Saturday, October 24, 2009
சமீபத்தில் என் காநா நாட்டு ந்ண்பன் ஒருவன் நீ இந்தியா சூபர் பவர் ஆகும் என நினைக்கிறாயா என கேட்டான். நான் ஒரு நிமிஷம் யோசித்து இல்லை என்றேன்.சூப்பர் பவர் ஆக வேண்டும் என்றால், அதற்கு ஒரு மனநிலையும், செயல் சுபாவங்களும் வேண்டும்.
சூபர் பவர் ஆக வேண்டும் என்றால், ஒரு நாடு
1. நல்ல ராணுவ திறமை வாய்ந்த நாடாக இருக்க வேண்டும்
2. நாட்டின் அரசாங்கம் ஸ்திர நிலையில் இருக்க வேண்டும்
3. உள்நாட்டு போர்கள் இருக்க கூடாது. மத்திய அரசாங்கம் தன் இறையாண்மையை தன் நாடு முழுவதும் வைத்திருக்க வேண்டும்.
4. உள் நாட்டு விவகாரங்களை தானே , தன் முயற்சிகளினால் சமாளிக்க வேண்டும்.
5. தன் எல்லைகளை தங்கு தடையின்றி நிரவாகிக்க வேண்டும்
6. தன் ‘பிரதேசத்தில்’ , அதாவது எல்லைகளுக்கு உடனே அருகில், தன் நலன்களை அமல் படுத்த ராணுவத்தை உடன்படுத்த தயாராக இருக்க வேண்டும்
7. தன் எல்லகளுக்குள் தன் அதிகாரத்தை தங்கு தடையின்றி செலுத்த வேண்டும்
8. தன் எல்லகளுக்கு வெளியே சந்தர்பம் வேண்டுமென்றால், தன் படைகளை அனுப்பி போரிட தயாராக இருக்க வேண்டும்
9. உலகின் பல பகுதிகளுக்கும் ராணுவ, அரசியல், பொருளாதார விவகாரங்களில் ஆர்வம் காட்டி உலகின் எந்த பகுதியிலும்,தன் எல்லையில் இருந்து எவ்வளவு தூரமானாலும், தன் அக்கரைகளை நிருவுவதற்கு தயாராக இருக்க வேண்டும்.
10. தன் ஆதிக்கத்தை நிருவ, என்ன உயிர் தியாகம் - தன் உயிரோ , மற்ற நாடுகள் உயிரோ - செய்ய அஞ்சக் கூடாது.
11. மற்ற நாடிகளிலும், உலகின் இதற பகுதிகளிலும் ராஉவ ரீதியாக தலையீடுவதற்கு ஏற்ற பொருளாதார, ராணுவ பலம் இருக்க வேண்டும்
இந்த பல வித கோணங்களில் பார்த்தால் , இந்திய ஆதிக்க வர்கங்களின் மனப்பான்மை , தன் ஆதிக்கத்தை நிருவ ராணுவத்தை பயன்படுத்துவதற்கு தயக்கமாக உள்ளது. அதனால் இந்திய சூபர் பவர் ஆவதற்கு மனோபலம் இல்லை என சொல்லலாம்.
இந்தியாவிற்கு சூபர் பவர் இலக்குகளோ, மனோபாவங்களோ இருந்தால், பாகிஸ்தான் காஷ்மீரில் தலையிடுவதற்கு , கடுமையாக அதை (பாகிஸ்தானை) தண்டிக்க ஆர்வம் இருக்க வேண்டும். அப்படி செய்யாமல், பாகிஸ்தானின் உள்ளீட்டு கொள்கைகளை 50 வருடங்களாக சகித்துக் கொண்டு வரிகுன்றது. அது வருங்கால சூபர் பவருக்கு அழகல்ல.
இந்தற்கு நேர் எதிராக தற்கால ரஷ்யாவை பார்க்க்லாம். ரஷ்ய போன ஆண்டில் ஜீயார்ஜியாவின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து, தனி நாடாக்கி அதை `அங்கீகாரம்` செய்தது. மற்ற நாடுகள் அதை கண்டித்தன. ஆனால் தன் நோக்கில் அது தன் `பிரதேசத்தில்` தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியது.
இந்தியா 700 ஆண்டுகளாக , அந்நிய நாட்டவரின் ஆதிக்கத்தில் இருந்தது. மேலும், சமீப சரித்திரத்தில் காந்தியின் அஹிம்ஸை கொள்கைகளுக்கு செவி சாய்த்தது. அது சூபர் பவர் மனோபாவத்திற்க்கு உகந்ததல்ல.
விஜயராகவன்
Sunday, September 06, 2009
சமீபத்தில் அரீஃப் ஜமால் என்ற பாகிஸ்தான ,ஆய்வாளர் எப்படி உலக ஜிகாதை, குறிப்பாக காஷ்மீர் ஜிகாதை தங்கள் சுயநலகொள்கைகளுக்காக பாகிஸ்தான ரகசிய ராணுவ உளவு துறையான ஐ.எஸ்.ஐ. ஊக்குவித்தும், ஆதரித்தும் ஊதி , பெருதாக்குகின்றனர் என்பதை விளக்கி Shadow War: The Untold Story of Jihad in Kashmir (Hardcover) by Arif Jamal, Melville House (May 19, 2009). என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் பல வருடங்களாக நூத்துக்கணக்கான ஜிகாதிகளுடன் பேசி, தன் தீர்வுகளை முன்னிட்டுள்ளார். எப்படி அமெரிக்கா ஐந்து லக்ஷம் ஜிஹாதி படையை தயாராக்கியது; எப்படி அமெரிக்க சி.ஐ.ஏ,வின் பணம் காஷ்மீர் ஜிஹாதிகளின் ஆதரவாக முடிந்தது, எப்படி காஷ்மீர் ஜிஹாத் , அஃப்கானிஸ்தானின் தீராத போர்களுக்கும், உலக ஜிஹாதிற்க்கும் தீவிர உறவு உள்ளது என்பதை இப்புத்தகம் விவரிக்கின்றது.
அவருடைய நேர்காணலில் இருந்து சில பகுதிகள்:
காஷ்மீர் ஜிஹாதும், அஃப்கானிஸ்தான் ஜிகாதும் ஒரே பிரச்சினையின் இரு பக்கங்கள்
சுதந்திரத்திற்கு பின், பாகிஸ்தான் எப்படி இந்தியாவை தாக்கலாம் என திட்டமிட்டது; இந்தியா பாகிஸ்தானை விட பல மடங்கு பலம் பொருந்தியதால், நேர் யுத்ததை பாகிஸ்தான் ராணுவத் தலைமை விரும்பவில்லை. ஆதனால் இந்தியாவை உள்பூசலில் கவிழ்த்திட ஜிஹாத் பயன்படும் என பாகிஸ்தான் படையின் யுக்தியாளர் கர்னல் அக்பர் கான் 1950களில் திட்டமிட்டார்.
அதிலிருந்து, 1980 வரை, பாகிஸ்தானின் படை தளபதிகள் (காஷ்மீர) உள்ளூர் முஸ்லிம்களை ஜிஹாதிற்கு தூண்டிவிட்டு, அங்கு கொரில்லா யுத்தம் ஆரம்பிக்க பிரயத்னம் செய்தனர். 1980 பிரகு, நிஜ ஜிகாதை சோவியத்துகள் எதிராக அஃப்கானிஸ்த்னில் போரிட்டனர். பாகிஸ்தான் சோவியத் ராணுவம் எதிராக முழு அளவில் ஜிகாதிற்கு ஆதரவு கொடுத்தது. வெளிப்படையாக, அந்த ஜிகாதிற்கு ஆதரவை முழுமையாக நிராகரித்தது.. சோவியத் யூனியன் அப்கானிஸ்தனில் இருந்து வெளியே சென்றவுடந்தான், ஜிகாத் ஆதரவை வெளிப்படையாக ஒப்புக் கொண்டது.
