Sunday, October 05, 2008

படித்த புத்தகம் - மாவ் சே துங் - தெரியாத கதை


ஆசியர்கள்: ஜுங் சாங், ஜான் ஹாலிடே


இவர்கள் கணவன் மனைவி ஜோடி. ஜுங் 1952ல் சீனாவில் பிறந்தவர். 1978ல் மொழியியலில் ஆராய்சி செய்ய இங்கிலாந்து வந்து ஆங்கில அரசியல் புரொபசரான ஜானை மணம் செய்தார்.


இவர்கள் பல வருடங்கள் சீனாவில் பயணம் செய்து, மாவோவை அந்தரங்கமாக பழகியவர்களுடன் பேசியும், பல சீன, ஜப்பானிய, ருஷ்ய, ஆங்கில ஆவணங்களை அலசியும் இப்புத்தகத்தை எழுதியுள்ளனர். வாழ்க்கை வரலாறு என்றால் இப்படித்தான் எழுதவேண்டும்.

மாவோ துதி என்பது மாவோ பதவி வந்ததிலிருந்து மிகப்பெரிய இயக்கமாகி விட்டது. அந்த துதிகளையும், அரசியல் பிரச்சார முகமூடிகளையும் கிழித்தெறிந்து தக்க ஆதாரங்களுடன் எழுதிவது அவ்வளவு சாத்தியம் இல்லை. ஆனால் அதைத்தான் இந்த ஜோடி செய்துள்ளனர்.

மாவ் 1893ல் ஹூனான் மாகாணத்தில் பிறந்தார். பிற்காலத்தில் தான் வறுமையை ரொம்ப பார்த்தாகவும், வறுமையிலிருந்த குடியானவர்களை பார்த்து ரொம்ப பச்சாதாபம் செய்ததாகவும் கூறினார். ஆனால் அவர் இளமை எழுத்துக்களோ, மற்றா ஆவணங்களோ அப்ப்டிப்பட்ட பச்சாதாபத்தை காட்டவில்லை. 1915 ஏப்ரல் 5ம் தேதியில் எழுதப்பட்ட மாவோவில் ஆசிரியர் நாள் குறிப்பு ` என் மாணாக்கன் மாவோ அவனுடைய ஜாதி குடியானவர்கள், அவர்கள் பணக்காரர் ஆவது சுலபம்` என் சொல்கிறான். 1925 வரை , அதாவது மாவொவின் 35 வயது வரை, அவருடைய எழுத்துகளில் குடியானவர்களுக்கு ஆதாரம் காட்டும்படி ஒன்றும் இல்லை. மாவோ சிறிய வயதிலிறுந்தே ஏழை குடியானவர்களுக்கு பாடுபட்டர் என்பது பிரச்சாரமே ஒழிய உண்மை இல்லை.

இந்த புத்தகம் 800பக்கம் மேல. அதனால் சில ரசிக்கத்தக்க விஷயங்கள் மட்டும்.
அ. 20ம் நூற்றாண்டு முன் பகுதியில் சீனாவில் சுந்-யாட்-சென்னின் தேசீய கட்சி வலுவாக இருந்தது. அதற்கு அரசியல், ராணுவ விஷயயங்களில் சோவியட் ரஷ்யா ஆலோசனை கொடுத்தது. அதே சமயம் , தன் சாதகத்தை பயன்படுத்தி, தன் உளவாளிகளை முக்கியமான இடங்களில் ரகசியமாக வைத்திருந்தது. இதை ஆங்கிலத்தில் மோல் என்பார்கள். மிகச் சரியான நேரங்களில் சோவியட் யூனியனுக்கு சாதகமாக சம்பவங்களை திருப்புவதில் சோவியட் மோல்கள் கைவரிசையை காண்பித்தனர்.

