனால் பலர் கால்டுவெல்தான் திராவிட மொழி குடும்பத்தை பற்றி எழுதினார் என நினைக்கிறனர். அது கால்ட்வெல்லின் குறுகிய மனப்பான்மையை காட்டுகிறது.

#எல்லிஸ், மற்றும் அவர் காலத்திய கம்பெனி நிர்வாகிகளிடையே இந்திய அறிவு மரபுகளைப் பற்றி நல்ல அபிப்ராயம் இருந்தது. 1845 வாக்குகளில், வந்த ஆங்கில அதிகாரிகளிடம் இந்த அபிப்ராயம் போய் விட்டது. அதன் முக்கிய உதாரனம் மெகாலே. மேகாலே 10000 இந்திய இலக்கியங்கள் அரை பத்தி ஐரோப்பிய அறிவிக்கு ஈடாகா என கருதி, இந்தியர் எல்லோரும் ஆங்கிலத்தில் தான் படிக்க வேண்டும் என பரிவு செய்தார். அது எல்லிசின் போக்கிற்கு நேர்மாறானது. உதாரணமாக, எல்லிஸ் மனு ஸ்ம்ரிதை சுட்டிக் காட்டி, அப்போது பரவலாக மேற்கத்தியர் இடையே நம்பப் பட்ட ‘கீழைநாட்டு கொடுங்கோன்மை’ ( ஓரியெண்டல் டெஸ்பாடிஸம்) இந்தியாவில் இல்லை என வாதித்தார் .

#தற்கால மேற்கத்திய மொழியியலில் சமஸ்கிருத, பிராகிருத, தமிழ் மொழி அறிவு மரபுகள் கலந்துள்ளன. அவை மேற்கத்தியரின் தனி சாதனை அல்ல.
எல்லிஸ் கல்கத்தா ஆங்கில கீழை தேசீய ஆய்வாளர்களுடன், முற்றிலும் மாறி, தென்னிந்திய மொழிகளின் தனித்துவத்தை அறிவு சமூகத்தில் நிருவினார்.

#தென்னிந்திய கலாசார வளர்ச்சியில் அவர் நிருவிய காலேஜ் மறைமுகமாக பெரும் பங்கு வகித்தது.தொடங்கிய காலம் முதல் 1850கள் வரை , தமிழகத்தில் இலக்கிய மீட்புப் பணியை இந்த காலேஜ் செய்து வந்தது. இந்த பணிகளின் சிகரம் உ.வே.சாமிநாத ஐயர். இப்பணிகளின் மரபை எல்லிசின் காலேஜ் வித்திட்டது. கல்லூரி ஆசிரியராக இருந்த முத்துசாமி பிள்ளை 1816ல், பல தமிழ் சுவடிகளை பல இடங்களிலிருந்து திரட்டினார். மற்றவர் தாண்டவராய முதலியார். இவர்கள் பழைய தமிழ் ஓலைகளை அச்சில் பிரசுரித்தனர்.கல்லூரியின் தெலுங்கு ஆசிரியர்கள் இதே பணீயை தெலுங்கிற்கு செய்தனர்.

#எல்லிஸ் திராவிட சான்றுகளை திரட்டினாலும், 20ம் நூற்றாண்டு “திராவிட” இயக்கங்கள் , அதன் நேர் வாரிசு என சொல்லமுடியாது. ஏனெனில் 100 ஆண்டு இடைவெளிக்கு பின் வந்தன, அந்த 100 ஆண்டுகளின் மாற்ரங்களால் வந்தன, அவை தமிழகத்திற்கு வெளீயே பரவ வில்லை. மேலும் “திராவிட” இயக்கங்கள் பிராமண துவேஷத்தை முக்கியமாக கொண்டிருந்தன. இவ்விடத்தில், எல்லிசின் ‘திராவிட சான்றிர்க்கு’ உதவி செய்த சகாக்கள் பட்டாபிராம சாஸ்திரி, வெங்கடநாராயணா, சங்கரையா போன்ற தெலுங்கு பிராமனர்கள் என குறிப்பிடத் தக்கது.