பாகிஸ்தான் காஷ்மீரி கலகத்திற்கு 1989 முதல் தீவிரமக்கி, சோவியத்துகள் ஆப்கானிஸ்தனில் இருந்து வெளியேரியவுடன் பின்பும் முஜாஹிதீஙளை ஆதரித்தது. 9/11 அமெர்க்கா மீதான தாக்குதல் பின்பு கூட, அந்த முஜஹிதீன் ஆதரவை கடைப்பிடித்தது. ஒரு பக்கம் அமெரிக்கவுடன் பயங்கர வார எதிர்ப்பு போரில் சேர்ந்தது, மறுபக்கம் அப்கான் தலிபானையும், கஷ்மீர் ஜிகாதிகளையும் ரகசியமாக ஆதரித்தது.
கேள்வி: பாகிஸ்தானின் இந்த வருட ஸ்வாத் பள்ளத்தாகில் நடைபெற்ற தலிபான் எதிர்ப்பு யுத்தம் அமெரிக்கவின் கண்துடைப்பிற்க்கா?
போகப்போக அப்படித்தான் தெரிகின்ரது. பாகிஸ்தான் ராணுவம் தலிபான் தலைவர்களுக்கு தப்பிப்பதற்கு வேண்டிய நேரம் கொடுத்தது. அதனால் பயங்கரவாதி தலைவரக்ள் ஸ்வாத்தில் இருந்து மரைந்து, மற்றொரு இடத்தில் முளைத்து விட்டனர். ஸ்வாத் பள்ளத்தாக்கை நிசப்தமாக சூழ்ந்து கொண்டிருந்தால், எல்லா பயங்கர வாதியையும் பிடித்து இருக்கலாம், ஆனால் அப்படி செய்யவில்லை. ஸ்வாத் நவவடிக்கைகள் மிகப் பெரிய அகதிகள் பிரச்சினையை உண்டாக்கியதால், அந்த ராணுவ செயல்கள் உண்மையிலேயே நன்மைக்காகவா என்பது சந்தேகமாகா உள்ளது. பாகிஸ்தான் ராணுவம் தெரிந்தே இந்த அகதி பிரச்சினியை , இரட்டை வேடத்தின் ஒரு பகுதியாக ஆக்கினரா அல்லது பிழை மிக்க பயங்கரவாத ஒழிப்பு யுத்தியா என தெரியவில்லை.
ஸ்வாத்தின் யுத்திகர முக்கியத்துவம் என்னவென்றால், அது அஃப்கானிஸ்தானையும், காஷ்மீரையும் இணைக்கிரது. தலிபான் அதை தங்கள் வசம் கொண்டுவந்து விட்டால், இரண்டி ஜிகாத்துகளையும் இணைத்து, ஒரு தலைமையின் கீழ் கொண்டுவரலாம். அல்-கைதாவிற்கு இமய மலை அடிவாரத்தில், காஷ்மீரில் முகாம்கள் கிடைக்கும்.
முஷர்ரபின் அரசாங்கம் அல்-கைதாவின் பாகிஸ்தான் உருப்பினர்களான ஜைஷ்-ஏ-முஹொம்மத், ஹர்கத்-உல்-அன்சர் முதலியவைகளின் மீது, அவை ஆப்கானிஸ்தான் சேர்ந்தவை அல்ல என்ற பொய் காரனத்தால் , ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மௌலான மசூத் அசர், மௌலான ஃபஸ்லுர் ரஹ்மான் போன்ற பாகிஸ்தான தேவபந்த் ஜிஹாதிகள் , கஷ்மிர் ஜிஹாதிற்கும், அஃப்கானிஸ்தான் ஜிஹாதிற்கும் இணப்புப் பாலங்கள். இரு ஜிகாதுகளும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.
பாகிஸ்தானில் அல்-கைதா ஜைஷ்-எ-மொஹம்மத், ஹராகதுல் ஜிஹாதி இஸ்லாமி, ஹரகதுல் முஜாஹிதீன் போன்ற அமைப்புகளின் மூலம், அதிகார பூர்வ தடையை மீறி, செயல் படுகிரது. இந்த அமைப்புகள் காஷ்மீரில் ஜிஹாத் செய்வதால், அவைகளுக்கு பாகிஸ்தானில் தடை இல்லை. காஷ்மீரில் பயங்கரவதத்திற்கு ஆதரவு குன்றியவுடன், இவை `அரசாங்க கண்காணிப்பு பழங்குடியினர் பிரதேசம்` (FATA- Federally Administered Tribal Areas) உள்ளே என்று, அங்கிருந்து பாகிஸ்தான் தேசத்திற்க்கு எதிராக யுத்தம் செய்ய ஆரம்பித்தனர். காஷ்மீர் பள்ளத்தாக்குதலில் இருந்து வரும் ஜிகாதிகள் சர்வதேச ஜிஹாதில் விருப்பம் இல்லாதவர்கள், அவர்களுக்கு இந்திய அரசாங்கம் கூட போர் புரிய வேண்டும் மட்டுமே. சர்வதேச ஜிகாதிற்கு ஆதரவு கொடுக்கும் ஒரே கஷ்மீர் அமைப்பு ஹிஜ்புல் முஜாஹிடீன்.
அல்-கைதா ஓரளவு பின்னணியில் சென்று விட்டது. தற்சமய ஜிஹாத் பாகிஸ்தானை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதே தவிற, மேற்கு உலகம் எதிராக அல்ல. இந்த புதிய ஜிஹாதின் நோக்கம் இந்தியாவை தாக்குவதே ஆகும்
டன்சீம்-எ-தலிபாநெ-பாகிஸ்தான் - அதாவது பாகிஸ்தானிய தலிபான் பாகிஸ்த்ஹனில் குழப்பம் உண்டுபண்ணுவதற்கு சக்தி உள்ளது, ஆனால் அரசாங்கத்தின் மறைமுக ஆதரவு இல்லாமல், அவரக்ள் எந்த பகுதியையும் தங்கள் ஆதிக்கத்துள் கொண்டு வர முடியாது. கைபர் அரசாங்கம் முன்னால் முற்போக்காக இருந்தது, ஆனால் ஐ.எஸ்.ஐ, லஷ்கர்-எ-இஸ்லாம் என்ர ஜிகாதி அமைப்பை ஆதரித்து, அவர்களை ஆதிக்கம் செய்யத்தூண்டினர்.
பாகிஸ்தானில் ஜனநாயக அரசாங்கத்திற்கு எதிரான பிரசாரம், தலிபான் ஆதரவாளர்களிடம் இருந்து வருகிரது. ஏனெனில், தலிபான் ராணுவ அரசாங்கங்கள் கீழே ஆதிக்கத்தை அதிகரிக்க முடிகிரது.
பாகிஸ்தான் ராணுவம், காஷ்மீரில் சாதகமான தீர்ப்பு ஏற்படும் வரை, அங்கே ஜிகாதை கைவிடாது, இஸ்லாமிய தீவிரவதம், பாகிஸ்தான் தேசத்தின் ஆதீனத்தை தேய்த்து வருகிரது.. பல இடங்களில் தலிபன் ஷரியாவை அமலாக்குகிரது, அது பாகிஸ்தானின் இறையாண்மையை குறைப்பதல்லவா? உண்மையில் பாகிஸ்தான அரசாங்கத்தின் ஆதீனம் நாளுக்கு நாள் அழிந்து போகின்ரது. எப்போது தலிபான் லாகூரில் விடியோ கடைகளுக்கு மிரட்டல் கடிதம் அனுப்புகின்றனரோ, அப்போது, வணிகர்கள் தலிபானை தாஜா செய்வதற்கு , `இஸ்லாம் எதிரி` யான விடியோக்களை பொது இடத்தில் குவித்து , தீ வைக்கின்றனர். அது பாகிஸ்தானின் இறையாண்மையை குறைப்பதாகும். தலிபான் மிரட்டலில், வங்கி ஊழியர்கள் `மேற்கத்திய` பாண்டு-ஷர்டுகளை உடுப்பதை தவிற்கின்றனர், அது பாகிஸ்தானின் இறையாண்மையை குறைப்பதல்லவா? பாகிஸ்தானின் சில பகுதிகளில் ஹிந்து-சீக்கியர் போன்ற சிறுபானமையினரை `ஜிசியா` என்ற இஸ்லாமிய தலை வரிக்கு உள்படுத்தியுள்லனர், அது பாகிஸ்தானின் இறையாண்மை மேல் தாக்குதல் ஆகும்.