ஆ. சீன கம்யூனிஸ்ட் கட்சி முதலில் சீனர்களால் துவங்கப் படவில்லை, பல சீன மார்க்சீயர்கள் இருந்தும். சோவியட் கோமிண்டர்ன் (ஆங்கிலத்தில் கம்யூனிஸ்ட் இண்டெர்நேஷலின் சுருக்கம்) ஒய்டிந்ஸ்கி என்ற ஏஜண்டை ஷாங்காய்க்கு அனுப்பி சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கும்படி ஆணையிட்டது. அதனால் அவர் 1920ல் கட்சியை ஆரம்பித்தார்.தன் முதல் சீன செயலாளர் புரொபசர் சென் டு சியு என்பவர். சென்னை மாவோ ஏற்கனவே சந்தித்து அவர் கருத்துகளில் விழுந்தார். அதனால் சென் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலாளராக ஆனவுடன் மாவோவும் கம்யூனிஸ்ட் கொள்கைகளில் ஈடுபட்டார்.

இ. சோவியட் யூனியன் சீன தேசீயக் கட்சி, கம்யூனிஸ்டுகள் இருவர் மேலேயும் மிக்க அதிகாரத்தை வைத்திருந்தது. ஆனால் பொதுவாக கம்யூனிஸ்டு சாதகமாகத்தான் செய்கைகளை செய்தது. மிக்க பணமும், ஆயதங்களையும் சோவியட் யூனியன் வெளிப்படையாகவும், ரகசியமாகவும் தள்ளீயது.

உ. மாவோவிற்கு நான்கு மனைவிகள். (ஒரே சமயத்தில் அல்ல. ஒருவர் பின் ஒருவராக). ஆனால் பல பக்க உறவுகளை வைத்திருந்தார். பல பெண்களுடன் காமக்கேளிக்கைகளை நடத்தினார். 1920ல் மாவோ ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர். அப்போது தன் பழைய ஆசிரியரின் மகளை காதல் செய்து இரண்டாம் மனைவியாக்கினார். கை-ஹுய் என்ற இரண்டாம் மனைவி பல வருடங்களுக்கு பின் உள்நாட்டு போரில், தேசீய கட்சியாளர்களால் மாவோவின் உறவை துண்டிக்க மறுத்ததால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

ஈ. 1925ல், சுன் யாட் சென் இறந்தவுடன், தேசீயக் கட்சியின் தலைவராக நியமிக்கப் பட்டவர், மாவோவிற்க்கு தெரிந்த ஆள். அதனால் மாவொ காண்டன் நகரின் தேசீய கட்சி தலைவராக 32வது வயதில் நியமிக்கப்பட்டார். அதற்கு பிறகு தான் மாவோ வருமையில் ஆழ்ந்த விவசாயிகளின் நிலைமையில் ஆர்வம் காட்டினார்.

1926ல் தேசீயக் கட்சி சோவியட் பிணிப்பை முறித்தது; ஏனெனில் சோவியட் தூதரகத்தில் பல ஆயுதங்களும் ஆவணங்களும் பிடிபட்டன. அவை சோவியட் ரஷ்யா தேசீய கட்சியை புறமுதுகில் குத்தி, மாஸ்கோவிற்க்கு தேவைப்பட்ட ஆட்களை பதவியில் வைக்கும் திட்டத்தை . அதனால் தேசீயக் கட்சியில் இருந்த பல கம்யூனிஸ்ட்கள் வெளியேற்றப்பட்டனர் அல்லது சிறைபிடிக்கப்பட்டனர். தேசீய கட்சியின் புது தலைவராக சியாங் கை ஷெக் நியமிக்கப்பட்டார்.

அதிலிருந்து சியாங் கம்யூனிஸ்ட்களின் பரம எதிரியாகி, சீன உள்நாட்டுப் போர் துவங்கியது. சியாங் முதலில் `இடதுசாரி`யாக மாஸ்கோவினால் கருதப்பட்டார். சியாங் சோவியட் யூனியனில் சில காலம் மாஸ்கோவின் சீன தூதுவராலயத்தில் . அங்கு அவர்து நேரடி அனுபவங்களும், கருத்துக்களும் அவரை கம்யூனிஸ்ட் எதிர்சிந்தனையில் தள்ளின. கம்யூனிஸ்ட்கள் பாசறையான ஷாங்காய் நகரத்தில் சியாங் ராணுவத்தை அனுப்பி, கம்யூனிகளை அடக்க்குமுறை செய்தார். அங்கேயே ஆயிரக்கணகான மக்கள் இறந்தனர். அங்கு ஆரம்பித்த உள்போர் 1949ல், மாவோ கம்யூனிஸ்ட்களின் வெற்றியில் முடிந்தது. அந்த 23 வருடங்களில் 20 லக்ஷம் பேர் மடிந்தனர்.


