Thursday, November 20, 2008

ஸ்ட்ரிக்ட்லி கம் டான்சிங் - மக்கள் கலவரம்?

இது எனக்குப் பிடித்த பிபிசி டெலிவிஷன் காட்சி.

இதன் அமைப்பு என்னவென்றால், டான்ஸ் போட்டி, ஒவ்வொரு ஜோடியிலும் ஒருவர் டான்ஸ் தேர்சி பெற்ற ப்ரொஃபெஷனல். மற்றவர்
மக்களுக்கு நன்றாக தெரிந்த ஆனால் டான்ஸிக்கு புதுமுகமானவர். இருவருக்கும் நன்றாக மேடையில் ஆட அப்யாசம் கொடுக்கப் படுகிறது.

டான்ஸ் இரண்டு வகையானவை - லாடின் டான்ஸ், மற்றும் பால் ரூம் டான்ஸ். சால்சா, சாசாசா, ரும்பா இவை லத்தீன் டான்ஸ்.
ஜைவ், க்விக் ஸ்டெப், பாஸா டூப்ளே, வால்ட்ஸ், வியன்னீஸ் வால்ட்ஸ், ஃபாக்ஸ் ட்ராட் போன்றவை பால்ரூம் நடனம். செப்டம்பர்
வாக்கில் இந்த டிவி நிகழ்சி தொடங்குகின்றது. சனிக்கிழமை சாயம்காலத்தில் ”ப்ரைம் டைம்”, அதாவது எல்லோரும் பார்க்கக்கூடிய நேரத்தில்
நிகழ்த்தப் படுகிறது. முதலில் 12 ஜோடிகளுடன் ஆரம்பிக்கிரனர். நான்கு நடுவினர் குழு அவர்கள் நடனத்தை பார்த்து பரிசோதித்து மார்க்கு
கொடுக்கின்றானர். அநத் நடுவுனரிடமிருந்த நல்ல மார்க்கு வாங்குவது கஷ்டம். ஆனால் நன்னா டான்ஸ் பண்ணால் புகழவும் செய்வார்கள்.
ஒவ்வொரு நடுவரும் 10 எண்ணிற்க்குள் மார்க் கொடுக்கிறனர். ஆனால் பாதி மார்க்குகள் மக்களிடம் உள்ளன. அதாவது டிவி பார்வையாலர்கள்
ஒரு காசு வாங்கும் (காசு வாங்கட்டா எப்படி பிபிசி பிழைக்கும் !!!) போன் பண்ணி தனக்கு விருப்பமானவர்க்கு மார்க் கொடுக்கலாம். மக்கள்
மார்க்கு ( 50%), நடுவினர் மார்க்கு (50%) இரண்டையும் கூட்டி எந்த ஜோடி கடைசி மார்க் வாங்கினார்களோ, அவர்கள் அந்த வாரத்தில்
தள்ளப் படுவார்கள். இது வாரா வாரம் நடந்து கிருஸ்துமஸ் வரை செல்லும்.

இந்த வருடம், ஜான் சார்ஜண்ட் என்ற பிபிசி அரசியல் நிருபர், க்ரிஸ்டீனா ரிஹனாஃப் என்ற ரஷ்ய நடன நிபுணரும் ஜோடியாக ஆக்கப்பட்டு
நந்துள்ளனர். ஜான் 64 வயது ஆள். தினமும் 8 மணி நேரம் பயிற்சியில் ஈடுபட்டு, தன் ஜோடி க்ரிஸ்யடீனாவுடன் நடனமாடி போட்டியில்
குதிக்கிறார். 4 நடுவரின் எடைப்போடல்படி ஜான் மோசமான டான்சர். ஒவ்வொரு வாரமும் ஜானுக்கு குறைவான மார்க்குகளை நடுவனர்
கொடுத்துள்ளனர். அதற்கு மேல் ஜான் எவ்வளவு மோசமமானவர் என்ற கமெண்டு வேற! ”உங்களுக்கு வேகம் இல்லை, நாசூக்கு இல்லை “

ஆனால் பிரிட்ட்ஷ் பார்வையாளர்களுக்கு ஜான் ரொம்பவும் பிடித்து விட்டார். அதனார் ஒவ்வொரு வாரமும் வெகு ஜன ஓட்டு சாதகமானதால்,
பிழைத்து விட்டார். அதைக் கண்டு நடிவினர்க்கு ஒரே எரிச்சல்.
ஏன் டான்ஸ் நிபுணத்வ நடுவர்களின் நோக்கை பார்வையாளர்கள் முற்றுமாக நிராகரித்து விட்டார்கள்? ஜட்ஜுகள் ஜானை சாட,சாட
பொதுஜனங்களுக்கு அந்த நடுவினர் மேல் வெறுப்பு வந்து விட்டது. அதனால் நடுவர்களால் நிராகரிக்கப் பட்டவரை ஜனங்கள் தூக்கி வைத்தனர்.
அதை பிரிட்டிஷ் குணமான ”நோஞ்சான் மேல் அன்பு” என்று சிலர் அழைக்கிரனர். நடுவிவர் டான்ஸ் பாண்டித்யம் பெற்றவர்கள், அதனால்
நடனட்த்தை ”டெக்னிகலாக” பார்க்கிரனர். பொதுஜனங்களுக்கு நடுவர் குழு ரொம்ப மேல்தட்டு மனப்பான்மை கொண்டவர்களாகவும், தலை
கனத்தவர்களாகவும் தோன்றியது. அதனால் ஜானை நேசித்து, நடுவினரை நிராகரித்து வாராவாரம், அவரையே திருப்பி கொண்டுவந்தனர்.
நேற்று ஜான் தான் டான்ஸ் போட்டியிலிர்ந்து விலகிக் கொள்வதாக அறிக்கை விடுவித்துள்ளார். அதை பலருக்கு சோகம் கொடுத்து விட்டது.
பிபிசி அவரை போட்டியிலிருந்து விரட்டப் பட்டார் என்ற பலர் எண்ணுகிரனர்.
http://news.bbc.co.uk/1/hi/magazine/7739920.stm

பிபிசியின் பார்வையாளர்கள் கருத்து பக்கத்தில் , 99% மக்கள் பிபிசியை ஜானை கேவலமாக நடத்தி அவரை டான்ஸிலிருந்து துரத்தி விட்டதாக
கடும் கண்டனம் எழுதுகிறனர்

http://newsforums.bbc.co.uk/nol/thread.jspa?forumID=5680&edition=1&ttl=20081120164258
http://uk.youtube.com/watch?v=SlIasHFUrVM

http://uk.youtube.com/watchv=wvDyImsyGJ4&feature=channel

http://uk.youtube.com/watch?v=HP_DXrr4cWA&feature=சேனல்

ஜான் பாசா டூப்ளே செய்கிறார்http://uk.youtube.com/watch?v=umEShQ2SXK8

ஜான் ஜைவ் செய்கிறார்http://uk.youtube.com/watch?v=Nv0e7esK8yM

ஜான் சாம்பா ஆடுகிறார்.http://uk.youtube.com/watch?v=OO9i72sQISY