ஐ.ஏஸ்.ஐ.யின் இந்தியாவில், குறிப்பாக காஷ்மீரில் கலகங்களை தூண்டி விடுவதும், அவர்களுக்கு ஆய்த மற்றும் இதர ஆதரவுகளை செய்வது உலகறிந்த விஷயம். உதாரணமாக `அமெரிக்க விஞ்ஞானிகள் சங்கம்` (Federation of American Scientists) 1997 லேயே தன் உலக ரிபோர்டுகளில் இதைப் பற்றி கவலை தெரிவித்தது.http://www.fas.org/irp/world/pakistan/isi/
”ஐ.எஸ்.ஐ. ரகசியமாக காஷ்மீரி முஜாஹிதீன் குழுக்களுக்கு இந்திய அரசாங்கம் எதிராக கிளர்சி செய்ய உதவி கொடுத்துக் கொண்டு வருகின்றது............................ ஐ.எஸ்.ஐ. ஒவ்வொரு மாதமும் 2.4 கோடி ரூபய்களை ஜம்மு-காஷ்மீர் கிளர்சிகளுக்கு செலவழிக்கிரது. எல்லா கிளர்சி குழுக்களும் ஆயுதமும், பயிற்சியும் பாகிஸ்த்ஹனிடமிருந்து பெற்றாலும், சில குழுக்கள் பாகிஸ்தன் ஐ.எஸ்.ஐ. அதிமிகுந்த ஆதரவு கொடுக்கப்படுகிரன.. 6 பெரிய ஆயுத அமைப்புகளும் , பல சிறிய அமைப்புகளும் காஷ்மீர் ஜிகாதில் பங்கு எடுக்கின்றன.
அங்கு மிகப்பழைய , மிகப்பெரிய விடுதலை இயக்கமான ஜம்மு-காஷ்மிர் லிபெராஷன் ஃப்ரண்ட் Jammu and Kashmir Liberation Front (JKLF) 1994ல், போர்நிருத்தம் செய்தது. பாகிஸ்தான் ஆதரவிற்கு மிக ஆதிக்கமானது ஹெஸ்ப்-உல்-முஜாஹிதீன். மற்ற ஆயுத குழுக்கள் ஹராகத்-உல்-அன்சர் பெரும்பான்மையாக பாகிஸ்தானியரை கொண்டது. அல்-உமர், அல்-பர்க், ஜைஷ்-எ-முஹம்மது, லஷ்கர்-எ-தொய்யாபா போன்ற அமைப்புகளும் பாகிஸ்தானியர்களாலும், அஃப்கானிகளாலும் ஆனவை. இந்த ஆயுத ஜிஹாதிகள் ஆஃப்கானிஸ்தானில் பயிற்சி பெற்றனர்; அங்கு பயிற்சி முடியாமல் போனவே, காஷ்மீருக்குள் முகாம்கள் வைத்தனர்.
ஐ.எஸ்.ஐ. மேலும் இந்தியாவின் வடகிழக்கே, பாங்கிளாதேசத்தின் எல்லை அருகே, பல கலக அமைப்புகளுக்கு பயிற்சி முகாம்கள் வைத்துள்ளது”
Thursday, September 03, 2009
பாகிஸ்தானிலிருந்து வரும் `டெய்லி டைம்ஸ்` என்ற சஞ்சிகை , பல பார்வைகளுக்கு இடம் கொடுக்கின்றனர், அதனால் அவர்களுக்கு எழுதிய கடிதங்கள் சில பிரசுரம் செய்துள்ளனர்.
இன்று ஒருவர் பாகிஸ்தான் முன்னால் சர்வாதிகாரி முஷரஃபையும், ஆங்கில 17ம் நூத்தாண்டு தலைவர் க்ராம்வெல்லையும் இணைத்து ஒரு கட்டுரை எழுதினார். முஷரஃபையும் க்ராம்வெல்லையும் ( http://en.wikipedia.org/wiki/Oliver_Cromwell )ஒப்பிடுவது சாக்கடையையும் காவேரி நதியையும் ஒப்பிடுவது போலாகும் என்ற தொனியில் ஒரு கடிதம் எழுதினேன்.
http://www.dailytimes.com.pk/default.asp?page=2009\09\03\story_3-9-2009_pg3_3
Dear Editor
analysis: Cromwell and Musharraf —Shahid Hamid
Comparing Cromwell and Musharraf is a big joke. Musharraf is typical Pakistani Military Dictator whose presense has disgraced Pakistan through much of it's history; and there is every chance that it can happen again. In other words Musharraf is not an exception in Pakistan. Musharraf is also a typical third world military dictator who number in hundreds in the 60 years.
The military records of Musharraf has nothing much to show itself. The only victory of Musharraf is against - democratic Pakistan - by the overthrowing an elected government. In contrast, Cromwell was a great commander on the battlefield . He was great strategist, tactician and made the New Model Army in which the old style hierarchy was greatly reduced, command structure was different. This New Model Army was was also revolutionary in which there were 'politcial commissars' who made sure Royalist and Catholic symapthies were eradicated. The labours of Cromwell made sure that Kings and Queens of England after him never aspired for Absolute Monarchy. Influence of Cromwell is great on the 21st century Britain
The Musharraf military record is bleak. Musharraf was always underhand and devious. Kargil was organized by him; in a characteristic move, the cannon fodder was not Pakistani regular troops , but Jihadi groups and (Pakistani Occu[ied) Kashmiri troops; the fall guy for this disaster was the Civilian government of Pakistan. This was also the pretext for overthrowing the civilian government. Musharraf's foray in Afghanistan is equally disastrous. His involvement in Afghanistan was underhand , devious, counterproductive and disastrous from the beginning to the end. After supporting different Pushtoon Jihadi groups like Hekmatyar, he settled on Taliban as the best bet for proxy rule on Afghanistan. When that also went out of control when Al-Queda became dominant in Afghanistan, he turned against Taliban by siding with America. In short, Musharraf is a disaster for Pakistan, Afghanistan, Kashmiris, Jihadis, Taliban, Islam and everybody. He is also a cause of futile bloodletting in the Indian subcontinent. In a way, he is also responsible for bring in NATO and American presence in the South Asia region and history will not forgive him for that.