இந்த உள்போரில் சியாங் கம்யூனிஸ்ட் பட்டாளத்தை அழிக்க ஐந்து ராணுவ திட்டமிட்ட முன்னேற்றங்களை கையாண்டார். இப்புத்தக ஆசிரியர்கள் சியாங் வேண்டுமானல் மாவோவின் ராணுவத்தை சுலபமாக நசுக்கியிருக்கலாம்; ஆனால் அவர் திட்டப்படி மொத்த கம்யூனிஸ்ட் பட்டாளங்களை ஓரிடத்தில் சேருமாறு துறத்தி, அங்கே கம்யூனிஸ்ட்களை அழித்துவிடலாம் என்ற எண்ணம். அதனால் மாவோவை அழிக்கும் பல வாய்ப்புகளை நழுவ விட்டனர் என்கிறார்கள்.

சியாங் கை பலமாக இருந்த போது ஜப்பானியர் சீனாவை ஆக்கிரமித்தனர். அதனால் சியாங் மாவோவின் எதிரில் இருந்த துருப்புகளை பின்வாங்கி ஜப்பானியர் மீது போர் தொடுக்க வேண்டியதாயிற்று. ஸ்டாலினும் ஜப்பானிய ராணுவத்தை சோர்வைப்படுத்த சியாங் ராணுவத்திற்க்கு ஆதரவு கொடுக்க வேண்டியிருந்தது. சில இடங்களில் கம்யூனிஸ்ட் ராணுவமும், தேசீய ராணுவமும் மோதின. சில இடங்களில் இரண்டும் ஜப்பானியரோடு மோதின. சியாங்கின் தேசீய பட்டாளம், கம்யூனிஸ்ட்களை விட மிக அதிகமாகவே ஜப்பானியரிடம் போரிட்டது.

புத்தக ஆசிரியர்கள் ஆய்வு முடிவுகள் வியப்பாக உள்ளன. சியாங் தன் புதல்வனை மாஸ்கோவிற்க்கு படிக்க அனுப்பியிருந்தார். அப்பையனை ரஷ்யாவிற்க்கு இட்டுச் சென்றவர் மாஸ்கோவினால் தேசீய கட்சியில் `பயிரிடப்பட்ட` ஒரு மோல். அவர் பெயர் ஷாவ் லீசு. அவர்தான் பையனின் நலத்திற்காக சியாங்கினால் நியமிக்கப்பட்டவர். மாஸ்கோ அந்த பையனை ஒரு ரகசிய பிணைக்கைதியாக வைத்திறுந்தது. சியாங்கின் வற்ப்புருத்தல் மேலேயும், ரஷ்யா அவர் மகனை வெகு நாட்களாக திருப்பி அனுப்பவில்லை. தன் மகனை உயிராக கருதிய சியாங், அவன் மேல் ஒரு கெடுதியும் வரக்கூடாது என்ற பாசத்தினால், சீன கம்யூனிஸ்ட்கள் மேல் அவ்வளவாக தீவிர ஒழிக்கும் நடிவடிக்கை எடுக்காமல், சந்தர்பங்களை நழுவ விட்டார்

1937ல், ஜப்பான் ஆக்கிரமிப்பு செய்தது எல்லோருக்கும் தெரியும். ஆசியர்கள் அது சோவியட் மோலினால் வந்த வினை என்கிறார்கள். 1935ல் ஜப்பான் தீவிரவாத நாடாகி விட்டது; அதற்கு சோவியட் ரஷ்யா மேல் பயங்கர காழ்ப்பு. அதன் ராணுவம் சோவியட் ரஷ்யாவை தாக்கி , தொலைகிழக்கு சோவியட் யூனியனை கைப்பற்றும் போல இருந்தது. 1933ல் மஞ்சூரியாவை கைப்பற்றியது. ஜப்பானியரின் ராணுவ திட்டங்களை சீனா மீது திசை திருப்ப ஸ்டாலின் விரும்பினார். அதற்குதான் இன்னொரு ரஷ்யாவின் சீன மோல் உபயோகமானர்.