In whatever way, the present day Pakistan deals with him, comparing him with Cromwell is a joke
Regards
V.C.Vijayaraghavan
London, UK
Sunday, August 23, 2009
மோலோடாவ் - ரிப்பண்ட்ராப் ஒப்பந்தம் - 70 ஆண்டுகள் பிறகு
எழுபது ஆண்டுகளுக்கு முன் ஆகஸ்ட் 23, 1939 அன்று , மாஸ்கோவில் சோவியத் வெளி விவகார மந்திரி வியஷெஸ்லேவ் மோலோடாவ், ஜெர்மானிய வெளி விவகார மந்திரி ஜொவாகிம் ஃபான் ரிப்பண்ட்ராப் இருவரும் சோவியத்-ஜெர்மன் பாதுகாப்பு ஒப்பந்தம் என்பதில் கையெழுத்து இட்டனர். அது உலகெங்கிலும் அதிர்சி அலைகளை அனுப்பியது.
http://en.wikipedia.org/wiki/Molotov%E2%80%93Ribbentrop_Pact
ஏன் அப்படி அதிர்சி? ஹிட்லரும், நாஜிக்களும் கம்யூனிசத்தை தாங்கள் அழிப்போம் என கங்கணம் கட்டிக் கொண்டிருந்தனர். அதற்கு மேல் சோவியத் யூனியனின் முக்கிய இனமான ஸ்லாவியரக்ள் `உப மனிதர்கள்` அதாவது மானுடத்தின் ஒரு படி கீழே என நாஜி பிரச்சாரம் பல காலமாக பரைசாற்றியது. இந்த இன மற்றும் அரசியல் அதீத காழ்ப்பு இணப்பு , நாஜிக்களை எப்பொழுதும் சோவியத் யூனியனுக்கு சாதகமாக செயல்பட வைக்காது என உலகம் நம்பியது. அதே சமயம் சோவியத் கம்யூனிஸ்ட் பிரச்சாரத்திலும் ஹிட்லரும், நாஜிக்களும் மிகவும் கீழ்தரமானர்கள் என படிமம் இருந்தது. ஆனால் சோவியத் பிரச்சாரம் எப்பொழுதுமே அப்படி இல்லை. 1935 வரை அதாவது ஹிட்லர் பதவிக்கு வந்து 2 ஆண்டுகள் வரை, சோவியத் யூனுனும், ஸ்டாலினும் நாஜிக்கள் பூர்ஷ்வாக்களின், முதலாளித்துவத்தின் ஒரு தீவிரவாதப் பிறிவு, கம்யூனிஸ்டுகளின் முக்கிய எதிரி பூர்ஷ்வாக்களும், முதலாளிகளும் , அதற்கு பிரகுதான் நாஜிக்கள் என நம்பினர் 1935 பிரகு, ஸ்டாலின் தன் கருத்தை மாற்றிக் கொண்டு, நாஜிக்கள் தான் கம்யூனிசத்தின், உலக அமைதியின் முக்கிய எதிரி என நம்ப ஆரம்பித்தார். இரு நாடுகளுக்கு இடையே பயங்கர பிரசார யுத்தம் நடந்து ஒருவர் மற்றொருவரை உலகின் மிக கீழ்த்தரமான ஆட்கள் என்ற நிலமை இருந்தது.
அதனால் பாப்பும், கீரியுமாய் இருந்த இரு நாடுகளும் `பாதுகாப்பு ஒப்பந்ததை` கையெழுத்து இட்ட உடன் , எல்லோரும் தங்கள் கண்ணை பிசக்கி தான் காண்பது நிஜமாகவா என நினைத்தார்கள். அந்த ஒப்பந்தத்திற்கு சில வாரங்கள் முன்புதான் பிரெஞ்சு, பிரித்தானிய அரசாங்கங்கள் ஹிட்லரை எதிர்க்க, ஸ்டாலினுடன் கூட்டு சேரலாம் என நினைத்து ஒரு உயர் அதிகார குழுவை சோவியத் யூனியனுக்கு அனுப்பினர். அக்குழு கப்பலில் மெதுவாக பயணம் செய்து, சோவியத் யூனியனுடன் பேச்சு வார்த்தைகள் நடத்த தொடங்கியது. மேலை நாடுகளுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டுமெனில், ஸ்டாலின் ஒரு முக்கிய நிபந்தனையை போட்டார் - ஒப்பந்தம் சோவியத் யூனியனுக்கு போலந்து வழியாக சென்று ஜெர்மனியை தாக்க உரிமை கொடுக்க வேண்டும். அதற்கு மேலை நாடுகளால் உடனடியாக ஒப்புக் கொள்ள முடியவில்லை. ஆனால் பேச்சு வார்த்தைகளை முறிக்கவும் மனது வரவில்லை, அதனால் என்ன செய்வது என கையை பிசைந்து கொண்டிருந்தனர்.
இந்த மேலை நாடுகளின் தயக்கம், ஸ்டாலினின் அவநம்பிக்கையை வளர்த்தது, ஸ்டாலின் மேலை நாடுகளின் முக்கிய நோக்கம் எப்படியாவது ஹிட்லரை சோவியத் யூனியன் மீது திருப்பி, சோவியத் யூனியனை அழித்து தங்களை காப்பாற்றி கொள்ளலாம் என நினைத்தார். அதனால் உடனடியாக ஹிட்லருடன் ஒப்பந்தம் செய்து கொண்டால், ஹிட்லரின் போர் வெறி தாற்காலிகமாக தன் மேல் திரும்பாது, வேறெங்கேயாவது திரும்பும் என்பது. அதனால் ரகசியமாக ஹிட்லருடன் பேச்சு வார்த்தைகளை துவக்கினார். மேலை நாடுகளுக்கு இந்த ரகசிய பேச்சுகள் பற்றி தெரியாது. இந்த பின்னணியில் மோலோடாவ்-ரிப்பண்ட்ராப் ஒப்பந்தம், ஸ்டாலின் அவர்கள் பின் பக்கத்தில் இருந்து பார்த்து கைதட்ட , கையெழுத்து இடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில் ஒரு கொடிய பகுதி, `ரகசிய ஷரத்துகள்`. அதன் படி போலந்து நாட்டை இரு நாடுகளும் பாதியாக கைவசம் ஆக்கலாம், கிழக்கு ஐரோப்பாவில் பால்டிச் பிரதேசங்களில் சோவியத் யூனியன் ஆக்கிரமிக்கலாம் என்பது. இந்த கையெழுத்து இட்ட ஒரு வாரத்தில் , ஹிட்லர் போலந்தை தாக்கி இரண்டாம் உலகப் போர் துவங்கியது. ஹிட்லர் போலந்தின் மேற்கு பகுதியை கைப்பற்ற, இரு வாரங்களுக்கு பின் சோவியத் துருப்புகள் போலந்தை கிழக்கிலிருந்து தாக்கி, தன் கைவசம் கொண்டு வந்தனர். சில மாதங்களுக்குள் சோவியத் துருப்புகள் லிதுவேனியா, லாட்வியா, எஸ்டோனியா நாடுகளை ஆக்கிரமித்து கைவசம் கொண்டு வந்தனர். இதெல்லாம் இந்த ஒப்பந்தத்தினால் ஏற்பட்ட விளைவுகள். இந்த சோவியத் ஆக்கிரமிப்புகளால், இந்த நான்கு நாடுகளிலும் சோவியத் யூனியன் எதிராக தீராத காழ்ப்பு ஏற்பட்டது.
ஸ்டாலின் ஆதரவாளர்கள் இந்த சோவியத் யூனியன் செய்கையால், அது சோவியத் யூனியன் தரை மட்டத்தை பரப்பி, சோவியத் யூனியன் பாதுகாப்பு நிலைமையை சீர்செய்தது என கூருகின்ரனர். மேலும் ௨ வருடங்கள் கழித்து, ஜெர்மனி சோவியத் யூனியனை, தாக்கியபோது , அதன் யுத்த தயார் நிலைமை உயர்ந்தது எனவும் சொல்கின்ரனர். அது உண்மையா?
நிச்சயாமக அது உண்மை இல்லை. இந்த ஒப்பந்தன் ஹிட்லருக்கு யுத்தத்தை மேற்கு திசையில் செய்ய சாவகாசம் கொடுத்தது. அதனால் ௨ வருடங்கள் கழித்து , சோவியத் யூனியன் மீது ஆக்கிரமிப்பு செய்யும் போது, ஹிட்லரின் பலம் பல மடங்கு அதிகரித்திருந்தது. மேலும் இந்த ஒப்பந்தம் ஸ்டாலினை, ஜெர்மனி தன்னை சீக்கிரம் தாக்காது என தூபமிட்டு ஒரு குருட்டு நம்பிக்கையில் வைத்தது; அதனால் ஜூன் 1941 முன் , ஹிட்லர் தாக்கப் போகிரான் என பல திசைகளிடம் இருந்து வந்த பல எச்சரிக்கைகளை `இது மேற்கு நாடுகள் பிரச்சாரம்` என உதாசீனம் செய்தான். அதன் விளைவு , ஹிட்லர் சோவியத்தை தாக்கும் போது, மன அளவில் சோவியத் துருப்புகள் தயாராக இல்லை. அதன் விளைவாக சோவியத் யூனியன் பெரும் அளவு சேதமாயிற்று.
சோவியத் யூனியன் இந்த ஒப்பந்தத்தின் ரகசிய ஷரத்துகளை கடைசி வரை தீவிரமாக மறுத்தது. 1988 தான் ரகசிய ஷரத்துகள் இருந்ததாக ஒத்துக் கொண்டது. மோலோடாவ்-ரிப்பண்ட்ராப் ஒப்பந்தம் 20ம் நூற்றாண்டின் அரசியல் ஒரு கீழ் கட்டத்தை அடைந்ததை தெளிவாக காட்டுகிரது.
26.8.09 கொசுரு
ரஹசிய ஷரத்துகளில் இன்னும் ஒன்று ஸ்டாலினின் நம்பத்தகாதவற்றை காண்பிக்கிறது. 1930 களில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த பின் நூத்துக் கணக்கான ஜெர்மானிய கம்யூனிஸ்டுகள் நாஜிக்களுடன் தெருக்களில் போரிட்டனர்; பலர் கொல்லப்பட்டனர், பலர் சிறையிடப்பட்டனர், பலர் குவிப்பு முகாம்களுக்கு அனுப்பப் பட்டு சித்திரவதைக்கு உள்ளாயினர். கம்யூணிஸ்ட் கட்சியே தடை செய்யப்பட்டது. அந்நிலையில் நூத்துக்கணக்கன கம்யூனிஸ்டுகள் சோவியத் யூனியனில் தஞ்சம் புகுந்தனர். ரகசிய ஷரத்துகள் படி , அந்த நாஜி பிடியில் இருந்து தப்பித்த கம்யூனிஸ்டுகளை ஸ்டாலின் ஜெர்மனிக்கு திருப்பி அனுப்ப வேண்டும். அதன் அனுசரணையாக, நூற்றுக்கனக்கன ஜெர்மன் கம்யூனிஸ்டுகள் சோவியத் யூனியனில் கைது செய்யப்பட்டு, நாஜி சிறைகளுக்கு திருப்பி அனுப்பப் பட்டர்கள், அவர்களுக்கு நிச்சய்மக சித்திரவதையும், சாவும்தான் கத்துக்கொண்டிருந்தது. இதை போல் அரசியல் துரோகத்தை 20 நூத்தாண்டு பார்க்கவில்லை.
Friday, August 21, 2009
இப்பொழுது ஜஸ்வந்த் சிங்க் ஜின்னாவைப் பற்றிய எழுதிய வாழ்க்கை வரலாரு பெரும் சர்சையை இந்தியாவில் உருவாக்கியுள்ளது. இதன் சம்பந்தமாக `தி ஹிந்து` , ஜின்னா செம்டம்பர் 13 , 1948அன்று வெளியிட்ட தலையங்கம் , மிகச்சிறந்த வாழ்க்கை குறியீடு என நினைக்கிறேன்.
http://beta.thehindu.com/opinion/op-ed/article6489.ece
இதன் தமிழாக்கம்
ஜின்னாவின் திடீல் மரணம் பற்றிய செய்தி, இந்நாட்டில் பரந்த சோகத்துடன் எதிர்கொள்ளப் பட்டுள்ளது.. 12 மாதங்களுக்கு முன்புதான், காந்திஜிக்கு அடுத்ததாக, ஜின்னா துண்டிக்கப்படாத இந்தியாவின் பிரசித்தியான ஆளுமையாக திகழ்ந்தார். முஸ்லிம்கள் மட்டுமல்லாது, மற்றவர்களும் அவருடைய சீரிய குணங்களை பாராட்டினாலும், அதே சமயம் தன் குறிக்கோளை வெறியுடன் பின்பற்றுவதை தூற்றினர். 40 வருடங்களுக்கு மேலாக இந்திய பொது வாழ்க்கையில் ஈடுபட்டுபோதும், அதில் பாதி அளவு இந்திய தேசிய காங்கிரசின் சுதந்திர போரட்டத்தில் ஒன்றாகினார், அதனால் மேல் தட்டு மனப்பான்மையும், தனியாக இருத்தல் மனப்பான்மை கொண்டிருந்தாலும், மக்கள் இடையே பிரபலமானார். தன் கடைசி காலத்தில், பாகிஸ்தானின் சூத்திரதாரியாக மாறி, முஸ்லிம்களிடையே அதிகாரம் வைத்து, அவர் அரசியல் வெற்றிகளால் மக்கள் அவர்மீது குருட்டுத்தனமான அபிமானம் கொண்டது, சில நிதானமான, தெளிந்த அறிவுள்ள முஸ்லிம்களிடையே பெரும் ஏமாற்றத்தையும், கொள்கைகளின் விவேகத்தைப் பற்றிய சந்தேகத்தையும் கொடுத்தது. பழைய சாம்ராஜ்யங்கள் சீரழிந்த யுகத்தில், இந்த பாம்பே வக்கீல், ஒரு சாம்ராஜ்யம் உருவாக்க கனவு செய்தார்; மதசார்பின்மை பரவலாகி இருக்கும் காலத்தில், இந்த மத ஈடுபாடு அற்றவர், அந்த சாம்ராஜ்யம் இஸ்லாமிய சாம்ராஜ்யமாக இருக்க வேண்டும் என விரும்பினார். அக்கனவு சீக்கிரமே நனவாயிற்று, அதை அவரை சேர்த்து யாரும் எதிர்ப்பார்க்க்கவில்லை.
ஜின்னா ஒரு கூர்மையான வக்கீல். அவருடைய வெற்றிக்கு முக்கிய காரணம் அவர் எந்த சூழ்நிலை மாற்றங்களின் சாதக வாய்ப்புகளையும் உடனே கெட்டியாக பிடிப்பது. அவர் வலிமை ஒரு தீவிர சிந்திக்கப்பட்ட சித்தாந்தத்தில் இல்லை, பக்குவமான கொள்கைகளும் இல்லை; ஆனால் அவருடைய விடாப்பிடி தன்மை, யுக்தி தெளிவு, விவாத திறன் இவற்றை வெளி சூழல்களால் முக்கிய படிகளில் முந்தள்ளப்பட்ட மற்றவர்களால் சீராடப்பட்ட இலட்சியங்களை கைப்பற்றுதல் ஆகும். இதில் மகாத்மா காந்தியுடன் நேர் எதிராக மாறுபடுகிறார். 30 வருடங்கள் ஜின்னாவால் அரசியல் தலைவராக ஏற்க்கப்பட்ட மகாத்மா, எந்த மாறுபட்ட இக்கட்டான சூழல்களிலும் ஒரு நிலையான கொள்கைகளை கைப்பிடித்தார். பாகிஸ்தான் இக்பாலின் கனவாக தொடங்கி, ரஹமத் அலி, அவர் ஆங்கில நண்பர்களிடையே ஒரு சித்தாந்தத்தை பெற்றது. பிரித்தனின் 50 ஆண்டுகள் கடைப்பிடித்த துண்டித்து-அரசாளும் சாணக்கியத்தனம், மெதுவாக அந்த குறிக்கோளை நோக்கி சென்றது.