ஜெனரல் ஷாங்-ஷி-ஷாங் தேசீய ராணுவத்தின் உயர் அதிகாரி. அவருக்கு ராணுவ தளபதி சியாங் ஜப்பானியர்களை தாக்க உத்தரவு கொடுக்கவே இல்லை. ஆனால் அவர் ரகசிய சோவியட் உளவாளி, மோல். மாஸ்கோ தூண்டுதலின் மேல் அவர் தானாகவே தன் படையுடன் ஜப்பானியரை தாக்கி, ஜப்பானிய ராணுவத்தின் ஆக்ரோஷத்தை சீனா மீது திருப்பி விட்டார். அதனால் சோவியட் ரஷ்யா பிழைத்தது. இது அவ்வாசிரியர்களின் தீசிஸ்.

இன்னொரு ரஷய மோல் ஜெனரல் வை லி ஹ்வாங், உள்நாட்டுபோரின் கடைசி கட்டத்தில் ஐந்து லக்ஷம் துருப்புகளுடன் கட்சி மாறி மாவோ பக்கம் போனார்.

1953ல் மாவோ `நூறு பூக்கள் மலரட்டும்` என்ற கொள்கையை எடுத்துக் கொண்டார். அதாவது கருத்து சுதந்திரம் சீன அறிவு ஜீவிகளுக்கு கிடைக்கும், அதனால் தன் அரசாங்கத்தை யாரும் தாக்கலாம் என்றார். ஆனால் அது எதிரிகளை, தன் கொள்கைகளை ஒப்புக் கொள்ளாதவர்களை கண்டிபிடிக்கும் உபாயாமாக ஆக்கினார். யார் மாவோ அரசாங்கத்தின் போக்கை விமர்சனம் செய்தார்களோ அவர்கள் கைதி முகாம்களுக்கு அனுப்பப் பட்டு 10 , ௨0 வருடங்கள் சிறையில் வாடினர்.

ஐம்பத்தேழு வாக்கில், `பெரிய முன் பாய்ச்சல்` என்ற திட்டத்தை உருவாக்கினார். அதன்படி எஃகு உற்பத்தியில் ஐந்து ஆண்டுகளில் சீனா அமெரிக்காவை தாண்டிவிடும்; எப்படி? ஒவ்வொரு சீன வீட்டிற்க்கு பின்புறத்தில் ஒரி சிறிய எஃகு உருக்கு ஆலை செய்யப்படும். கையில் கிடைக்கும் எல்லா எஃகையும் மக்கள் உருக்கி உற்பத்தியை பெருக்குவார்கள். இந்த அசட்டுத்தனமான மாவோ திட்டங்களினால் , சீனாவில் பெரும் தட்டுப்பாடுகளும், குழப்பங்களும் ஏற்பட்டன. இரு வருடங்களுக்கு பின் `பெரிய முன் பாய்ச்சல்` கைவிடப்பட்டது. ஐம்பதுகளில் நூறு பூக்கள் இயக்கத்திலும், அதன் பிறகு பெரிய முன் பாய்ச்சல் இயக்களினால் வந்த சமூக , தட்டுப்பாடிலும் முன்னூறு லட்சம் மக்கள் .

அறுபத்தி ஏழில் மாவோ கலாசாரப் புரட்சி என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். அதன் உள் நோக்கம், மாவோவுடன் கருத்தில் உடன்படாதவர்களை துன்புறுத்துவதே ஆகும். அதனால் கம்யூனிஸ்ட் கட்சி ஆளர்களே பெரிய அளவில் துன்பப்பட்டார்கள்

அவ்வாசிரியர்கள் படி மாவோ மொத்தமாக எழுநூறு லட்சம் மக்கள் பலாத்கார இறப்பிற்கு காரணமாக இருந்தார்.