நாம் ஜின்னா பிரிடிஷர்களால் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட ஐரோப்பிய ஞானோதயத்தின் (European Enlightenment) வாரிசு என்பதை மறக்கக் கூடாது. ஜின்னா பிரித்தானிய வழி மக்களவை முறையில் நம்பிக்கை வைத்து, விவாத கலையில் மிக்க ஊக்கம் வைத்து, அதில் பெரும் நிபுணர் ஆனார். மிண்டோ-மார்லி சீர்திருத்த காலத்தில், காங்கிரஸில் இருந்து முஸ்லிம்களை துண்டிப்பதை முழு மனதுடன் எதிர்த்தார். பல காலம் முஸ்லிம் லீகை தவிற்த்தார். அதில் சேர்ந்தபோது, அதை ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கே பாடுபட்டு, மதத் துவேஷத்திற்கு எதிர்பு தெரிவித்தார். ஆனால் ஜின்னா பெரும் இலட்சிய ஆசை கொண்ட மனிதர். தன் ஆற்றலில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார், அது அரசியல் மற்றும் தொழிலில் வாழ்க்கை முதல் பகுதியிலேயே பெரும் வெற்றி கிட்டியதால், இன்னும் தன்னம்பிக்கை அதிகம் ஆயிற்று. மற்றவர்களுக்கு பக்க வாத்யம் செய்வதை முழுமையாக வெறுத்தார். அந்நாட்களில் காங்கிரஸ் தாதாபாய் நௌரோஜி, மேதா, கோகலே, திலக் போன்ற பெரும் ஆளுமைகளின் ஆதிக்கத்தில் இருந்தது. அது அவர் காங்கிரஸில் இருந்து மெதுவாக விலகுவதற்கு காரணமாக இருந்து, தன் சுய ஆதிக்கத்தின் காரணிகளை தேடினார். அப்பொழுது முதல் உலகப்போர் வெடித்து, தேசீய சுயாட்சி நிர்ணயம் பற்றிய கருத்துகள் உலவ ஆரம்பித்தன. அப்பொழுது ஜின்னா முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கு வெளியிட்ட திட்டங்கள் (அமெரிக்க அதிபர்) வில்ஸனின் 14 கொள்கை திட்டம் போல இருந்தது , தற்செயல் இல்லை.
ஆனால் அந்த நாட்களில் முஸ்லிம்கள் இந்தியாவுடன் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்பதை எளக்காரம் செய்திருப்பார். அலி சகோதரர்களின் கிலாஃபத் போராட்டம் அவருக்கு பிடிக்கவே இல்லை, ஏனெனில் அது நெருப்புடன் விளையாடும் முயற்சி என நம்பினார். அவர் மக்கள் கூட்டங்களின் தீவிர வெறியை முழுவதுமாக சந்தேகித்தார், அவருடைய சரித்திர உணர்வினால் மக்கள் வெறியை தூண்டிவிட்டால், அது கட்டுக்கு அடங்காது, எங்கு போய் நிற்கும் என தெரியாது என நம்பினார். காங்கிரஸிடமிருந்து தனியாக நின்றார். சிறை போவது, மற்ற இன்னல்களை தாங்குவது போன்ற சத்யாக்ரஹ முறைகள் சுகம் விரும்பியான அவருக்கு ஊக்கம் தரவில்லை. காந்தியின் காங்கிரஸை தவிற்த்ததற்கு முக்கிய காரணம் மக்களின் வெறியை தூண்டுவதில் இருந்த கசப்புதான். அதன் காரணமாக பல வருடங்கள் அரசியல் அஞ்ஞாதவாசம் செய்தார். அதே சமயம் சுதந்திர போராட்டத்தை கூர்ந்து ஆராய்ந்து, மக்கள் இயக்கத்தை ஊக்குவிப்பதை மனதார பாராட்டினார். பின் தங்கிய முஸ்லிம் சமுதாயத்தை மிகவும் எளிதாக்கப்ப்ட்ட முறையீடே, முஸ்லிம்களின் ஆழ் மனத்தை தொடும் எளிதான வேண்டுகோளே அவர்களை செயலுக்கு ஊக்குவிக்கும் என நம்ப ஆரம்பித்தார். முசோலினி, ஹிட்லர் போன்ற ஐரோப்பிய சர்வாதிகாரிகள் ஆதிக்கத்தின் உச்சியில் ஏறியதின் செய்முறைகளை பாடம்படித்து, தான் பிரசார வழிகளையும், மக்களை வெறியாட்டல் வழிகளையும் சீராக்கினார், அந்த வழிகளில் (முஸ்லிம்களுக்கு) அட்டூழியம் ஏற்பட்டுவிட்டது என்ற புலம்பல் மத்திய ஸ்தானம் ஆகும். ஆனால் ஜின்னா தான் போட்ட விதைகளில் இருந்து விளைந்த மாபெரும் அழிவுசக்திகள் முக்கியமாக எப்படி பஞ்சாபை உலுக்கின என்பதினால் திருப்தி அடைந்திருக்க முடியாது. அவர் நிதானமாவர், குணத்தாலும், பயிற்சியாலும் ஆட்சிகுலைவையும், வன்முறையையும் வெறுத்தவர். முதல் வட்ட மேஜை மகாநாட்டில் இந்தியா மைய அரசு அமைப்புடன் இருக்க வேண்டும் என கோரித்தார், ஏனெனில் ஃபெடரேஷன் -அதாவது கூட்டாட்சி - பல வித்தியாசங்கள் இருக்கும் நாட்டில், நாடு துண்டிக்கும் சக்திகளுக்கு இடம் கொடுக்கும் என நம்பினார். அப்படிப்பட்டவர் , இயற்கையினால் ஒன்றாக இருக்க வேண்டிய இந்தியாவில் துண்டிக்கும் கொள்கைக்கு உபாயமாக இருந்தார், அது எங்கே போய் முடியும் என யாராலும் சொல்ல முடியாது என்பது பெரிய விபரீதம். தான் ஊக்குவித்து தூபமிட்ட சக்திகளை அடக்குவதற்கு அவரிடம் வலு இல்லை, அவருடைய சர்வாதிகார போக்கு தான் தவறு செய்தோம் என்று ஒப்புக்கொள்ளவில்லை.
ஜின்னா தன் சாதனைகளின் உச்சியில் உயிர் நீத்தார், சரித்திரத்தில் அவருடைய இடம் நிச்சயம். வாழ்க்கையின் கடைசியில் தான் உண்டாக்கிய நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிய திகில் அவருக்கு இருந்திருக்க வேண்டும். பாகிஸ்தானில் பல திறைமையான நபர்கள் உள்ளனர். இந்தியா அவர்களுக்கு நல்வாழ்த்துகளை தெரிவிக்கும். ஆனால் ஜின்னாவின் இடத்தை நிரப்புவது சுலபம் அல்ல. ஜின்னாவின் சர்வதேச அந்தஸ்து வேரெந்த பாகிஸ்தானியரிடம் இல்லை. வேறு யாருக்கும் மக்கள் மத்தியில் அவ்வளவு செல்வாக்கு இல்லை. நூறு வருடங்களாக உழைத்த இந்தியாவின் உத்தம புத்திரர்களால் ஏற்பட்ட பாகிஸ்தானின் விடுதலையை இன்னும் வலுவாக்க வேண்டியுள்ளது. அதை நிரைவேற்றுவது பாகிஸ்தானின் தலைவர்களின் தலையாய கடமை. பல பிரச்சினைகள் நாட்டின் பிறப்பு பிரச்சினைகள். பிரித்தனின் கடைசி தானமான அகதி பிரச்சினையை தவிற, காஷ்மிர் விவகாரத்தை மேற்கொண்ட விதமும், ஹைதராபாத்துடன் இந்தியாவிற்கு ஏற்பட்ட தகாராரில் பாகிஸ்தான் காட்டிய மனப்பான்மையும், எதிர்கால இந்திய-பாகிஸ்தான் உறவுகள் மீது ஓரளவு அவநம்பிக்கையை வைக்கிறன. எவ்வளவு காழ்ப்பு இருந்தாலும் ஜின்னா இந்திய-பாகிஸ்தான் நல்லுறவுகள் சாத்தியம் மட்டும் அல்ல, தங்கள் சுதந்திரத்திற்கு அவசியமாக வேண்டியவை என்பதை மறக்கவில்லை. அந்த இலட்சியத்தை பாகிஸ்தான் தலைவர்கள் கடைபிடிப்பர்கள் என நம்புவோம்.
இதப்பற்றி ஹிந்துவில் என் கமெண்ட்
Excellent article. Written with great sense of proportion. While it does not demonise Mr.Jinnah, even while giving credit to his abilities, the editorial is unfliching in etching megalomaniac and rabble-rousing side of the man. All these words are true: Hw was "aristocratic and aloof by temperament" , "began to dally with the notion that that Empire should be an Islamic State. And the dream became a reality overnight" " Totalitarian Idea, were as much responsible for the emergence of Pakistan as the aggressive communalism to which Mr. Jinnah gave point and direction. " "arts by which the European dictators, Mussolini, Hitler and a host of lesser men rose to power led him to perfect a technique of propaganda and mass instigation to which ‘atrocity’-mongering was central" "prudent man to whom by nature and training anarchy was repellant" "too weak to withstand the momentum of the forces that he had helped to unleash. And the megalomania which unfortunately he came to develop " All these characterizations are spot on.
One of the great editorials of The Hindu.
விஜயராகவன்
Wednesday, August 19, 2009
தமிழ் எழுத்து சீராக்கம்
இதைப்பற்றி ரொம்ப பேர் எழுதுகிறார்கள். இவர்களின் மேலெழுந்த நோக்கம் தமிழ் எழுதுவதையும், அச்சு, இண்டெர்நெட்டில் போடுவதையும் `எளிமைப்படுத்துதல்`.
என்னப் பொருத்தவரை, இந்த `சீர்திருத்தங்களின்` நோக்கம் தமிழின் ஒரு பெரிய பிரச்சினையை மரந்து விடுகிரது. `எளிமை` மையத்தில் கொடுக்கப்படும் எழுத்து சீர்திருத்தஙக்ள் பெரும்பான்மையாக தேவையற்றவை என கருதுகிறேன்.
தற்கால தமிழின் மிகப்பெரிய பிரச்சினை `இருநிலை` ஆங்கிலத்தில் Diaglossia என் சொல்லுவார்கள். தற்கால தமிழ் முகத்தில் அறையும்படி எல்லோருக்கும் காட்டும் குணாதிசயம் இந்த `டயகுளோசியா`தான். அதாவது பேச்சு தமிழிற்கும், எழுத்து தமிழிற்கும் உள்ள பெரும் பேதம். அது எழுத்து முரைகளை மற்றும் பாதிப்பதல்ல; பேச்சு இலக்கனமும், எழுத்து இலக்கணமும் கடந்த 1000 ஆண்டுகளாக பிரிந்து விட்டன. இன்னும் நன்னூல்தான் தமிழ் இலக்கணத்தின் கடைசி வார்த்தை என தமிழ் ஆசான்களால் நம்பப் படுகிரது. இந்த தொன்மை ஆக்கங்களின் மீது பித்து இருப்பதால், நம் கண்முன்னே இருக்கும் தமிழ், நம் காதில் ஒவ்வொரு நாளும் விழும் தமிழ் `தமிழ்` இல்லை என்ற பிரமை ஏற்படுத்துகிரது.
ஒரு மொழியின் உயிர் அதன் பேச்சில்தான். அந்த உயிர்மொழிக்கு, பேச்சு மொழிக்கு மரியாதை கொடுத்து, அதற்க்கேற்ப்ப இலக்கணத்தையும், எழுத்துகளையும் மாற்றாமல் இருப்பது, காலப்போக்கில் தமிழ்க்கு சாவுமணி அடிக்கும். இந்த `தொன்மை` இலக்கணப் பூசை, நன்னூல், தொல்காப்பியர் பூசை, தமிழை மெல்ல மெல்ல சாக வைக்கும். இதை நம் கண் முனாடியே பார்க்கலாம். தமிழில் உயர்கல்வி , தற்கால விஞ்ஞான ரீதி சிந்தனை முறையும்,. ஆய்வு முறையும், ஆக்கமும் இல்லை என்பது எல்லா தமிழர்களுக்கும் தெரிந்த உண்மை. அதனால்தான் எல்லோரும் தங்கள் குழந்தைகளை ஆங்கில மீடியத்திற்க்கு அனுப்புகிரார்கள். ஒரிஜினல் ஆய்வாக தமிழில் ஒன்றும் இல்லை. தமிழ் வம்பளக்கும் மொழியாகத்தான் ஆகி உள்ளது. அதற்கு மூல காரணம் தமிழர்களின் `தொன்மை பூசை` மனப்பான்மை , அந்த மனப்பன்மையில் நம் கண், காது முன்னே இருக்கும் தமிழை உதாசீனப் படுத்துவது. இந்த `தொன்மை பூசை` மனப்பான்மை இருநிலையை - அதாவது டயாகுளோசியாவை - இன்னும் பன்மடங்கு பெருக்குகிறது..
சரி, இந்த எண்ண பின்புலத்தில், தமிழ் எழுத்து சீராக்கம் பற்றி விஜயராகவன் என்ன சொல்கிறான் ? எனது எழுத்து சீராக்க பணி இதுதான். ர, ற இந்த இரண்டு எழுத்துகள் தேவையற்றன. இதில் ற வை தள்ளி விடலாம். பல எழுத்துகளில் ற இடத்தில் ர வை பயன்படுத்தலாம். ஏன் இப்படி? தமிழர்கள் பேச்சில் இந்த இரண்டு எழுத்திர்க்கும் வித்தியாசம் இல்லை. பற்று, காற்று, தொற்று போன்ர இடங்களில் ட்ர வை உபயோகிக்கலம். எ.கா. பட்ரு, காட்ரு, தொட்ரு.
அதே காரணத்திர்காக, ந, ன் இவற்றில் ஒன்ரை விட்டுவிடலாம்.
இந்த இரண்டு மாற்றங்களினால், தமிழ் எழுத்து எளிமையாக மட்டுமல்ல, பேச்சு தமிழோடு ஒத்து இருக்கும். அதனால் ஓரளவு டயகுளோசியா குறையும்.
நம் பேச்சு தமிழில் பற்று, காற்று, தொற்று போன்ரவையும் பேசப் படுவதில்லை. அவை பொதுவாக த என மாருகிரது. நாம் பேச்சில் காத்து, பத்து, தொத்து என்றுதான் பயன்படுகிரது. அதனால் எங்கெங்கு ற வருகிரதோ (ற்ற இடங்களில்) த்த வை பயன்படுத்தலாம்.
Tuesday, August 18, 2009
என் ஹிரோஷிமா கட்டுரையின் பதிலாக கிருஷ்ணமூர்த்தி , இப்படி எழுதுகிறார். “அமெரிக்க அரசியலில் மட்டுமல்ல பல்வேறு துறைகளில் யூத இனத்தவரின் ஆதிக்கம் அளவுக்கு மீறியே இருக்கிறதென்பதையும் பார்க்க முடியும். இடம் கொடுத்தால் மடத்தையே பிடுங்குகிற இந்தக் குணம் தான் யூதர்களை வெறுக்கத் தூண்டுகோலாக இருந்தது, இருக்கிறது என்பதையும் மறந்து விடக் கூடாது.”
இது ஆதாரமற்ற யூதர்கள் மீது ஒரு அவதூறு. இதை கிருஷ்ணமூர்த்தியின் அபிப்பிராயமான கருதாமல் , ஒரு கலாசார phenomenon ஆக பார்க்க வேண்டும்.
யூதர்களின் ஜெரூசலம் மைய அரசு ரோம சாம்ராஜ்யத்தால் 2000 ஆண்டுகள் முன்பு அழிக்கப் பட்டது. அதனால் யூதர்கள் மற்ற நாடுகளில் அகதிகளாக சென்றனர். மேலை நாடுகளில் கிருஸ்துவ மதம் பரவி மக்கள் கிருஸ்துவராகி , கிருஸ்துவ மத அமைப்புகள் ஆதிக்கத்தை பெற்றவுடன் - அதாவது கிபி 300-700 கால கட்டத்தில் - யூத வெறுப்பு பரப்பப் பட்டது. அப்போது ஆரம்பித்த மேலை-கிரிஸ்துவ யூத வெறுப்பு 20 நூற்றாண்டு வரை கொழுந்து விட்டெரிந்தது. அந்த மேலை நாட்டு யூத காழ்ப்பின் உச்ச கட்டம் ஹோலோகாஸ்ட் என அழைக்கப்படும் யூத இன பேரழிவு.
இரண்டாம் உலக்ப்போர் பின்பு மேலை நாடுகளில் தங்கள் மத்தியிலிருந்து யூதகாழ்ப்பை களைந்தெரிய மக்களும், அரசியல்வாதிகளும், கலைஞர்களும் பெரும் அளவில் ஈடுபடுகிறனர்.
19ம் நூற்றாண்டு வரை முஸ்லிம் நாடுகளில் யூத வெறுப்பு பெரும் அளவில் இருக்க வில்லை. அரபு-முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம்களின் உறுதியான திட்டம் தாங்கள் - அதாவது முஸ்லிம்கள் ஆட்சி செய்ய வேண்டும் அவ்வளவுதான். அதற்கு பாதகம் வராதபோது , ஓரளவு யூதர்களும், கிருஸ்துவர்களும் இடம் கொடுக்கப்பட்டனர், பல யூதர்கள் முஸ்லிம் நாடுகளில் தழைத்தனர். எப்பொழுதுமே சில யூதர்கள் தற்கால இஸ்ரேலில் வசித்திருந்தனர். 19ம் நூற்றாண்டு பிற்பகுதியின் ஆரம்பத்தில் இருந்து, ஐரோப்பாவின் யூன இன வெறுப்பு ர்களைகளை தாங்க முடியாமல் சிறிது, சிறிதாக யூதர்கள் - அப்போது துருக்கி சாம்ராஜ்யத்தின் கைவசம் இருந்த பாலஸ்தீனத்தின் நிலம் வாங்கி , வசிக்க ஆரம்பித்தனர். பல ராணுவ, சர்வ தேச அர்சியல் மாற்றங்கள் காரணமாக யூதர்களால், இஸ்ரேல் என்ற யூத நாட்டை மறுபடியும் சுதந்திரமாக்க முடிந்தது. சுதந்திர இஸ்ரேல் உலக நாடுகளுக்கு மத்தியில் தோன்றியவுடன், அரபு-முஸ்லிம் மக்களின் இஸ்ரேலிய எதிர்பு யூத காழ்ப்பாக மாறியது. கடந்த 70 வருட காலமாக பொதுவாக எல்லா அரபு நாடுகளிலும் யூத இனம் மிகப்பெரிய இனத்துவேஷ பிரச்சாரத்திற்கு உள்ளாகியுள்ளது. அரபு மக்கள் தங்கள் யூத வெறுப்பை அரபல்லாத மற்ற இஸ்லாமியர்கள் மீதும் பரப்பி உள்ளார்கள். எங்கு எங்கு இஸ்லாமிய தீவிரவாதம் கை ஓங்கி உள்ளதோ , அங்கெல்லாம் பெரும் யூத த்வேஷ்மும் படவியுள்ளது.
மேலும் சோவியத் யூனியனின் தூண்டுதலில் வளர்ந்த உலக இடதுசாரி அரசியலும் ஓரளவு யூத வெறுப்பிற்கு தூண்டு கோலாக உள்ளது. பொதுவாக இடதுசாரிகள் இனத்துவேஷத்தை எதிர்ப்பதாக சொல்லுவார்கள். இஸ்ரேலை அரபு நாடுகள் கண்மூடித்தனமாக எதிர்ப்பதால், இடது சரிகளும் அரபு நாடுகளுக்கு ஆதரவாக பொதுவாக இஸ்ரேல் எதிர்ப்பு பிரச்சாரத்தில் மூழ்கி உள்ளனர். இஸ்ரேல் எதிர்ப்பு பிரச்சாரம் அவர்களை அறியாமைலேயே, மெதுவாக யூத இனதுவேஷமாக உரு மாறுகிரது.
மேலும் சோவியத் யூனியனின் தூண்டுதலில் வளர்ந்த உலக இடதுசாரி அரசியலும் ஓரளவு யூத வெறுப்பிற்கு தூண்டு கோலாக உள்ளது. பொதுவாக இடதுசாரிகள் இனத்துவேஷத்தை எதிர்ப்பதாக சொல்லுவார்கள். இஸ்ரேலை அரபு நாடுகள் கண்மூடித்தனமாக எதிர்ப்பதால், இடது சரிகளும் அரபு நாடுகளுக்கு ஆதரவாக பொதுவாக இஸ்ரேல் எதிர்ப்பு பிரச்சாரத்தில் மூழ்கி உள்ளனர். இஸ்ரேல் எதிர்ப்பு பிரச்சாரம் அவர்களை அறியாமைலேயே, மெதுவாக யூத இனதுவேஷமாக உரு மாறுகிரது.
இந்தியாவில் யூதர்கள் பல நூற்றாண்டுகளாக அமைதியுடன், ஹிந்து, முஸ்லிம்களுடன் சுமுகமாக வாழ்ந்தனர். கடந்த 50 வருடங்களீல் பெரும் பாலோர் இஸ்ரேலுக்கு குடி புகுந்து விட்டனர். அதனால் இந்தியர்களுக்கு யூத இனத்துவேஷம் மிகவும் பொருத்தமற்றது . உலகில் பொதுவாக யூத இனத்துவேஷத்தின் ஊற்றுகள் - பெருமளவு அரபு தேசியம், இஸ்லாமிய தீவிரவாதம்,, சிறிதளவு சர்வதேச இடதுசாரிகளும், ஓரளவு பழைய ஐரோப்பிய வலதுசாரிகளும்.
ஒரு காலத்தில் ஐரோப்பிய வலதுசாரிகள் யூத வெறுப்பின் `காவலர்கள்`. இரண்டாம் உலகப்போர் பின்பு அவர்கள் இன்ஃப்ளுவன்ஸ் மிகவும் குறைந்து விட்டது - ஆனால் அது மொத்தமாக அழியவில்லை. 60 வருடம் முன் ஐரோப்பிய இடதுசாரிகள் யூதக் காழ்ப்பின் முதல் எதிரிகளாக நின்றனர் - யூதர்களின் ஆதரவாக தோள்கொடுத்து, நாஜிக்களோடும், வலதுசாரிகளோடும் போரிட்டனர். இன்று இடதுசாரிகள் பெருமளவில் இஸ்ரேலை எதிர்க்கின்றனர் - அது ஓரளவு யூத காழ்ப்பாக மாறி விடுகிரது.
இந்திய அளவில், அரசியல் பிரமுகர்களும், ஊடகங்களும் இடதுசாரி ஆதரவாகவும், இஸ்லாமிய ஆதரவாகவும் இருப்பதால் சில சமயம் கிருஷ்ணமூர்த்தி மூலம் பிரதிபலிக்கும் யூத காழ்ப்பு ஆகிறது.